Saturday, March 30, 2013

மன சாட்சி ( நாடகம் )-6







                     மன சாட்சி ( நாடகம் )
      ----------------------

காட்சி.:-7    இடம்’- ஷீலா வீடு
பாத்திரங்கள்.:-ஷீலா, ரவி, வேலையாள் கணபதி.

( திரை உயரும்போது ஷீலா ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். சட்டென்று ஸ்டேஷனை மாற்ற அதில்)


பிணக்கோலம் காண்பதால் உலகில் மணக்கோலமே இல்லாமல் இருந்து விடுவதில்லையே....இறப்பவர் இறந்து கொண்டே இருக்க மணப்பவர்  மணந்து கொண்டே இருக்கின்றனர். வெட்ட வெட்டத் துளிர் விடும் செடியைப் போல மக்கள் இறக்க இறக்க மனித குலம் துளிர் விடுகிறது. அது இயற்கையின் நியதி. ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து இல்லறம் பேணுவதும், சேர்ந்து வாழ்வதன் மூலம் குழந்தைகளைப் பெறுவதும் இயற்கையின் நியதி. அதை மாற்றி மனித குலம் தழைப்பதை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதும் அதற்கென்று குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை நிறைவேற்றலாம் என்று மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, தவறெனத் தோன்றினாலும்......
ஷீலா.:-( மனம் ) அடச் சட்.... எப்பப் பார்த்தாலும் நேரங்காலம் இல்லாம குடும்பக் கட்டுப்பாடு....குடும்பக்கட்டுப்பாடு.... இது தவிர வெறு விஷயமே இல்லையா.....?இங்கே என்னடான்னா குடும்பமே இல்லைன்னு தவித்துக் கொண்டு இருக்கு மனசு.......
“ ஆமா , தெரியாமத்தான் கேக்கறேன். ஏன் தவிக்கணும்.?
“நீயே சொல்லு....! ஒரு நாளாவது உன் கணவனுடன்நீ மனைவிங்கற முறையில தாம்பத்திய இன்பங்களை அனுபவித்திருக்கிறாயா.?
“ எங்கடீ அனுபவிக்கறது.? அவரைப் புரிஞ்சுக்கவே முடியலையே....!
“ எனக்கென்னவோ சந்தேகமாத்தான் இருக்கு. ஆரம்பத்திலேருந்தே அவர் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கார்..எல்லா விஷ்யத்துலயும் உன் கூட இணையறவர் இதுக்கு மட்டும் ஏன் மறுக்கணும். .?
“ ஒரு சமயம் அப்படியும் இருக்குமோ.?
“ சேச்சே அப்படி இருக்காது. இருக்கவும் கூடாது.
கணபதி.:- அம்மா அம்மா......
ஷீலா.:-என்ன கணபதி.....!
கணபதி.:- அம்மா... எனக்கு ரெண்டு நாள் லீவு வேணும்மா....
ஷீலா.:- எதுக்கு கணபதி லீவு.?( ரவி வருகிறான்.)
கணபதி.:- எனக்குக் கல்யாணமாகி நாலு வருஷமாவுதம்மா...இன்னும் எம் பொண்டாட்டி வயத்துல ஒரு புழுவோ பூச்சியோ மலரலை. ராமேஸ்வரத்துக்குப் போய் பிள்ளை வரம் வேண்டிட்டு வரலாம்னுதான்.....
ரவி.:- சுத்த நான்சென்ஸ் .....! பிள்ளை பெற்றுத்தான் தீர வேண்டும்னு அப்படி என்னையா ஒரு கட்டாயம்..?அதற்கு ஆண்டவன் தரிசனமாம்.... ஆலய வழிபாடாம்.... ஸில்லி.
கணபதி.:- அதெப்படிங்க எசமான்.....குலந்தழைக்க ஒரு கொழந்தை வேண்டாமா....என் சம்சாரம் என்னமா வருத்தப் படுதுன்னு எனக்கில்ல தெரியும்...! ஏதோ ஒரு நப்பாசை....கோயில் குளம்னு போயிட்டு வந்தாலாவது ஒரு குழந்தை பிறக்காதான்னு.....
ஷீலா.:- நீ போயிட்டு வா கணபதி... ரெண்டு நாளோ மூணு நாளோ.... நீபோயிட்டு வா

