சபரிமலை யாத்திரை
-----------------------------------
சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களுக்கும் உரிமைஉண்டு என்னும் உச்சநீதிமன்ற தீர்ப்பு
என்னைஇப்ப்திவுஎழுதத்தூண்டியது வந்ததீர்ப்பு சரியா தவறா என்று அலசல் இல்லை சில அடிப்படைகளை நினைத்துப்
பார்க்கும் போது எழுந்த எண்ணங்களே
இப்பதிவின் சாராம்சம்
முன் காலத்தில் சபரி மலைக்குப் போவதே ஒரு சவாலாக இருந்தது ஏறத்தாழ 42 கி மீ தூரம்நடந்தே போகவேண்டும் அடர்ந்தகாட்டுப்பகுதி கரடு முரடான மலை
மேடுடனான காட்டுப்பாதை வெட்ட வெளியில் ராத்தங்கல் குடும்பத்தைவிட்டு
நீண்ட நாட்கள் பிரிந்துஇருக்க வேண்டும் விலங்குகளின் நடமாட்டத்தால் பயம் இவற்றைஎல்லாம்சரிகட்ட சில பழக்க வழக்கங்களை விட
வேண்டும் நம் நாட்டில்தான் எதையும் சரியாகச் சொன்னால் எடுபடாதே கடவுளின் பெயரால் சொல்லி சில நியமநிஷ்டைகளை
ஏற்படுத்தி இருக்க வேண்டும அப்போதுதான் மக்கள் அனுசரிப்பார்கள் அதற்குப் பழகிக்
கொள்ள சில விரத முறைகள் ஏற்படுத்தப்பட்டன/ எந்த முறைக்குமொரு காலகெடுவைத்து சொன்னால் தான் ஏற்கப்படும் ஒரு மண்டல காலம்
அனுஷ்டித்தால் அவை பழக்கத்துக்குவந்துவிடும்
காட்டுப்பகுதியில் காலணி இல்லாமல் நடப்பது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடனிருப்பது நாம் அவ்வாறு இருப்பதை பிறர் அறிய கருப்பாடை
அல்லது காவியாடை கட்டுக்குள்செல்ல கை விளக்கு (டார்ச் லைட் ) எதிர்வரும் விலங்குகளை சமாளிக்க கத்தி கூட்டமாக ப் போவது சரண கோஷ்மிட்டு போவது எல்லமே ஏதோ ஒருகாரணத்துக்காக ஏற்படுத்தப்பட்டது
நீண்ட நாட்கள் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும் உடல் சார்ந்த விஷயங்களுக்கு
முக்கியத்துவம் தராது இருத்தல் உ-ம்
தாம்பதிய உறவு கொள்ளாது இருத்தல் தரையில்
படுத்து எழல் .இம்மாதிரி கட்டுப்பாடுகள்
இருந்தால் உடலும் பழக்கப்பட்டு
விடும் ஆனால் இவை எல்லாவற்றையும் கடவுள் பெயரால்சொன்னல் பயத்துடன் செய்வார்கள்
என்க்கு எதையும்
நானே என்னையே சோதித்து முடிவு காணுதல் வழக்கம் சபரிமலைக்கு யாத்திரை யாக மூன்று முறை சென்றிருக்கி.றேன் முதல் ஆண்டு 1970ல் என்று நினைவு விரதங்களை
மிகக்கடுமையாக அனுஷ்டித்தேன் சபரி மலையில் அங்கப்பிரதட்ஷிணமும் செய்தேன் ஜோதி தரிசனம் கண்டு உருகி இருந்ததும்
நினைவுக்கு வருகிறது வாரமிரண்டு நாட்கள் என்வீட்டில் பஜனை நடக்கும் அன்னதானமுமிருக்கும் ஆக முதல் ஆண்டு தரிசனம் கிடைத்ததில் சில படிப்பினைகளும் இருந்தது போற்றிசாமி என்றே அழைக்க[ப்[பட்டேன் இரண்டாம் ஆண்டும்மலைப் பயணமென்னை ஈர்த்தது .
