சனி, 16 செப்டம்பர், 2017

வாழ்வியலும் திரை இசைப் பாடல்களும்


                                      வாழ்வியலும் திரை இசைப்பாடல்களும்
                                      ----------------------------------------------------------------
இப்போதெல்லாம் நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்றாலுமொரு காலத்தில்  நிறையவே பார்த்திருக்கிறேன் அதிலும்  சிறு வயதில்  என் வீட்டை அடுத்து அரக்கோணத்தில் ஒரு டெண்ட் டாக்கீஸ் இருந்தது படம் பார்க்காவிட்டாலும் வசனங்களும் பாடல்களும் கேட்கும்  அளவுக்கு வீட்டருகே இருந்தது டாக்கீஸ். இப்போதும்  என்னை அறியாமல் சில பழைய பாடல்களை முணு முணுப்பேன்  அப்படி முணு முணுத்த போது எழுந்ததே இந்த சிந்தனை திரையிசைப் பாடல்கள் நம் வாழ்வின்  எல்லா நிகழ்வுகளையும்  கொண்டிருந்ததும் உண்டு அதுவே பதிவாகிறது

ஆண்:- ப்ரேமை எனதே பாரின் மீதே பாக்யம் வேறேதே
பெண்:-ப்ரேமா ரூபனே என்றனைப் புகழ்ந்தால் பதியே நானுந்தன் இன்பரூபமே
ஆண்:- சந்திர பிம்பமே. ! சரசாங்கியே நீ.! சாரச நயனீ எனதாருயிரே
பெண்.: ப்ராண நாயகா நீயன்றோ. !
ஆண்:- மங்கை நீயென் மானச தேவி.!
பெண்:-மங்களாகர  மன்மத ரூபா.?

வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் என்று எழுதத் துவங்கிய எனக்கு அந்த காலத்து டூயட் பாட்டு மனதில் ஓடியது. வரிகள் முன்னே பின்னே இருக்கலாம்.
ஆனால் சங்கதி அது அல்ல. வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் சினிமாப் பாடல்களில் பதிவாகி இருக்கிறது என்பதுதான். காதல், கலியாணம், மகப் பேறு என்று எழுதி வாழ்வின் எல்லா சுவைகளும் பாடல்களிலேயே தெரிய வரும்.

ஆண்:-வாடிக்கை மறந்ததும் ஏனோ
      என்னை வாட்டிடும் ஆசை தானோ
      பல கோடி மலர் அழகை மூடி வைத்து
      மனதைக் கொள்ளை அடிப்பதும் ஏனோ
பெண்:- வாடிக்கை மறந்திடுவேனோ
        எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ
        இளமங்கை எந்தன் மனதில் பொங்கி
        வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ.

ஊடல் கலந்த ஆசை பறிமாற்றங்கள் எழுத்தில் வந்துஇசையில் பரிமளிப்பது மேலே காணலாம். .

கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ
காதலிசை பாடியதும் நீயேயன்றோபெண்மனதில் ஏற்றி வைத்த தீபமல்லவோ
ஒளி பரவும் முன்னே அணைத்தல் பாபமல்லவா....

வேறூன்றி வளரும் என்று விதை விதைத்தேன்
இரு விழியாலே காத்திருந்து நீருமிறைத்தேன்
பூமுடிக்கும் ஆசைகொண்டு சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்
காதல் தோல்வி எதிர்கொள்வதை மிக அழகாகப் பதிவு செய்யும் பாட்டு. 

காதல் வெற்றி கல்யாணத்தில் முடிய வேண்டியதுதானே.ஒரு கல்யாணம் பாட்டில் விமரிசையாக நடை பெறுவதை இந்தப் பாட்டை விட அழகாக எழுத முடியுமா என்ன,? 

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...
குலம் வாழ்க...

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட


பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி, கண்ணில் நீரெழுதி.

 இன்றும் நான் வெகுவாக ரசிக்கும்பாடல் இது (அதுதான் பாடலின் எல்லா வரிகளும் )
 திருமணம் நடந்துவிட்டால் போதுமா.? மணமான பெண்ணை எப்படி வரவேற்கிறார்கள் பார்ப்போம்.

