மகளிர் தினம்
--------------------
மகளிர் தினத்தில் பலரும் எழுதி இருக்கிறார்கள். பெயரும் புகழும் பெற்ற பெண் மணிகள் விருது பெற்றோர் , மகளிர் தினத்துக்கு காரணமானவர்கள் என்று பலரும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் ஒரு மூதாட்டி பற்றிய செய்தியைப் பகிர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் குறித்த செய்திகள் சரியாக நினைவுக்கு வராததால் கணினியில் தேட முயன்றேன் வெற்றி பெறவில்லை. ஆகவே நினைவுக்கு வருவதைப் பகர்கிறேன் கர்நாடக மாநில மூதாட்டி வயது எழுபதுக்கும் மேல் (இப்போது) அவர் என்னதான் சாதித்து விட்டார். தனி ஒரு ஆளாக நூற்றுக் கணக்கில் மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். பெயர் சாலு மாரக்கா என்று நினைவு. கர்நாடக மாநிலத்தில் இவரது சேவை அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு கௌரவப் படுத்தப் பட்டிருக்கிறார். அண்மையில் இவர் உடல் நலமில்லாதபோது அரசாங்கமே மருத்துவ உதவி செய்திருக்கிறது. படித்தவர் அல்ல. பாமரர். சுற்றுச் சூழல் பற்றிப் பேசியே காலங் கழிக்கும் நம்மிடையே ஒரு அசாதாரண தொண்டு மனம் படைத்தவர். இன்னுமிவர் பற்றி செய்திகள் தெரிந்தவர் பகிர்ந்து கொள்ளலாமே
தவறான பெயரில் தவறான இடத்தில் தேடி இருக்கிறேன், அவர் பெயர் சாலு மாரத திம்மக்கா. 285 ஆல மரங்களை நான்கு கிலோமீட்டர் இடையே நட்டு பராமரித்திருக்கிறார். இவருக்கு அனெரிக்க அரசின் பாராட்டும் கிடைத்திருக்கிறது குழந்தைகள் இல்லாத இவர் மரங்களை குழந்தைகள் போல் பாவித்திருக்கிறார்
ஸ்ரீராமின் பின்னூட்டம்கிடைக்கு முன்பே நானும் பார்த்து விட்டேன். பதிவை சரி செய்தும் விட்டேன். ஸ்ரீராமுக்கு நன்றி.
( காதல் காதல் காதல் , காதல் போயின்” போட்டி மீதிக்கதைக்கு கடைசிநாள் 10-ம் தேதி. நினைவூட்டுகிறேன்)
அவர் பெயர் சாலுமரதா திம்மக்கா. நீங்கள் சொல்லியிருக்கும் பெயரை வைத்து கூகிளில் தேடியபோது விவரம் கிடைத்தது. இதோ லிங்க்.
பதிலளிநீக்குhttp://en.wikipedia.org/wiki/Saalumarada_Thimmakka
படங்களுக்கு
பதிலளிநீக்குhttp://www.google.co.in/imgres?imgurl=http://savitahiremath.files.wordpress.com/2011/11/thimmakka-with-award-2.jpg&imgrefurl=http://savitahiremath.com/2011/11/10/saalumarada-thimmakka-a-peerless-green-champion/&h=183&w=275&tbnid=vSfvIqPRsxhDzM:&tbnh=133&tbnw=200&zoom=1&usg=__XpCOMLwcVgDSa32_odjNxV3C7iY=&docid=dmg6n7vCZL-SiM&itg=1&sa=X&ei=kgAbU-C8BMmKrQfZ3oHwBw&sqi=2&ved=0CJkBEPwdMAo
சுற்றுச் சூழல் பற்றிப் பேசிப் பேசியே காலங் கழிக்கும் நம்மிடையே மிகப் பெரிய தொண்டு மனம் படைத்த சாலுமரதா திம்மக்கா அவர்களைப் பற்றிய பதிவு சிறப்பாக இருக்கின்றது.
பதிலளிநீக்குஇப்படி பெண் சாதனையாளர்கள் பலர் உள்ளனர், ஆனால் வெளிச்சம் இட்டு காட்டத்தான் ஆளில்லை. இத்தகையோரில் ஒருவரை நீங்கள் வெளிக்காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇவ்வாறாகத் தொண்டாற்றும் சாலுமரதா திம்மக்காவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இவரைப் போன்ற மகளிரைப் போற்றிப் பாராட்டி நினைவுகூருவதே இன்றைய தேவை.
பதிலளிநீக்குவாழ்வதற்குப் பொருள் வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்வதிலும் பொருள் வேண்டும்.
நண்பரின் விசிடிங் கார்டில் பார்த்த வாசகம். “வாழ்வதிலும் பொருள் வேண்டும்” என்ற வாசகத்திற்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருப்பவர் திருமதி.திம்மக்கா. சாலையின் இருபுறமும் வரிசையாக நட்ட மரங்களுக்காக கிடைத்த பெயர் சாலுமரதா திம்மக்கா. கர்நாடக மாநிலத்தில் ஃகுப்பீ கிராமத்தில் பிறந்த திம்மக்கா கல்வி பயிலாதவர், விவசாயக்கூலி. உடல் குறையுள்ள திரு.சிக்கய்யாவை மணம் முடித்தாலும் குழந்தை பாக்கியம் இன்மையால் ஊராரின் பேச்சுக்கு ஆளாக நேர்ந்தது. பலர் வற்புறுத்தியும் மறுமணம் செய்ய மறுத்த கணவருடன் வாழ்வதற்கு பொருளுக்காக கல் குவாரியில் கல் உடைத்தும், வாழ்வதிலும் பொருள் இருக்கவேண்டும் என்பதற்காக ஹுலிக்கல் மற்றும் கடூருக்கு இடையே இருக்கும் நான்கு கி.மீ நீளமுள்ள அப்போதைய மண் சாலையில் அவர்கள் வளர்த்த 294 மரங்கள்.
