ஆயகலைகள்
---------------------
ஆய கலைகள் 64 என்கிறார்களே, அவையாவன—
1) அக்கர இலக்கணம் --------------- எழுத்திலக்கணம்
,2) -இலிகிதம், ----------------------- எழுத்தாற்றல்
-3) கணிதம்,- --------------------------------- கணித இயல்
4) வேதம்,-------------------------------------- மறைநூல்
5) புராணம்,-------------------------------------தொன்மம் -
6) வியாகரணம் ---------------------------இலக்கணவியல்,-
7) நீதி
சாஸ்திரம்,--------------------------நயநூல்
8) ஜோதிட சாஸ்திரம்,------------------கணியக் கலை
9) -தர்ம சாஸ்திரம்-------------------------அறத்துப்பால்
10) யோக சாஸ்திரம்,---------------------ஓகக்கலை -
11) மந்திர
சாஸ்திரம்,-------------------மந்திரக்கலை-
12) சகுன சாஸ்திரம்,--------------------நிமித்தக்கலை
13) -சிற்பசாஸ்திரம்,--------------------------கம்மியக்கலை
14) வைத்திய சாஸ்திரம்-------------- மருத்துவக்கலை,-
15) உருவ
சாஸ்திரம்,------------------உருப்பமைப்பு-
16) இதிகாசம்,---------------------------------மறவனப்பு
17) காவியம்,------------------------------------வனப்பு
18) அலங்காரம்--------------------------------- அணி இயல் ,-
19) மதுரபாடனம்,-------------------------------இனிது மொழிதல்
20) நாடகம்,----------------------------------------நாடகக் கலை-
21) நிருத்தம்,-------------------------------------ஆடற்கலை-
22) சத்த பிரமம்,--------------------------------ஒலி நுட்ப அறிவு
23) -வீணை,-----------------------------------------யாழ் இயல்
24) வேணு,------------------------------------------குழலிசை
25) மிருதங்கம்-----------------------------------மத்தள நூல்
26) தாளம்------------------------------------------தாளையல்
27) அத்திரப் பரீக்ஷை,---------------------வில்லாற்றல்
28) கனகப் பரீக்ஷை,--------------------- பொன் நோட்டம்
29) இரதப் பரீக்ஷை,-----------------------தேர் பயிற்சி -
30) கஜபரீக்ஷை,---------------------------யானை ஏற்றம்
-31) அஸ்வப் பரீக்ஷை,-----------------குதிரையேற்றம் -
32) ரத்தினப் பரீக்ஷை-------------------மணி நோட்டம்-
33) பூபரிக்ஷை,------------------------------மண்ணியல்
34) -சங்கிராம இலக்கணம்,---------போர்ப்பயிற்சி-
35) மல்ல யுத்தம்,------------------------- கைகலப்பு
36) ஆகருக்ஷணம்.-------------------------கவர்ச்சி இயல்
37) -உச்சாடனம்,-----------------------------ஓட்டுகை
38) வித்துவேஷணம்,---------------------நட்பு பிரிக்கை-
39) மதன சாஸ்திரம்,--------------------மயக்கு கலை-
40) மோகனம்,--------------------------------புணருங்கலை (காம சாத்திரம்)
41) வசீகரணம்,------------------------------வசியக் கலை
42)-இரசவாதம்,------------------------------இதளியக் கலை
43) காந்தர்வ விவாதம்----------------இன்னிசைப் பயிற்சி-,
44) பைபீல
வாதம்,-----------------------பிற உயிர் மொழி
45) கௌத்துகவாதம்---------------------மகிழுறுத்தம்
46)-தாது வாதம்,-----------------------------நாடிப்பயிற்சி
47) -காருடம்,----------------------------------கலுழம்
48) நட்டம்,--------------------------------------இழப்பரிகை
49) முட்டி,--------------------------------------மறைத்ததை அறிதல்
50) ஆகாயப்
பிரவேசம்---------------வான் புகுதல்,
51) ஆகாய கமனம்,----------------------வான் செல்கை
52) பரகாயப் பிரவேசம்,--------------கூடுவிட்டுக் கூடு பாய்தல்
53) அதிரிச்யம்,-----------------------------தன்னுறு கரத்தல்-
54) இந்திரஜாலம்,-------------------------மாயம்
55) மகேந்திர
ஜாலம்--------------------பெருமாயம்,
56) அக்னிதம்பம்,--------------------------அழற்கட்டு
57) ஜலஸ்தம்பம்,------------------------நீர்க்கட்டு -
58) வாயுத்தம்பம்,------------------------ வளிக்கட்டு -
59) திட்டித் தம்பம்,-----------------------கண்கட்டு
60) வாக்குத்தம்பம்,----------------------நாவுக்கட்டு-
61) சுக்கிலத்தம்பம்,---------------------விந்துக் கட்டு
62) கன்னத் தம்பம்,---------------------புதையற்கட்டு
63) கட்கத் தம்பம்,----------------------வாட்கட்டு -
64) அவத்தைப்
பிரயோகம்--------சூனியம்
சத்தியமாகச் சொல்கிறேன், பெயர்கள்தான் எழுதிவிட்டேனே
அல்லாமல் அவை என்ன என்று தெரியாது ‘அபிதான சிந்தாமணியில்’ கலைஞானம் 64 என்னும் தலைப்பில் கொடுக்கப் பட்டவை என்று சொல்லப் படுகிறது
இன்னொரு தொகுப்பு
வேறொரு பட்டியல்
1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
;43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).
அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம் சிலருக்கு இவை உதவலாம்