வியாழன், 13 மார்ச், 2014

காதல் போயின் முடிவுகள்


                                 காதல் போயின்  மீதிக்கதை போட்டி முடிவுகள்
                                  ----------------------------------------------------------------
காதல் காதல்காதல் காதல் போயின்” என்று ஒரு சிறுகதை எழுதி பாதியில் நிறுத்தி இருந்தேன்  மீதிக்கதை வாசகர்களிடம் எழுதக் கேட்டிருந்தேன் நான் எழுதி வைதிருந்த முடிவோடு ஒத்துப் போகிற கதை எழுதுகிற வாசகருக்குப் பரிசு என்றும் கூறி இருந்தேன். போட்டியில்  எந்தக் கதையும் என் முடிவுடன் ஒத்துப்போகாத நிலையில் திரு பால கணேஷிடம் அவர் சிற்ந்த முடிவு என்று தேர்வு செய்யும் கதைக்கு பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டி கேட்டிருந்தேன். அவரது முடிவினைக் கீழே பிரசுரிக்கிறேன் பங்கு கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு என் மன் நிறைந்த வாழ்த்துக்கள். இனி கணேஷ்

காதல் என்கிற விஷயத்தைப் பொறுத்தமட்டில் ஆணின் பார்வையில் பெண் அழகாக இருந்தால் மட்டுமே போதுமானது. காதல் பிறந்துவிடும். நெருங்கிப் பழக ஆரம்பித்ததும் அவள் குணங்கள் பிடித்திருந்தால் சகித்துப் போவதும் இல்லையேல் காதல் முறிதலும் நடத்தல் இயற்கை. பெண்ணின் பார்வையில் என்றால் ஆணின் உருவ அழகு மட்டுமே காதலுக்கான தகுதியாகி விடாது. அவன் என்ன படித்திருக்கிறான், பின்னாளில் எவ்வளவு சம்பாதிப்பான், தங்கள் வளமான வாழ்வுக்கு அது போதுமா என்றெல்லாம் ஒரு மினி சர்வேயே மனதில் நடத்திவிட்டுத்தான் பின் காதலுக்கு ஓ.கே. சொல்வார்கள். அதேபோல காதல் என்பது மறுக்கப்பட்டால் அதையே வாழ்வின் மிகப்பெரிய தோல்வியாக எண்ணி தற்கொலை செய்து கொள்ளும் மடத்தனத்தை (பெரும்பாலும்) செய்வது ஆண்கள்தான். மெண்கள் அம்மட்டில் உறுதியாகவே இருப்பார்கள். ‘ஐயோ, பாவம்’ என்று ஒருநாள் அவனுக்கு மௌன அஞ்சலி செலுத்தினால் அவன் புண்ணியம் செய்தவன்.

----///இந்த என்னுடைய கருத்துக்கள் எல்லாம் நான் பார்த்த மற்றும் படித்த காதல்களின் அடிப்படையில் என்னுள் முகிழ்த்தவை. நிஜத்துல காதலைச் சந்திக்க வாய்ப்பு அமையாத (அ)பாக்கியவான் நான். நம்புங்க ஸாமிகளா... ஹி,,, ஹி,,, ஹி,,,! கேர்ள்ஸ் ஆர் பிராக்டிகல் என்கிற ஜி.எம்.பி. ஸாரின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆக காதலிக்கிற ஆண் உணர்ச்சி வயப்பட்டு வாழ்வைத் தொலைக்க முடிவெடுக்கிறான் என்கிற ஜி.எம்.பி ஸாரின் முடிவையொட்டி யாருடைய முடிவு அமையப் போகிறது என்பதைப் படிப்பத்ற்கு மிக ஆர்வமாகக் காத்திருந்தேன் நான். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெகடிவ் முடிவு பிடிக்கவில்லை போலிருக்கிறது. அனைவரின் முடிவுமே பாஸிட்டிவ் ஆக அமைந்து விட்டது. அதிலும் மகளிருக்கு 95 சத இடஒதுக்கீடு தந்த மாதிரி... போட்டியாளர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள் என்பது வெகுசிறப்பு.

