பழையபாடல் வரிகள்
-------------------------------------
சில நாட்களாக வலைப் பக்கம் ஒழுங்காக வர
முடிவதில்லைநீண்ட நாட்களாக ஒத்திப் போட்டுக்
கொண்டிருந்த ஓவியம் வரைவதை மீண்டும் முயற்சிசெய்கிறேன் வலைப்பக்கம் வந்து பார்த்தால் நம்மைக் காண வருபவர் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது வலை நட்புகள் ஏனோ பாராமுகம் காட்டுகிறார்கள் தெரிய வில்லை/ போகட்டும் நான்
எழுதுவது தொடரும் வந்து படிக்காவிட்டால் அவர்கள் சில நல்ல கருத்துகளையும்
எழுத்துகளையும் ம்ஸ் செய்வார்கள்
அவ்வளவுதான்
விஷயத்துக்கு வருவோம் சிலநாட்களாகவே ஏதோ பாடல் வரிகள் மனதில் ஓடிக்
கொண்டிருக்கின்றன வரிகள் முழுவதும் நினைவுக்கு வரவில்லை மிகப் பழையபாடல்
வரிகள் கூகிளில் தேடினாலும் கிடைக்கவில்லை
சில வரிகள் ப்ரேமை எனதே பாரின் மீதே
பாக்கியம் வேறேதே
கட்டிக்கரும்பே தேனே
கனியே ஜானகி மானே கட்டி அணைத்திட கருதி வந்தேனே
கண்ணே எனையே காண்பாய் நீயே
காதல் கனிரசமே
தெருவில் வராண்டி வேலன் தேடிவராண்டி
ஆனைமுகன் வேலனுக்கு அண்ணனாமடி
அவனைக்காட்டி
வள்ளிப்பெண்ணை மணந்து கொண்டாண்டி
\
கடைசியாக உள்ளது யூ ட்யூபில்
கிடைத்தது பகிர்கிறேன் இம்மாதிரி பழைய பாடல்கள் எங்கு கிடைக்கும் வாசகர்கள் தெரியப்படுத்தினால் நன்றி உடையவனாய் வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியலாம்நீங்களும் கேட்டிருக்கலாம்
பல எக்சோடிக் பூக்கள்
வளர்கின்றன என் சிறிய தோட்டத்தில் ஃபுட்பால் லில்லி பிரம்ம கமலம்
எனப்படும் நிஷாகந்தி இவை தவிர
லாப்ஸ்டர் க்லாஸ் எனப்படும் பூ
போன்றவை இவற்றில் லில்லி ஆண்டு ஒன்றுக்கு
ஒரு முறை மட்டும் மலரும் அதுவும் மே மாதம்
மட்டுமே இது பற்றி எழுதி இருக்கிறேன் அதே போல் ஆண்டுக்கு ஒரு முறை மலரும்
நிஷாகந்தியும் ஒரே நேரத்தில் நான்கு பூக்கள் மலர்ந்திருந்தன ஆனால் அவை மலர்ந்த
நிலையில் விடியய்ற்காலை மட்டுமே காட்சி தரும்
பின் கூம்பி விடும் என்னால் அத்தனை
காலையில் படம் எடுக்க முடியவில்லை கூம்பிய மலர்கள் இங்கே
இரண்டு நாட்கள் மகனுடனிருந்தேன் காலை நடை தடைபட்டதால் மாலயில் அந்தக் குடியிருப்பின் பேஸ்மெண்டில் என் பேரனுடன் நடந்தேன் என் நடையை அவன் காணொளி யாக்கினான் அதைப் பகிர்கிறேன்
நிஷாகந்தியைப்பற்றி முன் எழுதியிருந்தது நினைவில் இருக்கிறது. கூம்பினாலும் அதிலும் ஒரு அழகிருக்கிறது.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்வரிகள் ரொம்ம்பப்பழசுபோலிருக்கிறது. கேட்டமாதிரித் தெரியவில்லை. பாடல்வரிகள் கிடைப்பது கஷ்டம். யாராவது கில்லாடி கொடுத்தால்தான் உண்டு!