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா.

பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில்
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன்மணமும் பொருள்மண்மும் உங்கள் வாசலில்
புதுப் பூமணமும் பா மணமும் எங்கள் வாசலில்

கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலை வணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்

தங்க நகை வைரநகை நிறைந்திருக்காது இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி இருக்காது.
வரவேற்புக்கு ஏதும் குறைவில்லை. இருந்தாலும் வந்த இடத்தையும் இருந்த இடத்தையும் ஒப்பு நோக்குவது குறித்துக் கொள்ள வேண்டும். .

திருமணம் முடிந்து மணமகள் வந்தாயிற்று.இனி என்ன.? முதலிரவுதானே.? 
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம்கொண்டு சேரும் நன் நேரம்

சப்ர மஞ்சத்தில் ஆட சொப்ன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்கள் பாட சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாகம்
புலரி வரையில் நம்முடே யோகம்.
ஆஆ  அ அ ஆ ஆ..........

இருவரும் ஒருவராக இணைய மூன்றாமவர் வருவதுதானே நியதி. வரவேற்பு எப்படி என்று பார்ப்போமா. ?
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
(
காது கொடுத்து கேட்டேன் )
ஓராம் மாசம் உடல் அது தளரும்
ஈராம் மாசம் இடை அது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...
(
காது கொடுத்து கேட்டேன்
  
விருப்பப்படி குழந்தை பிறந்து விட்டால் தாலாட்டும் பாட்டும் பிரமாதம் ..
வளர வேண்டிய சூழல் எப்படியெல்லாம் பாட்டில் வருகிறது .பார்ப்போம். 
 இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
( என்றெல்லாம் தாலாட்டுப் பாடி,முத்தாய்ப்பாக அறிவுரையுடன் முடிக்கும் பாடல்)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே

தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்


நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்

ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
(
பாதை..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(
இந்த..)

வித்தியாசமான சூழல் தரும் பாட்டு இது..

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன்பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

நான் பிறந்த காரணத்தை நானே அறியு முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

கொஞ்சம் வளர்ந்ததும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் கொண்டுவிடும்போது பிள்ளைகளுடன் மனப்போராட்டம் எஆதாரணமாய் நிகழ்வதுதானே.
கண்ணா…… 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா 
காலம் மாறினால் கௌரவம் மாறுமா… NEVER 
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம் 
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் 
நடந்தது அந்த நாள் 
முடிந்ததா பாரதம் 
நாளைய பாரதம் யாரதன் காரணம் 
ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா 

உள்ளப் போராட்டத்தின் விளைவாய் உதிக்கும் எண்ணங்கள் தேடல்களில் கொண்டு போய் விடுகிறது.விளைவு.? அருமையான தத்துவப் பாடல்கள். ,

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா

மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
இன்னும் ஒன்று.

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் 
– இந்த
மண்ணில் நமக்கே இடமேது

வாழ்க்கை என்பது வியாபாரம்
 – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்
இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா
கடைசியாக ஒன்று

ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர் சுற்றமென்ன
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவதென்ன.

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ

ஆடும்வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடும்வரைக் கூட்டம்
கொள்ளி வரை வருமா.?

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்டபின்பு ஞானி

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்றுவிடு என்பான்

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு.

வீடு வரை உறவு..............

வாழ்வியலில் தமிழ் சினிமாப் பாடல்கள் நவ ரசங்களிலும் இருக்கிறது. ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு விஷயம் இருக்கிறது. ஏதோ அங்கும் இங்குமாகக் கோடி காட்டியிருக்கிறேன். இதுவே மிகவும் நீ.........ளமாகிவிட்டது.  இருந்தாலும் திரை இசைப் பாடல்கள் அல்லவா பலரும் பொறுமை காப்பார்கள் என்று நம்புகிறேன் 








.




