என் பதிவேதுமில்லை.... பகிர்வா
---------------------------------------------
எழுதுவது என்பது நினைத்த மாத்திரத்தில் முடிவதில்லை. நான் விரும்பும் தலைப்பும் அதை நான் எழுதினால் சிலராவது ரசிப்பார்கள் என்றநம்பிக்கையும் வேண்டும். , கற்பனைக்கு எங்கோ கடிவாளம் இட்டுவிட்டது போல் இருக்கிறது. இருந்தாலும் பதிவுலகில் நான் எழுதுவதையோ இல்லை வேறு ஏதாவது பதிவிடுவதையோ சிலராவது எதிர்பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆகவே இப்பதிவு எனக்கு வந்த சில படங்கள், காணொளிகள் இவற்றின் பதிவே.ரசிப்பீர்கள் என்று தெரியும் கீழே ஒரு படம். அந்தப் படத்தை சாதாரணமாகப் பார்த்தால் தெரியாததுகவனித்துப் பார்த்தால் தெரியும் எங்கே பார்த்துச் சொல்லுங்கள்
சாது மிரண்டால் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் இங்கு ஆடு மிரண்டால்.....என்ன நடக்கிறது பாருங்கள்
நடனம் ஆடுவது கண்டிருக்கிறோம் உடலின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து அழகு பாவத்துடன் அசைப்பது ( தாளத்துக்கு ஏற்ப )என்று புரிதல் ஆனால் முகத்திலேயே , முகத்தாலேயே ஆடும் நடனமிதோ .பார்த்து ரசியுங்கள்.
என்ன நண்பர்களே ரசித்தீர்களா. இன்னும் சில காணொளிகள் பிறிதொரு பதிவில்.
பதிலளிநீக்குமுதல் படத்தில் கிளிபோல் அமர்ந்திருப்பது மனித உருவமே.(ஆணா பெண்ணா என சரியாகத் தெரியவில்லை.பெண்ணாக இருக்கலாம்.
செம்மறியாட்டின் வீரத்தையும் விளையாட்டையும் இரசித்தேன்.
டால்பின் பற்றிய காணொளியை காண இயலவில்லை.
பகிர்ந்தவை யாவும் சுவாரஸ்யமானவையே. பகிர்ந்தமைக்கு நன்றி!
சுவாரசியமான பகிர்வுகளுக்கு நன்றி. அனைத்தும் ரசிக்கும்படி உள்ளன.
பதிலளிநீக்குகிளியின் காலை (!) கூர்ந்து கவனித்தால் தெரிந்து விடுகிறது... (பெண் ?)
பதிலளிநீக்கு"ஆடு மிரண்டால்" காணொளி மிகவும் பிடித்திருந்தது...
நல்ல காணொளிகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குரசனையான காணொளிகள்.. செம்மறி ஆட்டின் மண்டைக்குள் ஏற்படும் குடைச்சல் காரணமாகத் தான் ஆடு - அந்த அவஸ்தையைத் தீர்த்துக் கொள்வதற்கு இதைப் போல செய்கின்றது.
பதிலளிநீக்குசிரிக்கும் மீன்கள்ன் எனப்படும் டால்பின்களின் சந்தோஷம் அளவிடமுடியாதது. சிங்கப்பூரிலும் இது மாதிரியான நிகழ்வு உண்டு. கண்டிருக்கின்றேன்.
தைரியமான ஆடு ..ஆட்டுக்கார அலமேலு படத்தை நினைவு படுத்தியது..
பதிலளிநீக்குஒரு ரிசார்ட்டில் வாத்துகள் எங்களை ஓடி ஓடி துரத்தியது.. வியந்துபோனோம்..!
டால்பின் காட்சி ரசிக்கவைத்தது..!
கிளியின் வால் காட்டிக்கொடுக்கிறது..!
மாதக் கடைசி என்பதாலா, என்னவென்று தெரியவில்லை. காணொளிகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன! திறக்க நேரமாகிறது. கிளி புகைப்படத்தில் இருப்பது மரத்துண்டின் மீது அமர்ந்திருக்கும் பெண்!
பதிலளிநீக்கு//முதல் படத்தில் கிளிபோல் அமர்ந்திருப்பது மனித உருவமே//
பதிலளிநீக்குஎல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். ஆனால் என்னால் அந்த மனித இனத்தை இனம் காண முடியவில்லை.
