Wednesday, January 14, 2015

சாமியே சரணம் ஐயப்பா....


                             சாமியே சரணம் ஐயப்பா....!
                             ----------------------------------------
ஸ்ரீ ஐயப்பன்




ஐயப்பத் திருவிழா
கார்த்திகை மாதம் பிறந்தாலேயே எங்கள் ஊர் களை கட்டிவிடும்.எங்கு பார்த்தாலும் கறுப்பு அல்லது காவி உடை யணிந்தோர் எண்ணிக்கை அதிகமாகும் ஏனென்றால் எங்கள் ஊரில் பெங்களூருவில்பிரசித்தி பெற்ற திரு ஐயப்பசாமி கோவில் இருக்கிறது. ஐயப்பன் கோவில் என்றாலேயே கணிசமான மலையாளிகள் எண்ணிக்கை இருக்குமிடமாக இருக்கும் நாங்கள் இருக்கும் இடம் ஒரு மினி கேரளா என்று சொல்லலாம் ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் பெங்களூருவில் ஒரு லாண்ட் மார்க் ஆகும். பிரதி வருடமும் மார்கழி ஒன்றாம் தேதி கோவிலில் கொடியேற்றி  பத்துநாள் உறசவம் நடக்கும் டிசம்பர் 26-ம் நாள் சபரி மலையில் மண்டல பூஜை நடைபெறும் நாளன்றுஇங்கும் விசேஷ் பூஜைகள் நடத்தப் பட்டு உற்சவம் நிறைவு பெறும். கொடி ஏற்றும் நாள் கோவில் அருகில் வசிக்கும் பக்தர்கள் சார்பாக ஏரியா பூஜை நடந்து கொடி ஏற்றுவதில் நிறைவு பெறும் ஊர் மக்களிடம் பணம் வசூலித்து சுவாமி ஊர்வலத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் புராதன கலாச்சாரத்தின் மிகுதிகளான ஜண்டைமேளம், தாயம்பகா, கொம்பு ஊதல் தீயம் போன்றவற்றுடன் சுவாமி ஊர்வலம் வரும். இந்த வருடம் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் நரசிம்ஹ அவதார  மற்றும்சீதாதேவியுடன் லவ குச  ராமலக்ஷ்மண tableau வும் இருந்தது. சிங்காரி மேளம் என்னும் ஒரு வகை நடனம் என்னை மிகவும் கவர்ந்த்து. வீடியோவாக எடுத்திருந்தேன் ஆனால் துரதிஷ்டவசமாக சைஸ் பெரிதாக இருப்பதால் தளத்தில் அப்லொட் செய்ய முடியவில்லை.நூற்றுக்கணக்கான சிறுமிகள் தாலத்தில் விளக்கு ஏந்தி ஊர்வலத்தில் நடந்து வந்தது காண மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் தெருவே மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்தது. எது எப்படி இருந்தாலும் கோவில் விழாக்களினால் நம் பாரம்பரியக் கலைகள் இன்னும் உயிரோடிருக்கின்றன என்று தோன்றுகிறது. இப்போதெல்லாம் யானையை ஊர்வலத்தில் அனுமதிப்பதில்லை.மூன்று வருடத்துக்கு முந்திய ஓரிரு காணொளிகள் இத்துடன்





இந்த நேரத்தில் பறை அளப்பதாக வேண்டுதல் உள்ளவர்கள் அதற்கான பணம் கட்டி பறையில் நெல் அளக்கலாம் கோவிலுக்கு இதுவும் ஒரு வகையில் வருமானமே.பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் நாளிலிருந்தே சபரிமலைப் பயணம் மேற்கொள்கின்றனர். மண்டல கால விரதம் எல்லாம் ஏதோ ஒரு சிலருக்குமட்டுமே என்றாகிவிட்டது.ஐயப்பன் கோவிலுக்கு விரிவு படுத்த நிலம் வேண்டுமாம் ஒரு சதுர அடிக்கு ரூ.7000/- செலுத்திப் பக்தர்கள் புண்ணியம் தேடிக்கொள்ளலாம் 
 இன்று மாலை  பொன்னம்பல மேட்டில் ஐயப்ப பக்தர்களை ஐயனின் மகர ஜோதி என்று மதி மயங்கச் செய்யும்  மனிதர்கள் ஏற்றும் தீப்பந்தம். நேரடி ஒளிபரப்பாகவும் காட்டப் போகிறார்கள். நம்பிக்கைக்கு ஒரு எல்லை இல்லை போலிருக்கிறது....!எத்தனை பேர் குளிர் காய்கிறார்களோ.?

