திங்கள், 6 ஆகஸ்ட், 2012

கணினி என்னைக் கவிழ்க்குமோ...?


                                         கணினி என்னைக் கவிழ்க்குமோ.?
                                          ---------------------------------------------

கடந்த ஒருவார காலம் என் கை ஒடிந்ததுபோல் இருந்தது. கணினியைத் திறக்க முடியவில்லை.எந்த வலைப் பூவையும் படிக்க முடியவில்லை. எதுவும் எழுதவும் முடியவில்லை. கடைசியாய் இட்ட பதிவு ஏற்கனவே DRAFT ஃபார்மில் இருந்ததால், என் பேரனிடம் அதை பிரசுரிக்கச் சொன்னேன். எந்த ஒரு வலைப் பூவையும் திறக்க முயன்றால் SERVER NOT FOUND என்று முகத்தில் அடித்தாற்போல் செய்தி வந்து கொண்டிருந்தது. BSNL-ல் புகார் கொடுத்தால்  அவர்களது CALL செண்டரில் இருந்து என்னென்னவோ சரி பார்க்கச் சொல்ல அதை நான் தட்டுத்தடுமாறி செய்து முடிக்க பலன் பூஜ்யம். அவர்கள் டெக்னிஷியனை அனுப்புகிறோம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் மோதி ஒருவழியாய் அவரும் வந்தார். கால் செண்டரிலிருந்து என்னிடம் சொன்ன அதே விதமாக அவரும் முயன்று கனெக்‌ஷன் எல்லாம் சரியாக இருக்கிறது. உங்கள் கணினியில்தான் ஏதோ பிழை இருக்கலாம் என்று சொன்னார். என் கணினியை அருகில் இருந்த மணினி செர்வீஸ் செண்டருக்கு அனுப்பி சரி பார்க்கச் சொன்னேன். அவர்கள் கணினியில் பிழை ஏதும் இல்லை, BSNL இணைப்பில் தான் தவறு இருக்க வேண்டும் என்றார். மீண்டும் அவர்களை அணுகிய போது எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ப்ளாகர் செர்வரில் ஏதோ  குறை என்றனர். நான் இதே வலைப்பூக்களை வேறு இடத்தில் இருந்து உபயோகிக்க முடிகிறது என்று கூறி அவர்களை எங்கு தவறு என்று கண்டு சரிசெய்ய வேண்டினேன். ஒரு வழியாய் ஒருவருக்கு இருவராய் வந்து என்னென்னவோ செய்து என் வலைப் பூவைத் திறக்கச் செய்தனர். எனக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு. முதலில் இதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. யாருடைய பதிவையும் படிக்க முடியவில்லை. பின்னூட்டமுன் எழுத முடியவில்லை. இதோ இனி வழக்கம் போல் பதிவிடலும் கருத்திடலும்நடக்கும். என்று நம்புகிறேன். வலையில் நான் எழுதாததால் எந்தக் குடியும் மூழ்காது என்று என் மனைவி ஆறுதல் (? ) கூறினாள்.!
------------------------------------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. தீடீரென்று இவ்வாறு ஆனால் பதட்டம் தான்... நல்ல ஆறுதல் ஐயா... நன்றி...




    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    பதிலளிநீக்கு
  2. ஆமாங்க கணினி வேலை செய்யவில்லை என்றால் அன்று வேறு எந்த வேலையுமே ஓடாதுதான் எனக்கும் அடிக்கடி தராறு பண்ணிகிட்டெ இருக்கும்

    பதிலளிநீக்கு
  3. //வலையில் நான் எழுதாததால் எந்தக் குடியும் மூழ்காது என்று என் மனைவி ஆறுதல் (? ) கூறினாள்.!//

    அதெப்படிங்க, எல்லா மனைவிகளுக்கும் இந்த வசனம் மட்டும் தெரிந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  4. எந்த ஒரு பொருளையும் நாட்கணக்கில், வாரக் கணக்கில் பயன்படுத்தாமல் இருக்கலாம்.ஆனால் அப்பொருள் சரியாக இயங்காத நிலை ஏற்பட்டால், ஒரு மணி நேரம் கூட நம்மால் சும்மா இருக்க முடியாது.எதையோ இழந்தது போன்ற உணர்வு தோன்றும். வெளி உலகத் தொடர்பிலிருந்து நாம் துண்டிக்கப் பட்டு, தனித்து விடப்பட்டதைப் போன்ற ஓர் உணர்வு உலாவரும்.

    பதிலளிநீக்கு
  5. கடந்த ஒருவார காலம் என் கை ஒடிந்ததுபோல் இருந்தது. கணினியைத் திறக்க முடியவில்லை.எந்த வலைப் பூவையும் படிக்க முடியவில்லை. எதுவும் எழுதவும் முடியவில்லை. //

    ஒ! அது தான் காரணமா?

    ஊருக்கு எங்கும் போய் இருப்பீர்கள் போல என்று நினைத்துக் கொண்டேன்.

    இணைய தொடர் இல்லை என்றால் கஷ்டம் தான்.
    சரியானது ஆறுதல்.

    பதிலளிநீக்கு
  6. வலையில் நான் எழுதாததால் எந்தக் குடியும் மூழ்காது என்று என் மனைவி ஆறுதல் (? ) கூறினாள்.!//

    உங்கள் பதிவை எதிர்பார்த்து என்னைப்போல
    ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை தங்கள்
    துணைவியாரிடம் சொல்லிவையுங்கள்

    பதிலளிநீக்கு
  7. பாலு சார் உங்க‌ளின் அசுர‌ வேக‌ம் அச‌த்துகிற‌து.
    மர்ம‌ங்க‌ளை ப‌கிருங்க‌ள், ப‌திவுக்காய் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கடைசி வரி - காபிரைட் செய்யலாம் :-)

    பதிலளிநீக்கு