ராமானுஜனின் மேஜிக் எண்கள்.
----------------------------------------------
22 12 18 87
88 17 9 25
10 24 89
16
19 86 23 11
மேலே உள்ள எண்கள் ஒவ்வொரு கட்டத்தில்
இருப்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். (கட்டம் போட்டுக் காட்ட என் கணினி அறிவு
போதவில்லை.) இது ஒரு மேஜிக் சதுரம். இதில் உள்ள
தனித்தன்மை என்ன என்று புரிகிறதா. ? இது நம் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன்
வடிவமைத்தது. அப்படி என்ன தனித் தன்மை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா.?இதில் எந்த
வரிசையில் கூட்டினாலும் கூட்டுத்தொகை (இடமிருந்து வலம் அல்லது மேலிருந்து கீழ்.) 139 வரும்.
குறுக்காகக் கூட்டினாலும்
கூட்டுத்தொகை 139 வரும்.( 22+17+89+11 = 139
87+9+24+19 = 139
மூலைகளில் இருக்கும் எண்களைக்
கூட்டினாலும் கூட்டுத் தொகை 139 வரும்.
22+87+11+19 =139
நடுவில் இருக்கும் நான்கு எண்களின்
கூட்டுத்தொகை 139 (17+9+89+24 =139 )
மேல்வரிசை கீழ்வரிசைகளில் இருக்கும்
இரண்டாவது மூன்றாவது எண்களின் கூட்டுத்தொகை 139 வரும்
( 12+18+86+23 = 139 )
மேலிருந்து கீழாக உள்ள வரிசைகளில்முத்ல்
வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும்
கடைசி வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை
139.( 88+10+25+16 =139 )
இதோ இன்னொரு கூட்டின் எண்ணிக்கை:
முதல் வரிசை இடமிருந்து வலம்
இரண்டாவது எண்.
முதல் வரிசை மேலிருந்து கீழ்
இரண்டாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை
மூன்றாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை
மூன்றாவது எண் இவற்றின் கூட்டுத்தொகை 139.
18+10+86+25=139
( 12+88+23+16 =139.
இன்னுமொரு காம்பினேஷன்
முதல் வரிசை இடமிருந்து வலம்
மூன்றாவது எண்
முத்ல் வரிசை மேலிருந்து கீழ்
மூன்றாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை
இரண்டாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை
இரண்டாவது எண் இவற்றின் கூட்டுத்தொகை 139( 18+10+86+25 = 139 )
இந்த சதுரத்தை நான்கு சம சதுரங்களாகப்
பிரித்தால் ஒவ்வொரு சிறிய சதுரங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 139
உ-ம் 22+12+88+17= 139
18+87+9+25= 139
10+24+19+86=139
89+16+23+11= 139.
இன்னும் சில காம்பினேஷன்களை முயற்சி
செய்து பாருங்கள்.
இதோ முத்தாய்ப்பாக ஒரு
செய்தி. ஸ்ரீனிவாசன் ராமானுஜனின் பிறந்த நாள் உங்களுக்குத் தெரியுமா.? முதல் வரிசை
எண்களைப் பாருங்கள். என்ன தெரிகிறது.?
22 12
18 87 விளங்க
வில்லையா.?அவரது பிறந்த நாள் 22 -12 -1887......!
இந்தியனாய் இருப்பதில்
பெருமை கொள்ளுங்கள்.
( 18+10+86+25 = 139 )
interesting! :)
பதிலளிநீக்குமிகவும் அருமையான தகவல்கள்.
பதிலளிநீக்குகணிதமேதை இராமனுஜம் பிறந்த நாள் பற்றியும் சொல்லி விட்டீர்கள். இனி என்னால் அதை என்றும் மறக்க முடியாதபடி மேஜிக் கூட்டலும் கொடுத்துவிட்டீர்கள்.
இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
Soduku puzzles appear to be based on the basic premises in these squares.
பதிலளிநீக்குAmazing indeed that at his time he did thousands of calculations without a basic tool like a calculator.
BTW, I thought I could meet you at the Bloggers meet at Chennai, today.
subbu rathinam
பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குஇதில் இந்தியனாக இருப்பதன் பெருமை என்ன?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வரலாற்றுச் சுவடுகள்,
@ கோபு சார்,
@ சூர்யநாராயணன் சிவா,
@ எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்,
@ திண்டுக்கல் தனபாலன்,
@ அப்பாதுரை.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.சூரி சார்,என்னைப் பார்க்கலாம் என்று நினைத்ததற்கு ஸ்பெஷல் நன்றி. எனக்கும் வரவேண்டும் என்று இருந்தது. கை கூடிவரவில்லை. அப்பாதுரை சார், நம் குழந்தைகள் விசேஷமாக ஏதாவது செய்தால் நாம் பெருமைப் படுவதில்லையா, அது போல் தான் இதுவும். மீண்டும் நன்றி.
நல்ல பதிவு சார். இப்போதுதான் என் தம்பி மகளுக்கு இதைக் காண்பித்தேன். நோட்டு பேனா எடுத்து வரப் போயிருக்கிறாள். நலம் தானே நீங்கள்?
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்.
பதிலளிநீக்கு'the indian clerk' என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா? கண்ணில் நீர் முட்டும் ராமானுஜரின் கதை.
ராமானுஜர் நாத்திகர் என்பதற்கு நிறைய clues இருக்கு புத்தகத்தில் - சுவாரசியம்?
பதிலளிநீக்கு