கணபதி.: -சரிங்கம்மா.... நீங்க நல்லா இருக்கணும்.... ( போகிறான் )
ரவி.:- ஷீலா நீ நடந்துக்கற விதம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலை.....
ஷீலா.:-ஏனாம்...? ஏதோ ஆசைப்பட்டான்... அனுப்பறேன்.அவனோடு தாபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது. நமக்கும் கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆகப் போகுது.ஒரு நாளாவது என்னை நீங்க புரிஞ்சுகிட்டு இருப்பீங்களா.? எனக்கும் எவ்வளவு ஏக்கம் இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு....?
ரவி.:- அப்படி என்ன ஏக்கம் உனக்கு...?
ஷீலா.:- ஒரு பெண் வாய்விட்டு வெட்கமில்லாம பதில் சொல்லக் கூடுயதாய் இல்லையே உங்கள் கேள்வி.......
ரவி.:- ஓ...ஓ......ஒரு குழந்தை பெற்றால்தான் சொத்துன்னு உங்கப்பா உயில் எழுதி இருக்கார்......இவரென்னடான்னா குழந்தைய ஏன் பெத்துக்கணும்னு கேட்கிறார்னு நினைக்கிறே நீ..............

ஷீலா.:- போதும் நிறுத்துங்க....சொத்தாவது மண்ணாங்கட்டியாவது....இவ்வளவு நாள் நான் உங்களோட வாழ்ந்து என்ன சுகம் கண்டேன்.ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கூடி பெருமையுடன் இல்லறம் பேணும்போது பெண்மையின் மலர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கணுங்க. கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது...வாழவும் தெரியணும். வாழவைக்கவும் தெரியணும். போங்க எங்கிட்ட எதுவும் பேசாதீங்க. நான் என்னையும் மீறி ஏதாவது சொல்லிடுவேன். .....போங்க.......
ரவி.:- ஷீலா..... ப்ளீஸ்.....நான் முன்னயே சொல்லியிருக்கேனே.......... மனசளவிலதான் நம்ம கலியாணம்னு....
ஷீலா.:- அதுதான் ஏன்னு கேட்கிறேன்...
ரவி.:- ஷீலா...உடலுறவு மனுஷனைக் கீழ் நிலைக்கு.....
ஷீலா.:- போதும் நிறுத்துங்க.......ஊருலகத்தில நடக்காததா என்ன....?இயற்கையின் நியதியை மாற்றலாம்னு நினைக்கிறீங்களா....என்னைப் பார்த்து யாராவது மலடின்னு சொன்னா..அது உண்மையாய் இருக்குங்களா...?
ரவி.:- ஷீலா டியர்..... ஐ அண்டர்ஸ்டாண்ட் யூ.....! நான் உன்னை எவ்வளவோ எச்சரிக்கை செய்தேன். ‘ இயற்கையின் நியதியை மாத்தலாம்னு நினைக்கிறீங்களான்னு ‘ கேட்டியே..ஷீலா... அந்த இயற்கை என்னைப் பொறுத்தவரை என்னை ஏமாத்திடுச்சே....ஷீலா....உனக்குத் தெரியுமா என் மனசு எப்படி அழுது வடியுதுன்னு...எனக்கு மட்டும் எல்லோரையும்போல் வாழணும்னு ஆசை இல்லையா...குழந்தைச் செல்வம் வேணும்னு விருப்பம் இல்லையா..... .இருக்கு ஷீலா....நிறைய இருக்கு. ..ஆனா....எப்படிச் சொல்லுவேன் ஷீலா......?எதையெல்லாமோ சொல்லி மூடி மறைக்கப் பார்த்தேனே....குழப்பம்தானே மிஞ்சியது........ ஷீலா.....நான் ஒரு ஆண்பிள்ளை....ஆனா...எப்படிச் சொல்லுவேன் ஷீலா......ஷீலா....என் மனசே வெடிச்சிடும் போலிருக்கே......கையாலாகாதவன் கதை அளக்கிறான்னு  என்னை வெறுக்கிறாயா ஷீலா.....?
ஷீலா.:- இப்ப வெறுத்து என்ன பயன்...?
ரவி.:- ஸோ...யூ ஹேட் மீ...?
ஷீலா.:- அதை சொல்லித்தான் தெரியணுமா....?என்ன இருந்தென்ன...? வாழ்க்கையை... அதை ரசிக்க முடியாம செய்த உங்களை.... எல்லாமெ வெறுத்துவிட்டது.....
ரவி.:- குழந்தை இல்லாத ஏக்கம் உன்னை வெகுவா பாதிச்சிடுத்து.என்ன பேசறோம்னே புரியாத அளவுக்கு உன் கண்ணையும் பகுத்தறிவையும் மறைக்குது....
ஷீலா.:- ஷட் அப்.....! குழந்தை இல்லாத ஏக்கமாம்...மண்ணாங்கட்டியாம்....! ஒரு உண்மையான ஆணோடு வாழ்ந்தால் குழந்தை ஏன் பிறக்காது..?ஏன் புருஷன் மனைவி உறவை வெறுக்கற மாதிரி நடந்துகிட்டு இருந்தீங்கன்னு இப்பல்ல..தெரியுது......YOU ARE IMPOTENT…!ஆண்மை இல்லாத உங்களை ஐ ஹேட் யூ....! உங்களை நான் வெறுக்கறேன்...இங்கேயிருந்து போயிடுங்க....கெட் அவே ஃப்ரம் ஹியர்.....ப்ப்ப்ப்ளீ....ஸ்....( மனம் வெடித்து விம்முகிறாள்... நடை தொய்ந்து ரவி தள்ளாடிச் செல்கிறான்.)
-------------------( திரை )----------------------
                                                    ( தொடரும் )                        

