கண்ணா மணி வண்ணா --கற்பனையில்
----------------------------------------------------------
கண்ணா கருமை நிறக் கண்ணா
கண்ணால்
காணாத உன்னைக்
கற்பனைக்
கண்கொண்டு வர்ணிக்க
நான்
என்ன செய்ய வேண்டும் ?
உனக்கே
உனக்கென்று சில அடையாளங்கள்
இருக்கவே
இருக்கிறது நானேன் புதிதாய்ச்
சேர்க்க
வேண்டும்? கருநிறம் சுருட்டை முடி
ரத்தினம்
அல்லது வைரம், ஏதோ பதிதத
தலையலங்காரம்
, அதில் மயில்பீலி செருகி
இருக்க
வெண்ணிற பிறை நெற்றி
மேல்
நோக்கி வளையும் குறி
சரிதானா
கண்ணா நான் சொல்வது.?
விபுவே..!
அசைகின்ற புருவங்கள்
அதனடியில்
அருள் தரும் கண்கள்
ஒளிவீசி
அடியார் அகம் குளிர் விக்குமாம்
அடியேனும்
அதில் ஒருவனா கண்ணா.?
எடுப்பான
நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடர்
விடும் மகர குண்டலங்கள்
செவ்விதழ்
விரிகையில் பளீரிடும் முத்துப் பற்கள்
காணக்கண்
கோடி வேண்டும் என்பர் இல்லையே
இருந்தாலென்
கற்பனை செய்யலாமே கண்ணா...1
இரத்தினம்
பதித்த கை வளை குலுங்க
வேணுவை
செந்தளிர் விரல்கள் மீட்டப்
பொழியும்
கர்ணாமிருத கானம் காற்றில்
மிதக்க
நானும் என்னை மறப்பதெப்போ?
மென்
கழுத்தில் மணி மாலைகள்
மலர்
மாலைகள்-நிற மாலைகளில்
வண்டினம்
பறந்தாட சந்தண மணம்
மேனியில்
கமழ வையமே மனந் திளைக்க
மெல்லிடையோய்
அதில் பட்டாடை சலசலக்க
கதிர்பரப்பும்
மணிகள் அரைஞாணில் கலகலகக
கண்டு
அடியார் மனம் மறந்து உனைத் துதிக்கக்
காணும்
எனைக் கண்ணா நீயும் ஆட்கொள்வதெப்போ.
அழகு
தொடை இரண்டும் பருத்தவை
அதை
மறைக்கப் பட்டாடை தெரிவது
கணுக்கால்
மட்டுமே பிடித்து வணங்க
அது
போதுமே என்பதே உன் சித்தமோ
கழலடி
தொழலே இன்பம் விளக்குமே
சரணாகதித்
தத்துவம் அறியாமை ஆணவம்
அடக்கி
ஆட்கொளல் உன் கடனன்றோ
துன்பங்கள்
களைந்து காத்திடு கண்ணா மணி வண்ணா.
(காதல் காதல் காதல் காதல் போயின்... மீதிக்கதை எழுதி அனுப்ப நினைவூட்டுகிறேன் நன்றி)
(காதல் காதல் காதல் காதல் போயின்... மீதிக்கதை எழுதி அனுப்ப நினைவூட்டுகிறேன் நன்றி)
பதிலளிநீக்குவிபுவே..! அசைகின்ற புருவங்கள்
அதனடியில் அருள் தரும் கண்கள்
ஒளிவீசி அடியார் அகம் குளிர் விக்குமாம்
அடியேனும் அதில் ஒருவனா கண்ணா./
விபு வை கருத்தில் கொண்டு வரும் முயற்சியில் வெற்றி பெற்றவரிகள்..
பாராட்டுக்கள்..!
/// கண்டு அடியார் மனம் மறந்து உனைத் துதிக்கக்
பதிலளிநீக்குகாணும் எனைக் கண்ணா நீயும் ஆட்கொள்வதெப்போ...? ///
அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
கண்ணால் உனைக்காணாத நிலையில் எப்படி வர்ணிக்க என்று கேட்டே வர்ணித்து விட்டீர்கள்...
பதிலளிநீக்குகடவுளை வர்ணிப்பதிலும் காதலியை வர்ணிக்கும் ரசனை தெரிகிறது. அருமை.
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்கு//கண்ணா... கருமை நிறக் கண்ணா
பதிலளிநீக்குஉன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை//
என்ற கவிஞரின் பாட்டிற்குப் பிறகு கண்ணனைப் பற்றி அருமையான கவிதை. இரசித்தேன். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
/
/விபு வை கருத்தில் கொண்டு வரும் முயற்சியில் வெற்றி பெற்றவரிகள்/by the way விபு என்பது நாங்கள் என் மூத்த பேரனுக்கு வைத்த பெயர்.மேடம் is trying to read between the lines...!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
/கண்ணால் உனைக்காணாத நிலையில் எப்படி வர்ணிக்க என்று கேட்டே வர்ணித்து விட்டீர்கள்/ நம் கடவுள்களை வர்ணிப்பது சுலபம் என்றே தோன்றுகிறதுஒவ்வொருவருக்கும் நிறையவே அடையாளங்கள் இருக்கின்றதேவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு# டி.பி ஆர் ஜோசப்
/கடவுளை வர்ணிப்பதிலும் காதலியை வர்ணிக்கும் ரசனை தெரிகிறது. அருமை/ கண்ணன் என் காதலியோ.?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
படித்து ரசித்ததற்கு நன்றி ஐயா.
@ வே.நடன சபாபதி
கண்ணன் பேரில் பாட்டெழுத்துவதில்
I may be the nth man வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
மென்கழுத்தில் மணி மாலைகள்
பதிலளிநீக்குமலர் மாலைகள்- நிறை மாலைகளில்
வண்டினம் பறந்தாட சந்தன மணம்
மேனியில் கமழ வையமே மனந் திளைக்க..
அடடா... என்ன ஒரு அழகான வர்ணனை!..
நல்லதொரு சொல்லாட்சி!..
நான் எனை மறந்தேன்!..
அருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி
வர்ணனை அருமை
பதிலளிநீக்குவார்த்தைகளால் அனைவருள்ளும்
காட்சிப்படுத்திப் போகுது தங்கள் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது பதிவைப் படித்ததும் கண்ணனைப் பற்றி கண்ணதாசன் பாடிய பல பாடல்கள் நினைவிற்கு வந்துவிட்டன. கண்ணன் என்றால் நம்வீட்டுக் குழந்தைபோல் என்று ஒவ்வொருவரும் நினைக்கும் அளவு மனதில் பதிந்தவன் கண்ணன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகண்ணனைப் பற்றிய அழகான பதிவு.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
/நல்லதொரு சொல்லாட்சி!../ பாராட்டுக்கு நன்றி ஐயா. சில நேரங்களில் வார்த்தைகள் வந்து விழுந்து மகிழ்விக்கும். சில நேரங்களில் வார்த்தைகள் வராமல் வழுக்கிப் போகும்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ ரமணி.
வசிஷ்டர் வாயால்....என்பதுபோல் உணர்கிறேன் நன்றி சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
கண்ணனைப் பற்றி பாரதி எழுதி இருந்தார். கண்ணதாசன் எழுதி இருந்தார் . இப்போது ஜீஎம்பியும் ஹா ஹா ஹா...! வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ செல்லப்பா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ செல்லப்பா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
கண்ணனைப் பற்றி அலுப்பில்லாமல் வர்ணிக்கலாம். வர்ணனையும் அருமை.
பதிலளிநீக்குஎப்படி என்று தொடங்கி எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் வர்ணித்து விட்டீர்கள். நிறைய இடங்களில் உணர்வுபூர்வமான நயம். ஏனோ ஒரு வரி ராமாயணம் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஎண்ணம் நிறைந்த கண்ணனை கற்பனையில் கண்டு மகிழ்ந்ததோடு அழகுத் தமிழில் பாடி நாங்களும் அந்த அனுபவம் அறியத் தந்துவிட்டீர்கள். பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
அப்படி வற்னிப்பதற்கு ஒரு வேளை கண்ணனே உதவினானோ. ஒரு வாக்கிய ராமாயணம் நினைவுக்கு வருவது என் பாக்கியம் பாராட்டுக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ மேலே வர்ணிப்பதற்கு என்றிருக்க வேண்டும் தட்டச்சுப் பிழை...!
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குஎப்படி வர்ணிப்பேன் என்று சொல்லி எவரும் வர்ணிக்க முடியாத வகையில் கண்ணனைப் பற்றிய தங்கள் எண்ணங்களை எழுத்தாக்கி தந்துள்ளீர்கள். அழகான வரிகள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..
நல்ல கற்பனை..... ரசித்தேன்.
பதிலளிநீக்கு