Thursday, May 1, 2014

குருவாயூர் வாழும் பகவானே


                                        குருவாயூர் வாழும் பகவானே
                                           ----------------------------------------


குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் பலமுறை சென்றிருக்கிறோம் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் குருவாயூர்க் கண்ணனுக்கு உண்டு. கோவிலில் ஆண்டவன் தரிசனம் என்பது மிகவும் மாறிவிட்டது. முன்பெல்லாம் நிர்மால்ய தரிசனம் காண்பது சிறப்பாகவும் எளிதாகவும் இருந்தது. அருகில் சென்று தரிசிக்கலாம் பலமுறை பிரதட்சிணமாக வந்து வந்து தரிசிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் ஒரு முறை தரிசனம் செய்வதே கடினமாயிருக்கிறது. கோவிலின் பூஜை முறைகளுக்கேற்ப நடையை மூடி விடுகிறார்கள்சில நாட்களில் நடை சாத்திய நேரமே அதிகமாயிருக்கும் எந்தெந்த பூஜை முறைகளில் நடை மூடுகிறார்கள் என்று தெரிந்து செல்வது உத்தமம். என் மனைவிக்கு குருவாயூர் தரிசனம் மிகவும் பிடித்த ஒன்று. நானெல்லாம் ஒரு முறை தரிசனம் செய்து வந்தால் இவள் மீண்டும் மீண்டுமென்று சலிப்பே இல்லாமல் போய்க் கொண்டிருப்பாள். அண்மையில் கேரளா சென்றிருந்தபோது சிற்றூந்தில் இவள் பாடிக்கொண்டு வந்தாள். இதுவரை நான் கேட்காதது. ஊர் திரும்பியதும் அந்தப் பாட்டை மீண்டும் பாடக் கேட்டு மலையாளத்தில் இருந்ததை ஓரளவு தமிழ்ப் படுத்தி இருக்கிறேன் அதுவே நீங்கள் படிக்கப் போகும் இப்பதிவு.

டியவர் செய்யும் பாவங்கள் எல்லாம்
பொடிப்பொடியாய்ப் போய்விடும்-பக்தியால்
பதமலர் பற்றித் தஞ்சம் என்றதும்
குருவாயூர் வாழும் பகவானே

திமுதல் அல்லல் கொண்டே வாழும்
என் ஆதங்கம் எல்லாம் தீரவும்
பீதியில் உழலும் எனைக் காத்திட வா
குருவாயூர் வாழும் பகவானே

 ன்றுன் பாதம்சேரவே  பக்தியால்
உள்ளம் விம்முதே கிருஷ்ணா
வந்துடன் என்னை ரட்சிப்பாய்
குருவாயூர் வாழும்பகவானே

ண்டென்னைச் சோகம் தழுவுமென்றென்
மனசில் கோவிந்தா நான் எண்ணவில்லை
கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும்
குருவாயூர் வாழும் பகவானே.

ண்டு சங்கடம் ஆசாபாசமும் மோகம்
கொண்டு நான் உழல்வதெல்லாம்
அன்று நான் செய்த வினைகளின் பலனா
குருவாயூர் வாழும் பகவானே

க்கம் வேண்டியே நான் தவிக்கும் போதென்
புத்தியில்வந்து  பலம் சேர்க்கவேண்டும்
தீக்குணங்கள் என்னை அண்டாது காப்பாய்
குருவாயூர் வாழும் பகவானே

ன்னதான் நான் வேண்டுவேன் கிருஷ்ணா
மோகமும் பாசமும் என்னைத் தீண்டாமல்
என்றுமே உன் பாசத்தில் கட்டிடுவாய்
குருவாயூர் வாழும் பகவானே

னிந்தப் பாராமுகம் கிருஷ்ணா
ஏழையெனைத் தண்டித்தல் முறையோ
என்றைக்கும் நான் உன் பக்தனல்லவா
குருவாயூர் வாழும் பகவானே

