Saturday, April 30, 2022
ஆண் பெண் ஒரு ஒப்பீடு
Thursday, April 28, 2022
ராவணனுக்கு எத்தனைதலைகள்
ராவணனுக்கு
எத்தனை தலைகள் பத்துஎன்பது நாம்கேட்டறிந்தது ஒரு முறை சிதம்பரத்துக்கு திருமஞ்சனத்துக்கு
வந்திருந்தபோது இரவு உற்சவர்களை எல்லாம் வீதி உலா எடுத்துச் செல்வதைக் கண்டேன்.
அதில் ஒன்று .கைலாச பர்வதம் என்று சொன்னதாக நினைவு. அதில் ராவணன் கைலாயத்தை தூக்க
இருப்பதுபோலவும் அதன் மேல் உற்சவரை வீதி உலா கொண்டு சென்றார்கள். ராவணனுக்கு
ஒன்பது தலைகளே இருந்தது.. அப்போது அந்த நேரத்தில் சந்தேகம் கேட்கக் கூடாது என்று
எண்ணி வாளாயிருந்து விட்டேன். இந்த முறை அது பற்றி எங்கள் தீட்சிதரைக் கேட்டேன்.
ஒரு வேளை நாந்தான் தவறுதலாக ஒன்பது தலைகள் என்று எண்ணினேனோ என்று கேட்டேன். அவர்
ஒன்பது தலைகள் சரியே என்றும் ராவணனின் யாழை பத்தாவது தலையாகக் கருதுவது ஐதீகம்
என்றும் சொன்னார்.
இது சரியா. ? யாராவது
தெளிவிக்கலாமே
மறைந்த திருகந்தசாமி ஐயா ஒரு விளக்கம்தந்தார்
ராவணனுக்கு வேண்டிய வரங்கள் கொடுத்தது சிவபெருமான்தான். அதனால் ராவணனுக்கு கர்வம் தலைக்கேறி சிவனையே அசைத்துப் பார்க்கத் துணிந்தான். கைலாச பர்வதத்தைத் தன் இரு கைகளினால் தூக்க முயற்சிக்கு கைலாச பர்வதம் ஆடிற்று. பயந்து போன பார்வதி சிவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
சிவன் தன் கால் பெருவிரலால் மலையை அழுத்த ராவணன் கைகளுடன் மலையின் அடியில் சிக்கிக்கொண்டான். சிவன் சாமகானப்பிரியன். ராவணன் கானவல்லுனன். தன் தலைகளில் ஒன்றைப் பிய்த்து தன் கை நரம்புகளைச் சேர்த்து ஒரு யாழ் செய்து அதனுடன் சேர்ந்து இசைக்க, சிவன் அந்த கானத்தில் மயங்கி தன் கால் பெருவிரலை சற்றே தளர்த்த கானத்தில் மயங்கி தன் கால் பெருவிரலை சற்றே தளர்த்த ராவணன் தப்பித்து ஓடி வந்து விட்டான்.
இந்தக்கதை மிகவும் பிரபலமானது.
ஒருஎண்ணம்பலவற்றுக்கு இட்டுச் செல்கிறது
கும்பகோணத்திலிருந்து முதலில், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம்
பூஜை, பிறகு அங்கிருந்து சிதம்பரம். இரண்டு கோயில்களிலும் அவரவர் நட்சத்திரத்தன்று
மாதமொரு முறை பூஜை செய்த பிரசாதம் பெறுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாங்கள்
வருவதை எங்களுக்காக பூஜை செய்யும் குருக்களுக்கு முன்பே தொலை பேசியில் தெரிவித்து
விடுவோம். இந்த முறை உறவினர்கள் பலரும் அவர்களுக்காக பூஜை செய்து பிரசாதம் கொண்டு
வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிடுவதும்
நீரில் வெல்லம் கரைப்பதும் வேண்டுவார்கள். இப்போதெல்லாம் குளத்தில் வெல்லம் கரைக்க
அனுமதிப்பதில்லை. அதற்கான இடத்தில் வைத்து விட வேண்டும். அன்னை தையல்நாயகி.
குழந்தை முத்துக்குமாரசாமி, அங்காரகன் மற்றுமுள்ள தெய்வங்கள். நவகிரக தலத்தில்
அங்காரகனுக்கான க்ஷேத்திரம் இது .