பழையபாடல்வரிகள் அவ்வப்போது ரீங்காரம் செய்கின்றன மனதில் எனக்கும். திடீரென்று ஒரு குறிப்பிட்ட பாடலின் சிலவரிகள் அடிக்கடி மேலெழுந்து வரும்!
உண்மைதான் சார் அரக்கோணத்தில் இருக்கும் போது1945-1949 வீடின் அருகே ஒரு டெண்ட் கொட்டாய் இருந்தது அதிலிருந்து எல்லா உரையாடல்களும் பாடல்களும் அருகில் குடியிருண்டஎங்களுக்குக் கேட்கும் அவற்றில் சில இப்போது நினைவிலாடுகிறதோ என்னமோ
Deleteபதிவர்கள் ஒவ்வொருவராக வலையை விட்டு விலகுகிறார்கள்.வலைச்சரம்,இண்ட்லி போன்ற திரட்டிகள் நின்றதோடு தமிழ் பதிவுலகம் நலிவடைந்து விட்டது. புது பதிவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்
ReplyDeleteவலையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு ஏடோ காரணம் இருக்கும் பெரும்பாலோனவர் முகப்புத்தகத்தில் பார்க்கிறேன் ஆனால் சிலர் முகப் புத்தகத்திலும் இடுகை எழுதுகிறார்கள் எழுதுபவருக்கு நிறுத்த மனம் வராது பதிவுலகம் நலிவடையாது
Deleteஇம்மாதிரிப் பாடல்கள் கேட்ட நினைவு இல்லை. ஶ்ரீராம் ஒருவேளை வந்து சொல்லலாம். அவர் தான் பழம்பெரும் பாடல்களின் தீவிர ரசிகர்! :))) அதோடு வயசும் ஆயிடுச்சே!
ReplyDeleteகீசா மேடம்- வயதாகிவிட்டது - உங்களுக்கா? அல்லது ஶ்ரீராமுக்கா?
Deleteகீதா அக்கா... (அக்கா - அண்டர்லைன்) பாட்டு ரசிப்பதற்கு வயசு தேவையா என்ன?!!
Deleteநீங்கள் உங்க பார்வதி மன்னி கிட்ட கேளுங்க கீதா அக்கா.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅதானே ஸ்ரீராம்...//(அக்கா - அண்டர்லைன்) பாட்டு ரசிப்பதற்கு வயசு தேவையா என்ன?!!//
Deleteகீதா
ஜிஎம்பி சார் இந்தப் பாட்டெல்லாம் கேட்கறதுனால உங்களுக்கு வயசாயிடுச்சா என்ன?!!!! ஹா ஹா ஹா ஹா... நீங்க இளைஞர் மாதிரி ஜாகிங்க் பண்றீங்க!!!!! சூப்பர் ஸார்!! ஸ்ரீராம் நான் சொல்றது சரிதானே!!! (இப்படிச் சொல்லி ஜி எம் பி ஸாரே இளைஞர் நா நாமளும் ஸ்வீட் 16 நு சொல்லிக்கலாமே!!! தேம்ஸ் காரங்களுக்குப் புகையட்டும்!!!!!!)
Deleteகீதா
//
Deleteநெ.த.May 27, 2018 at 6:43 PM
கீசா மேடம்- வயதாகிவிட்டது - உங்களுக்கா? அல்லது ஶ்ரீராமுக்கா?///
ஹா ஹா ஹா கீசாக்காவுக்கு வயசாகிடுச்சூஊஊஊ:)) ஸ்ரீராமுக்கு டாடி.. ஹையோ வெரி சோரி தாடி நனைச்சிடுத்தூஊஊஊஊஊ:)) ஹையோ இது உண்மையில டங்கு ஸ்லிப்ட்தான் ஹா ஹா ஹா அது நரைச்சிட்டுதூஊஊஊஊஉ:)..