  
 

....
 






                    

Tuesday, March 26, 2013

கடவுள்--அறிவா உணர்வா.?


                                 கடவுள் ---அறிவா....உணர்வா.?
                                 ----------------------------------------



ஆண்டவன் திருமுன் நின்று
குறைகள் சொல்லி அழலாம்
என்றே ஆலயம் சென்றேன்.

எங்கும் நிறைந்தவனிடம்
குறைகளைச் சொல்லி அழ
ஆலயங்கள் ஏனைய்யா.?
அபிஷேகங்கள் ஏனைய்யா.?
கோலங்கொடிகள் ஏனைய்யா.?
கொட்டு முழக்கம் ஏனைய்யா.?
பாலும் ப்ழமும் வைத்து நிதம்
பணிந்து நிற்பதேனைய்யா ?
சீலம் பேணும் உள்ளத்தை
தெய்வம் தேடி வாராதோ.?
எனவே குரல் கொடுத்தது
என்னுள் உறையும் பகுத்தறிவு.


எங்கெங்கும் வியாபித்து நிற்கும்
உருவமென ஒன்றில்லாதது
அதனிடம் வெட்ட வெளியில்
குறைகள் சொல்லப் போனால்
பித்துப் பிடித்தவன் என்பர்
கண்ணால் காணாதது ஆனால்
உண்டென்று எண்ணும் உள்ளம்
முன் நிறுத்தவும் முறையிடவும்
கண்ணன் என்றும் கந்தன் என்றும்
ஆயிரம் நாமங்களுடன் அவரவர்
விரும்பும் வண்ணம் அழைக்கலாம்
குறைகள் கூறி முறையிடலாம்
நம்பினால் என்றும் நலம் பயக்கும்
என்றே உணர்வு சொல்ல வழக்கம்
போல் அறிவும் அதன் பின் செல்ல
அபயமளிக்கும் குமரன் முன் நின்றேன்
குறைகள் சொல்லப் படும்போதே
பதில்களும் அகக்கண்முன்னே
பளீரிட பகிர்கிறேன் பதிவில் நானும்.
வேண்டுதல்களையும்  தீர்வுகளையும்

என் குறைகளை நீக்கக் கேட்டேன்.
என்னால் நீக்கப்படுவதற்கு அல்ல.
அவை உன்னால் களையப் பட
வேண்டியவை என்றான் கந்தன்.

உடல் உபாதைகள் தருகிறதே என்றேன்.
உடலே தற்காலிகமானது தானே என்றான்

பொறுமையினை அருளக் கேட்டேன்
துயரங்களின் உப பொருள் அது.
கற்கப் பட வேண்டுவது என்றான்

மகிழ்ச்சியினைத் தரக்கேட்டேன்
அவரவரைப் பொருத்தது அது என்றான்

வேதனைகளிலிருந்து விடுதலை கேட்டேன்.
தாமரையிலைத் தண்ணீராய் இரு என்றான்

ஆன்ம வளர்ச்சி கேட்டேன். உன்னை
நீயே வளர்த்தினால் பலன் கிடைக்கும் என்றான்.

வாழ்க்கையை விரும்பக் கேட்டேன்.
வாழ்க்கை இருக்கிறது. அனுபவிப்பது
உன் விருப்பம் என்றான்.