நாற்பது வருடங்களுக்கு முன் அவைகளை காப்பாற்ற குடம் குடமாக இருவரும் நீரை சுமந்து ஊற்றி வளர்த்தார்கள். வேலியிட்டு காப்பாற்றினார்கள். இன்று அந்த மரங்கள் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்குவதுவதற்கு இடமும் உணவும் கொடுப்பது மட்டுமன்றி ஆடுமாடுகளுக்கும் வழிப் போக்கர்களுக்கும் நிழலும், மண்அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரை உயர்த்தி அந்த பகுதி மக்களுக்கு நல்ல வாழ்வாதாரம் தந்து வாழ்ந்த வாழ்கைக்கு பொருள் தேடியுள்ளனர். இன்று அம்மரங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய்கள்.அதனால் கிடைத்த பலன்கள் பல கோடி ரூபாய்கள் என்று கூறுவது சர்வதேச நிறுவனமான Food Agriculture Organisation. (FAO).
1991 ஆண்டு கணவர் திரு சிக்கையாவை இழந்த திம்மக்காவின் வாழ்க்கை 1995 ஆண்டு முதல் மாற துவங்கியது. அவர்கள் செய்த தன்னலமற்ற உழைப்பிற்கு மாநில,தேசீய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரங்களும், பரிசுகளும் கிடைத்தன. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள கணவர் சிக்கையா உயிருடன் இல்லை என்பதுதான் குறை. இன்று அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இவரது பெயரில் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் இவரது விருப்பம் தனது கிராமத்தில் ஒரு மருத்துவ மனை வேண்டுமென்பதே.
இன்று நாம் காணும் படித்த மக்கள் தங்கள் வீட்டிற்கருகில் கூட மரங்கள் இருக்க விரும்புவது இல்லை என்பதே உண்மை. நமது நாட்டை வளமான நாடாக மாற்ற தேவை கிராமத்திற்கு ஒரு சாலுமரதா திம்மக்கா.
Salumaradha Thimmakka
Kudur
Hulikal Post - 561101
Magadi Taluka,
கர்நாடக
நன்றி : மரவளம் தளம்...
மேலும் படங்களுக்கு : http://maravalam.blogspot.in/2009/07/blog-post.html
சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...
சரியான நேரத்தில் சரியான பதிவு ஜி.எம்.பி.சார். இப்போதெல்லாம் பெங்களூரில் கூட மெட்ராஸ் மாதிரி வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. மரம் வளர்ப்பதின் அவசியத்தை ஒவ்வொறு பள்ளியிலும் கட்டாய பாடமாக்க வேண்டும்.மரத்தை வெட்டுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அப்போது தான் ஓரளவாவது சீர் செய்ய முடியும். ஒரு 30 வருடங்களுக்கு முன்பு மெட்ராஸில் அதிகபட்ச வெயிலே 35 டிகிரிதான். ஏ.சி. என்றால் என்னவென்றே தெரியாத காலம். மினி விசிறி மட்டுமே போதுமானதாக இருந்தது. இருக்கும் மரத்தை எல்லாம் வெட்டி சாய்த்து கட்டிடங்கள் வந்து விட்டன. மெட்ராஸ் கூட பாலைவனமாக இப்போது மாறி விட்டது.
பதிலளிநீக்குசாலுமரதா திம்மக்கா
பதிலளிநீக்குபோற்ப்பட வேண்டியவர்
சாலுமரதா திம்மக்கா
பதிலளிநீக்குபோற்ப்பட வேண்டியவர்
சாலுமரதா திம்மக்கா – என்ற சாதனைப் பெண்மணி பற்றிய பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குசாதனை புரிந்துள்ள சாலு மர திம்மக்கா அவர்களை மகளிர் தினத்தன்று பாராட்டியது பொறுத்தமானதே.
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு. அவர் பற்றிய செய்திக்கான மேலும் ஒரு சுட்டி:
பதிலளிநீக்குhttp://www.openthemagazine.com/article/real-india/these-trees-are-her-children
திம்மக்கா பற்றிய பதிவு மனதை என்னவோ செய்கிறது. பணம் பதவி உடைய பலரால் செய்ய முடியாததை இவர் சாதிக்க முடிந்திருக்கிறதே! தகவலுக்கு நன்றி !
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவருகை தந்து கூடுதல் செய்திகளும் கொடுத்து கருத்திட்டு ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி
http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_9.html//
பதிலளிநீக்குஉங்கள் கதையின் முடிவு மேற்கண்ட சுட்டியில் காணலாம். நீங்கள் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.நேற்றே சுட்டி கொடுத்திருந்தேன்.
மகளிர் தின சிறப்பு பதிவாக சிறப்பான ஒரு பெண்மணி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டது நன்று.....
பதிலளிநீக்கு