ய நின் பாதம் அர்ச்சிப்பதன்றி
வேறொன்றும் நான் வேண்டேனுன்
கழல் பற்றி என் காலம் கழித்திடஅருள்வாய்
குருவாயூர் வழும் பகவானே

ன்றும் அறியாமல் இத்தேகம் விட்டென்
மூச்சும் போகவேண்டும் போகும்போதும்
உன் நாமம் என் நாவில்நிற்க அருள்வாய்
குருவாயூர் வாழும் பகவானே,

தும் வேதப் பொருளே வைகுந்தா
ஓர்த்திடுவாய் என்றும் ஏழையினை
நோய் நீக்கிடும் பீதிநாசனே
குருவாயூர் வாழும் பகவானே

ஷதம் ஏதும் வேண்டேன் ஐயா
உன் நாம கீர்த்தனமே ஔஷதம்
பாவ வினைகள் எனைத் தொடராதிருகவெ
குருவாயூர் வாழும் பகவானே

அந்திம காலத்தில் உற்றவனாய் வந்து
அந்தகன் பயம் எனைப் பீடிக்காதிருக்க
என்றும் என் அகத்தே நீ இருந்திடுவாய்
குருவாயூர் வாழும் பகவானே.

குருவாயூர் வாழும் பகவானே கிருஷ்ணா
கருணா சாகர கார் வண்ணா
கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும்
குருவாயூர் வாழும் பகவானே
.
ஸ்ரீ கிருஷ்ணர் குருவாயுர்

குருவாயூர் கோவில் வளாகம்

(படங்கள் இணையத்தில் இருந்து....)..
( மறைத்து வைத்துக் காட்டும் மர்மம் என்ன ?)
என் முந்தைய “ பதிவுத் துளிகள் “ பதிவில் நான் வரைந்திருந்த  ஓவியங்களில் மறைந்து இருப்பதைக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று கேட்டிருந்தேன் பின்னூட்டங்களில் கிழவன் கிழவி படத்தில் மறைந்திருந்த படங்களை குறிப்பிட்டிருந்தனர். பதில்கள் எல்லாப் பின்னூட்டங்களையும் படித்தால் தெரிய வருகிறது. ஆனால் கண்ணனின் படத்தில் மறைந்திருந்த படங்கள் முழுவதுமாகச் சொல்லப் படவில்லை.  படத்தில் obvious -ஆகத் தெரியும் பசுக்கள் தவிர கண்ணன் கையிலும் குழலிலும் மார்பிலும் பசுக்கள் காணலாம் பின் பக்கம் இருக்கும் மரத்தின் இலைகளில் கிளிக்கூட்டங்கள் இருப்பது காணலாம் கண்ணனின் கண்களையும் பக்கவாட்டில் இருக்கும் முடிக் கற்றைகளையும் கூர்ந்து கவனித்தால் இரு பறவைகள் இருப்பது புலப்படும் ( படம் அளவில் சிறியதாயிருப்பதாலும் சரியாகப் பதிவாகாததாலும் ஒரு வேளை கண்டு பிடிப்பது சிரமமாயிருக்கலாம் ) 




.


 

21 comments:

  1. அருமையான பாடல். மொழி பெயர்ப்பு சிறப்பு. அ முதல் ஒள வரை எல்லாமும் வந்திருக்கு.

    ReplyDelete
  2. பாடலும் கிருஷணனும் பாடலும். தங்கள் மனைவியும். எல்லாமே அருமை. மிக நன்றி.

    ReplyDelete
  3. கிருஷ்ண பக்தியில் நனைந்தேன்! அருமையான மொழிபெயர்ப்பு பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அ முதல் ஔ வரை வரும்படி மொழிபெயர்த்திருப்பது சிறப்பு.

