Friday, November 30, 2018

பட்டமும் பதவியும்



                               பட்டமும் பதவியும்
                              -----------------------------------
   எனக்கு பட்டப்படிப்புஇல்லாததால்  அடைந்த நஷ்டங்கள் ஏராளம்  என் மக்கள்
பட்டமில்லாததால்  அவதிப்பட கூடாதுஎன்று எண்ணினேன் பட்டப்படிப்பு இல்லாமலேயே எஞ்ஜிநீயர்பதவி வகித்தவன்  நான்.  என் மூத்தமகனுக்கு மருத்துவராகவேண்டும்என்று விருப்பம் அவனது ஆசையை எப்படியாவது  நிறை வேற்ற விரும்பினேன் பலகல்லூரிகளுக்கு  மனு இட்டுக்காத்திருந்தோம் அது போதாது தீவிர முயற்சியும்தேவை என்றுபலரும்கூறினர் மருத்துவபடிப்பே செய்யும்  தொழிலுக்கு உதவுமென்று எண்ணினேன் படிப்புக்கும்செய்யும்தொழிலுக்கும் எந்த  சம்பந்தமும் இல்லாதிருப்பதைக் காண்கிறேன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒரு செனேட் உறுப்பினர் தெரிந்திருந்தது ஆனால் என்னை அவருக்குத் தெரியாது பி எச் ஈ எல் பொது மேலாளருக்கு என்மேல் ஒரு கனிவு இருந்ததுதெரியும் அவரிடம் வேண்டிக்கேட்டுக் கொண்டு  ஒரு சிபாரிசு கடிதத்துடன்   செனட் மெம்பரை அணுகினேன்   அவருக்கு பொதுமேலாளர்மீதுஎன்னகோபமோ அவரிடம்சிபாரிசு பெற்றுக் கொண்டுவந்தால் சீட் கிடைக்குமா  அதெல்லாம் முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விட்டார்  நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று நினைத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வைஸ் சான்சலரை நேரில் காண்பது என்றுமுடிவெடுத்தேன்
 சென்னையில்  அண்ணாமலை புரத்திலிருக்கும் அவரது  இல்லத்துக்குச் சென்றேன்என்போதாத வேளை அவர் வீட்டில் இருக்கவில்லை ஜனாதிபதி கிரியை வரவேற்கச் சென்று இருப்பதாக அவர் செயலாளர் கூறினார்நான் தயங்கி நிற்பதை கண்டு என்ன விஷயமாக வந்தேன் என்று கேட்டார் அண்ணாமலைப்பல்கலை கழகத்தில்  ஒருமருத்துவசீட் அல்லது அக்ரீ சீட்  என் மகனுக்கு வேண்டி வந்ததாகக் கூறினேன் என் மகனின் மதிப்பெண்கள்பற்றிகேட்டார்  காட்டினோம்  அந்த மதிப்பெண்களுக்கு இடம் கிடைப்பது உறுதி என்று கூறினார் பல்கலைக் கழக நோட்டீஸ் போர்டில் அவன் பெயர் இருக்கும் என்றுகூறினார்  மகிழ்ச்சியுடன்  திரும்பினோம்  என் மனைவியும் மகனும்  பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டில் அவன்பெயரைத் தேடினர்  முதலில்  என்மகனின்  ஆர்வத்தில்பெயர் இருந்ததாகக் கூறினான் மறு முறை பார்த்தபோது இருக்கவில்லை என்றுதெரிந்ததுமனமொடிந்து வந்தனர் நானும் என் மகனும் மீண்டும் சேனை சென்றோம் அந்தசெயலாளரைச்  சந்தித்து விவவரம்சொன்னோம்  எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது இம்முறை தவறுஇல்லாமல் இருக்கும் என்று கூறினார் நான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டு  கால்களாக  பாவிப்பதாக  வேண்டி வணங்கினேன்     இதைக் கண்ட என்மகன் நெகிழ்ந்துவிட்டான் அவனுக்காக யாரிடமும்  கெஞ்ச வேண்டாம்   என்று கூறினான் அப்படி இருக்க முடியவில்லை மறுமுறையும்  பல்கலைக் கழகத்துக்கு படை எடுத்து தோல்விகரமாக வந்தோம்