32 comments:

  1. உண்மையான பக்திமான்களைக் கடவுள் ஏமாற்றுவதில்லை. ஐயப்பன் கோயிலுக்குச் செல்லுவதும் இப்போது ரொம்பவே அதிகம் ஆகி விட்டது. நான் சின்னவளாக இருந்தப்போ மதுரையில் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதை பயம் கலந்த பக்தியுடனேயே பேசிக் கொள்வார்கள். அப்போதெல்லாம் காட்டுப் பாதை தான் என்பார்கள். இப்போதுக் குறுக்கு வழி, பெருவழி, சிறுவழி என்றெல்லாம் வந்திருப்பதாயும் கேள்விப் பட்டேன்.

    ReplyDelete
  2. எனக்கும் போக ஆசைதான். 2007 ஆம் வருடம் போகலாமோ என்னும் எண்ணமும் இருந்தது. ஆனால் காலில் செருப்புப் போடக் கூடாது என்பதால், எனக்கு உள்ளங்காலில் பிரச்னை. செருப்பு இல்லாமல் வீட்டிலே நடப்பதையே மருத்துவர்கள் எதிர்க்கின்றனர். ஆனால் வீட்டில் செருப்புப் போட்டால் வழுக்கி விழ நேரிடுகிறது என்பதால் போடுவதில்லை. :))) இந்தப் பிரச்னையால் ஐயப்பன் கோயிலுக்குப் போக முடியவில்லை. :)

    ReplyDelete
  3. // நம்பிக்கைக்கு ஒரு எல்லை இல்லை போலிருக்கிறது....!எத்தனை பேர் குளிர் காய்கிறார்களோ.?//
    நம்பிக்கைகள் சில இடங்களில் பணமாக்கப்படுகின்றன. அவ்வளவே. காணொளிகளை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு கேரள செண்டை அடி கேட்டு மகிழ்ந்தேன் ஐயா நன்றி.

    ReplyDelete
  5. 1980களில் கோவையில் பணியாற்றும்போது புதுசித்தாபுத்தூரில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளேன். சபரிமலைக்கு இரு முறை சென்றுள்ளேன். தங்களது பதிவு மறுபடியும் என்னை ஐயப்பனிடம் அழைத்துச்சென்றது. நன்றி.

    ReplyDelete
  6. பலருக்கும் இந்த சாமிகள் பணம் காய்க்கும் மரங்கள் ஆகிவிட்டன என்பதை கடைசி வரியில் முத்தாய்ப்பாக சொல்லி இருப்பதை ரசித்தேன் :)
    த ம + 1 ( தாங்கள் இணைத்தபின் )

    ReplyDelete

  7. @ கீதா சாம்பசிவம்
    யார் உண்மையான பக்தர்கள்.?நான் மூன்றுமுறை சபரிமலைக்குச் சென்றுள்ளேனென் அனுபவங்களைப் பதிவாக்கி இருக்கிறேனொரு மண்டல கால விரதம் இருந்து சில குணங்களைக் கடைப்பிடித்து வந்தால் அவையே நம் குணமாக மாற வாய்ப்புண்டுஎன்பது நிஜம். ஆனால் இப்போதெல்லாம் 90சதவீதம் பேர் விரதமென்பதை சற்றும் அனுஷ்டிக்காதவர்கள். வெறும் வேஷதாரிகள் என்பதே என் கணிப்பு. வருகைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete

  8. @ கீதா சாம்பசிவம்
    சபரி மலைக்குப் போய் வருவது ஒரு அனுபவமாக இருக்கலாம். போகாததால் எதையும் இழக்கவில்லை என்பதே என் கருத்து

    ReplyDelete

  9. @ வே.நடனசபாபதி
    /நம்பிக்கைகள் சில இடங்களில் பணமாக்கப் படுகின்றன./சில இடங்களில் அல்ல ஏறக்குறைய எல்லா இடங்களிலும்தான்.நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  10. @ கில்லர்ஜி
    கோவில்களும் திருவிழாக்களும் நம் பாரம்பரியக் கலைகள் அழியாமல் இருக்க ஓரளவு உதவுகின்றன.வருகைக்கு நன்றிஜி.

    ReplyDelete

  11. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ஒரு முறை சென்றுவந்தாலேயே போதும். அனுபவம் கிடைக்கும். இரு முறை சென்று வந்தால் அது குறித்துக் கருத்து ஏற்படுத்த இன்னும் உதவும். கடவுளைக் காணா எங்கும் செல்ல வேண்டாம் THE KINGDOM OF HEAVEN IS WITHIN YOU. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  12. @ பகவான் ஜி
    ஏனோ தெரியவில்லை ஜீ. நான் தமிழ்மணத்தில் இணைக்கும் முன்னேயே என் பதிவுகள் தமிழ்மணத்தில் வந்து விடுகின்றன. எனக்கு ஓட்டுப்பட்டை கிடையாது. நான் இணைக்கும் நேரம் எனக்கு அதிக வாசகர்களைகொண்டு சேர்க்கும் என்பது தவிர வேறு ஒன்றுமில்லை. பதிவை ரசித்ததற்கு நன்றி ஜி.

    ReplyDelete
  13. நம்பிக்கைதான் வாழ்வு.

