மரம் செடிகொடிகள்
----------------------------------
காணிநிலம் வேண்டும் என்ற பாரதி அதில் எப்படிக் குடியிருக்க
வீடும் தென்னை மரங்களும் வேண்டும் என்னும் கனவுகள் கண்டான் எனக்கு அந்தக் கனவுகள்
எல்லாமிருக்க வில்லை. விஜயவாடா பணியின்
போது என் மாமியார் மாமனார் சொல்லி வாங்கிய இடம்பெங்களூரில் அமைந்தது வீடு
கட்டுவதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை நாங்கள் திருச்சியில் இருந்தபோது அந்த இடத்தில்
யாரோ குடிசை போட்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்தார் என் மாமனார் என் நண்பன் ஒருவனும் என்னை வீடு
கட்டும் படி தூண்டினான் பெங்களூர்
வந்து பார்க்கும் போது எங்கள்
இடத்துக்குப் பக்கத்து மனையில் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள் எங்கள்
இடத்தில் வீடு கட்ட வேண்டிய மணல் செங்கல்
போன்றவற்றைப் போட்டு இருந்தனர் மற்றபடி
எந்த ஆக்கிரமிப்பும் இருக்கவில்லை வந்ததுதான்
வந்தோம் வீடு கட்டும் ஆயத்தவேலைகளில் இறங்க
முடிவெடுத்தோம்
வீடு கட்டும் வரை
படம் தயாரிக்கும் போது இடத்தின் முன்னும்
பின்னும் சிறிது இடத்தை விட முடிவு
செய்தோம் அப்போதைய அந்த முடிவே இப்போது
என்வீட்டின் முன்னும் பின்னும் பசை
பசேலென்ற இடமாகக் காட்சிதர அமைந்திருக்கிறது
சரி தலைப்புக்கு வா
என்கிறது என் மனசு வீடு கட்டி முடித்து விட்டால அப்போது அங்கு
குடிவரும் நிலையில் இருக்கவில்லை
நாங்கள் ஒரு சுயதொழில் செய்பவருக்கு
வாடகைக்கு விட்டோம் அவருக்கு வாடகைக்கு
விடுவது பற்றி அருகில் இருந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர் குடிப்பவர் என்றும்
வாடகை ஒழுங்காக வராதென்றும் கூறி எங்களை
சங்கடத்தில் ஆழ்த்தினர் எனக்கு மனிதர்களை
பார்த்து எடை போடுவதில் தவறு இருக்காதென்று ஒரு நம்பிக்கை. அதே போல் அவரிடம் பேசிய
போது ஒரு நல்ல ஜெண்டில்மானாகவே தெரிந்தார் அதேபோல் அவரும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் என்
வீட்டின் முன்னும்பின்னும் இருந்த இடங்களில் சில மரம்செடிகொடிகளை நட்டு
பராமரித்து வந்தார் ஐந்து ஆண்டுகாலம்
எந்தப் பிரச்சனையும் தராமல்
இருந்தார் அவர் நட்டுச் சென்ற
கொய்யாமரம் மாதுளம் மரம் பஞ்சு மரம் கருவேப்பிலை மரம் தென்னை
ஆகியவை பலன் தந்து அதை அவர்
அனுபவிக்கும் முன்பே நாங்கள் பெங்களூர் வர நேர்ந்தது. எந்தபிரச்சனையும் தராமல்
காலி செய்து சொந்த வீடு கட்டிச் சென்றார். இப்போதும் அவர் நல்ல நண்பராகவே
இருக்கிறார்
வீட்டின் முன்புறம்
இருந்த கொய்யா மரம் காய்க்கும் போது நிறையகல் அடிபட்டு தொந்தரவாக இருந்தது மாதுளையும் பஞ்சு
மரமும் கம்பளிப்பூச்சிகளைக் கொண்டு வந்தது
மேலும் கொய்யா மரம் இருந்ததால் அருகில்
இருந்த தென்னை வளருவதில் சிரமம் இருந்தது கொய்யா மாதுளை பஞ்சு மரங்களை வெட்டி
