புதுக் கோட்டை via மலைக் கோட்டை (5)
------------------------------------------------------------------
புதுக் கோட்டைvia மலைக்கோட்டை என் எண்ணங்கள்
இப்பதிவை
எழுதுவதா வேண்டாமா என்ற பலத்த சிந்தனைக்குப் பின் எழுதுகிறேன் 11-10-2015 நடை பெற்ற
பதிவர் விழா நிகழ்வுகள் குறித்துப் பலரும் எழுதுகிறார்கள் எழுதுவார்கள் நானும் கடந்த நான்கு பகுதிகளில் பதிவர் விழாவுக்கு நான் வந்ததையும் சந்தித்தவர் பற்றியும் எழுதி விட்டேன் எல்லாமே MUNDANE பதிவுகள்ஆகவே இந்தப் பதிவு விழா பற்றியது அல்லi மனதில்
பட்டதைச் சொல்வது என் குணம்தானே அதை நான் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும் ஆனால் இதில் சொல்லப் போகும் விஷயங்கள் யார்
மனதையும் நோகடிக்க அல்ல. பலருக்கும் தோன்றி இருக்கலாம் சொல்லி ஏன் பொல்லாப்பை கட்டிக் கொள்ள வேண்டும்
எனவே நினைப்பவர்களே பதிவுலகில் அதிகம் என்பது என் அனுபவப் பாடம்
பொது
வாக இம்மாதிரி சந்திப்புகளை ஆர்கனைஸ்
செய்து நடத்துவது மிகவும் சிரமமான ஒன்று. அர்ப்பணிப்பும் மனோபலமும் தேவை.
அது நம் புதுக் கோட்டை வலைப்பதிவர் சந்திப்பினர் குழுவுக்கு இருந்ததுஅதனைத் திறம்பட
நடத்திச்சென்ற திரு முத்து நிலவனுக்கு நிறையவே இருந்தது. கிரிக்கட்
விளையாட்டில் காப்டனைப் போல்
வீரர்களா வீரர்களை போல் காப்டனா என்னும்
கேள்வி அவ்வப்போது எழும் அதுவும்
தோல்விகளைச் சந்திக்கும் குழுவில் அதிகமாகவே இருக்கும் எந்தக் குறையும் இல்லாமல்
விழா நடை பெற்றிருக்கலாம் ஏன் என்றால் நான் முன்பே சொன்னதுபோல் காப்டனும்
வீரர்களும் ஒருங்கே இணைந்து நடந்தனர். இருந்தாலும் எனக்குத் தோன்றுவது எந்த ஆலோசனை
வந்தாலும் அதை ஏற்காமல் அதே சமயம்
உதாசீனப்படுத்துவது போலும் அல்லாமல் செயல் பட்டனர். ஓரிரு விஷயங்களை குறிப்பிடலாம்
என்று நினைக்கிறேன் முதலில் கவிதைக்கு
ஓவியம் என்று அறிவித்தார்கள் எந்த
பதிவருக்கும் இருக்கும் ஆசைதானே தன் கவிதைக்கு ஓவியம் வரையப் படுவது எனக்கும்
இருந்தது தெரிந்த உடன் இரு கவிதைகள் அனுப்பினேன் உடனே மறுபடி வந்தது. கவிதைகள்பத்து
வரிகளுக்குள் இருக்க வேண்டும் என்று. இதை முதலிலேயே அறிவித்திருக்கலாம் ஏனோ செய்ய
வில்லை. பதிவர்கள் அவர்கள் ஒருவேளை ஆங்கிலத்தில் சொல்வது போல் taken for granted
இருந்தும் நான் பத்து
வரிகளுக்குள்ளான இன்னொரு கவிதையைஎழுதி
அனுப்பினேன் அது ஏற்கப்பட்டதா என்று
அறியாத நிலையில் பதிவர் விழாவுக்கு
ஆர்வத்துடன் சென்றபோது ஏதும் இல்லாமல் ஏமாற்ற மடைந்தேன் ஓவியம் வரைய என்ன criteria
என்பது கூறப்படவில்லை இந்தப் பத்து
வரிக் கண்டிஷன் தவிர நான் எழுதி அனுப்பி
நிராகரிக்கப்பட்ட கவிதை கீழே
. அய்யா வணக்கம்.