@கீதா சாம்பசிவம் ஏதோநம்பிக்கையில் எழுதினேன் கேட்டேன் அது பெரிய விஷயமல்ல அன்றையபாடல்களும் வசனத்துக்கு மாறக ஒலித்தவையே
Delete@ நெத எல்லோருக்கும் வயசாகிறது பெண்களி ந் வயசைக் கேட்க்கக்கூடாது என்பார்கள் யூகிக்கலாம்தானே
Delete@ஸ்ரீ/தா அக்கா... (அக்கா - அண்டர்லைன்) பாட்டு ரசிப்பதற்கு வயசு தேவையா என்ன?!!அதானே
Delete@ஸ்ரீ யார் அந்த பார்வதி மன்னி எனக்கு தெரியச்வில்லையே
Delete@கீதா துளசி இளைஞர்கள் இம்மாதிரி பாட்டை ரசிப்பது அரிது
Delete@கீதா துளசி உங்கள் சந்தோஷம் எனக்கு ஆட்சேபணை யில்லை என்னைப் போல் இள மனதோடுஇருந்தால் நலமே
Delete@அதிரா ஸ்ரீராமுக்கு தாடி நரைக்கவில்லை அவரை நான் பார்த்தபோது
Delete//ஸ்ரீராமுக்கு தாடி நரைக்கவில்லை அவரை நான் பார்த்தபோது//
Deleteஅச்சச்சோ அப்போ என் 5 ஆவது கண்டுபிடிப்பு டப்பாகிட்டுதே:))
ஸ்ரீராம், மன்னி அனுப்பிய பதில்கள்
Delete//ப்ரேமை எனதே பாரின் மீதே பாக்கியம் வேறேதே//டி.ஆர். மஹாலிங்கம் ஶ்ரீவள்ளீ, கட்டி அணைத்திட// நாம் இருவர், டி.ஆர்.ராமச்சந்திரன். கடைசிப் பாடல் யு.ஆர். ஜீவரத்தினம் பாடியது பக்த கௌரி படம்!
ஜிஎம்பி சார், மன்னி எனக்குப் பொண்ணு வயசு! ஆனாலும் சினிமா விஷயங்களில் மன்னி! மன்னனுக்குப் பெண்பால் மன்னி எனப் பொருள் கொள்க! அவங்களும் பெண்களூர் தான்! :))))
Deleteகடைசி பாடல் நானே பதிவில் வெளியிட்டு இருந்தேன் கட்டிக் கரும்பே பாடல் நாமிருவரில் டி ஆர் ராமச்சந்திரன் ஒரு வேஷமிட்டுப் பாடியது என்றுஸ்ரீராமுக்கு மறு மொழியில் கூறி இருந்தேன் ப்ரேமை எனதே பாடல் வரிகளும் பாடலும் வலையில் தேடினேன் கிடைக்கவில்லை மன்னிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
Deleteமன்னியை சந்திக்க விருப்பம் முடிந்தால் என்னைக் காண வரச் சொல்லவும் மற்றபடி நானே எங்கும் செல்ல முடியாமல் இருக்கிறேன் யாருடைய தயவாவது வேண்டும் என்முகவரி கொடுங்கள் தெரியும்தானேமன்னிக்கு உங்கள் பெண்வயசு என்றால் நிச்சய ம் சின்னப் பெந்தான் வயசை விட ஆர்வமே முக்கியமாய் தெரிகிறது
Deleteஅவங்க உடல் நலமில்லாமல் இருப்பதாகச் சொன்னாங்க ஜிஎம்பி ஐயா! ராமலக்ஷ்மி அல்லது ரஞ்சனிக்குத் தெரிந்திருக்கலாம் அவங்க விலாசம்! நான் ஒரே ஒரு தரம் அவங்க என்ன் வீட்டுக்கு வந்தப்போப் பார்த்தேன். அவங்க எழுதும் ஆன்மிகத்தைப் படித்தால் நான் எழுதறதெல்லாம் ஜுஜுபினு புரியும்! அவங்க உண்மைப் பெயர் பார்வதி. கணவர் பெயர் ராமச்சந்திரன்.
