Saturday, October 31, 2020

வெங்கடேச சுப்ரபாதம் தமிழில்

சுப்ரபாதம் தமிழில் 

1. வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

2. எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்

எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

3. போர்புரிந்து மதுகைடபர் தமையழித்தான் உளத்தொளியே

பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் (2)

4. திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருளி புரிபவளே

இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்

5. தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்

சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு நின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

6. ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்

ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்

7. நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்

பல வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

8. நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க

நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

9. எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்

இவ்விடத்து()ம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்

10. வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி

கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்

11. தனதனங்கள் நிமிர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப

மன மகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்

12. பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்

கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்

13. வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா

மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

14. மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்

இன்றுனது கோலேறி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்

15. திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்

திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

16. அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்

பெருநெறிய அரன் இந்திரன், அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும் நின்
திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்

17. திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்

கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பு()ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்

18. சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்

சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

19. நின் முக்தி விழையாமல் நின்னையொன்றே மிகவிழைந்து

நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

20. எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்திபெறும்

புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்

21. மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே

திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்

22. பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா

சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்

23. திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா

திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா

நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்

25. ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்

சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

26. அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்

பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்

27. நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்

காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்

28. திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே

பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

29. விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை

விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் (2)



 

 

 

 

  

Friday, October 30, 2020

பொள்ள வடை

 

பொள்ளவடை

 

நான் I eat to live not live to eat உணவில் அக்கறை குறைவு இப்படிப்பட்டவன்   மனைவியிடம் பொள்ள வடை திங்க ஆசை என்று கேட்ட போது அவள் திகைத்தாள் எனக்கு என்னவோ என்பெரிய அண்ணி செய்து தந்த பொல்ல வடைநினைவுக்கு வந்தது திங்க கிழமை ரெசிப்பிகளில் வெகு சாதாரணமான  ரெசிப்பிகளே பகிரப்படுகிற்து  என் மனைவி உத்தேசமாக  செய்தாள் நன்றாகவே இருந்தது செய் முறை அரிசிமாவு  6 கப் என்றால்கடலை பருப்பும் துவரம்பருப்பு ஒரு கப் என்னும் விகிதம்   பருப்பை ஊற  வைத்து அரைத்துக்கொள்ள  வேண்டும் கூடவே தேங்காய்த்துருவல் மிளகாய்ப்பொடி பெருங்காயப்பொடி மிள்காய் வற்றல் சேர்த்து அரைக்கவேண்டும் அரைத்ததை அரிசி மாவில் சேர்த்து  பிசைய வேண்டும்உப்பு தேவைக்கேற்பபோடவும் கிடைத்த மாவை சிறிய தாகவடை போல் தட்டிக்கொள்ளவும்   காய்ந்த எண்ணையில்  பொரித்தெடுக்கவும்பொள்ளைவடை ரெடி

 வடை சற்றே உப்பி உள்ளே காலியாகபொங்கி இருக்கும் இது என் பெரிய அண்ணி செய்து தந்ததால் அவர் நினைவாக  செய்து சாப்பிட்டோ ம் ஒரு வித்தியாசமான ரெசிப்பி பாலக்காட்டுப்பக்கம்  ஸ்பெஷல்                

Thursday, October 29, 2020

சுக்லாம் பரதரம் ஆச்சா

 

சுக்லாம்  பரதரம் ஆச்சா

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்

சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத்

சர்வ விக்னோப சாந்தயே 

, ''வெள்ளை உள்ளம், யானையின் கருப்பு நிறம், நான்கு கரங்கள், பிரகாசமான முகம், எல்லாரையும் நினைக்கச் செய்யும் உருவம் ஆகியவற்றைக் கொண்ட விநாயகரை நினைத்தால் எல்லா தடைகளு விலகும்

இதற்குமகாப்பெரியவர் இன்னொரு அர்த்தமும்கொடுத்தார்

 சுக்லம்' என்றால் 'வெள்ளை'... அதாவது பால்;

'விஷ்ணும்' என்றால் 'கருப்பு' அது 'டிக்காஷன்';

'சசிவர்ணம்' என்றால் கருப்பும், வெள்ளையும் கலந்தது...