Sunday, April 24, 2022
சில பகிர்வுகள்
Wednesday, April 20, 2022
முருகா எனக்குஉன்னை பிடிக்கும்
முருகா, எனக்கு உன்னைப் பிடிக்கும்.....
என் தாயும் பார்வதி
நானும் பாலசுப்பிரமணியம்.
புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை
கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..
பிரணவத்தின் பொருள் அறியா
பிரம்மனின் ஆணவம் அடக்க
அவனை நீ சிறை வைத்தாய்.
உனக்குத் தெரியுமா, கற்பிப்பாயா
என்றுன் அப்பன் உனைக்கேட்க
பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
கதை எனக்குப் பிடிக்கும்.
அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.
புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டி, அவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.
நாவல் பழம் கொண்டு,
அவ்வைக் கிழவியின் தமிழ்
ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
தமிழைக் குத்தகை எடுத்து
கொள்முதல் செயவதாய்க் கருதும்
சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.
தேவசேனாதிபதி உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.
ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
எனக்கு காதலும் பிடிக்கும்.
அசை சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
=========================================
Tuesday, April 19, 2022
இன்னுமொரு வித்தாசமான சிந்தனை
முருகா ....நீ அப்பாவியா.?
--------------------------------
Monday, April 18, 2022
வித்தி யாசமாய் முயற்சி
ஆரம்பகால என்எழுத்தின்முயற்சிகள்வித்தியாசமானதாக இருந்தது
----------------------------------------------------------
முதமுதல் வரியில் மட்டும் இன்னும் சற்று கவனம் தேவை என எண்எண்ணுகிறேன்.
1 முஒன்று முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்இற்ங்குவதுமாக அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போபற்றிப் பாடும் அற்புதப் பாடல்.
ஒவ்ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து அடுஅந்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.
1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321
என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.
அதஅதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!
பின்பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயபெயர்.
ஒன்ஒன்று என முதலில் தொடங்கியபின், மீண்டும் ஒன்று, இரண்டு, ஒன்று என வந்திருக்க வேண்டும். அதாவது ,..
ஒருஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை. என்னும் வரியில்,
ஒருஒருவராய்ப் பிறந்து ஒருவரை மணந்து ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை என வந்திருந்தால் இன்னும் சிறக்கும்.
இஇஇதையொட்டி, மற்ற வரிகளையும் கவனியுங்கள். அடுத்த முயற்சி இன்இன்னும் சிறப்பாக அமையும்.
அஅஅதேபோல, ஒருசில வார்த்தைகளிலேயே ஒரு எண்ணுக்கான பொபொருளை விவரிக்க முயன்றால், இன்னும் அழகு கூடும்.
வாஆவாழ்த்துகள்.
Thursday, April 14, 2022
தூசு தட்டி
வலை நண்பர் ஏகாந்தன் என் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் என் பதிவுகள் சிலவற்றை பார்த்து அவற்றின் வீச்சு தற்போதைய பதிவுக்ளில் காணோம்என் றார் அது இன்று மேலு ம் வலுக்கவே சில பழைய பதிவுகளை தூ சு தட்டி இடுகிரேன்
OLD IS GOLD.......தூசி தட்டி.....
--------------------------------------
நாடும் அன்பு நானோ
என் கண்ணின் மணி நீயே --உந்தன்
கருத்தின் ஒளியும் நானோ
நற்பண்ணின் சுவை நீயே ---உன்
பாவின் நயமும் நானோ
என் எண்ணின் பொருள் நீயே
உன் எண்ணம் சொல்லாதது ஏனோ !