Deleteநான் ராமலஷ்மி மேடத்திடம் கேட்கிறேன் வலைப்பதிவு உண்டா. எதில் ஆன்மீகம்பற்றி எழுதுகிறார்கள்
Deleteவலைப்பதிவு வைச்சிருக்காங்க. ஆனால் இப்போது எழுதுவது இல்லை. குழுமங்களீல் எழுதறாங்க. அதீதத்தில் அவங்களோட நாராயணீயம் விளக்கம் வந்துட்டு இருக்கு. அதைத் தவிர மின்னூல்கள் வெளீயிட்டிருக்காங்க. வலைப்பக்கம் பெயர் மறந்துட்டேன். நினைவு வந்தால் தரேன். ராமலக்ஷ்மிக்கும், ரஞ்சனிக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.
Deleteமற்றபடி பூக்கள் குறித்து நீங்கள் சொல்லி இருப்பவை ஏற்கெனவே நீங்கள் பகிர்ந்தவற்றில் படிச்சிருக்கேன். பிரபலங்களின் முகங்களைக் கண்டு பிடிப்பதும் பலரும் அனுப்பி வைத்தார்கள். :))))
ReplyDeleteயார் யாரோ கோவில்களைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுகிறார்களே நான் அரிதான பூக்கள் பற்றி எழுதக் கூடாதா முகங்களைக் கண்டு பிடித்த்கீர்க்சளா என்பதுதான் முக்கியம்
Deleteஉங்கள் பதிவு. நீங்கள் விரும்புவதை எழுதலாம். நான் ஏற்கெனவே படிச்சிருக்கேன் என்றே சொல்லி இருக்கேன். கோயில்கள் ஒவ்வொருத்தர் பார்வையில் ஒவ்வொரு விதமாகத் தோன்றும். அனுபவங்களும் மாறுபடும். ஆகவே மாறுபட்ட அனுபவங்களை அவரவர்கள் பார்வையில் சொல்கின்றனர். இதுக்கும் அதுக்கும் போட்டியா என்ன? :)))))))
DeleteThis comment has been removed by the author.
Deleteரிபீட்டாக தோன்றுவதுபோல் இருந்ததைக் குறிப்பிட்டு இருப்பதாகத் தோன்றாயதால் பிறரதுபதிவுகளையும்குறிப்பிடேன் குறை சொல்ல நான் துறை போனவன்அல்லவே அதுவும் ஏட்டிக்குபோட்டியாக
Deleteதினமும் எவ்வளவு நேரம் நடக்கிறீர்கள்?
ReplyDeleteபாடல்கள் கேட்ட ஞாபகம் இல்லை. கடைசி பாடல் பெங்களூர் ரமணியம்மா பாடியதா?
்
எதனி தூரம் நடக்கிறேன் எனபது முக்கியமல்ல என்னால் நடக்க முடிகிறது என்பதே முக்கியம் நீங்கள் கேட்டதால் சுமார் ஒன்று முதல் ஒன்றரை கிமீ தூரம் நடக்கிறேன் தெருவில் வராண்டி பாடலை ஜீவ ரத்தினம் அவர்கள் பாடியிருக்கிறார்களாம் 1941 ல் வந்த படம்
DeleteYou are an inspiration to us. வாழ்த்துகள் ஜிஎம்பி சார்.
Deleteநன்றி சார்
Delete.//வந்து படிக்காவிட்டால் அவர்கள் சில நல்ல கருத்துகளையும் எழுத்துகளையும் ம்ஸ் செய்வார்கள் அவ்வளவுதான்//
ReplyDelete:)))
@ஸ்ரீ :))) அபுரி என் தன்னம்பிக்கையைக் கூறினேன்
Deleteபாடல் எல்லாம் ஒரே பாடலின் வரிகளா? வெவ்வேறு பாடலா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் என் அறிவை மீறிய பாடலாய் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் இயற்றிய ஏதாவது பாடலோ!