அதாவது காபி. 'சதுர்புஜம்' என்றால் நான்கு கை. அதாவது மாமியோட இரு கைகளால் காபியைக் கொடுக்க, மாமாவின் இரு கைகள் அந்த காபியைப் பெற்றுக் கொள்ளும்.

'த்யாயேத்' என்றால் 'நினைத்தல்'. நினைப்பது. அதாவது இப்படி காபி கொடுப்பதை மனதில் நினைப்பது.

பிரசன்ன வதனம் என்றால் 'மலர்ந்த முகம்' அதாவது காபியை மனதில் நினைத்ததும், மாமாவின் முகம் மலர்ந்து விடும்

. சர்வ விக்னோப சாந்தயே' என்றால் 'எல்லாக் கவலையும் நீங்குதல்'. அதாவது காபி குடித்தால் கவலை நீங்கி மனம் சாந்தமாகி விடும் 

என்று அர்த்தம் என்று விளக்கினாராம்

 

ஓம் கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

விநாயகா் பாதம் பணிவோம்..அவா் நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காத்தருள்வார்

மூஷிக வாகன மோதக ஹஸ்த

ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர

வாமண ரூப மகேஸ்வரப் புத்திர

விக்ன விநாயக பாத நமஸ்தே!''

பொருள்:

மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே

சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே

வாமணனை ஒத்த ரூபம் உடையவரே

விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!

குறிப்பு:

மூஷிகம் என்றல் மூஞ்சூறு. மோதகம் என்றால் ஒரு வகை இனிப்புப் பண்டம்.. பெரிய காதுகளும், வாமாண ரூபமும் (அதாவது அதிகம் உயரம் இல்லாத ரூபம்)

பொருள்:
மூஷிகத்தை வாகனாமாக கொண்டவரே, மோதகப் பிரியரே
சாமரத்தை போன்ற பெரிய காதுகளை உடையவரே, இடுப்பில் சங்கிலியை போன்ற ஆபரணங்களை அணிந்தவரே
வாமணனை ஒத்த ரூபம் உடையவரே
விக்னங்களை நீக்கியருள்வாய் என உன் பாதம் பணிகிறேன்!

 

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்

வக்ரதுண்ட மஹாகாய

சுர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா

பொருள்:

அழகான வலைவுடைய துதிக்கையுடன் மிகப்பெரிய உடலை உடையவரே (விநாயகா)
கோடி சூரியனின் பொலிவை உடையவரே
என்னுடைய அனைத்து செயல்களும் எந்த தடையுமின்றி எப்போதும் சரிவர நடந்திட எமக்கருள்வாய்

அகஜ ஆனன பத்ம ஆர்கம் கஜ ஆனனம் அஹர் நிசம்
அநேக தம் தம் பக்தானாம் ஏகதந்தம் உபாஸ்மஹே

 

 

அகஜ - அக = மலை; அகஜ = மலைமகள்; பர்வத புத்திரி; பார்வதி.

ஆனன - திருமுகம்

 

பத்ம - தாமரை

 

ஆர்கம் - பகலவன்; சூரியன்

 

அகஜானன பத்மார்கம் - பார்வதியின் திருமுகம் என்னும் தாமரையை மலர்விக்கும் பகலவனைப் போன்றவன் அவள் திருமகன்!

கஜ ஆனனம் = யானைமுகத்தவன்!

அஹர் நிசம் = அஞ்ஞான இருளை நீக்கும் பகலைப் போன்றவன்; அஹ: = பகல்; நிசம் = இரவு!

பக்தானாம் = அடியவர்களுக்கு, அநேக = மிகுதியான; தம் (dham) = வரங்களை; தம் (tham) = அருளுபவன்.

ஏகதந்தம் = ஒற்றைக்கொம்பன்

உபாஸ்மஹே = நான் வணங்குகிறேன்.