    படத்தில் மறைந்திருப்பவை பற்றி நான் ஓரளவாவது சொல்லியிருந்தேனே...! :))))))))))

    ReplyDelete
  5. அ என்ற எழுத்தில் தொடங்கி ஔ வரை பாடல் அற்புதம் ஐயா

    ReplyDelete

  6. @ கீதா சாம்பசிவம்
    ஊக்குவித்து கருத்திடுவதற்கு நன்றி. மொழிபெயர்ப்பு அருமை என்று சொல்வது சிறிது கூடவோ என்று தோன்றுகிறதுமூலப் பாடல் நான் எழ்தவில்லையே அதைப் படிக்காமல் மொழிபெயர்ப்பை பாராட்டி இருக்கிறீர்கள். நானே மொழியாக்கம் என்றுதானே எண்ணுகிறேன்

    ReplyDelete

  7. @ வல்லிசிம்மன்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete

  8. @ தளிர் சுரேஷ்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. இது மொழிபெயர்ப்பு அல்ல. கூடியவரை செய்த மொழியாக்கம்

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம் பலரும் மொழிபெயர்ப்பு என்று சொல்வது மனசை உறுத்துகிறது. அப்படியே இருந்தாலும் மூலம் தெரியாமல் மொழிஒஎயர்ப்பௌ எங்கனம் பாராட்ட முடியும். படத்தில் மறைந்திருந்ததை ஓரளவாவது சொல்லி இருக்கிறீர்கள் மறுக்கவில்லையே

    ReplyDelete

  10. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  11. அழகான அருமையான பாடல்.
    உங்கள் மனைவி பாடிய பாடலை எங்களுக்கு எளிமையாக ஆக்கி தந்தமைக்கு மிகவும் நன்றி.
    நான் இதை எடுத்து வைத்துக் கொள்கிறேன் பாடுவதுத்ற்கு.
    மிகவும் நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  12. குருவாயூர் வாழும் பகவானே கிருஷ்ணா
    கருணா சாகர கார் வண்ணா
    கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும்
    குருவாயூர் வாழும் பகவானே//

    கார்வண்ணா உந்தன் கருணை வேண்டும் .
    மிக அருமை.
    வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  13. பலமுறை தரிசனம் செய்த திருக்கோயில். மீண்டும் தங்கள் பதிவின் வாயிலாகக் கண்டேன்.

    ReplyDelete

  14. @ கோமதி அரசு
    வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி. தாராளமாக எடுத்துக் கொண்டு பாடி மகிழுங்கள். முடிந்தால் பாட்டைப் பதிவுசெய்து வலையில் இடவும் மீண்டும் நன்றி

    ReplyDelete

  15. @ துரை செல்வராஜு
    வணக்கம் ஐயா. கோவில் தரிசனத்தை நினைவூட்டுகிறது என்றதற்கு நன்றி.

    ReplyDelete
  16. சிறப்பான தமிழாக்கம் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. குருவாயூர் வாழும் பகவானே
    பாடல் அருமை..

    இங்கே ஒவ்வொரு துவாதசிகளிலும் நடக்கும் நாராயணீய பாராயணத்தின் போதும் பாடுவது வழக்கம் ..!

    ReplyDelete
  18. பாடலை முழுதும் படித்தேன். சுகத்தை உணர்ந்தேன். மொழிபெயர்ப்பாகத் தெரியவில்லை. அ முதல் ஔ வரை தாங்கள் அமைத்திருந்த விதம் தங்களின் மொழி ஆளுமையைக் காட்டுகிறது.
    1980இல் முதன் முதலாக குருவாயூருக்குச் சென்றிருந்தேன். அண்மையில் சில தடவைகள் சென்றேன். 1980இல் பார்த்த நிறைவு தற்போது இல்லை.

    ReplyDelete
  19. நல்ல பாடல். மலையாளப் பாடல் என்ன என்பதையும் சொல்லி இருக்கலாமே.....

    ReplyDelete
  20. Original song my mother used to sung in 80's at Karanthai. It start as Hari nararayana, hari narayana, hari narayana ,hari krishna
    Hari narayana, hari narayana, hari narayana Govinda,
    Hari narayana, hari narayana, Guruvayoor vallum baghavane.

    ReplyDelete