ReplyDeleteவெவ்வேறு பாடல்களின் வரிகள்அதில் கட்டிக்கரும்பே தேனே என்னும் பாடல் நாம் இருவர் படத்தில் டி ஆர் ராமச் சந்திரன் ஒரு நாடகத்துக்காக ராவணன் வேஷமிட்டு பாடியது என்று என் நினைவு நிச்சயமாக நா நியற்றியதுஅல்ல
Deleteகாணொளியை ரசித்தேன். பாசமான, சுவாரஸ்யமான பேரன்.
ReplyDeleteஎன்பேரன் நான் மிகவும் ஆரோக்கியமாகைருக்கிறேன் என்று கூறி உற்சாகப் படுத்துவான்
Deleteகதம்பம் நன்று
ReplyDeleteகாணொளி வேலை செய்யவில்லை.
கடைசி காணொளி தாத்தா-பேரனை இரசித்தேன்
பாடல்களில் வேலன் வராண்டி மட்டும் கேட்டதுண்டு. திரைஇசைப்பாடல் மன்னன் ஸ்ரீராம் வந்தால் சொல்லிவிடுவார். துரைசெல்வராஜு அண்ணா, கில்லர்ஜி, வல்லிம்மா வந்தாலும் சொல்லிடுவாங்க..
ReplyDeleteநிஷாகந்தி செமைய இருக்கு...நீங்க இதுக்கு முன்னாடி எழுதியது நினைவு இருக்கு ஸார்.
பேரனும் நீங்களும் அருமையான தருணங்கள். மகிழ்வான தருணங்கள். பொக்கிஷம்!!! ப்ளெஸ்ட் தாத்தா அண்ட் பேரன்...
கீதா
யாராலு ம் சொல்ல முடியவில்லை எல்லோரும் இளைஞர்கள் அல்லவா
Deleteஜி எம் பி ஐயா ரொம்பவும் தான் கூச்சப்படுறீங்க வீடியோவுக்கு:)... கூம்பிவிட்ட பூக்களும் மிக அழகு. வருபவர்களின் வருகை குறைந்துவிட்டது என்றெல்லாம் கவலைப்படக்கூடாது.. தொடர்ந்து பதிவு வரும்போது .. தொடர்ந்து எட்டிப் பார்ப்போம்ம்.. இடையில் இடைவெளி விட்டிட்டால்.. எங்கேயோ போயிட்டீங்க போல என எண்ணி விடுவதால்.. அவசரமாக எட்டிப் பார்ப்பது குறைஞ்சிடுது அவ்ளோதான்.
ReplyDeleteஎங்கள் புளொக்கில் டெய்லி போஸ்ட் வருவதால் .. தினமும் எட்டிப் பார்த்துப் பழகி விட்டது.
அதிரா- நான் எ.பியில் எங்கள் விருப்பம் பார்த்துத்தான் அந்த அந்த இடுகைகளுக்குப் போகிறேன். தயிர்சாத்த்துக்கு பின்னூட்டம் போட்டால், அவங்க சாப்பிட்டுட்டு ரெண்டு நாளாத் தூங்கறாங்க. கீசா மேடம் உணவே மருந்து இடுகைகளுக்கும் இந்த கதிதான். உங்க, வெங்கட் இடுகைகள் படித்தாலும் கமென்ட் ஐபேடில் திறக்கவில்லை.