அனைவரையும் நேசிக்கஅருளக் கேட்டேன்..
அவன் சத்தமாகச் சிரித்து , வாழ்வின்
ஆதாரப் புள்ளிக்கு வந்து விட்டாய் என்றான். 


சிறிது நேரம் கழிந்தது.
கந்தன் என்ன சொன்னான்?
எங்கும் நிறைந்தவன் என்னிலும்தானே
நானும் அவனே அவனும் நானே
இந்தப் பதில்கள் என்னுள்ளே
இருந்ததுதானே. என்னை நானே
அறிய அவன் ஒரு கருவியோ?     

   
 

 
 

Monday, March 25, 2013

மன சாட்சி ( நாடகம்.)-5





                                      மன சாட்சி ( நாடகம்.)
            --------------------

காட்சி- 6.    இடம்.:- ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:-ஷீலா, ரவி, கனகசபை, நவகோடி, சபாபதி, வேலைக்காரன்.
(திரை உயரும்போது, ரவி சோர்வுடன் வீடு திரும்புகிறான். அங்கிருந்த சோஃபாவில் சாய்கிறான். அப்போது அங்கு உற்சாகமாக ஷீலா வருகிறாள். )


ஷீலா.:- அட.... அத்தான்..இன்னிக்கி சீக்கிரமாவே வந்திட்டீங்களே. நான் க்ளப்புக்குப் போயிருந்தேன். என் ஃப்ரென்ட்ஸுக்கு எல்லாம் எம்மேல ஒரே பொறாமை. பிடிச்சாலும் பிடிச்சே சரியான புளியங்கொம்பாப் பிடிச்சிருக்கேன்னுஎல்லோரும் சொல்றாங்க. அவங்க அப்படிப்பேசும்போது  எவ்வளவு பெருமையா இருக்கு எனக்கு..ஆனா அவர்கள் உங்க அழகைப் புகழும்போது எனக்குக் கோபம் வருது. என் கணவரைப் பற்றிப் பேச ................என்ன அத்தான்.. நான் பாட்டுக்கு என்னவோ பேசிட்டுப் போறேன். நீங்க என்னடான்னா சுரத்தே இல்லாம இருக்கீங்களே......உடம்புக்கு ஒண்ணும் இல்லியே... ( அவன் நெற்றியில் கை வைத்துப் பார்க்கிறாள். அவன் சற்றே ஒதுங்குகிறான்.)தலைவலியா......? கணபதி...கணபதீ.....ஐயாவுக்கு சூடா காஃபி கொண்டுவா... அப்படியே  வரும்போது அமிர்தாஞ்சனமும் கொண்டு வா. ..காஃபி சாப்பிடுங்க... தைலம் தடவிநெற்றியை நீவி விடறேன். தலைவலி சிட்டாப் பறந்துபோகும். ( வேலையாள் காஃபியும் தைலமும் கொண்டு வருகிறான். ரவி காஃபியை எடுத்து நிதானமாகப் பருகுகிறான். ஷீலா தைலம் தடவ வருகிறாள். அவளை விலக்கி )
ரவி.:- என்ன ஷீலா இது.... என்னைத் தொந்தரவு செய்யாம கொஞ்சம் ஃப்ரீயா இருக்கவிடு.
ஷீலா.:- நல்லாச் சொன்னீங்க.....தலைவலிக்குத் தைலம் தடவறது தொந்தரவா....?( பிடிவாதமாகத் தேய்க்கிறாள்.)