போட்டிக்கு வந்த முடிவுகளை நான் அலசி தேர்வு செய்த விதத்தில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். என்னுடைய கோணத்தில் சிந்தித்ததன் மூலமே முடிவெடுத்துள்ளேன். ஆக கருத்து வேறுபாடு (ஒருவேளை) இருந்தால்... என்னை நடுவர் என்று ஜி.எம்.பி. ஸார் (ஏதோ நம்பிக்கையில்) தேர்ந்தெடுத்து விட்டதால் (வேறுவழியின்றி) நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இனி... இந்த முடிவுகளை நான் எவ்விதம் அலசினேன் என்பதைப் பார்க்கலாம்.

ஜி.எம்.பி.ஸாரின் முடிவுக்கு ஒத்துப்போகும் முடிவு எதுவும் இல்லாதபட்சத்தில் வேறொரு சிறந்த முடிவாகவோ அல்லது அதைவிடச் சிறந்த முடிவையோ தருபவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசு தரலாம் என்று முன்பே அவர் சொல்லியிருந்தார். அந்த அடிப்படையில் அலசினால் அவன் சொன்ன காதலை அவள் ஏற்றுக் கொள்கிறாள் என்கிற அம்பாளடியாள் மற்றும் தமிழ்முகில் ஆகியோரின் முடிவினால் கதை சிறப்படையவில்லை. சாதாரணக் கதைகளில் ஒன்றாகி விடுகிறது. சிறுகதையின் முத்தாய்ப்பு என்பது படிப்பவரை ஏதாவது ஒரு வகையில் பாதித்தால்தான் அது நல்ல சிறுகதை என்கிற அடிப்படையில் இந்த இரு முடிவுகளைத் தவிர்த்தால் எஞ்சியிருப்பது கீதா சாம்பசிவம், ராஜலக்ஷமி பரமசிவம், கீதமஞ்சரி ஆகிய மகளிர் அணிப் போட்டிதான்.

கீதமஞ்சரி தந்த முடிவு புதிய கோணத்தில் அமைந்திருந்தது என்னை வெகுவாக ரசிக்க வைத்தது. ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடிவெடுத்தவன், இவளே அழகாக இருக்கிறாளே என்று கணத்தில் தோன்றி இவளைக் கைப்பற்றிக் கொள்கிறான் என்றால் அவனுக்கு வந்தது காதலே அல்ல...! பெண் என்ன ஐஸ்க்ரீமா இந்த ப்ளேவர் பிடிக்காவிடில் அந்த ப்ளேவர் பெட்டர் என்று தேர்ந்தெடுக்க..? ஆயின் பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு ஏற்ற திடீர் திருப்பம் அடங்கியதாக மாற்றிய விதம் நன்று. ஆக எழுத்து நடை மற்றும் எதிர்பாராத திருப்பம் ஆகியவற்றில் ரசிக்க வைத்த கீதமஞ்சரிக்கு கைகுலுக்கலும் பாராட்டுகளும்!

ராஜலபக்ஷ்மி மேடம் தந்துள்ள முடிவு எனக்கு ஏற்புடையதாக இருந்தது. காதலித்த பெண்ணினால் ஒருத்தன் லட்சியவாதி ஆகிறான்,. கலெக்டராகவே ஆகிறான் என்பது அழகுதான். ஆனால் லட்சியம் என்று அவள் சொல்லி விட்டதற்காக அவன் அதை மட்டுமே பற்றிக் கொண்டு அவளைக் கோட்டை விடுவது சரியாகப் படவில்லை. ‘ஐ.ஏ.எஸ் தேர்வில் செலக்ட் ஆனவுடனே அவளைப் பெண் கேட்டுப் போயிருக்கலாமே...?‘ என்கிற கேள்வியும் எழுந்தது. இவர் எழுத்தில் காட்டிய பாஸிட்டிவ் ஆங்கிள் ரொம்பவே பிடிச்சிருந்தது.