 இதனிடையே எனக்கு மிகவும்வேண்டிய நண்பர்  அவருக்கு எம் ஜீ ஆரைதெரியுமென்றார்  ஆனல் காரியம்சாதிக்க கொஞ்சம் பணம் செலவாகும்  என்றார் ரூ10000/ முன்பணமாகவாங்கினார் நாட்கள்கடந்தன எதிர்பார்த்த பதில் வரவில்லைஇதோ இன்று நாளை என்று நாட்கள் ஓடியதுநாங்களும் நம்பிக்கை இழந்துவிட்டோம்மகன் கெமிஸ்ட்ரி இளங்கலைக்கு செல்ல ஆரம்பித்தான் நண்பரிடம் கொடுத்திருந்த ரூ 10000/ சிலமாதங்களுக்குப்பின்  திருப்பிக் கொடுத்தார் இளங்கலைப்பட்டம்பெற்றபின்  அவனே தேர்வு எழுதி பாஸ்செய்து பை மானேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட்டில் எம் பி ஏ வில் சேர்ந்து பட்டம் வாங்கினான் வாழ்க்கையில்முன்னேற்றம் கண்டான் பட்டமில்லாததால் நான்பட்டநஷ்டங்களேராளம் என்றுஎழுதி இருக்கிறேன் அது பற்றி பிறிதொரு பதிவில்   

Wednesday, November 28, 2018

மீண்டும் சபரி மலை



                                   மீண்டும் சபரிமலை
                                  -------------------------------

 ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி விட வேண்டியது பதிவு எழுதி அதில்குளிர் காய வேண்டியதுஎன்று என்னைப் பற்றிய எண்ணங்கள் இருந்தாலும் சிலபுதிய செய்திகள் சர்ச்சையைக் கிளப்பலாமென்றுதெரிந்தாலும் அது பற்றி பதிவிடாமல் இருக்க முடியவில்லை ஐயப்பனைப் பற்றி பல கதைகள் கேட்டிருக்கிறொம்   பந்தள ராஜாவின் குமாரன் என்றுதான் அதிகமாக அறியப்படுகிறார்  ஆனால் முற்றிலும்வேறான கதையைக் கேள்விப்பட்டேன்/ படித்தேன்  சபரிமலை மலையராயன் என்னு ம்பழங்குடி மக்களுக்குச் சொந்தமானதாம் சபரி மலையும்   கரிமலையும் 20ம் நூற்றாண்டின் முன்பாதிவரை மலயராயன் குடிகளின்  பொறுப்பிலிருந்ததாம் சபரிமலையின்  முதல் பூசாரி  கரிமல அரயன் என்பவராம்  அவரது பெயர் படினெட்டுபடிகளில்  முதல் படியில் செதுக்கப்பட்டுஇருக்கிறதாம் ஐயப்பனின் பெற்றோர் கந்தன் கருத்தம்மா என்பதாம்  அவர்களது  வாழ்வில் நடந்த ஏதோ காரணங்களே  41 நாள் விரதத்தின்மூல காரணமாம்  18 படிகள்சபரிமலையில்  இருக்கும் 18 குன்றுகளை குறிப்பனவாம்
 தற்போது ஹெரிடிடரி பூசாரிகளாக இருக்கும் தாழமொன் மடத்தைச் சார்ந்தவர்கள் பழங்குடி மலயராயனைச் சேர்ந்தவரை விரட்டி அவர்களிடமிருந்து சபரி மலையும் கோவிலும் பிராமணர்களால் பறிக்கப்பட்டு  அவர்கள்சம்பிராதயங்களையே  மாற்றப்பட்டதாம் பொன்னம்பல மேட்டில் மகர  விளக்கு ஏறறும்  உரிமையும்   பறிக்கப்பட்டதாம்
 ஐயப்பன் என்னும்பெயரே ஹிந்துகளின்   வழக்கத்துக்கு மாறானதாம் பழங்குடியினரின்  தலைவன் பெயரே ஐயப்பன் ஐயனார்   என்று குறிக்கப்பட்டு பூஜிக்கபட்டதாம்  முந்தைய மலயராயன்குடியினர்  வர்ண ஜாதிகளுக்கு உட்படாதவராம்  அவர்ண குடிகளுக்கு  பூஜா முறைகளென்று எதுவும்கிடையாதாம்   பூஜைகளில் ஆண் என்றும்  பெண் என்றும் பேதமிலையாம்  அந்தக்கால கேரளத்தில் கோவில்களென்று அறியப்படவில்லையாம்  காவுகள் என்றே பூஜா இடங்கள்கூறப்பட்டதாம் 18 19 நூற்றாண்டுகள்  வாக்கிலேயே கோவில்கள் தோன்றி இருக்க்சக் கூடுமாம்   இப்போது வழக்கத்திலிருக்கு கட்டுப்பாடுகள்  எதுவுமில்லையாம்
இதைஎல்லாம் படிக்கும் போது   பிராமணர்களால் மற்ற குடிகள் மீதுதிணிக்கப்பட்ட மதமே ஹிந்து மதமென்னும் பெயரில் இயங்குவதாகப் படித்ததுநினைவுக்கு வருகிறது பிராம்மணீயமே ஹிந்து மதமாக மாறி விட்டது என்றும் சொல்கிறார்கள்
  மலய ராயன்  குடியினர் உச்ச நீதி மன்றத்தை  அவர்களுரிமையை மீட்கக் கோரி அணுகப்போகின்றனராம்
இந்தப் பதிவு  எத்தனை பேரின்  சிற்குகளை சிலுப்பப் போகிறதோ  இவைஎல்லாம்நான் அண்மையில் படித்து அறிந்தது இத வெராசிடிக்கு இணையத்தில் தேடி பார்க்கலாம்  கிடைக்கும்
( நான் அக்னி ஹோத்ரம் தத்தாசாரியரின் சில எழுத்துகளையும் த ஹிண்டு பத்திரிகையில் கண்ட ஒரு ஆர்டிகிளிலிருந்தும் எடுத்தாண்டிருக்கிறேன்)          

Monday, November 26, 2018

வீர ஆஞ்சநேயர் கோவில் மஹாலக்ஷ்மி லேஅவுட்



                                வீர ஆஞ்சநேயர்  கோவில் மஹா லக்ஷ்மி  லேஅவுட்
                                   ---------------------------------------------------------------------------
இந்த மாதம்  17ம் தேதி தமிழில் கார்த்திகை மாத முதல் தேதியாம் பல ஆண்டுகளுக்குப் பின்  என் மனைவி மஹாலக்ஷ்மி லேஅவுட்டில்  இருக்கும்  வீர ஆஞ்சநேயஸ்வாமி  கோவிலில் வடை மாலை சார்த்துவதாக பிரார்த்தனைசெய்து அதற்கான பணமும்கட்டி ரசீதும்வாங்கி இருந்தாள் என்  வீட்டில் இருந்து சுமார் பத்து கிமீ தூரத்திலிருப்பது ஒரு சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது
பெங்களூரில் பிரசித்தி பெற்ற ஹனுமான்  கோவில்களில் ஒன்று  முன்பெல்லாம் அடிக்கடி செல்வது வழக்கம்  காலை சுமார் 11 மணி அளவில் மங்கள் ஆரத்தி நடை பெறும்  நான்கு வேதங்களாலும் போற்றுவார்கள் அங்கு சுமார் 22 அடி உயரமும் 16 அடி அகலமும்  கொண்ட  ஆஞ்சநேயர் சிலைக்கு பக்தர்களே அபிஷேகம்செய்யலாம் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்வெண்ணை அலங்காரம் ஷ்ரவண மாதம்  (புரட்டாசி )செய்வார்கள் அத்தனை பெரிய சிலைக்கு வெண்ணை  அலங்காரம்பக்தர்களின் பங்களிப்போடு நடைபெறும்   ஒரு பக்தர் மறக்காமல் எங்களிடம் அன்பளிப்பு வாங்கி பின் பிரசாதமும் ஒவ்வொரு முறையும் தருவார் ஒரு முறை தம்பதிகள் சமேதராக விளக்கு பூஜை செய்தோம் அங்கேயே  உணவும் உண்டு  என் இளையமகன் ஒரு ஆஞ்சநேய பக்தன்  திருச்சி குடி இருப்பில் இருந்தபோது  முதல் மாடியிலிருந்து எதற்கோ எட்டிப்பார்த்த போது  கீழே விழுந்து விட்டான்  ஆனால் எந்தகாயமும் இல்லாமல்  எழுந்து வந்தான்   அவன் கழுத்தில் இருந்த ஆஞ்ச்நேயர் டாலரே  அவனைக் காப்பாற்றியது என்றுநம்பினான்
 இந்த கோவில் 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகசெய்தி 
 முன்பு பொட்டல் காடாக இருந்தகுன்றில் இருந்தபெரிய  கருங்கல்லை ஒரு கான்வாசாக  உபயோகப்படுத்தி  ஹனுமான்  படம்வரைந்தாராம் பின்  பக்தர்கள் துணையோடு கற் சிலையாக வடிக்கப் பட்டதாம்   அழகானகுன்றில்  இருக்கும் இந்தக் கோவில் அமைதி தவழ்வதுஒரு பெரிய மஹாலக்ஷ்மி சிலையும் உண்டு  கோவிலின் கோபுரம் இப்போது  தங்கத்தால்  வேயப்பட்டு இருக்கிறது காலை ஆறு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை கோவில் திறந்திருக்கும் 17 ம் தேதி கோவில் சென்று வடை மாலை  சார்த்தப்பட்டதற்கான  அடையாளமாக  வடைகளைபிரசாதமாகக் கொடுத்தார்கள்  பெங்களூரில்  மஹாலழ்மி லேஅவுட்தவிர ராகி குட்டா  என்னும் இடத்திலும்   பான்ஸ்வாடியிலும்  ஆஞ்ச்நேயர் அருள் பாலிக்கிறார் இன்னும்  சில இடங்களும் இருக்கலாம்  இவை நான் போய்ப் பார்த்துவந்த இடங்கள். பலருக்கும்  நினைவு இருக்கலாம் பல ஆண்டுகளுக்கு முன்   பான்ஸ்வாடி  ஆஞ்ச்நேயர் கண்களிலிருந்து நீர் வழிந்ததாக செய்தி பத்திரிகைகளில் வந்தது
குன்றேற  படிக்கட்டுகள்


விக்கிரகங்கள்  பிரதிஷ்டை  செய்த இடம் 


மேல் தளத்தில் ஆஞ்ச நேயர் படம் 
மஹாலக்ஷ்மி சிலை 


விநாயகர் 
ராம லக்ஷ்மண சீதா 



லக்ஷ்மி


வீர ஆஞ்சநேயர் சிலை 












Friday, November 23, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே



                                    நெஞ்சு பொறுக்கு தில்லையே
                                     ----------------------------------------------
ஜவஹர்லால் நேரு 
  அவர் உம் என்று தும்மினால் செய்தி  கையை அசைத்தால்  செய்தி என்று  அரசில் இருப்போரின் புகழ்பாடும் நம் தேசிய்
ஊடகங்கள்மனிதரில் மாணிக்கம்மான  தலைவர்களில் முக்கிய மான நேருவின்  பிற்ந்தநாள் அன்று அவர்பற்றிய செய்திகளை  இருட்டடிப்பு செய்ததுஅறிந்து நெஞ்சுபொறுக்க வில்லை ஒரு வேளை அப்படி உத்தரவு வந்திருக்கலாம்  நவீன இந்தியாவின்  கோவில்களென்று புகழ்ந்துரைக்கப்படும்   தொழிற்கூடங்களுக்கு   வித்திட்டவர்  அவர் முயற்சி செய்து நிறுவிய தொழிற்சாலைகள் அவர் பெருமையை பறை சாற்றும்நவீன கோவில்கள்  இந்தியாவில் அணுபற்றி ஆராய்ச்சி செய்ய நிறுவிய கூடங்கள் இன்று சந்திரனுக்கே கோள் அனுப்பும் விதத்தில்  வளர்ந்திருக்கின்றன அப்படிப்பட்ட தலைவரின் பிறந்தநாளைப் புறக்கணிக்கும் திட்டமிட்ட சதியோ அவரை எந்த ஊடகமும் கண்டு கொள்ளாதது கோடிக்கணக்கில் பண்ம்செலவு செய்து  படேலுக்கு சிலை நிறுவி  அவரை நேருவின்  எதிரி என்று நாம் நினைக்க வைக்க எல்லாம்செய்கிறார்கள்  மதம் என்றும் இனம் என்றும் பேதம்காட்டி ஜனங்களை ஒருவருகொருவர் எதிரியாகநினைக்க வைக்கிறார்கள்  அரசுக்கு தலைஆட்டாவிட்டால்விளம்பரம்கிடைக்காது என்னும் அச்சமெ நம் ஊடகங்களுக்கு என்று தோன்றுகிறது ஊடகச் செய்திகளை  நம்பமுடியவில்லை ஆங்கிலத்தில் perceptionn  என்று கூறுவதுதான் நினைவுக்கு வருகிறது நரி இடம்போனால் என்னவலம் போனாலென்னா நம்மைப் பிடுங்காது இருந்தால் சரி என்றே நாம் நினைக்கிறோம் ஆனால் ஊடகச் செய்திகளை நிஜம் என்றுநம்புவோம்   ஊடகங்கள் நமது அபிப்பிராயத்தைச் செதுக்குகின்றன என்பதைஅறியாமல் இருக்கிறோம் வரும்  செய்திகளில் எது உண்மை எதுஅல்லாதது என்பது பற்றி நமக்குத் தெரியாது  இவர் சொல்கிறார் அவர்சொல்கிறார்  என்போமே தவிர எதுசரிஎன்பது நமகுத்தெரியாது  our perceptions  guide us   நாமும்  கண் தெரியாதவர் யானையை விவரிக்கமுயல்வதுபோல் செயல் படுவோம் நெஞ்சு பொறுக்க வில்லையே நம்மை உடனே பாதிக்காத விஷயங்களில் நம் அக்கறை குறைகிறது 

Tuesday, November 20, 2018

சில ஆதங்கங்கள் புனைவில்



                         சில ஆதங்கங்கள்  புனைவில்
                          ---------------------------------------------
என் நெஞ்சில் ஆழ்ந்திருந்த எண்ணங்களைக் கடத்த என் புத்தியில் உதித்த புனைவே இந்த நண்பனும் என் அஞ்சலிகளும்.

         இன்று நீ நிறுவியுள்ள இந்தத் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா. எங்கு   பார்த்தாலும் உன் பேச்சுஎங்கு பார்த்தாலும் உன் சாதனைகள்எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்பின் எப்படித்தான் இருக்க முடியும்.? நீதான்  நீயாக இல்லாமல் உன் நினைவாக  மாறிவிட்டாயே.

         நண்பாசிந்திக்க வேண்டும்ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும்  என்று அடிக்கடி  சொல்வாயேநீ சிந்திக்கவில்லையா.? இல்லை சிந்தித்ததைசாதிக்கவேண்டும்,   இதற்கு  மேல் சிந்தித்தால் சாதிக்க முடியாது என்று நினைத்துப்  போய்விட்டாயா.? நீ சிந்தித்து  சாதித்ததை தொடரவும்சாதிக்கமுடியாமல் விட்டதை  சாதித்துக்காட்டவும்  நாங்கள் இல்லையா.? இந்த  வாழ்க்கைப் போதுமா உனக்கு ?. உன் நினைவு  எங்களை  வாட்டுகிறதுஎண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.

       அதெப்படி நண்பா உன்னால் மட்டும் அப்படி தீர்க்கமாக எண்ணமுடிந்தது.? நடக்கும் செயல்களுக்கு காரண காரியங்களைக் கண்டறிந்து, தவறுகள் திருத்தி சீராக்கி வழிகாட்டிவாழ்ந்தாயே.."சொல்வதை செய் செய்வதை சொல்என்ற  தாரக  மந்திரம்தானே உனக்கு வழி காட்டி.?

       அனாதைகளாகஇருக்கவும்ஆதரவு அற்றவர்களாக  இருக்கவும் குழந்தைகள் என்ன பாவம் செய்தன.?பிறக்கும்போதே  ஏற்ற தாழ்வுகளுடனே ஏன் பிறக்க  வேண்டும் என்று கேட்டுக்கலங்குவாயேநினைவிருக்கிறதா.அதெப்படிஇருக்கும் .நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.

      காரணங்கள் இல்லாத காரியங்களே கிடையாது.ஆனால் காரணம கண்டு பிடிக்க முயலுவது  சிக்கலுள்ள நூல் கண்டின் முனை கண்டு சிக்கல் நீக்குவது  போலாகும .சில சமயம் முடியலாம்.சில நேரங்களில் முடியாமல் போகலாம்  என்றெல்லாம்  கூறுவாயே  சிக்கல் உள்ள நூல் கண்டு ஒன்றின் முனையாக நீ கண்டது  கல்வி  அறிவு  இல்லாமை என்று வாதாடுவாயேயார் கல்வி கற்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்  ? அறியாமையின் விளைவு என்று சொன்னால் அறியாமையின காரணம் தேட வேண்டும்   என்பாயேபலரும் அறியாமை இருளில் மூழ்கி கிடப்பதே சில சாராருக்கு நன்றாக  இருந்தது அறியாமையில் கிடந்தால தானே அடக்கியாள முடியும்.அடக்கி ஆளவும்  ஆதிக்கம் செலுத்தவும் ஏதுவாக மதம் என்றும் சாதி என்றும் கூறி,மக்கள் மாக்களாக  இருப்பதே நன்று என்று இருந்தோரும் உண்டு என்றெல்லாம் நீ கூறியது  நினைவுக்கு  வருகிறதுஉனக்கு வராதுநீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே

        வாழ்வியலில் சவுகரியத்துக்காகவும் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டியும் வகுக்கப்பட்ட வர்ணாசிரம தருமங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு ,அதையே ஆயுதமாக்கி ஆண்டை என்றும்  அடிமை என்றும் காலங் காலமாக அடக்கியாண்டு அதையே நீதி என்றும் சாத்திரம் என்றும் சாற்றி, கேள்வி கேட்டால் முகம் திரிந்து நோக்குவதோடு அல்லாமல்,நாத்திகன் என்ற பட்டமும் கொடுத்து, வேறுபடுத்தும் வாழ்வியல் முறையே அறியாமையின் அஸ்திவாரம் என்று முழங்குவாயே உனக்கு நினைவு வராது.ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.

        இன்று கல்விக்கண் கொடுத்து அறியாமை இருள் அகல்விக்க எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதோடு நில்லாமல் நேற்றுவரை அடக்கப் பட்டவனை கொஞ்சம் தூக்கிவிட சில சலுகைகள் கொடுக்கப் படும்போது முகச்சுளிப்புகளும், மனக்கசப்புகளும் காணும்போது  நம் பாட்டனுக்குப் பாட்டன் ,அவனுக்கும் பாட்டன் முதல் நம் முன்னோர்கள்  செய்த பிழைகள் அவர்களது சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஒன்றும்  நீதிக்கு மாறானதில்லையே,ஆச்சரியமில்லையே என்று நியாயப் படுத்துவாயே

      வசதிகள் பல பெற்று, வாழ்க்கையின் முன்படியில் இருப்பவன், வசதி அற்றவனுக்கு கை கொடுத்து படி ஏற்றுவதுதான் நியாயம் என்றெல்லாம் வாதாடுவாயே.அப்படி படியேறி வந்தவர்களில் சிலர் இப்போது முறையற்ற வழிகளில் முன்னேறி, கடந்து வந்த பாதைகள் மறந்து போய ,ஆடும் ஆட்டம் காணும்போது மனம் நோகுதே என்று விகசிப்பாயே, நண்பா.

      சில நூல் கண்டுகளின் முனையறிந்து காரணம் கண்டாலும், அறியாத காரணங்கள் ஆயிரம் உண்டு.அதனை அறியும் முயற்சிதான் இக்குழந்தைகள் காப்பகம் மூலம் நான் செய்யும் மானுடத்தொண்டு, என்றும், என்னையே நானறியவும் பிறப்பின் காரணம் அறியவும் நான் செய்யும் முயற்சி என்று நீ கூறித் துவங்கிய இந்தக் காப்பகம் நீயின்றித் தவிக்கும் என்றாலும், கிளை பரப்பி நிழல் தரும் அளவுக்கு வளர்த்தி நீ விட்டுச் சென்றிருக்கிறாய்  இது மேலும் தழைக்கவும் மேன்மேலும் வளரவும் அறியாமை இருள் நீக்க நாங்கள் பாடுபடுவோம். சிக்கல் உள்ள நூல் கண்டுகள் பல உண்டு, அவற்றில் இது ஒன்று, இன்னும் பலவற்றின் முனை கண்டு சிக்கல் அவிழ்க்க நாங்கள் முயலுவோம். இதுவே நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறிவிட்ட உனக்கு நாங்கள் செய்யும் இறுதிக்  கடனும் அஞ்சலியுமாகும்.