ரவி.:- நீ இப்படி எங்கிட்ட அதீதமா அன்பு காட்டறது எனக்கு சஞ்சலமா இருக்கு தெரியுமா.?சொன்னாலும் தெரிய மாட்டேங்குது...ஹூம்......!
ஷீலா.:- ஊருலகம் தெரியாம செஞ்சுகிட்ட கல்யாணம் குற்ற உணர்ச்சியா மாறி மனசைக் குத்துதா.....இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்குங்க எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.நானும்தான் பார்த்துண்டே வரேன்...கலியாணம் ஆகிறதுக்கு முந்தி இருந்த களை இப்ப வரவரக் குறைஞ்சிட்டே வருது. ஏண்டா இவளைக் கல்யாணம் பண்ணிட்டோமேன்னு இருக்கா.......?
ரவி.:- ஆமா.....ஹாங்.... இல்லை..... வந்து.....என்ன ஷீலா இது. எப்படிப் பேசினா எனக்கு மனக் கஷ்டமா இருக்குமோ அப்படியே பேசறியே..
...
ஷீலா.:- நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேங்க. உங்களுக்கு முக்கியமா வேண்டியது ஒரு சேஞ்ஜ்....ஆமா....ஒரு மூணு மாசம் லீவு எடுத்துண்டு ஒரு டூர். இங்கிலாந்து, அமெரிக்கா ....இப்படி ஒரு ஹனிமூன் ட்ரிப்......!ஏங்க... நம்ப கல்யாணம் ஆனப்போ கூட கொஞ்ச நாள் லீவு எடுத்துண்டு ஜாலியா இருக்கணும்னா.....லீவு கிடைக்கலை, வேலை ஜாஸ்தின்னும் சொன்னீங்க. இப்ப  why not make a honeymoon trip…..?
ரவி.:- என்னது..... ஹனிமூனா....ஷீலா கொஞ்ச நாளைக்காவது ........ஓ...ஓ...ஓ....
( கனகசபை ,நவகோடி, சபாபதி வருகிறார்கள் ரவி வெளியேறுகிறான். )
சபாபதி.:- ( முணுமுணுக்கிறான்.)நாம எப்ப வந்தாலும் இந்த ஆள் இங்கேயே இருக்கானே.....காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டுப் போயிடுவானோ..?

கனகசபை.:- துப்புகெட்ட பய மகனே....பார்ரா... பார். நவகோடி நம்ம கணக்கு எல்லாம் தப்பாயிடுமோன்னு மனசு அடிச்சுக்கிதையா.
...
நவகோடி.:- என்னைக்குமே தப்புக் கணக்குப் போடறதுதானே உன் வழக்கம்.
( அறையின் ஓரத்தில் கண்ணாடியின் முன் முகப் பூச்சை சரி பார்த்துக்கொண்டு இருக்கிறாள் ஷீலா. அவளைக் கண்ட சபாபதி அருகில் போய்.)
சபாபதி.:-ஆஹா... ஆஹா... ஷீலா இன்னிக்கி நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா...அப்பாவும் நவகோடிசாரும் வந்திட்டிருக்காங்க.அதுக்குள்ள உன் அழகை உயிரெழுத்து ‘அல தொடங்கி ல முடியற மாதிரி ஒரு சின்னக் கவிதை எழுதி இருக்கேன். கேளே.ன்
அன்ன நடையழகி
ஆடிவந்தென் முன் நின்று
இன்பம் சேர்த்திடவே
ஈட்டியாம் கருவிழியால்
உள்ளங் கவர்ந்திடவே
ஊன்றி என்னை நோக்கி நின்றாள்.
என்னையே மறந்து விட்டேன்.
ஏந்திழையின் எழிலினிலே
ஐயம் தீர்ந்திடவே
ஒரு வார்த்தை அத்தானென்று
ஓதினால் போதுமடி.
ஔவை கண்ட பெண்ணே....! 

ஷீலா.:- என்ன இது...?ரொம்பத்தான் ஓவராயிருக்கு....!
சபாபதி.:-உன்னழகுதானே........
ஷீலா.:- என் அழகை எடுத்துக்காட்ட எவ்வளவு கண்ணாடிகள் இருக்கு தெரியுமா.......இருக்கிற அழகை உள்ளபடி காட்டும். கூட்டவோ குறைக்கவோ செய்யாது.
சபாபதி.:- உன் கன்னமே ஒரு கண்ணாடி.அதில் தெரியற என் முகமும் அழகாத்தான் இருக்கு. ....ஆனா... அதுல பாரு ஷீலா....எங்க வீட்லயும் ஒரு கண்ணாடி இருக்கு. அதுல என்ன கோளாறோ தெரியல. பார்த்தா பூதம் மாதிரி தெரியுது..ரசம் பூசினவன் கைராசி அப்படி....! ஹும்... நாம் என்ன செய்ய முடியும்...?
ஷீலா.:-சேச்சே....உன் முகராசி அப்படி. ( கனகசபை நவகோடி வருகை.)
கனகசபை.:- ( வந்துகொண்டே.)அவங்கம்மா கூட அப்படித்தான் சொல்லுது. சபாபதி முகராசிக்கு  ஷீலா என்ன யார் வேணும்னாலும் எங்க வீட்டுக்கு மருமகளா வரும்னு....இல்லே நவகோடி...?
நவகோடி.:- ஹாங்...... ஆமா  ஆமா..

