Monday, February 25, 2019

தவிர்க்க முடியாததை அனுபவிக்க வேண்டும்





                                            தவிர்க்க முடியாததை  அனுபவிக்க வேண்டும்
                                              -----------------------------------------------------------------------
என் உடல்நலம்பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன் உபாதைகள்  என்னும் தலைப்பில் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் முக்கிய காரணம் என்னவென்றால்பல உபாதைகளை பெற்று நலம் அடைந்தவன்நான்  என் எழுத்துகள் உண்மையின் பிரதி பலிப்பாயிருந்து வாசகர்களும் அவை குறித்த அனுபவங்களைத்தெரிந்து கொள்ள வேண்டும் என்னும்  ஆசைதான்  பலரும்பின்னூட்டங்களில் உடல் நலம் பேணும் படி எழுதி இருக்கிறார்கள்  எனக்கு சிலசமயம் உடல் நலம் பேணுவது என்றால் என்ன என்பதே சந்தேகமாக இருக்கும் வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து  உணவு பயிற்சி போன்றவைகளைக் கடை பிடிப்பதே உடல்நலம் பேணுதல் என்பதேஎன் அறிவு இளவயதில் நானொரு ஸ்போர்ட்ஸ்மன்  கிரிக்கட் விளையாடுவேன் தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசும்வாங்கி இருக்கிறேன் பயிற்சியில் அம்பர்நாத்திலிருநபோது உயரம் தாண்டுவதிலுல் டேபிள் டென்னிசிலும் பரிசு பெற்றவன் போல் வால்டில் பங்கு பெற்றவன்  இருந்தும் அவ்வப்போதுவரும் உபாதைகளில் இருந்து தப்பியதில்லைநிறையஎழுதி இருக்கிறேன்   கடந்தசில மாதங்களாக நடப்பதே பிரச்சனை யாகி இருக்கிறது மகாத்மா காந்தி நடப்பதே சிறந்தபயிற்சி என்று இருந்தவர்  நானும்வேறு பயிற்சிகளில் ஈடுபட முடியாத போது நடையில் கவனம்செலுத்தி தினம் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறேன்இப்போதெல்லாம் என்னால் தனியெ எங்கும் போக முடிவதில்லை  அனுமதியுமில்லை
 என்  வீட்டருகே ஒரு பார்க் இருக்கிறது அதில் தினமும் முடிந்ததோ இல்லையோ நடைப்பயிற்சியில் இருப்பேன்  நடையின் தூரமும் வேகமும் குறைந்துகொண்டே வந்தது ராஜ நடைஎன்று பீற்றிக் கொள்ளும் நான் தள்ளாடி தள்ளாடி நடக்க் வேண்டியதாய்ப் போய்விட்டது இந்தக் குறையுடன் மருத்துவரை அணுகியபோது எம் ஆர் ஐ டெஸ்டுக்கு உட்படச் சொன்னார்  அதுபற்றியும் எழுதி இருக்கிறேன் பலனேதும் கிடைக்கவில்லை எந்தபயணமும் மேற்கொள்ள முடிவதில்லை
 சில நாட்களுக்கு முன்  பார்க்கில் நடந்து  வந்து கொண்டிருந்த நான்  என்கட்டுப்பாட்டையும் மீறி வேகமாகத் தடுமாறியே வேகமாக நடக்கத்துவங்கினேன் மனதில்  இது சரி இல்லை என்று தோன்றவே  ஒருஇடத்தில் அமரப்போகும்போது நிலை தடுமாறி சாய்ந்து விட்டேன்  சில நல்ல மனிதர்கள் என்னை வீட்டில் கொண்டு விட்டார்கள் அதிலிருந்து வெளியே நடக்கப்போவதில்லை மீண்டும் மருத்துவரிடம் எல்ல நிகழ்வுகளையும் விவரித்தேன் என்னை c t scan க்கு உட்படுத்தினார்கள்  gait  assessment என்னும்  சோதனை   நடத்தினார்கள் வயதாவதன் பிரச்சனை என்கிறார்கள் சில  பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் நானும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் அனுசரிக்கிறேன்  பார்க்கலாம்  எந்த வேலையும் செய்யாமல் நான் இருக்க என்மனைவி அதிகம் சிரமம் எடுக்கிறாள் கணினி முன்பு எழுதுவதே என் பொழுது போக்கு  அதிக நேரம்வாசிப்பில் கவனம் செலுத்தமுடிய வில்லை
பரிசோதனைகளில் பெரிதாக ஏதும்கண்டு பிடிக்கவில்லைஎன்னை ஒரு காமிரா முன் நடக்கச் சொன்னார்கள் அதில் என் இடப்பாகம்சற்றே  தொய்ந்து இருப்பதாக atrophy என்று சொன்ன நினைவு அட்ராஃபி என்றால் சுருங்குதல் என்று அர்த்தம்மூளையின் ஒரு பாகம் சுருங்கி விட்டதாம் வயதானதன் கோளாறு  என்று சொன்னார்கள் இன்னும் மோசமாகாமல் இருக்க சில பயிற்சிகள் சொன்னார்கள் ஒவ்வொரு முறையும்  எனக்கு நான் எழுதி இருந்த செய்யாதகுற்றமென்னும் பதிவே நினைவுக்கு வரும் தவிர்க்க முடியாததைஅனுபவித்து தான் தீரவேண்டும்/ என்மக்களுக்குக் கூறும் அறிவுரைகள் எனக்கும் பொருந்தும் தானே  பார்ப்போம் இன்னும் எத்தனை நாள் என்றுஅது தெரியும்போது கணக்கிடநானும் இருக்கமாட்டேன்
உலகமே நீ வாழவந்தவன் என்று கற்பனையில் எழுதியவன் எல்லாமே பொய்யாகி புனை சுருட்டாகும்போது........................! 

Saturday, February 23, 2019

நாய் படும்பாடு



                                                  நாய் படும் பாடு
                                                  ----------------------------

 அது என்னவோ தெரியவில்லை நாய்களைக் கண்டாலே ஒரு பாசம்  ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன்   மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம் போடலாம் என்று இருந்தபோது ஒரு நாய் வாலை ஆட்டிக்கொண்டு சிநேக பாவத்துடன்  வந்தது பார்க்க் யாரோ வளர்க்கும் நாய் போல் இருந்தது நானும் அதைத் தடவிக்கொடுத்த போது  உரிமையுடன் வீட்டுக்குள் வந்து சோபாவில்  ஏறிப் படுத்துக் கொண்டது  மாலையானதும்சிலபிஸ்கட்டுகளைத் தின்னக் கொடுத்தேன்  சிறிது நேரமிருந்து விட்டு அதுபோய் விட்டது மறு நாளும் வந்ததுஅதேபோல் அன்றும் வாலை ஆட்டிக்கொண்டு வந்து சோபாவில் ஏறிப் படுத்துக் கொண்டது நானும் ஐயோ பாவம்வாயில்லா பிராணி என்று பேசாமல் இருந்து விட்டேன் இது இப்படியே தொடர்வது கண்டு என்மனைவி அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கச் சொன்னாள்  யாராவதூரிமையாளர்கள் நம்மிடம்வந்து சண்டை போடலாம் என்றாள்  சிறி து யோசனைக்குப் பின்  எனக்கு ஒரு ஐடியா தோன்றியது தினமும் சிறிது நேரம் சோபாவில் படுத்து விட்டு சமத்தாக அதுவே போவது கண்டு அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய  நினைத்தேன்   அதன் காலரில் ஒரு சீட்டில்  நிகழ்வுகளை விவரித்து எழுதி கட்டி விட்டேன்  மறு நாள் என்ன ஆச்சரியம்   அதன்  காலரில் ஒருசீட்டுடன் அதுவந்தது அதை எடுத்துப் பிரித்துப்படித்தால்
சார் / மேடம்   மிக்க நன்றி . ஒரு வாயில்லா ஜீவனுக்கு அடைக்கலம்கொடுத்து தங்க அனுமதித்ததற்கு மிக்க நன்றி அது என் நாய் இங்கே என்வீட்டில் அமைதியாக தூங்க முடியாமல்  அவதிப்படும் அது தனக்கு ஒரு இடத்தைத்தேடிக்கொண்டது என் வீட்டில் நான்கு பிள்ளைகள் என்மனைவி  அந்தநாய்  சற்று நேரம் நிம்மதியாய் இருக்க விடுவதில்லை அதனால் தான் அது உங்கள்வீட்டைத் தேடி வந்தது நானும் அதுபடும்பாட்டை அனுபவிக்கிறேன்   எனக்கும் உங்கள்வீட்டில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்க அனுமதி கிடைக்குமா  அப்படியானால் நானும்நிம்மதி யுடன் மதியவேளையைப்போக்கலாம்
நன்றியுடன்   என்று எழுதி இருந்தது


படம் இணையத்தில்  இருந்து 












Thursday, February 21, 2019

போதிமரம்



                                  போதி மரம்
                                  -----------------
  வயது ஆகும்போது இறப்பைப் பற்றிய எண்ணங்கள் கூடுகின்றன இந்த எண்ணங்களையே  பதிவாக்கினால் என்ன என்று தோன்றியது தோன்றியது செயல் படுத்தினால்,,,,,,,,,,,,,,
அரச குமாரன்  சித்தார்த்தன் வீதியில் போய்க் கொண்டிருந்தாராம்  ஒரு வீட்டின் வாசலில் ஒரெ அழுகைக்குரல் வரக்கேட்டது  என்ன என்று விசாரிக்க அவ்வீட்டில் ஒரு இழப்பு என்று கேள்விப்பட்டாராம் ( சில செய்திகள்  அடியேன்  இட்டுக் கட்டியதாகும் இல்லையென்றால் கதை அப்படி அல்ல என்பார்கள் )  அவர் உள்ளே போய் சமாதானப்படுத்த முயன்றார்  யாருடைய அழுகையையும் நிறுத்த முடியவில்லை  "சாகும்வயசா இவருக்கு குழந்தைகள் இருக்கின்றனவே அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டுமே" என்று என்னவெல்லாமோ சொல்லி மனைவி அழுது கொண்டிருந்தாளாம் அவரைப் பார்த்ததும் அழுகைக்குரல் கூடியது  என்ன செய்வது என்று  யோசித்தவருக்கு  ஒரு ஐடியா தோன்றிற்றாம்
அவரை நான்பிழைக்க வைக்கிறேன்  என்றாராம் ஒரு டம்ளர் நீரை இறந்தவரின்  அருகே வைத்தாராம்    எல்லோரும் ஆவலோடு அவர்முகத்தையே  பார்த்துக் கொண்டிருந்தனராம் 
இவருக்குப் பதில் யாராவது தன்உயிரைத் தியாகம்செய்ய முன்வருபவர் இந்நீரைக் குடிக்க வேண்டும் இவர் பிழைத்து விடுவார் ஆனால் நீரைப்பருகியவர் இறந்துவிடுவார்  என்றாராம்  எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனராம் வீட்டின்  வயதான தந்தையிடம் மகனைப் பிழைக்க வைக்க அவர்  நீரைப் பருகுவாரா என்று கேட்டதற்கு நான்போனால் என்மனைவியை யார் பார்த்துக் கொள்வது என்று ஒதுங்கி விட்டாராம்இறந்தவரின் அம்மாவுக்கு தன்மகள் நிறை மாசக் கர்ப்பிணி அவளைக் கவனித்துக் கொள்ளும் பணி தனக்கு இருப்பதால்  தன்னால் முடியாது என்றாராம் இறந்தவரின் மனைவிக்கு மீதி இருக்கும்  குழந்தைகளை  வளர்த்து  ஆளாக்கும்  கடமை இருந்தது இப்படியெ ஒவ்வொருத்தரும்  ஒதுங்கி விட்டனராம்
சித்தார்த்தருக்கு  ஒரு உண்மை புரிந்தது இறப்பவரின் இழப்பு ஏற்படுத்தும் கஷ்டங்களே  அழுகைக்குக் காரணம் அன்பு மட்டும் அல்ல காலப்போக்கில்  எல்லாம் மறந்துவிடும்இழப்பு என்பது டெம்பொரரியே  அப்போது மட்டும் அழுகையும் அஞ்சலிகளும்   இருக்கும் யாரும்மறுக்க முடியாத உண்மை  போதிமரம் ஏதும்தேவை இல்லைஉண்மை நிலை உணர 