புதன், 13 செப்டம்பர், 2017

நம்பிக்கைகள் பலவிதம்


                             நம்பிக்கைகள் பலவிதம்
                           -----------------------------------------
யானைக்குத் துதிக்கையில் பலம் மனிதனுக்கு நம்பிக்கையில் பலம் என்று கூறுவது வழக்கம் ஆனால் இந்த நம்பிக்கைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாமல் போகும்போது எனக்கு கொஞ்சம் கோபம் வருவது உண்மை  நிறைய எழுதி இருக்கிறேன்  சில நம்பிக்ககைகளையும்  பலன் களையும் கூறுகிறேன் அது என்னைச் சார்ந்து இருக்கும் போது அதிக வீச்சுபெறுகிறது
என்  மனைவிக்கு  கையில் ஒரு மரு வளர ஆரம்பித்தது வலி ஏதும்  இருக்கவில்லை என்றாலும் பார்ப்பதற்குஅதுவும்  என் மனைவிக்கு ஒரு மாதிரி இருந்தது விஜய வாடாவில் இருந்தபோது அங்கே இருந்த மருத்துவர் ஒருவரிடம் காட்டினோம்   அவர் ஜஸ்ட் இக்நோர் இட் என்றார்  முடியவில்லை என்றால் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிவிடலாம்  என்றார் என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பமிருக்கவில்லை  சிறிது காலத்துக்கு  பொறுத்திருந்து பார்ப்பது என்று முடிவாயிற்று  எனக்கும் மீண்டும் திருச்சிக்கே மாற்றல் ஆயிற்று அங்கு ஒரு சரும மருத்துவரிடம் காண்பித்தோம்  அவர் அதைப் பார்த்து ஒன்றும்  செய்ய வேண்டாம்  நம்பிக்கை இருந்தால் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று குளத்தில் வெல்லம்கரைத்து உப்பும் கொடுத்து வாருங்கள்   என் மனைவிக்கு அறுவைசெய்யாமல் இருப்பதுதானே  முக்கியம் மேலும்  அவளுக்கு நம்பிக்கையும்  இருந்தது நாங்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வேண்டிக்கொண்டு சொன்னபடி செய்து வந்தோம் ஒரு சில நாட்களில் கையில் இருந்தது மருவா எங்கே போயிற்று தெரியவில்லை  அதுவாக மறைந்ததா கடவுள் அதை நீக்கினாரா என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கை
இன்னொரு செய்தி. எனக்கு ஒரு சித்தப்பா இருந்தார் வயது ஏற ஏற பார்வையை முற்றிலும்  இழந்திருந்தார் ஒரு ஃபார்மசி ஏஜென்சி  நடத்திக் கொண்டிருந்தார்  அவரது வேலையைஅவரே செய்து கொள்வார்  திருச்சூரில் ஒரு முறை அவரைப் பார்க்கப் போனோம்  பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் சொன்னது  வாழ்க்கையே நம்பிக்கையில் ஓடுகிறது எனக்கோ கண்பார்வை கிடையாது பார்வை போனபின் லக்ஷ்மி கடாட்சம் கிடைத்திருக்கிறது எனக்கோ பார்வை தெரியாது நான் சாப்பிடும் உணவில் என் மனைவி விஷம் கலந்தால் எனக்குத் தெரியவா போகிறது  வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடுகிறது என்றார்
 இந்த மாதிரி நம்பிக்கைகள் ஒருவருக்கு இருந்தால் நல்லது அதே சமயம் பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றுவதும்  பிறர் உண்ட எச்சில் இலையில் புரண்டு எழுவதும்  தலையில் தேங்காய் உடைக்கவைத்து பிரார்த்தனை என்னும் பெயரில் செயல்கள் புரிவதும் அலகு குத்தி தன்னை வருத்தி பரிகாரம் செய்ய முற்படுவதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்கள் என்றே தோன்று கிறது சில மரங்களை வெட்டினால் உயிருக்கு ஆபத்து என்று நினைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன்  
 நம்பிக்கைகள் பலவிதம்  நான் நம்பிக்கை பற்றி ஒருபதிவு எழுதி இருந்தேன் அது இங்கே கீழே

 
  நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.

மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை

 பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை

 பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை

 நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை

 நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை.  நம்பிக்கைகள் பல விதம் 

. இருப்பினும் ,

 தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை.   

நம்பிக்கையில் இன்னொரு வகை  காணொளீயாக கீழே


                            


ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

குழந்தைகள்

அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பனுக்கு விநாயகர் காணொளிகள் இரண்டு அனுப்பினேன் அவன் அவற்றை அவனது பேத்திக்குப் போட்டுக் காட்டி இருக்கிறான்  எந்த நாட்டில் இருந்தால் என்ன அதுவும் குழந்தைகளுக்கு விநாயகனிடம்  அதிக ஈர்ப்பு ஏற்படுவதுண்டு அதுவும்  இந்தக் காணொளிகளில் வரும்பாட்டும்  இசையும்  அந்தக் குழந்தையை மிகவும்  கவர்ந்திருக்கிறது போலும்  எப்போதும் அதைப் போட்டுப்பார்த்து அதன்   தாளத்துக்கு ஏற்றபடி நடனம் ஆடியிருக்கிறாள்  அதைக் காணொளியாக்கி என்  நண்பன் எனக்கு அனுப்பி இருந்தான் அதுவே நீங்கள் காண்பது என்ன நண்பர்களே ரசித்தீர்களா

எத்தனை பேர் காணொளியைப் பார்க்கப் போகிறார்களோ 

வியாழன், 7 செப்டம்பர், 2017

விட்ட கதை மனம் தொட்ட கதை


                           விட்ட கதை மனம் தொட்ட கதை
                            ----------------------------------------------
இது பதிவுலக வாசகர்களே  என்ன நினைக்கிறீர்கள்  என்னும்  கதையின் தொடர்ச்சி பார்க்க
”
 “அக்கா நான் என்புருஷனுடன் பேசுவதே இரவில் மட்டும்தான் ஆனால் இந்த மாமியார்க்காரி அதையும்தடுக்கிறாள் என்ன ராத்திரி நேரத்தில் குசுகுசு என்று  என்று அதட்டுகிறாள் கனவனுடன் சேரவே விட மாட்டேன் என்கிறாள் எதற்கு உயிரோடுஇருக்க  வேண்டும் போல் இருக்கிறது அக்கா”
 வாசகர்கள் கதையைத் தொடரலாமே
என்று முடிந்திருந்தது
நீ உன் கணவனுடன்  சேர்ந்து இருந்ததே இல்லையா.?
ஏன் இல்லாமல்  அக்கா  அதனால்தானே எனக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.””
“ அப்போது விஷயம்  இன்னும் சுலபமாக முடியுமேமனைவியிடம்  சுகம் கண்ட கணவன்மார்களை  ஈர்ப்பது எளிது”
‘ஆனால் இந்த மாமியார்க்காரிதானே நந்தி  மாதிரி குறுக்கே …..”
மாலதி "பேசாம தனிக்குடித்தனம் போயிடு.. சரியாப்போயிடும்" என்றாள்.

"அவங்க எங்க போவாங்கக்கா? அவங்களும் ஒண்டியாத்தானே இருப்பாங்க?"


"முதியோர் இல்லத்துல சேர்த்துடறேன்னு சொல்லு"


" சரியா வருமாக்கா?"