பிணைந்திழையோட இழையோட
கன்னக்குழியில் வண்ணக்குமிழ் கொப்பளிக்க
பைந்தமிழ் மொழிபேசி மொழிபேசி
மின்னலிடையில் மனந்திளைத்த எனைப்
புன்னகை ஒளிவீசி ஒளிவீசி
காதல் பண்பாடி பண்பாடி |
கொஞ்சும் விழிகள் வேல்போல் தாக்க
எஞ்சிய உறுதியும் காற்றில் பறக்க
தஞ்சமேனப்புகு என மனமும் நினைக்க
மிஞ்சியதென்னில் அவள் திருஉருவம் |
அன்ன நடையழகி ஆடிஎன்முன் நிற்க
பின்னிய கருங்குழல் அவள் முன்னாட
என்ன நினைததனோ அறியேன் அறிவேன்
பின்னர் நிகழ்ந்தது அதனைக் கூறுவன் கேளீர் |
இருமன மொன்றாய் இணைய _அதனால்
இறுகிப் பதித்த இதழ்கள் கரும்பினுமினிக்க
இன்சுவை உணர ஊறி கிடந்தேன்
இறுதியில் உணர்ந்தேன் கனவெனக் கண்டது
காரிகையே அழைக்கின்றேன் ; அன்புக்
கயிற்றால் பிணைக்கின்றேன்; கண்ணே
கட்டும் பிணைப்பும் பிரியாது உறுதி |
நிலந்திருத்தி விதைக்கும் விதை கிளர்ந்தெழு மரமாகி கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.---மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில் உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை ---- பயண சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறி சேருமிடம் சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப பெற்றெடுத்த பிள்ளை பிற்காலத்தில் நம்மைப் பேணுவான் என்பது நம்பிக்கை ---- நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர் பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை. நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி தந்தை என்றறியப்படுவதே தலையாய நம்பிக்கை.
-----------------
பிறப்பொக்கும் உயிர்க்கு, வாய் கிழியக் கூறுகிறோம்
ஏனிந்த ஏற்றத்தாழ்வு என்றறிவோமா..?
என்ன பிழை செய்தான் ஏழையாய்ப் பிறந்தவன் ,
ஏனில்லை வாழ்வு, வாய்ப்பு , உரிமையில் சமத்துவம் .?
இருப்பவன் வளமுடன் உயர்கிறான் ,
அற்றவன் என்றும் அடியில் தேய்கிறான் .
மேலே செல்வது கீழே வரும், புவி ஈர்ப்பின் நியதி.
கீழே உள்ளது மேலே செல்ல யாரென்ன செய்ய.?
காலச் சக்கரச் சுழற்சியில் தானே நடக்கும் . --நம்புவோமா ..!
------------------------
கலாநேசன் பதிவில் அழைப்பொன்று ,
கவிதைப் போட்டி காட்டுங்கள் திறனென்று,
நான் ஏன் பிறந்தேன்,
மூன்று வார்த்தைகள் மூன்று வரிகளில்
வருதல் வேண்டும், அதுவே விதி.
சிறுவயது முதலே என் தேடலின் வரிகள்;
நானும் எழுதினேன்
"நான் நானாக இருக்கையில்
நீ மட்டும் வேறாக
பிறந்தேன் (பிறந்து ஏன் ) பழி தீர்க்கிறாய் "
"நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும்
நான் படும் பாட்டை பகிரவே
வந்து விழுந்த வரிகள்
நாமெங்கு பிறந்தோம் , நம் வரவே
ஒரு விபத்தின் விளைவன்றோ ?
(பார்க்க என் பிறிதொரு பதிவை)
நிலையிலா வாழ்வில் நான் எங்குள்ளேன்.?
என் எண்ணில் "நான்" போனால்
நலம் பல விளையலாம்.
நன்கு பழகிய நண்பரொருவர்
நலமெலாம் விசாரித்து பிரிய மனமின்றி
பிரியா விடை பெற்றுச் சென்றார்.
மறுநாள் காலை வந்தது சேதி ,
தூங்கச் சென்றவர் துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர் இன்றில்லை
நிலையிலா வாழ்வில் என்றுமவர் இனி
வெறும் நினைவாகவே திகழ்வார்.
பெயர் ஒன்று கொண்டு புவியில் திரிந்தவர்
போகையிலே வெறும் பிணமே வெறும் சவமே
கையில் கடிகாரம் கட்டினால்
காலத்தை வென்றவர் ஆவோமா ?
பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை
இன்றிப்போது காண்பதே இறுதிக் காட்சியாகலாம் .
இருக்கையில் வேண்டுமா காழ்ப்பும் கசப்பும்.?
ஏனென்று கேள்வி கேள்
உன்னை நீ அறியலாம்,
உரைத்தவன் சாக்ரடீஸ்
உண்மை உணர்வதே
வாழ்வின் நோக்கம்,
கூறினான் காந்தி.
அயலவனை நேசி
உன்னிலும் மேலாக
என்றவன் ஏசு.
உண்மையும் நேசமும் ஒன்றாக இணைந்தால்
பிறந்த காரணம் புரியலாம் ஒருவேளை .