ஷீலா.:-  அப்படீன்னா.... உனக்குக் கல்யாணம் ஆனாத்தான் சொத்துன்னு நீங்க ஏன் சொன்னீங்கன்னு இப்ப இல்ல தெரியுது.. சபாபதிக்கு என்னைக் கல்யாணம் செய்து கொடுத்திட்டா சொத்து பூராவும் உங்களுக்குத் தானே.
....
சபாபதி.:- அப்படியேதான்.......அப்படியேதான்.... எப்படி ஐடியா...?
ஷீலா.:- நவகோடி சார்.. இதுல உங்களுக்கு எவ்வளவு கமிஷன்....?
நவகோடி.:- என்னம்மா.... என்னம்மா இது...
.
ஷீலா.:- இது மட்டும் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.....
சபாபதி.:-இப்ப வந்திட்டுப் போனானே அவனை முன்னாடியே ;கட்  பண்ணி இருப்பெ இல்லெ. அதனால என்ன இப்ப.... மனுஷன் சொன்னா சொன்னபடி நடக்கிறதுக்கு பாண்டா..... பத்திரமா.... ப்ராமிசரி நோட்டா   என்ன இருக்கு....?
ஷீலா.:- நோ...நோ... நோ..........பாண்டும் இல்ல பத்திரமும் இல்லெ ப்ராமிசரி நோட்டும் இல்லே..... வெறும்  மேரேஜ் சர்டிஃபிகேட்டுதான்.
..
மூவரும்.:- என்னது.....?
ஷீலா.- எனக்கும் மிஸ்டர் ரவிக்கும் கலியாணம் ஆனதைக் காட்டும் மேரேஜ் சர்டிஃபிகேட்டுதான்....நல்லாப் பாருங்க......பார்த்தீங்க இல்லே....இனிமேயாவது என் சொத்தை என் கிட்ட ஒப்படைக்கிறதுக்கான ஏற்பாட்டைச் செய்யுங்க.
.....
சபாபதி.:- ஆஹா... ..! அந்த வில்லன் மட்டும் இப்ப இல்லாம போயிட்டானே.
 ஷீலா.:-இருந்தா மட்டும் அவரை என்ன செய்வியாம்....?
சபாபதி.:-என்ன செய்வேனா....? ஆமா நான் என்ன செய்யணும்.....! ஆஆ... ஊம்.....! நான் ஒரு சீர்திருத்தவாதி. முதல்ல உன்னை விதவை ஆக்கிட்டு பிறகு விதவா விவாஹம் செய்துப்பேன்....என்ன நவகோடிசார்.  பயப்படாதீங்க....உங்க மக நவநீதத்தைக் கைவிட மாட்டேன்