"ஒரு பயமுறுத்தல்தானே? வரலாம்... வராமலும் போகலாம்...
 எனக்கு நம்பிக்கை இல்லை அக்கா அவளது ஈரமனம்  மாலதியை என்னவோ செய்தது 
 கண்ணீர் கசிந்தபடி நின்ற கல்யாணியின் மருமகளை (சுகன்யாவை)   பார்க்கவே மாலதிக்கு பரிதாபமாக இருந்தது 
அன்றிரவே நடந்த விஷயத்தை மாலதி தன் கணவரிடம் கூற , அதற்  அவர் தன் மேலதிகாரியிடம் சொ ல்லி கல்யாணியின் மகனுக்கு (ஸ்ரீகாந்த்துக்கு)   பெங்களூரு கிளைக்கு மாற்றல் வாங்கி தருவதாகவும் இப்படி செய்வதால் மாலதிக்கும் கல்யாணிக்கும் அவளது மருமகளுக்கும் நல்ல விடிவு கிடைக்கும் என்றும் நம்பினார் .
மறுநாள் வழக்கம் போல கல்யாணி மாலதி வீட்டு கதவை தட்டினாள் (வந்துட்டியா திரும்ப வந்துட்டியா? ) கதவை திறந்த மாலதி பேச்சுக்கு சிரித்து வரவேற்றாள் . 
வழக்கம் போல கல்யாணி மருமகளின் குறை கூற மாலதி இடைமறித்து கல்யாணியின் மகனுக்கு மாற்றல் கிடைக்க போவதாக கூறினாள்
இதை கேட்டதும் கல்யாணியின் முகம் கருத்து போனது காரணம் தெரிந்த மாலதி மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் காரணம் பெங்களூரு கிளையின் தலைமை அதிகாரி, தன் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரிடமும் அன்பும் பாசமும் வைத்திருப்பவர் அதே நேரம் நாளொரு கேள்வியும் மண்டையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு சித்ரவதை செய்யும்  ஒரு பிரகிருதி அவரது தொல்லைகள் தாங்காமல்  வாலண்டியரிங்  ரிடைர்மெண்ட் வாங்கியவ ர்  கல்யாணி  அன்றுமுதல் கல்யாணியின் புலம்பல் காணாமல் போயிற்று கல்யாணியின் மருமகளும் காரணம் புரியாமல் திகைத்தாள் சில நாட்கள் மாலதி கல்யாணியையும்  மருமகளையும்   கோவிலில் சேர்ந்தே பார்த்தாள்
சில நாட்களுக்குப் பின் பழைய குருடி கதவைத் திறடி என்பதுபோல்  வழக்கு தொடர ஆரம்பித்தது
உன் மாமியார் இரவில் உன் புருஷனுடன்  பேச விடாமல்  ஒட்டுக் கேட்கிறாள் என்கிறாயே பேசாமல் உன்மாமியாரின் ஹியரிங் எய்டின்  பாட்டரியைப் பிடுங்கி எடுத்து விடு ஒட்டுக்கேட்க முடியாதே
அவருக்குச் சரியான பாம்புச் செவி ஹியரிங் எய்டே  இல்லையே’
இல்லாவிட்டால் ஒன்று செய்யேன் பேசாமல் உன் மாமியாரின் நாக்கை அறுத்து விடு
’’பிரச்சனைக்கு முடிவு  கேட்டு வந்தால் கொலைபாதகம் செய்யச் சொல்கிறீர்களே’’’
’ மாலதிக்கு இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும்  ஆசை வந்தது
முதல்ல மருமகளை கையில பிடிச்சு இழுத்துக்கொண்டுபோய் மாமியார் முன் நிறுத்தி விட்டு.. இருவருக்கும் என்ன பிரச்சனை என்பதனை மாலதி நேரிடையாகவே கேட்டா..

இருவரும் வாதங்களும் சுமார் 2 மணி நேரங்கள் நீடித்தன.. அப்போதே இருவருக்கும் தெரிந்தது தம் குற்றச்சாட்டுக்கள் உப்புச் சப்பில்லாதவை என..