கீதா சாம்பசிவம் மேடம் தந்துள்ள முடிவு Down to Earth மிக இயல்பானதாக, ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தது. ஒருவேளை நீயே பெண் கேட்டு வந்து என் பெற்றோர் ஒத்துக்கிட்டா உன்னை ஏத்துப்பேன் என்கிற அவளின் தெளிவான ப்ராக்டிகலான முடிவும் சரி... அவள் மற்றும் அவள் பெற்றோர் விரும்பும் வண்ணம் ஒரு நல்ல நிலைக்கு வந்து அவளை அடைவேன் என்று அவன் எடுக்கும் உறுதியும் சரி... வெகு அழகு! அதன்பின் அவன் என்ன நிலைமைக்கு வந்தான் என்பதை படிப்பவரின் மனோபாவத்திற்கேற்ப கற்பனை செய்து கொள்ளட்டும் என்று விடுவது பெஸ்ட். (கீதா மேம் முதலில் ஒரு முடிவு எழுதி பின் அதை மாற்றி இதை எழுதி அனுப்யினதா சொல்லிருக்காங்க. நல்லவேளை... அந்த முதல் முடிவை அனுப்பலை.)

ஆக,,, என் கண்ணோட்டத்தின் படி போட்டோபினிஷிங்கில் கணநேர இடைவெளியில் முந்தி வெற்றிக் கோட்டைத் தொட்ட குதிரை எனில் கீதா சாம்பசிவம் அவர்களின் முடிவுதான். காதல் தோல்வியால் கதைநாயகன் தற்கொலை முடிவு எடுக்கிறான் என்கிற ஜி,எம்,பி, ஸாரின் நெகடிவ் எண்ட் முடிவுக்கு மாற்றாகச் சிந்தித்தால் பாஸிடிவ் எண்ட் கொண்ட இந்த முடிவு சரியாக இருப்பதாக என் உறுதியான கருத்து

பரிசை வென்ற கீதா சாம்பசிவம் மேடத்துக்கு என் மகிழ்வான நல்வாழ்த்துக்கள்..!. தங்கள் பங்களிப்பின் மூலம் போட்டியைச் சிறப்பாக்கிய போட்டியாளர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளும்., கை குலுக்கல்களும்..! என் மீது நம்பிக்கை வைத்து கு.த,பனங்காய் போல இப்படி ஒரு  பெரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த ஜி.எம்.பி ஐயா அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளும்  நமஸ்காரங்களும்






20 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    கீதா சாம்பசிவம் அம்மா அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பரிசை வென்ற கீதா சாம்பசிவம் மேடத்துக்கு என் மகிழ்வான நல்வாழ்த்துக்கள்..!.

    தங்கள் பங்களிப்பின் மூலம் போட்டியைச் சிறப்பாக்கிய போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..!

    பதிலளிநீக்கு
  3. பரிசை வென்ற கீதா சாம்பசிவம் மேடத்துக்கு என் மகிழ்வான நல்வாழ்த்துக்கள்..மேலும் போட்டியில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அடேடே.... கீதா மேடம் ஜெயிச்சுட்டாங்களா.... எப்போ ட்ரீட்னு கேக்கணும்.

    கணேஷின் அலசல்கள் பிரமாதம். (மெண்களை மட்டும் பெண்கள்னு மாற்றி விடவும்!) சரியான தீர்ப்பு அளித்த கணேஷுக்கு வாழ்த்துகள். "நாட்டாம... தீர்ப்ப மாத்தி எழுது'ன்னு கூவும் வாய்ப்பு இல்லை!!!

    பதிலளிநீக்கு
  5. பரிசு வென்ற கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

    GMB ஐயா அவர்கள் மறுபடியும் கதை எழுத வேண்டும்.

    அனைவரும் காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  6. கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    congratulations geetha madam

    பதிலளிநீக்கு
  7. பரிசினை வென்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்கள்.

    பதிலளிநீக்கு
  8. பரிசினை வென்ற கீதாம்மாவிற்கு வாழ்த்துகள்.....