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  16. சபரிமலைக்கு நிறையப் பேர் மாலை அணிந்து விரதம் இருந்து(?) செல்கிறார்கள் அதற்கு சில உளவியல் காரணங்களும் உண்டு.

    ReplyDelete
  17. இன்றைக்கு சபரி மலைக்கு செல்வது ஓர் பேஷன்...!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  18. யானை என்றால் சிறு வயதிலிருந்தே எனக்கு பயம். பெங்களூரில், இந்த கோயிலில் அய்யப்ப திருவிழாவில் இப்போதெல்லாம் யானையை ஊர்வலத்தில் அனுமதிப்பதில்லை என்பது நல்ல விஷயம்தான் என்று நினைக்கிறேன். கோயிலில் ஏன் யானையை வளர்க்கிறார்கள் என்று ரொம்ப நாளாகவே எனக்குள் ஒரு கேள்வி. நீங்கள் இது பற்றி ஒரு பதிவினை எழுதினால் நன்றாக இருக்கும்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  19. @ டாக்டர் கந்தசாமி
    /நம்பிக்கைதான் வாழ்வு/ அது சரியானதாக இருக்கவேண்டும் என்பதும் தவறில்லையே. நன்றி ஐயா.

    ReplyDelete

  20. @ கரந்தை ஜெயக்குமார்
    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  21. @ யாதவன் நம்பி
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

  22. @ டி.என். முரளிதரன்
    உளவியல் காரணங்கள் சிலவற்றை எடுத்துக் காட்டி இருக்கலாமோ.? வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  23. @ திண்டுக்கல் தனபாலன்
    சபரி மலைக்குப் போவது ஒரு ஃபாஷன் போல்தான் தெரிகிறது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  24. @ தமிழ் இளங்கோ
    இந்தக் கோவிலில் யானையை வளர்க்கவில்லை. ஊர்வலத்துக்கு வாடகைக்குத்தான் கொண்டு வந்தார்கள். முன்பு ஒரு ஆறுமாத யானையை வாங்கி வளர்க்க முற்பட்டபோது விலங்குகளைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்னும் புகார் வந்தது. கொடுத்துவிட்டார்கள். கேரளத்தில் கோவில்களில் யானைஇருப்பது முக்கியமாகக் கருதப் படுகிறது. ஒரு யானையையும் கடல் அலையையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பார்கள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  25. ஆம்! நீங்கள் சொல்லி இருப்பது போல் கோயில்கள், திருவிழாக்கள் நமது பாரம்பரிய கலைகளை நலிவடையச் செய்யாமல் பாதுகாக்கின்றன...ஓரளவே!

    இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லியது - திருவிழாக்கள் சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும், பல மக்களுக்கும் சிறு வருவாயை ஈட்ட உதவுகின்றன." சீசனல் ஆக இருப்பதால் சிறு வியாபாரிகள் இதை உபயோகப்படுத்தி சில மாதங்களுக்கான வருவாயை ஈட்ட வழிவகுக்கின்றன...(சொற்பமாக இருந்தாலும்...) அது போன்று ஏழைகளுக்கும் விலைகுறைவான பொருட்கள் கிடைக்கவும் உதவுகின்றது. அவர்களுக்கு அவ்வளவாகச் செலவு இல்லாத ஒரு பொழுது போக்கு அம்சமாகவும் இருக்கிறது எனலாம். பல கிராமங்களில் கோயில் திருவிழா என்றால், உறவினர்களின் வருகையும் இருக்கும். அப்படி குடும்ப உறவுகள் கூடும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது எனலாம். நம்பிக்கை, சாமி என்பதை விட இது போன்றவற்றிற்கு உதவுகின்றது..எனலாம்..

    ReplyDelete
  26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த, இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்! சூரியன் இல்லை என்றால் உலகமே இல்லை! உழவர் சேற்றில் இறங்கவில்லை என்றால் நாம் சோற்றைக் காண முடியாது. எனவே அந்த சக்தியையும், உழவரையும் வாழ்த்துவோம்.

    ReplyDelete
  27. ஜலஹள்ளி கோவில் விழா பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  28. ஜலஹள்ளி கோயில் திருவிழாவைப் பார்க்கையில் கேரளாவில் இருப்பதைப் போல்தான் உள்ளது. தங்கள் ஊரை மினி கேரளா என்று குறிப்பிட்டிருப்பது மிகச்சரி. கோயில்களால் பாரம்பரியக் கலைகள் அழியாமல் காப்பாற்றப்பட்டாலும் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப அவையும் தங்கள் பாரம்பரியத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துகொண்டு வருவது சற்றே வருத்தம் தரும் விஷயம். பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  29. ஜலஹள்ளி கோயில் விழா காணொளிகள் அருமை.


    ReplyDelete
  30. அன்புள்ள ஐயா.

    வணக்கம். நலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    வணக்கம்.

    ReplyDelete
  31. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

    ReplyDelete
  32. இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete