கண்டவனெல்லாம்
--------------------------------
பஸ்சுக்கு காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையே வெறுத்துவிட்டது ஹரிக்கு ."போக்குவரத்து துறைஎன்றால் தமிழ்நாடுதான் ஹேமா . விடியற்காலைமுதல்
நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்கும் . ஐந்து நிமிடத்துக்கு மேல் காக்க வேண்டாம் . சே | இந்த பெங்களூரில் இது மிகவும் மோசம் " ஹரிக்கு அலுப்பு
. "தவிர்க்க முடியாததை
அனுபவிக்கத்தானே வேண்டும் .இல்லையென்றால் ஆட்டோவுக்கு செலவு செய்ய உங்களுக்கு மனசு வராதே " ஹேமா ஹரியின் வீக் பாயின்டைசற்றே குத்தினாள்
"அப்பாடா அதோ பஸ் வருகிறது . சாமர்த்தியமாக ஏறி இடம் பிடித்துக்கொள் . லேடிஸ் சீட் காலியாகவே இருக்கும் " ஹேமாவை முன்னுக்கு அனுப்பி ஹரி அடித்து பிடித்து பஸ்ஸில் ஏறி , முண்டியடித்து முன்னுக்குப் போனால் , அங்கே லேடீஸ் சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில் ஒரு அழகான வாலிபன் ஸ்டைலாக உட்க்கார்ந்து இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு மாதிரி ஒருத்தன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறான் . அதுவும் லேடீஸ் சீட்டில். அவன்தான் அப்படியென்றால் இவளுக்கு எங்கே போச்சு விவஸ்தை ? நாக்கைப் பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்க்க கூடாது ? இதே மாதிரி எவ்வளவு நேரம் பொறுத்துக்கொள்வது ? இதுக்கு ஒரு முடிவு கட்டித்தான் தீரவேண்டும் "
இதற்குள் பஸ் அடுத்த ஸ்டாப்பில் நிற்க . "ஹேமா. வா இங்கேயே இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது என்று கேட்பதற்குள் ஹரி பஸ்ஸை விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த ஆட்டோவைக்கூப்பிட்டார்

.
" இன்றைக்கு மழைதான் வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு செய்ய மனசு எப்படி வந்தது ?"

கண்டவனெல்லாம் என் பெண்டாட்டி பக்கத்தில் உட்க்காருவது எனக்குப் பிடிக்கலை .நீயும் பேசாமல் இருந்தது அதைவிடப் பிடிக்கலை "
"உங்களுக்கு என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"
ஹேமாப்பாட்டி தன புருஷனை அன்புடன் கடிந்து கொண்டாள்.