கனகசபை.:-அடச்சட்.....! கொஞ்சம் சும்மா இருடா...ஏதோ இவ சொத்தை நாம கபளீகரம் செய்ய இருந்த மாதிரியும் ஏதோ இவளை ஒண்ணுமே தெரியாத பப்பான்னு நெனக்கிறமாதிரியும் இல்ல பேசறா.
சபாபதி.:- அதுல என்னப்பா தப்பு. அதானே நம்ம ஒரிஜினல் ப்ளான்.
 ....
நவகோடி.:- நீ சும்மா இருய்யா.... இந்தாம்மா.... இந்த சொத்தை இவ்வளவு நாள் பொறுப்பா இருந்து கட்டிக் காத்ததுக்கு எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.......
ஷீலா.:- பின்ன என்னங்க.....நான் மேஜராயிட்டேன். என் சொத்தை ஒப்படைக்க வேண்டியதுதானே....கல்யாணம் ஆகணும்னு சொன்னீங்க ...ஆனதற்கு அத்தாட்சியும் காட்டியாச்சு. .இன்னும் உயிலக் கண்ணுல காட்டினது கூடக் கிடையாது
கனகசபை.:- காட்டாம என்ன பூட்டியா வெச்சுக்கப் போறோம்.....இதொ படிக்கிறேன் கேளு.பதினெட்டு வயதுக்குப்பின் ஷீலாதிருமணம் செய்து கொண்டு,கணவனுடன் குடித்தனம் நடத்திஒரு குழந்தையையும் பெற்றுக் கொண்ட பிறகு சொத்தை சுயாதீனம் செய்து கொள்ள வேண்டியது.ஒப்பம் சண்முக சுந்தரம்.
 ...
சபாபதி.:- உங்க அப்பா.
....
ஷீலா.:- என்னது..?  கல்யாணம் செய்து கொண்டு ,குடித்தனம் நடத்திகுழந்தையும் பெற்றுக் கொண்ட பிறகுதான் சொத்தை சுயாதீனம் செய்ய முடியும்னா சொல்றீங்க.....!
நவகோடி.:- நாங்களா சொன்னோம்......உயில்ல இருக்கே..
..
சபாபதி..:- அதானே... இவங்களா சொன்னாங்க.... உங்கப்பா எழுதி வெச்ச உயில் பேசுதம்மா......உயில் பேசுது....!
கனகசபை.:- எங்களுக்கு ஏன் வீண் பொல்லாப்பெல்லாம். அவர் உசிரை விடும்போ எழுதின உயில் இப்ப எங்க உசிரை இல்ல வாங்குது......யாரிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டே அதே மாதிரி யாருட்டயும் சொல்லாம ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டு வந்துசொத்தைக் கேள்.... ஒப்படைக்கிறோம். வாய்யா.. போகலாம்...( போகிறார்கள். அவர்கள் போனதும் ஷீலா பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருக்கிறாள். நேரம் செல்கிறதுவெயில் மறைந்து மாலை மயங்கி இரவு நேரமாகிறது. ரவி. திரும்பி வருகிறான். ஏதும் பேசாமல் ஷூவைக் கழற்றுகிறான். .ஷீலா ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவள் ரவியின் அருகே சென்று)
ஷீலா.:-அத்தான்.....!சரியான சிவ பூஜையில் கரடி நுழைந்தமாதிரிஎன்னவோ நாம பேசிட்டு இருந்தப்போ வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டுப் போயிட்டாங்க. கோபமா.....அத்தான்.....வந்து...நமக்குத் திருமணமான சமாச்சாரத்தை அவங்ககிட்ட சொன்னேன். சொத்தெல்லாம் கிடைகக ஏற்பாடு செய்யுங்கன்னு கேட்டா இன்னுமொரு கண்டிஷன் இருக்குங்கறாங்க. ....!அத்தான்.... எனக்கு.....வந்து..... நமக்கு ஒரு குழந்தை வேண்டாமா.....அத்தான்...
ரவி.:-( திடுக்கிட்டு ) குழந்தையா.... எதுக்கு.....?
ஷீலா.:- என்னத்தான் இது....?எதுக்கு குழந்தைன்னா.....குழந்தை பிறந்த பிறகுதான் சொத்துன்னு உயில்ல வேற எழுதி இருக்காம். ....
ரவி.:-( கோபமாக ,ஆத்திரத்துடன் )ஷீலா.......கலியாணமாறதுக்கு முந்தியே நான் கலியாணங்கறதுஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தர் மேல் ஒருத்தர் பிரியமா இருக்காங்க  என்கிறதை உலகத்துக்குக் காட்ட மட்டும்தான்னு சொல்லி யிருக்கேன். இல்லையா...?உடற்பசியைத் தணிக்கிறதுக்கு ஊருலகம் வழங்கும் லைசென்ஸ் என்னும் முறையில் இருக்கக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா...?இப்பவும் சொல்றேன் ஷீலா கேட்டுக்க. ...உனக்குக் குழந்தை வேணுங்கறதுக்காகவோ  சொத்து கிடைக்கணுங்கறதுக்காகவோநான் என் கொள்கையிலிருந்து மாறுபட விரும்பலை. மனுஷனை மிருகமாக்கும் வெறி உணர்ச்சியைத் தூண்டற உடலுறவை நான் வெறுக்கிறேன். I HATE IT…I HATE IT….( ஷீலா விம்முகிறாள்.)
                                ( திரை )                 ( தொடரும் )  . . .    
 

.
 
 
 
 

Saturday, March 23, 2013

சரித்திர மர்மங்களா...! தற்செயல் நிகழ்வுகளா


                                     மர்ம சரித்திரம்.
                                     ----------------------

( இப்பியும் ற்செயல் நிகழ்வுகில் ஒற்றுமைகா..? பித்ைப் பிர்கிறேன். நங்கும் ரியங்கள்.! )

ஆபிராம் லிங்கன் அமெரிக்காவின்  மந்த முன்னள் ஜிபி. ( அான் ெரியுமே.)
ான் ஃபிட்ஜெரால்ட் கென்னெடியும் அமெரிக்காவின் மந்துன்னாள் ஜிபி (ுவும்  ெரியும )

ஆபிராம் லிங்கன் அமெரிக்கக் கங்கிருக்கத்  ேர்வானு  1846-ம் ஆண்டு. ( ெரியுமா.? ஓ...அப்பியா.?)