    நல்ல தீர்ப்பு சொன்ன நாட்டாமை கணேஷ் வாத்தியாருக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  9. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டுக்கள். அனைத்திற்கும் மேலாக இத்தகு சீரிய முயற்சியை மேற்கொண்ட தங்களின் பணி பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  10. போட்டியில் கலந்துக்கொண்டவர்களின் முடிவுகளை நீங்கள் விமர்சித்த விதம் மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு

  11. @ திண்டுக்கல் தனபாலன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ கரந்தை ஜெயக்குமார்
    @ ஸ்ரீராம்
    @ துரை செல்வராஜு
    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    @ தமிழ் முஹில் ப்ரகாசம்
    @ வெங்கட் நாகராஜ்
    @ ஸ்கூல் பையன்
    @ டாக்டர் ஜம்புலிங்கம்
    @ டி.பி. ஆர் ஜோசப்
    அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு எதிர்மறை முடிவோடு கதை எழுதினேன். அதற்கான விளக்கமும் எழுதி இருந்தேன். மீதிக்கதை எழுதியவர்கள் அனைவரும் நேர்மறை முடிவையே ர்ழுதி இருந்தது எதிர்பார்த்தேன். மிகச் சின்ன விஷயங்களுக்காக தற்கொலை செய்து கொள்பவரைப் பற்றி தினமும் செய்திகளில் படிக்கிறோம் இப்படி நடக்குமா என்பதைவிட இப்படி நடக்க சாத்தியக் கூறு இருக்கிறது என்பதே நான் சொல்ல வந்ததுஇந்தக் கதை பாடம் புகட்ட அல்ல. நிகழலாம் என்பதன் கற்பனையே.
    போட்டி முடிவை பாலகணேஷுக்குக் கொடுத்தபின் அதில் நான் தலையிடவில்லை
    வாத்தியாரின் பதிவு என்றால் ஸ்கூல் பையனின் கருத்து இருக்குமோ.?
    போட்டியில் கலந்து கொள்ள பலருக்கும் வேண்டுதல் வைத்தேன் என் வேண்டுதலுக்கு இணங்கி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி
    நான் பல தலைப்புகளில் எழுதி வருகிறேன் சிறுகதைகளும் உட்பட. என் அடுத்த பதிவும் ஒரு சிறுகதைதான் மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அட?? முடிவு வெளியாகி இருதினங்கள் ஆகிவிட்டனவா? இரண்டு நாட்களாக இணையத்துக்கு அதிகமா வரமுடியலை. நேத்திக்கு நோன்பு வேலை வேறே! :))) பாராட்டிய அனைவருக்கு என் நன்றி.:))))

    பதிலளிநீக்கு
  13. பாராட்டிய அனைவருக்கும் என்பதில் "ம்" விட்டுப் போயிருக்கு. :)))))

    பதிலளிநீக்கு
  14. என்னைத் தேர்ந்தெடுத்த பாலகணேஷுக்குச் சிறப்பு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மத்த ரெண்டு முடிவுகளையும் கூட வெளியிடலாமானு யோசிக்கிறேன். :))))

    பதிலளிநீக்கு
  16. கதையின் முடிவுகள் வெளியானதை தாமதமாகத்தான் கவனித்தேன். நல்ல சிறப்பான அலசலோடு கதை முடிவு பற்றிய தகவல்களைத் தெரிவித்தமைக்கு நன்றி கணேஷ். இப்போட்டியில் யார் யார் கலந்துகொண்டார்கள் என்று தெரியவில்லையாதலால் மற்றவர்களின் கதை முடிவுகள் பற்றித் தெரியாமல் இருந்தது. சிறப்பான முடிவைத் தந்து பரிசு பெற்ற கீதா சாம்பசிவம் மேடத்துக்குப் பாராட்டுகள். கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. @கீதமஞ்சரி, இன்னொரு முடிவையும் நேற்று வெளியிட்டேன். நேரம் இருந்தால் வந்து பாருங்கள். கட்டாயம் இல்லை. :))))

    பதிலளிநீக்கு
  18. கதைமுடிவு போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    வெற்றிப்பெற்ற கீதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    தேர்ந்து எடுத்த பாலகணேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு