காலைக்காட்சிகள் அன்றும் இன்றும்
----------------------------------------------------------------
முன்பு ஒரு முறை காலைக் காட்சிகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் இன்றும் அதே தலைப்பில் ஆனால் மாற்றங்கள்பலவுடன்
பொழுது புலரும் வேளை. சேவல் கூவும் நேரம் நகரத்தில் சேவல் எங்கே கூவ
பறவைகள் இரைதேடக் கிளம்பும் நேரம் அதிகாலைத் தூக்கம் சுகமானது இருந்தாலும் சுகத்தை அனுபவிக்க உடல் நலமாயிருக்க வேண்டாமா.
. உடம்பு ஒரு கடிகாரம் மாதிரி. பழக்கப் பட்ட
காரியங்களுக்குக் கட்டுப் படும்
பொதுவாக விழிப்பு வந்தாலேயே பொழுது விடிந்து விட்டது என்று
அர்த்தம். சாலையில் நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஐடி கம்பனிகளில் வேலை
பார்ப்போரைக் கூட்டிப் போக வரும் கார்களின் சத்தம் கேட்கத் துவங்கும். அடுத்து
இருக்கும் பால் வினியோகக் கடைக்குப் பால் வண்டி வந்த சப்தம் கேட்கும்.
பக்கத்துவீட்டு நாய் தன் எஜமானைக் கூப்பிடக் குரைக்கும்வித்தியாசமான சப்தம் கேட்கும்
இப்போது
பக்கத்து வீட்டுக்குடித்தனக்காரர் குடிபெயர்ந்து விட்டார் சொந்த வீடு கட்டிப்போய்
விட்டார்
நிச்சயம் விடிந்து விட்டது
என்பது மனைவி குளிக்கப் போகும் முன் ஆன் செய்யும் ஸ்தோத்திரப் பெட்டியின்
பாட்டுகளைக் கேட்டால் தெரிந்து விடும்கௌசல்யா சுப்ரஜா ராமா eytc etc சுமார் ஒரு மணிநேரம் ஓடும்
அது
குளிப்பதுடன் கூடவே
தலைக்குத் தண்ணீர் ஊற்றும்போது
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த
தஹனோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுஜ்ஞாம் தாதுமர்ஹஸி
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம்குரு”
இப்போது அதுவும்
இல்லை
நான் எழுந்து காலைக்கடன்களை
முடித்து நடக்கப் போகும் முன் மனைவி எனக்கு முதலில் மூன்று நான்கு மாரி
பிஸ்கட்களை தருவாள் வெறும் வயிற்றில் காப்பி குடிக்கக் கூடாதாம் காஃபி குடித்து நான் நடக்கத் தயாராவேன்
இப்போது அந்த நாளும்
வந்திடதா என்னு ஏக்கம்தான்
மருத்துவர்களின்
ஆலோசனையா உத்தரவா ஏதோ ஒன்று நான் தினமும் சிறிது தூரம் நடக்க வேண்டும்
நல்ல வேளை வீட்டின் அருகிலேயே ஒரு பூங்கா போன்றதொன்று
இருக்கிறது நடை பயில ஏற்ற இடம் நீளவாக்கில்
இருக்கும் அகல வாக்கில் இரு பாதைகள் சுமார் எட்டு அடி அகலத்தில். ஒரு முறை
சென்று வந்தால் ஒரு கிலோமீட்டர்தூரம் வரும் தினமும் நான் இரண்டு முறை சென்று
வருவேன் அதாவதுஇரண்டு கிலோ மீட்டர்தூரம் நடப்பேன் இதே தூரத்தை
முன்பெல்லாம் அரை மணிக்கும் குறைவான நேரத்தில் கடப்பேன்
நடக்க வருபவர்களைக்
கவனிப்பதில் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன் நடக்கும் போது பதிவு எழுத சில ஐடியாக்கள்
வரும் முன்பொரு முறை இப்படி சிந்தித்தபோதுபிறந்ததே
செய்யாத குற்றம் எனும் பதிவு (பார்க்க)போய்ச்சேர் வீடு நோக்கி என்னும் இடுகையும் இப்படிப் பிறந்ததே என்ன நான் நடப்பது காலை வேளையில் அதையே
மாலையில் நடப்பதாகப் பாவித்து எழுதியதுதான் அந்த இடுகை
இப்போதெல்லாம் நடையை
நினைத்தால் வருவது ஒரு பெரு மூச்சு மட்டுமே
நடக்கும் பாதையில் நாய்களின் ராச்சியம்
நடக்கும் ஒருவர் நடக்க வந்தால் அவர் பின்னே இரண்டு மூன்று நாய்களும்
நடக்கும் அவர் அவ்வப்போது போடும் பிஸ்கட்களுக்கு நன்றி மறக்காதவை
காலையில் நடக்கப் போகும்போது பார்க்கில் இருக்கும் பெஞ்சுகளில் வயதான பெண்களின் குழுக்களும் இருக்கும்
அவர்கள் நடக்க வந்தவர்களா மருமகள்களிடம் இருந்து தப்பிக்க வந்தவர்களா என்னும் சந்தேகமும் எழும் நடக்க
வருபவர்களில் சிலர் ஓடுவதும் உண்டு. இப்படி ஓடும் சில பெண்கள்
என்னைக் கவர்ந்தவர்கள் அதில் ஒருத்தி சானியா மிர்சாவை நினைவு படுத்துவாள். இன்னொருத்தி
பந்தையக் குதிரை போல் இருப்பாள் செருகிய கொண்டையில் முடியின் நுனி ஆடி அசைந்து கவரும் ஒருமுறை
என்னைக்கடக்கும் போது ஒரு புன்னகை உதிர்த்தாள் பின் அவள் என்னைக்கடக்கும்போதெல்லாம்
புன்னகைக்கிறாளா என்று கவனிப்பேன் அவளது அந்தப் புன்னகை என்னை
ஈர்த்தது
வருபவர்களில்தான் எத்தனை
வகை சிலர் நேரம் தவறாமல்
வருவார்கள் சிலர் குழுக்களாக மூன்று நான்கு பேராக வருவார்கள். சிலவயதானவர்களுக்கு
நடைபாதைப் பெஞ்சுகள் கூடிப்பேசும் இடமாகிறது எனக்குத்தான் யாரும் நண்பர்கள் இங்கு இல்லை. 1994-ம் வருட வாக்கில் என் வீட்டில் குடி இருந்தவரோடு அதிகாலையில் வாக்கிங்கும் ஜாகிங்கும் செல்வேன்சுமார் நன்கு
முதல் ஐந்து கிலோமீட்டர் தூரம்வரை அவர் என்னைவிட மிகவும் இளையவர் அவர் சொந்த வீடு கட்டிப் போனபின் முன்புபோல் ஜாகிங்
செய்வதில்லை ஆண்டுகள் கழியக் கழிய உடலில் தெம்பும் குறைகிறது இந்த நடை ஒன்றுதான் எனக்கிருக்கும் ஒரே தேகப்பயிற்சி
இப்போதெல்லம் வருவது ஒரு
பெரு மூச்சுமட்டும்தான் என்றேன் நடப்பதே
முடிவதில்லை இருந்தும் நடக்கும் பாவனையை நான்
கைவிட வில்லை நடக்க முடிய வில்லை என்றால் பலனில்லை முடிகிறவரை நடஎன்பதே என் தாரகமந்திரம்
ஒரு முறைபசி பரமசிவம்நட நட என்று எழுதிப் பின்னூட்டமிட்டிருந்தார் நான் பார்க்குக்குப் போய் நடப்பதில்லை ஒரு முறை நடந்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி
விழப்போனேன் கூட பார்த்திருந்தவர்கள் துணைகொண்டு வீடு வந்து விட்டேன் என் சிறியவீட்டின்பக்க வாட்டில் சுமார் 15 மீட்டர் நீள பாதை இருக்கிறதுஇப்போது
அதுதான் என் நடைக்களம்வெளியில் எங்கும்போவதில்லை மாதம் ஒரு முறை மருந்து வாங்க
பிஎச் இ எல் மருந்தகத்துக்கு என்மனைவி துணையுடன்
ஆட்டோவிலோ டாக்சியிலோ செல்வேன்வீட்டின் பக்க வாட்டில் இருக்கும் இடத்தில்
நடக்கிறேன் கைத்தடியுடன் சுமார் அறுபது முதல் எழுபது வரை அங்கும் இங்கும் கணக்கில்
நடக்கிறேன் சுமார்
முக்கால்மணிநேரம்நடந்தால் ஒரு கிலோ
மீட்டர்தூரம் என்றுகணக்கு
முடியவில்லை
என்று படுத்துக் கிடக்காமல் நடக்க
முயற்சிக்கிறேன் முடிவதில்லை என்று சொன்னால் உடல் நலம்பேணுங்கள் என்றுபின்னூட்டங்கள் வரும் அவ்வப்பொதுஎனக்கு
நாமே நம் epitaph எழுதினால் என்ன என்று தோன்றும் அது என்னை நானே நம்பாமல் இருப்பதைக்
காட்டுமென்று தோன்றும் நான் என்னதான்
தைரிய சாலியகைருந்தாலும் என்னால் பிறாஅர்
கஷ்டப்படக் கூடாது எறு நினைக்கிறேன்
பார்ப்போம்