விட்டோம் கருவேப்பிலை மரம் பட்டுப்போயிற்று ஆக அப்போது சின்ன மரமாக இருந்த
மாமரமும் தென்னையும் நன்கு வளரத் துவங்கியது வாழைகள் சிலவற்றை வைத்தோம் சில பெயர் தெரியாத செடிகளையும் , (கேட்டால் குரோட்டன்ஸ் என்று மனைவி சொல்லுவாள்)
வைத்தோம் முன்னும் பின்னும் பச்சைப்
பசேலென்று இருந்தது காய்கறி வளர்க்கும் முயற்சி பலிக்க வில்லை. தோட்டவேலை
சரியாகத்தெரியவில்லை அப்படியும்
இப்படியுமாக இப்போதைய நிலைக்கு
வந்திருக்கிறது
என் தோட்டத்தில் ( அப்படிச் சொல்லலாமா) சில எக்ஸோடிக் வகைப்
பூச்செடிகள் வளர்ந்தன பெயர் தெரியாதவற்றின் பெயர்களை வலையில் எழுதிக்
கேட்டுத்தெரிந்து கொண்டேன் இப்போது
அவற்றின் சில படங்களைப் பகிர்கிறேன் முன்பே பகிர்ந்தும் இருக்கிறேன் என்ற நினைவு
பூக்களை செடியில்
இருக்கவிடுவதா அல்லது பறித்து எடுப்பதா என்ற சந்தேகம் எழுவதுண்டு நல்ல ரோஜாப்பூக்களை வீடு ஏறி வந்து பறித்துச் சென்று விடுகிறார்கள் ஒரு முறை கேரளா
சென்றபோது அங்கிருந்து எடுத்து வந்த வெற்றிலைச் செடி இப்போது கொடியாகி மாமரம் பற்றி மேலே சென்று விட்டது மாமரம்
நன்கு காய்க்கிறது இந்த முறை
எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்தோம் தென்னையில்
ஒன்றின் மீது இடி விழுந்து கெட்டு விட்டது
இன்னொரு மரம் நன்கு காய்க்கிறது
என்ன பிரச்சனை
என்றால் காய்களைப் பறிக்க
முடிவதில்லை மரம் ஏறிகள் கிடைப்பதே பாடாக
இருக்கிறது தேங்காய்களைப் பறிப்பதே
சிரமமாய் இருக்கிறது அப்படியே காய் பறிக்க யாராவது வந்தாலும்
மனம்பயத்தால் உறைகிறது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா ஒரு முறை மரம்
ஏற ரூ. 200 லிருந்து 500 வரை
கேட்கிறார்கள் நிறையக் காய்கள் இருக்கும்
போது எடுக்கக் கொடுத்துதானே ஆகவேண்டும்
மட்டைகளில் இருந்து தேங்காய் உரிக்க காய் ஒன்றுக்கு ரூ 2 / கேட்கிறார்கள் மரத்தில்
கிடைக்கும் காய்கள் எங்களுக்கும் மகனுக்கும்
போக சில உறவினர்களுக்கும்கொடுப்பதுண்டு மாமரத்திலும் வெற்றிலைக் கொடிகளிலும் பெரிய சிவப்பு எறும்புகள் இலைகளை சுருட்டி
என்னவோ செய்கின்றன மரம் ஏற
முடிவதில்லை. விபூதி தெளித்தால் போய் விடுகின்றன ஆனால் மரத்தின் மேல் எப்படி விபூதி தெளிப்பது
இனி சில செடிகளுடைய
படங்களைப் பார்ப்போம்
மாமரம் பற்றிய வெற்றிலைக் கொடி ( பார்க்க சிவப்பு எறும்புகள் ) |
விபூதி தெளித்த வெற்றிலைக் கொடி |
வெற்றிலையில் அது காயா பூவா |
மாங்காய் பறிக்க |
தொட்டியில் ரோஜாப்பூ |
குரோட்டன்ஸ் ? |
தெச்சிப் பூக்கள் |
வெற்றிலைக் கொடி கீழே |
பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி பூ வாடிய நிலையில் ஒரு முறை பூத்துப் பார்த்தது அதன் பின் பூ பூப்பதைக் காண முடியவில்லை செடிகள் இருக்கின்றன |