Delete@அதிரா எங்கள் புளொக்கில் டெய்லி போஸ்ட் வருவதால் .. தினமும் எட்டிப் பார்த்துப் பழகி விட்டது. ஒரு சின்ன திருத்தம் சொல்லலாமா எட்டிப்பார்த்து அல்ல கும்மி அடித்து என்று நினைக்கிறேன்
Deleteஹா ஹா ஹா ஆள் இருந்தால் கும்மி அடிப்போம்ம்:) ஆட்கள் போதவில்லை எனில் ஒரு கொமெண்ட்டோடு ஓடிடுவோம்ம்:)) சான்ஸ் கிடைச்சால் விடமாட்டோம்ம்:))
Deleteஇப்போ இங்குகூடப் பாருங்கோ நீங்கள் பேசுவதால் தொடர்ந்து பதில்கூற வருது.. இல்லை எனில் ஒரு கொமெண்ட்டோடு போய் விடுவோமெல்லோ எல்லோரும்:)).. தனியே நின்று பேசமாட்டோம்ம் ஹா ஹா ஹா:)
எப்பவுமே பதிவில் வரும்கருத்துகளுக்கு மறுமொழி எழுர்ஹுவதுஎன் வழக்கம் நான் பேசுவதால் என்பது சரியா
Delete@நெத என் பதிவுகளுக்கு தொடர்பாளராக இல்லாதவருக்கு முகவரி இருந்தால் செய்தி அனுப்புகிறேன் உங்களுக்கும் வந்துகொண்டுதானே இருக்கு
Deleteஉண்மைதான் நீங்கள் எல்லோருக்கும் பதில் குடுப்பதனால்தான் உங்களோடும் எல்லோரும் பேசுகிறார்கள் நிறையப்பேர் வந்து... ஓம் எனக்கும் உங்கள் புதுப்போஸ்ட் தெரியும்.. ஆனா அது நோட்டிபிகேசனாக இல்லை, நானாக தேடிப் பார்க்கோணும்..
Deleteஎனக்கு மொய்க்கு மொய் என்பது தெரியும்
Deleteபழைய பாடல்களை தேடினால் கண்டிப்பாக கிடைக்கும்... நிறைய பொறுமை தேவை ஐயா...
ReplyDeleteஎனக்குக் கிடைக்கவில்லழி டி டி அதனால்தான் பதிவில் கேட்டேன் ஒரு பாட்டு மட்டும் கிடைத்தது
Deleteநானும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களை கேட்டதில்லை. கூகிளில் வரிகளைக் கொடுத்து தேடினால் கிடைக்கலாம்.
ReplyDelete// வலைப்பக்கம் வந்து பார்த்தால் நம்மைக் காண வருபவர் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது வலை நட்புகள் ஏனோ பாராமுகம் காட்டுகிறார்கள் தெரிய வில்லை //
புதிய பதிவுகள் எழுதினால் வலைநண்பர்கள் வரத்தான் செய்கிறார்கள். மற்றபடி பல பதிவர்கள் ஃபேஸ்புக் பக்கம் போய் விட்டதாகவே நினைக்கிறேன். இப்போதைய சூழ்நிலையில், நான் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியே வருவது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
இந்த பதிவின் மற்ற விஷயங்களையும் படித்தேன். உங்களது நடைப்பயிற்சி உங்கள் தன்னம்ம்பிக்கையின் வெளிப்பாடு. கைலி கட்டிக்கொண்டு - அதிலும் முழங்காலுக்கு மேலாக மடித்துக் கட்டாமல், முழு கைலியோடு - நடக்கும்போது கவனமாக இருக்கவும். அரைக்கால் பேண்ட் நல்லது.
வாழ்த்துகள்.
நான் பெல்ட் அணிந்து கொண்டு இருக்க வேண்டுமாம் மருத்த்வர் உத்தரவு கைலியின் மேல் பெலட் இருப்பது தெரியாது வருகைக்கு நன்றி சார்
Deleteஎன்ன பாட்டுன்னு எனக்கும் தெரிலப்பா
ReplyDeleteபலருக்கும் தெரியவில்லையே தெர்வில் வராண்டிக்கு ச்டுட்டி கொடுத்திருக்கிறேனே
Delete