அருமையான காணொளிகள்.....
பதிலளிநீக்குஅதிலும் அந்த டால்ஃபின்கள் ரொம்பவே பிடித்துப் போனது......
All the videos are amazing!thanks a lot for your taking pains to share them with us!
பதிலளிநீக்குகந்தசாமி ஸார்... படத்தை டவுன்லோட் செய்து நன்றாக 'ஜூம்' செய்து பாருங்கள்!
பதிலளிநீக்குசுவாரசியம்
பதிலளிநீக்குரசித்தேன்
நன்றி ஐயா
மிக அருமையான காணொளிகள்.
பதிலளிநீக்குநன்றாக ரசித்தேன்.
நாங்களும் அமெரிக்காவில் டால்பின் ஷோ பார்த்தோம்.
பழகிய அன்பான குழந்தைகளாக இருக்கிறது டால்பின்.
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ வே. நடனசபாபதி
அந்த கிளி படம் முதலில் என் மெயிலில்கண்டபோது சாதாரணக் கிளி ஃபோட்டொ என் அனுப்பினார்கள் என்றே எண்ணினேன். பிறகு இரண்டாம் முறை பார்த்தபோது படத்தில் camouflaged மனித உருவம் தெரிந்தது. ஆகவே பகிர்ந்து கொண்டேன் முதல் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
dd யின் கண்களில் இருந்து எதுவுமே தப்பாது. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
முதலில் எனக்கும் கிளியில் மனித உருவம் புலப்படவில்லை. காணொளிகளை ரசித்தமைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
செம்மறி ஆட்டின் மண்டையில் குடைச்சல் ஏற்படுமா.? தகவலுக்கு நன்றி டால்ஃபின் ஷோ பார்த்ததால் may be we are able to appreciate the video. வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
தைரியமான ஆடு ....! முட்டு வாங்கியவர்களுக்குத்தெரியும் பாடு. வாத்துகள் துரத்துவதை நானும் விஜயவாடாவில் பார்த்திருக்கிறேன் அவதிப் பட்டது என் இரண்டாம் மகன் ( அப்போது சிறிய பையன்)வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
மாதக் கடைசி என்பதாலா........மாதக் கடைசியில் ப்ரௌசர் திறன் வற்றுமா? வருகைக்கு ம் டாக்டர் கந்தசாமிக்கு ஆலோசனைக்கும் நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ hns mani
thanks for the second consecutive visit.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகை தந்து ரசித்ததற்கு நன்றி
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
வருகை தந்து ரசித்ததற்கு நன்றி. முகத்தால் நடனமாடும் காணொளி யாரும் ரசிக்க வில்லையா.?
தினமும் எழுத வேண்டும் என்று எதையாவது எழுதி சக பதிவர்களைக் கலங்கடிக்கும் செயலை செய்வதைக் காட்டிலும் இவ்வாறு அருமையான காணொளிகளை பகிர்வதில் தவறேதும் இல்லைதான்.
பதிலளிநீக்குஎல்லாரும் விடையைச் சொல்லிட்டாங்க. நான் தாமதமாய்ப் பார்க்கிறேன். எனக்குக் கிளி தான் தெரிஞ்சது. எல்லாரும் சொன்னதைப் படிச்சப்புறம் தான் புரிஞ்சது. குழல் விளக்கு மூளை! :))))
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர் ஜோசப்
என்னதான் எழுதினாலும் சக பதிவர்களை கலங்கடிக்க முடியாது என் பதிவுகளில் variety is the spice என்று படிப்பவர்களுக்குத் தெரியும் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம் வயதாகி விட்டாலேயே (?) lateral thinking குறையும் போல...! வருகைக்கு நன்றி மேடம்
முகத்தாலேயே ஆடும் நடனமிதோ .பார்த்து ரசியுங்கள்.//
பதிலளிநீக்குமுகநடனம் பார்த்து ரசித்தேன்.
மிக அருமையாக இருந்தது. ஒவ்வொரு அவயங்களையும் மிக அழகாய் அசைத்த காட்சி மிக அழகு.
இப்படி, முகம், கண், புருவம் , காது என்று தனி தனியாக அசைத்து நடனம் ஆட வைப்பதற்கு நல்ல பயிற்சி பெற்று இருப்பார்.