’இனிமெல் உங்கள் சண்டையை சமாளிக்க நான்  இருக்க மாட்டேன்  என்கணவருக்கு மாற்றல் ஆகி விட்டது இருவரும்  சேர்ந்து இருப்பது அவரவர் சாமர்த்தியம் என்று மாலதி கூறி விட்டாள்’ அதுதான் நிஜமும் கூட
ஆண்டுகள் பல ஓடி விட்டன ஒரு நாள் சுகன்யாவின்  கணவன்   வேறு ஒரு பெண்ணுடனும்  கையில் ஒரு குழந்தையுடனும்  போவதை ஒரு ரயில் நிலையத்தில் பார்த்தாள் மாலதி
‘என்னங்க அங்கே போவது உங்களிடம்பணி புரிந்து வந்தவர்தானே சுகன்யாவின்   கணவர் ஸ்ரீகாந்த்  மாதிரி இருக்கிறதே”
ஓ உன்னிடம்  சொல்ல மறந்து விட்டேன் போல் இருக்கிறது அது சுகன்யாவின்    கணவன் தான்  ஆனால் கூடப் போவது அவனது இரண்டாம்  மனைவி “
ஐயையோ அப்போ அப்போ சுகன்யா 
அவள் தற்கொலை செய்து கொண்டாளாம்  தனக்கே நெருப்பு வைத்துக் கொண்டு அவள் கணவனுக்குஎந்த கேள்வியும்வரக் கூடாதுஎன்று அந்த விஷயத்தை போலீசுக்குப்பணம் கொடுத்து அமுக்கி விட்டார்கள் பாவம் அவனது மூத்த பெண்…..”
என்னதான் ஆனாலும்  தற்கொலை செய்யத் தூண்டும்அளவுக்கு மாமியார் கொடுமையா என்று பரிதாபப் பட்டாள்மாலதி
( என்ன வாசகர்களே  உங்களிடம் கதையை முடிக்கச்சொல்லிக் கேட்டிருந்தேன் ஒரு உண்மை சம்பவத்தின்  முடிவு தெரிந்திருந்தது காரணங்கள் சரியாகத் தெரிந்திருக்கவில்லை தெரிந்த அளவு கூறி முடிக்கக் கேட்டிருந்தேன்  நீங்கள் சொல்லி இருந்த முடிவுகளை ஒதுக்காமல்  இந்தக் கதையைமுடித்து இருக்கிறேன் பின்னால் வந்த பின்னூட்டமொன்றில் சுகன்யா ஸ்ரீகாந்த் என்று பெயர் கொடுத்திருந்தார் பானுமதி வெங்கடேசன் )     


திங்கள், 4 செப்டம்பர், 2017

விழாக்காலங்கள்


                               விழாக்காலங்கள்
                              ----------------------------


குருவாயூரில் ஓணம்  

எல்லாப் பண்டிகைகளும் மக்கள் உறவுகளோடு கூடி மகிழ்ச்சியாய் இருக்கவே கொண்டாடப் படுகின்றன. அதை ஏதோ அவதாரக் கதையின் மிச்சம்  என்று சொல்லும்போதுதான் மனம் கேட்பதில்லை நல் ஆட்சி கொடுத்த பரிபாலனம் செய்து வந்த மகாபலிச் சக்ரவர்த்தி அசுர குலத்தில் பிறந்து விட்டான்  அவன்  தான தர்மங்கள் செய்து சொன்ன சொல் தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான் அவனை துஷ்ட நிக்ரஹம்  என்று சொல்லி அவதாரம்  எடுத்து மூன்றடி நிலம் கேட்டு வஞ்சித்துக் கொன்றார் மஹாவிஷ்ணு இது கர்ண பரம்பரைக்கதை அல்ல ஒரு அவதாரக் கதை  இதுபற்றி முன்பே எழுதி இருக்கிறேன்   பார்க்க
இதெல்லாம் பக்தர்களுக்குச் சொன்னால் பிடிக்காது அவர்கள் நம்பிக்கை அப்படியானால் நான் யார் எடுத்துச் சொல்ல.- இருந்தாலும் நெருடலைத் தெரிவிக்கிறேன்
 கேரளத்தில் சாதி மதம்பார்க்காமல் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்  அதன் முக்கிய நோக்கமே உறவுகளுடனும் நட்புகளுடனும்  மகிழ்ச்சியாய் இருப்பதே
நான் சிறுவனாக இருந்தபோது  வீட்டு வாசலில் மாதேறு என்னும் உருவம் களிமண்ணால்  செய்து தினம் வழிபடுவார்கள் அதைச் சுற்றி ஆட்டமும்பாட்டமும் மிகுதியாய் இருக்கும்   அந்தப் பண்டிகை வெகுவாக மாறி இருக்கிறது மாதேறுவுக்குப் பதில் பூக்களங்கள் இடப்பட்டு ரசிக்கப் படுகின்றன.புள்ளினங்கள் கூடுகளுக்குப் போவதுபோல் மலையாளிகள்  தத்தம்  ஊருக்குச் செல்கிறார்கள் என்  இளைய மகன். அவனது மனைவியின்  ஊரான சாலக் குடிக்குச் சென்றிருக்கிறான்
சாலக்குடியில் மருமகள் தாயாருடன்  