இம்முறை என் மூத்தமகன் அப்போது ஐந்து வயது அவனயும் அழைத்துச் சென்றேன் அம்முறை யாத்திரை எனக்கு பல பாடங்களக் கற்பித்தது எந்த
விரதமும் இல்லாது வருவோரும் எல்லவற்றிலும்சொகுசு காண்போரும் கூட இருந்தனர் யாத்திரை முடிந்து திரும்பும்போது குருவாயூரில் சில கசப்பான அனுபவங்கள் (பார்க்க) கிடைத்தது
யாத்திரைபற்றிய என் கண்ணோட்டமும் சிறிது மாறத் தொடங்கியது அதன்பின் சபரி மலை செல்லும் ஆர்வம் குறைந்தது கடைசியாக
2007 அல்லது 2008 ம் ஆண்டுஎன்றுநினைக்கிறேன் என்மனைவிக்கு சபரி மலைக்கு செல்லும்
ஆசை எழுந்தது மலை ஏறும் போது என் மனைவி
மாதவிடாய் பருவத்தில் இருப்பவரா என்று கேட்டு வழியில் மடக்கினார்கள் அதெல்லாம் முடிந்து
விட்டது என்றுசொன்னோம் ப்ரூஃப் வேண்டுமென்றார்கள்
நாங்கள் மலைக்குச் செல்ல ஆர்வலர்கள் தடைவித்திப்பது எனக்குள் கோபமூட்டியது டாக்டர்
செடிஃபிகேட் கேட்காத குறைதான் ஒரு
வழியாக மலை ஏறிதரிசனம் முடித்து திரும்பினோம்
அப்போதே பெண்களுக்கு எதிராக பலர் செயல் படுவதும் புரிந்தது இவை எல்லாம்
சேர்த்து எனக்கு மலை ஏறி தசரிசனம் செய்வது வீண் என்றே நினைக்க வைத்தது எங்குமிருப்பதாகக் கூறப்படும் ஆண்டவனை
எங்கு தரிசனம்செய்தால் என்ன பழனி திருப்பதி குருவாயூர் சபரி மலை போன்ற இடங்களில் அந்த இடங்கள் பக்தர்கள் வரவால் அதிக சாங்க்டிஅடைவதாக
ஒரு நம்பிக்கை நம்பிக்கை குறித்து ஏதும்
கருத்து சொன்னால் பக்தர்கள் பொங்கி விடுகிறார்கள் இந்த நேரத்தில் உச்ச நீதி மன்ற
தீர்ப்பு அதில் சொல்லப்பட்டிருக்கும்
கருத்துகள் என்னைக் கவர்ந்தன பெண்களை அடிமைகளாகப்பாவிக்கும் ஒரு சமுதாயத்தில்
பெண்களே அதை அறிய முடியாமல்
ஆணாதிகத்தாரால் பழக்கப் படுத்தப் பட்டு
இருக்கிறாள் மாத விடாய் என்பது ஒரு
பயாலாஜிகல் நிகழ்வு அதையே தீட்டு என்றுஒதுக்குவது எனக்கு சரியாகப்பட வில்லை மாதவிடாய் சமயத்தில் இருந்தென்ன யாரும்புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை மாத
விடாய் காலத்தில் ஒதுக்கி வைக்கப்படுவது அவர்களுக்கு ஓய்வு கோவிலுக்குச்சென்றுவழிபடுவதும்
தவறல்ல என்னும்கொள்கை தேவைஎன்பதையும் மீறி
வேறு காரணங்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை இப்போதெல்லாம்சுத்தமாயும்
சுகாதாரமாகவும் இருக்கவும் பல வழி முறைகள் புழக்கத்தில் இருகின்றது இதைவிட்டு மதக்
காரணமும் பழங்காலம் முதலே வழக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களையும் யும் காரணமாகச்
சொல்வதுநம் பாட்ரியார்கியல் பழக்கத்தையே சுட்டுகிறதுஆணும்பெண்ணும் சமமென்று இயங்கும் இக்காலத்தில் பெண்களை
பாரபட்சமாக நடத்துவதும் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை நம்சமுதாயத்தில் எல்லா சடங்குகளிலும் ஆணுக்கே முன்னுரிமை அப்படி இருப்பதே சரி என்னும் எண்ணமும் பெண்களிடையே கூட ஊறி இருப்பதைஅறிய முடிகிறது சபரி மலை வழிபாட்டில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் வழக்கம் இருப்பது சந்தோஷம் தருவது அனால் யாத்திரை முடிந்து வந்து
விட்டால் பழைய குருடிகதைதான் விரதபாவிப்புகளென்றுஏதும்
தெரிவதில்லை காஞ்ச மாடு கம்பங்க் கொல்லைக்குப்போன
கதைதான்யாத்திரை சமயம் எல்லோரும்சாமிகள்
தான் ஆனால் இப்போதெல்லாம் விரதம் என்பது
எல்லாம்பெயரளவில்தான் இன்றுமாலை நாளைப்பயணம் என்னும்கதிதான்
ஒரு கடவுளை நைஷ்டிக பிரம்ம
சாரியாகக் காட்டுவதும் பெண்களுக்கு வழிபடும் உரிமையை மறுப்பதும் சரியல்ல, அதை
எடுத்துக்கூற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தேவைப்பட்டது Better late than never