ான் கென்னெடி அமெரிக்கக் கங்கிருக்கத் ேர்வானு  1946-ம் ஆண்டு. ( ியாக 100-/ ஆண்டுகுக்குப் பிறு. )
 
அமெரிக்க ிபியாக ஆபிராம் லிங்கன் பொறுப்பேற்றுக்கொண்ட 1860-ம் ஆண்டு. ( ஓ.....)

அமெரிக்கிபியாகான் கென்னெடி பொறுப்பேற்றுக் கொண்டு 1960-/ ஆண்டு. (அட..! இுவும் நூறஆண்டுகுக்குப் பிறு ,,!)

ந்த இரு ஜிபிகின் மைவியும் வெள்ளை மாளிகையில் விக்கும் பு அவர்களது ுழந்தைகை இழந்தர். (ிலும் ஒற்றுமையா.?)

இரண்டு ஜிபிகும் வெள்ளிக்கிழையில்  ையில் சுடப்பட்டு இறந்தர். ( அட.... ஆமா.... ஆமா... இல்ல.!)

( இனி கூறப் போகும் செய்ிகள் இன்னும் விசானு. )

ிங்கின் காரியிசியின் பெயர் கென்னெடி
ென்னெடியின் காரியிசியின் பெயர் லிங்கன். 

இருவும் ென் மாவட்டக் காரர்கால் கொல்லப் பட்டர். 
இருவுக்கம்  பிறான்ஸன்  என்றெயர் கொண்ட ென் மாநிலத்ே ஜிபி பிக்கு வந்தர். 
ண்ட்ரூ ஜான்சன் பிறந்துடம் 1808.
ிண்டன் ஜான்சன் பிறந்துடம் 1908.

ANDREW JOHNSON
LYNDON JOHNSON
ஜான் வில்க்ஸ் பூத், லிங்கனைக் கொன்றவன் பிறந்தது 1839-/ ம் ஆண்டு.
லீ ஹார்வி ஒஸ்வால்ட், கென்னெடியைக் கொன்றவன் பிறந்தது 1939-/ம் ஆண்டு.
                                                                                                                                                                         
JOHN WILKES BOOTH
LEE HARVEY OSWALD
  இரு கொலைகாரர்களும் அவர்களது மூன்று பெயர்களால் அறியப்பட்டனர். ஒவ்வொருவரது பெயரும் 15-/ எழுத்துக்களால் ஆனது. ( இப்போது இருக்கையின் நுனிக்கு வாருங்கள்.)லிங்கன் FORD எனும் தியேட்டரில் சுடப்பட்டார். கென்னெடி FORD நிறுவனத்தார் தயாரிக்கும் LINCOLN எனும் காரில் சுடப்பட்டார்.  லிங்கனைச் சுட்டவன் தியேட்டரில் சுட்டு warehouse ஒன்றில் ஒளிந்து கொண்டான். கென்னெடியைச் சுட்டவன் warehouse-ல் இருந்து சுட்டு தியேட்டரில் ஒளிந்து கொண்டான்.
பூத்தும் ஓஸ்வால்டும் விசாரணைக்கு முன்பே கொல்லப் பட்டனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக லிங்கன் சுடப்படும் ஒரு வாரத்துக்கு முன்பாக , MONROE ,MARYLAND-ல் இருந்தார். கென்னெடி சுடப்படும் ஒரு வாரத்துக்கு முன்பாக MARYLIN MONROE உடன் இருந்தார். 

O
MARILIN MONROE
இது  யாருடைய சிந்தனையில் உதித்ததோ.? INCREDIBLE. !
 ஒரு 20 டாலர் புது நோட்டை சரிபாதியாக மடிக்கவும்
கீழ் கண்டவாறு மறுபடியும் மடிக்கவும்

 மறு முனையை முன்பு செய்தது போலவே மடிக்கவும்.




இதை அப்படியே திருப்புங்கள்.





WHAT A COINCIDENCE....! A SIMPLE GEOMETRIC FOLD CREATES A CATASTROPHIC PREMONITION PRINTED ON ALL 20 DOLLAR BILLS .தற்செயலா...? முடிவு செய்யுங்கள். இது போதாதென்று நீங்கள் கண்டது.முதலில்
PENTAGON  ON FIRE.! THEN THE TWIN TOWERS.


 .                                                                        

இப்போது இதைப் பாருங்கள்.

                       
   மூன்று தற்செயல் நிகழ்வுகள் ஒரு 20 டாலர் நோட்டில் !!! (கொசுராக..9+11=20)