சென்னையில் மகன் வீட்டுப் பூக்களம் 



   மகளுக்கு பட்டமளிப்பு விழா இருந்ததால் அவள் செல்ல வில்லை ஓணம்பண்டிகை எங்களுடன் கழித்தாள் 
எங்கள் வீட்டில் பேத்தி 


தாத்தாவுடன்  பேத்தி 


சாலக் குடியில் பேரன்  



 அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் என் நண்பரும் அவர் மனைவியும்  அவர்கள் பணி நிமித்தம்  சென்னை சென்று விட்டார்கள் எல்லோரும்  ஓணாஷ்ம்சகள் என்று வாழ்த்துகள் பரிமாரிக்கொண்டோம் இனிதாக பண்டிகை கழிகிறது

இது ஒரு விழாக்காலம் விநாயகச் சதுர்த்தி முடிந்து முஹரம் ஓணம்   இன்னும்  சில நாட்களில் நவராத்திரி. கலகல வெண்ரிருக்கும் எங்கள் தெரு பொழுது போக்க உதவும் சில புகைப்படங்களை பகிர்கிறேன் 
விநாயகர் எங்கள் தெருவில்  விசர்ஜனத்துக்குப் போகிறார் n
     

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

இடை வேளையில்

                               இடை வேளையில்
                               -----------------------------
இத்துடன் இரண்டு படங்கள் வெளியிடுகிறேன்  முன்பு போல் இருந்தால் இப்படங்களை கண்ணாடி ஓவியங்களாக்கி இருப்பேன் இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. எனக்குத் தெரிந்தே பதிவுலகில் நன்கு ஓவியம்  வரைபவர்கள் உண்டு, இதையே அவர்கள் ஓவியமாக்க முயற்சிக்கலாமே


 கீழே காணப்படுவது  காணொளி. பதிவுலகில் பலரும் காணொளிகளைத் தாண்டிச் சென்றுவிடுகிறார்கள் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  இதை அவசியம் பாருங்கள் ஒரு வேளை ஏற்கனவே பார்த்திருக்கலாம் ஒரு குழந்தையிடம் எப்படி அணுகக் கூடாது என்பது புரியும்  மேலும்  சில குழந்தைகளின் அடமும்  விளங்கலாம்



என் வீட்டுச்சின்ன தோட்டத்து மலர்களைநான்  பார்த்துப் பார்த்து  பரவசமாகிறேன்  அழகான ரோஜா ஆனால் ரோஜா என்றால் அது பற்றி நினைக்கும்  போது வரும்   வண்ணமா இது.


என்வீட்டுத்தோட்டத்தில் நிறைய செடிகள் இருந்தாலும் இது வரை பூத்தது ஓரிரு முறைதான்  நான்சொல்வது இந்த நிஷாகந்தியை விடியற்காலையில் மலரும் இந்த மலரை விரிந்துஇருக்கும் போது விழித்திருந்துபுகைப்படமெடுக்க  முடியுமோ தெரியவில்லை மலராதமொட்டாக இந்தநிஷாகந்தி அல்லது பிரம்மகமலம் உங்கள் பார்வைக்கு

தெச்சி செடியில் மலர்களைப் பார்ப்பதே அழகு  என் வீட்டுச் செடியில் பூத்த மலர்கள்


இதுவும் ஒரு எக்சோடிக் வகை பூ. கீதா மதிவாணனிதை லாப்ஸ்டர் க்ளாஸ்  என்று சொன்ன நினைவு.  வீட்டைப் பராமரிக்கும் போது நிறையவே செடிகள் பாழாகி விட்டன. மிஞ்சியதில் சில பூக்கள் இப்போது