Monday, February 18, 2019

சில எக்சோடிக் ப்ளாண்ட்ஸ்


                        SOME EXOTIC PLANTS
                        --------------------------------
  
சில ஆண்டுகளுக்குமுன் பதிவுலகில் நான் காலூன்றாத நேரமென்று நினைக்கிறேன் எனக்கு நண்பர்கள் சிலநல்ல புகைப்படங்களை அனுப்புவார்கள் எனக்கு அவற்றை என்பதிவுகளில் ஏற்றத்தெரியவில்லை அப்போது எங்கள் ப்ளாகோ  அல்லது நெருங்கிய தொடர்புடைய ப்ளாகோ  பதிவர்களின் படங்களை பதிவேற்றிக் கொண்டு இருந்தார்கள் நான் அவர்களிடம் நான் படங்களனுப்பினால் பதிவிடுவீர்களா என்று கேட்டு எழுதினேன் இதை நான் எழுதுவது ஏதோ நினைவில்தான்  நானாக எடுத்த படமானால் பதிவிட வாய்ப்பு இருக்கலாம் என்று பதில் வந்தது நான் அனுப்பவில்லை ஏன் என்றால் அவை நான் எடுத்த படங்களல்ல வலையுலகில் நம்மால் பார்க்காத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என் பழைய மெயில் இன்பாக்சைப்பார்த்துக் கொண்டிருந்தபோது சில அரிய  படங்கள்  என்சேமிப்பில் இருந்ததுதெரிந்தது இனி ஓரிரு பதிவுகளில் அப்படங்களை வெளியிட உத்தேசம் ரசிப்பவர்களும்   இருப்பார்கள் அல்லவா செடிகளின் பெயர்கள் தெரிந்தவர்கள் கூறலாமே 












    

  

Sunday, February 17, 2019

பெரிசு என்றால் சும்மாவா



                                    பெரிசு என்றால் சும்மாவா
                                     ----------------------------------------
இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர் ஒருவர் இளைஞர்  மற்றவர் வயதானவர்  இளைஞனுக்கு வயதானவரைச் சீண்டிப்பார்க்க ஆசை  வயதானவரோ எவ்வித  ஈடுபாடும்காட்டவில்லை இளைஞன் வயதானவரிடம்  நான்  சிலகேள்விகள்கேட்பேன்  பதில் தெரியாவிட்டால் ஐந்து ரூபாய் தர வேண்டும்  அதேபோல் நீங்கள் கேள்வி கேட்கலாம்  பதில் தெரியாவிட்டால் நான் ஐநூறுரூபாய் தருவேன் இளைஞன் பெரியவரை மட்டம் தட்ட  வேண்டும் என்று முடிவு செய்தான்  வேண்டா வெறுப்பாக பெரியவர் ஒப்புக் கொண்டார்  முதலில் நீங்கள் கேளுங்கள்நான்பதில் தருகிறேன் பின் நான் கேட்பேன் நீங்கள் பதில் தரவேண்டும் சரியா என்றான்  பெரியவர் கேள்வி கேட்டார் நம் உடலில் எலும்பு இல்லாத உறுப்பு எது இளைஞன் சுதாரித்துக் கொண்டு தன் பதிலைகூகிளில் தேடி சரி பார்த்துக் கொண்டான்நாக்கு என்றான் பதில் சரியாக இருக்கவே இளைஞனின்  முறை கேள்வி  கேட்க
உலகிலேயே அதி வேகமாகஓடக்கூடிய விலங்கு எதுபெரியவர் விடை தெரிய வில்லை என்று தோற்றதற்காக  ஐந்து ரூபாய் கொடுத்தார்இப்போது கேள்வி கேட்க பெரியவரின் முறை
 பறக்கும் போது றெக்கை இருக்காது நிலத்துக்கு வந்துவிட்டால் றெக்கை இருக்கும்  அது என்ன
இளைஞன்  முழித்தான்  தன் லாப்டாப்  கை பேசியி லெல்லாம் விடை தேடினான்  கிடைக்க வில்லை தான் தோற்றதற்கு அடையாளமாக  பேசி இருந்தபடிபெரியவருக்கு ரூபாயைநூறு கொடுத்தான் பெரியவர் ஒரு முறுவலோடு பணத்தை வாங்கிக் கொண்டார்
இப்போடு இளைஞனின் முறை கேள்வி கேட்க
ஐயா உங்க கேள்வியையே உங்களுக்குக் கேட்கிறேன் பதில் என்ன என்றான் 
பெரியவர் பதில் ஏதும்சொல்லாமல் ஐந்துரூபாயைஇளைஞனிடம் கொடுத்தார்
 பின்ன என்னவாம் பெரிசு என்றால் சும்மாவா


Thursday, February 14, 2019

காதலர் தின ஸ்பெஷல்



                 காதலர் தின ஸ்பெஷல்                                 
                 -------------------------------------------
 ஃபெப்ருவரி 14 ம் நாள்காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறதுகாதலர்தினத்துக்கு என்ன எழுதுவாயென்று என்மகன் கேட்டான்  காதல் என்ரத்தத்திலேயே ஊறியது அதற்காகதனிப்பதிவாக நான் முன்பேஎழுதி இருந்த எழுத நினைத்த காதல் கடிதம் என்னும்பதிவையே மீள் பதிவாக்குகிறேன் என்றேன் ஓல்ட் இஸ் கோல்ட்  என்றேன் அதுவே இங்கு
என் அன்பிற்குரியவளே,
பெயர் ஒன்றும் கூறி எழுதவில்லை. அதற்கு அவசியம் இல்லை. என் அன்பிற்குரியவள் என்றும் நீதானே. ஓ...! எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலென்ன.? என்றும் என் மனதில் இருப்பது உன் அன்றைய முகம்தான். உனக்கு நினைவிருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ கேட்டாயே என் மனதில் வேறு யாராவது இருந்தார்களா என்று. அன்று நான் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன். என் மனம் புகைப்படக் கருவியில் பொறுத்தப்பட்ட நெகடிவ் ஃபில்ம் சுருளைப் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் செய்யமுடியும். உன் உருவம்தான் என் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாயிற்றே.!
நீ அவ்வாறு அமர்ந்த நேரம் கூட எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.

அன்றொரு நாள் மாலை அந்திசாயும் வேளை
இரட்டைக் குழலுடன் பூரித்தெழும் அழகுடன்
பாவாடை தாவ்ணியில் பதினாறு வயசுப் பாவை நீ
ஓரடி ஈரடி சீரடி வைத்தென்முன் நாலடி நடந்துவர,
நாலாறு வயது நிரம்பப் பெறாத என் மனசும்
அலைபாய, மெய் விதிர்க்க,வாய் உலரத் தட்டுத்
தடுமாறிய நெஞ்சமுடன்  கண்டதும் கொண்டேன்.காதல்..

காதல் உணர்ந்தது, கண்வழி புகுந்து கருத்தினில்
கலந்து வித்தை செய்யும் விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?

உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்
ஆடிவரும் தேரை யாரும் காணாதிருக்கச்
செய்தல் கூடுமோ.? அயலவன் உன்னை
ஆராதிருத்தல் தடுக்கவும் இயலுமோ.?

என் இனியவளே உன்னைக் கேசாதிபாதம் வருணித்து எழுதிய பாக்களில் ஒன்று இதோ.

வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில் 
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன 
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில் 
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை. 
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை 
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட
எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென் 
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும் 
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின் 
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின் 
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும் 
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை. 
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
இதைப் படித்து நீ “ சீ ...போ” என்று செல்லமாகச் சிணுங்கியதும் என் மனக்கண்ணில் சித்திரமாய்த் தோன்றுதடி  
வாலிபத்தில்  எழுதியவற்றை அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம் கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின் களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைதிலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ இறுமாப்புடன் இருந்தேன்.

 எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? என்னுள் நிறைந்த உன்னை என் கண்ணுள் நிறுத்தி, நீ வரும் வழி நோக்கிப் பித்தனாய் இருந்ததும் நினைவில் மோதுதடி..

யாருனைக் காணினும் நிலம் நோக்கி
என் முன்னே மட்டும் என் கண் நோக்கி
என்னுள் பட்டாம்பூச்சி பறக்கச் செய்யும்
வித்தை அறிந்தவளே .உன் விழி பேசும்
மொழி அறிந்து உனைக் கண்ட நாளே
கணக்கிட்டு விட்டேன் என் கைத்தலம்
பற்றவென்றே பிறந்தவள் நீயென்று.

வாலிபத்தில் காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ

பொன்காட்டும் நிறங் காட்டி
மொழி பேசும் விழி காட்டி
மின் காட்டும் இடை காட்டி
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை என்னுடன்.

ஆனால் நானோ

ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.

நான் நினைப்பதை நானே உணருமுன்னர் கூறிவிடுபவள் அல்லவா நீ.?உணர்வுகளுக்கு வார்த்தையால் உருவகம் கொடுக்காவிட்டால்  ஒரு வேளை அந்த உணர்வுகள் வாடிச் சருகாய் மாறக் கூடாதல்லவா. .அதனால்தான் உள்ளம் உன்னுவதை எழுத நினைத்து இதனைத் தீட்டுகிறேன்
பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,  எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை  எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.

இப்படிக்கு என்றும் உன்............
புதிதாய்க் காதலர் தினத்துக்கு எழுது வதைவிட என்றும் பசுமையான எண்ணங்களைப்பகிர்வது நல்லதல்லவா







        

Tuesday, February 12, 2019

ஆணின் சிப்லிசிடியும் பெண்ணின் காம்ப்லிசிடியும்



                                        ஆணின்  சிம்ப்லிசிடியும்  பெண்ணின் காம்ப்லிசிடியும்
                                         -----------------------------------------------------------------------------------
அவளது டைரி
-----------------------
இன்று மாலையிலிருந்தே அவன் அவனாயில்லை
மாலையில் காஃபி க்ளப்பில் சந்திக்க ஏற்பாடு.
தோழிகளுடன் ஷாப்பிங் செய்ததில் தாமத மாயிற்று
பார்த்தவன் ஒரு ஹாய் கூடச் சொல்லவில்லை
கடுகடு என இல்லாவிட்டாலும் ஒரு சுரத்து இல்லை.
என்ன பிணக்கமோ காரணம் தெரியவில்லை
என் மேல் கோபமா எனக் கேட்டேன்.இல்லையென்றான்
நான் அவனை மிகவும் நேசிப்பதாகக் கூறினேன்.
பதிலாய் வந்தது ஒரு வரண்ட சிரிப்பு.
என்னைப் பார்த்து அவனும் நேசிப்பதாய் ஏன்
சொல்லவில்லை ஏதும் பேசாமல் கார் ஓட்டினான்
எனக்கு அழுகை அழுகையாய் வந்தது.
வீட்டுக்கு வந்தவன் தொலைக்காட்சிப்
பெட்டியை முடுக்கினான். எந்த சானலும்
பார்க்காமல் மாற்றிக் கொண்டே இருந்தான்
படுக்கையில் வீழ முடிவு செய்தேன் வந்ததும்
அவனிடம் கேட்க எண்ணியிருந்தேன் வந்தவன்
வந்தவேகத்தில் உறங்கியும் போனான்
அவனுக்கு வேறு யாரிடமோ லயிப்பா.
நினைக்கவே அச்சமாயிருந்தது. கண்ணீர்
வடித்தவள் அழுகையிலேயே உறங்கிப் போனேன்


அவனது டைரி

இன்று இந்தியா கிரிக்கட் டெஸ்டில்
இங்கிலாந்திடம் தோற்றது. சே  டாம் இட்..!

   

 


Saturday, February 9, 2019

உலகமே நீ வாழ வந்தவன்



                                  உலகமே நீ வாழ வந்தவன்
                                  ------------------------------------------

காலையில் கண் விழிப்புக் கொடுத்தது. இது காலையா.?இன்னும் வெளிச்சம் வரவில்லை. தோட்டத்து மாமரத்துக் குயில் கூவவில்லை.புள்ளினங்களின் இரைச்சல் இல்லை..! இன்று உலகம் அழியும் தினமல்லவா. ? எங்கும் கும்மிருட்டு. லைட்டைப் போட்டால் எரியவில்லை. மின் தடையா இல்லை எதுவுமே இயங்கவில்லையா. அருகில் படுக்கும் மனைவியையும் காணோம். இருந்தாற்போல் இருந்து தலை சுற்றுவதுபோல் தோன்றுகிறது. நான் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன் நடக்காமல் ஓடாமல் ஏன் எந்த இயக்கமுமில்லாமல் எங்கேயோ இழுக்கப் படுகிறேன்.உலகம் எந்த அறிகுறியும் காட்டாமல் அழியுமா.? பூகம்பம் இலலை, புயல் இல்லை. இடி இல்லை மழை இல்லை. எந்த சப்தமும் இல்லாமல் எல்லாம் போய்விட்டது. இருட்டின் அந்தரங்கத்துக்கே இழுக்கப் படுகிறேன்  என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாமே. அந்தகாரத்தில் ஒரு குதிரை அதன் மேல் ஒருவன். ...! இவன் தான் கலி புருஷனோ.? எல்லாவற்றையும் அழித்துவிட்டு மனித குலம் 
தழைக்க என்னை மட்டும் விட்டு விட்டானோ. என் ஒருவனால் மனித குலம் எப்படித் தழைக்க முடியும். எனக்கு மனைவி வேண்டுமே. ... மெள்ள மெள்ள இருள் விலகுகிறது.ஒளி சிறிது சிறிதாய் அதிகரிக்கிறது. மெல்ல யாரோ நடந்துவரும் சப்தம் கேட்கிறது. அருகில் வந்தவளைப் பார்த்தால்.... என் மனைவி. “ இந்த உலகம் தழைக்க நம் இருவரை மட்டும் வாழ விட்டிருக்கிறான் அந்தக் கலி புருஷன்என்ற என்னைப் பார்த்து
ஏதாவது கனா கண்டீர்களா.?” என்றாள் என் மனைவி
-----------------------------------------------