தங்களின் ஆர்வத்திற்கும் ஆற்றலுக்கும் எங்கள் வணக்கம்.
ஓவியத்திற்கான கவிதை 10 வரிகளுக்குள் இருந்தால்தான் படம் வரைய இடம் கிடைக்கும் (பெரிய கார்டு போர்டில் பாதி கவிதை, மீதி இடம் ஓவியத்திற்கு)
தாங்களே சுருக்கித்தந்தாலும்
சரி, அல்லது வேறு சிறிய கவிதை இருந்தால் அனுப்பினாலும் சரி.
நன்றி வணக்கம்.
அன்புடையீர் எனக்கு இந்த விதி தெரிந்திருக்கவில்லை. இருந்தால் என்ன.?கவிச் சோலையில் ஒரு போட்டிக்காக நான் எழுதிய கவிதை கீழே. முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்றுக்குப் புதுக்கவிதை ஒன்றுக்கு
இரண்டாக எழுதி இருந்தேன் அது சரியாகுமா பாருங்கள்
முத்தொள்ளாயிரப் பாடல்
---------------------------------------
வீறுசால் மன்னர் விருதாம் வெண்குடையை
பாற் எறிந்த பரிச்சயத்தால் -தேறாது
செங்கண்மாக கோதை
சின வெங்களி யானை
திங்கள் மேல் நீட்டுந்தன் கை.
என் கவிதை -1
----------------------
சேர மன்னன் வீர மறியாது,
வெற்றி கொள்ளும் ஆவலில்,
செருக்கோடு செருக்களம்
புகுந்த
வீரர்தம் தேர்க் குடைகளை
சென்றங்கு செருமுனையில் இழுத்து,
மிதித்துப் பழகிய வெங்கரியின் ஏறோன்று
நீல வானில் ஒளி வீசும்
முழு வெண்ணிலவை மாற்றானின் தேர்க்
குடை என்றெண்ணித தன துதிக்கை
கொண்டிழுக்க முயன்றது ( தாம். ) ,
========================================
என் கவிதை -2
சேர
ராசாவ சண்டைல
சுளுவா
கெலிக்க லாம்னு தேரோட வர
சிப்பாய்ங்க தேர்மேல கீற கொடைங்கள
சும்மா இசுத்து மெதிச்சு காலி பண்ணிப் பளகின
சேரனோட யானே ,வட்ட நெலாவப் பாத்து,
தேர்க் கொடேன்னு நெனச்சு இசுக்க
அதோட தும்பிக்கைய நீட்டிச்சாம்.
( ஹையா இரண்டுமே பத்து வரிகளுக்குள்)
இப்படிக்கு அன்புடன் ஜீஎம்பி
--------------------
பதிவர்
கையேடு என்பது மிகச் சிறந்த விஷயம் அறிந்தவர் அறியாதவர் எல்லோரது விவரங்களும்
விரல் நுனியில் கிடைக்கப் பெறுவது நல்ல விஷயம்தானே பதிவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க
பதிவர்களை அவர்களது தளப் பெயர் , அவர் பெயர் தள முகவரி. புகைப்படம்
தொலைபேசி எண், மற்றும் அவர்கள் பற்றி அவர்களே கையேட்டில் பார்க்க
விரும்பும் விஷயங்கள் என்று
கேட்டிருந்தனர். எனக்கென்னவோ இவ்விஷயத்தில் பதிவர்கள் சில விஷயங்களைக் கொடுத்து பல
விஷயங்களை கொடுக்காமல் மறைத்திருக்கின்றனர் என்றே தோன்றுகிறது கொடுக்கப்பட்ட
விஷயங்களாவது கொடுத்தபடி கோர்க்கப் பட்டிருந்தால் யார் யார் எப்படி எப்படி
விஷயங்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியும் வாசகர்களது மெத்தனமே கையேடு சரியாக வர
விடவில்லையோ என்றும் தோன்றுகிறதுபதிவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள
தேடும் முறை கொடுக்கப்படவில்லை. பதிவர்களை அவர்களின் இருப்பிட(ஊர்)
வரிசையில் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதுவும் பல இடங்களில் மாறி இருக்கிறது.
பதிவர்கள் பெயர்படி வரிசைப் படுத்தி இருக்கலாம் வலைத்தளமோ பெயரோதான் பலராலும்
அறியப் படுகிறது சில இடங்களில் வெறும் பெயர் மற்றும் தள முகவரி மட்டுமே இருக்கிறது
பதிவர்கள் விவரங்களைக் கொடுக்காவிட்டால் எப்படித் திரட்ட முடியும்?
போகட்டும்
பிரபல எழுத்தாளர்களின் பெயர்களுடன்
அவர்களது தள முகவரியும் கொடுத்திருக்கிறார்கள்
(பத்திரிக்கைகளில் இவர்கள் படைப்பு வருவதால் பிரபல
எழுத்தாளர்களாகிறார்களா) அதேபோல் பதிவர்கள் அனைவரது பெயர்களையும் வலைத்தள முகவரியையும் கொடுத்திருக்கலாம்
அல்லவா. இல்லையே ஏன் என்றால் பதிவர்கள் பிரபல எழுத்தாளர்கள் அல்லவே. எதற்கு இந்த
தாழ்வு உணர்ச்சி. இன்னும் ஒன்று .கையேட்டில் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய வலைத் தளங்கள் என்று சிலரது வலைப்பக்கங்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள் அதற்கு என்ன தகுதியைக் கருத்தில்
கொண்டிருக்கிறார்கள் கொடுக்கப்பட்டிருக்கும் வலைப் பக்கங்கள் எந்த விதத்தில் இந்த
உரிமை பெறுகிறது மற்ற வலைப்பக்கங்கள்
மாற்றாந்தாய் பிள்ளைகள் இல்லையே பதிவர் கையேட்டில் பதிய புகைப்படங்களைக்
கேட்டிருந்தார்கள் பலர் அனுப்பி இருக்காமல் இருக்கலாம் ஆனால் அனுப்பியவர்களது
படங்களையாவது வெளியிட்டிருக்கலாமே ஒரு
வரவேற்கத்தக்க விஷயமாக பதிவர் கையேடு சிந்திக்கப் பட்டது ஆனால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்னும் ஆதங்கமே என்
எழுத்து. யாரையும் குறை கூற அல்ல
புதுகை வலைப் பதிவர் குழுவைச் சேர்ந்தவர்கள் ( தனபாலன் தவிர)சந்திப்பின் HOSTS போன்றவர்கள் வருகைதருபவர்களிடம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளவோ அறிமுகப் படுத்திிக் கொள்ளவோ இன்னும் முயற்சி எடுத்திிருக்கலாம் ( என்னிடம் எம் கீதாவும் வைகறையும் அறிமுகப் படுத்திக் கொண்டனர்) ஏனென்றால் புதுகைப் பதிவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் இருந்தது சீருடையில் இருந்தோரை விழாக்குழுவினர் என்று நினைக்கிறேன் சில பதிவர்கள் வந்திருக்கின்றனரா என்று கேட்டபோது வருகைப் பதிவில் இருந்தோர் பட்டியல் பார்த்துப் பதில் சொன்னது மகிழ்ச்சியை அளித்தது
|
தருமி கந்தசாமி. சீனா |
|
என்மனைவி, நான் செல்லப்பா வைகறை? |
|
பரிசு வழங்கள் Add caption |
|
விழாமேடை |
|
திருமதி ருக்மிணி சேஷாசாயி திருமதி ரஞ்சனி நாராயணனுக்கான பரிசு பெறுகிறார் |