விஸ்ணு சஹஸ்ரநாமம்
---------------------------------
இந்த மாதம் பதினேழாம் தேதி ஞாயிற்றுக் கிழமை என் மனைவியுடன் வயாலிக்காவல் வெங்கடேச பெருமாள் கோவில்கல்யாண மண்டபத்தில் விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலிகள் ஒருங்கிணைத்து நடத்திய நக்ஷத்திர பாராயணத்துக்கு சென்றிருந்தேன். அதாவது நக்ஷத்திரத்துக்கு ஒரு முறை வீதம் 27 நக்ஷத்திரங்களுக்கும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது பெங்களூருவில் 250-க்கும் மேற்பட்ட மண்டலிகள் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இம்மாதிரி அகில இந்தியாவிலும் ஆயிரக் கணக்கான மண்டலிகள் இருப்பதாகவும் இதையே ஒரு க்ளோபல் இயக்கமாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கூறினார்கள். ஒரு முறை பாராயணம் செய்ய சுமார் இருபது நிமிடங்கள் என்று கணக்கிட்டாலேயே 27 முறை பாராயணம் செய்ய ஒன்பது மணிநேரத்துக்கும் மேல் ஆகிறது. காலை எட்டுமணி சுமாருக்குத் துவங்கிய பாராயணம் மாலை ஐந்து மணிவரைத் தொடரலாம். அன்று நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்வருபவர்கள் வீட்டில் இருப்போரின் நக்ஷத்திரங்களுக்குப் பாராயணம் முடியும் வரை இருக்கின்றனர். வந்த அனைவருக்கும் காலை டிஃபன் மதிய உணவு எல்லாம் இலவசமாகக் கொடுக்கப் பட்டது
எந்த நேரத்திலும் அகில உலகில் 24 மணிநேரமும் எங்காவது இந்தப் பாராயணம் நடக்குமாறு செய்ய வேண்டும் என்பதே குறி என்றனர்
இனி விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய சில செய்திகள் தமிழ் விக்கிப் பீடியாவிலிருந்து
இது சத்வகுணம் நிறைந்த பீஷ்மரால் சத்வகுணம் நிறைந்த யுதிஷ்டிரருக்கு போதிக்கப்பட்ட சத்வ வழிபாட்டுக்குகந்த தோத்திரம். உலகத்தில் தர்மத்தைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் பன்னிருவர் என்று பட்டியலிட்டுக் கூறும் பாகவதம் அப்பட்டியலில் பீஷ்மரைச் சேர்த்திருப்பதிலிருந்து பீஷ்மரின் ஆன்மிகப் பெருமை விளங்கும். அதனாலேயே மகாபாரதப் போருக்குப் பின் தர்மத்தின் நெளிவு சுளுவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபொழுது, 'வா, இதை பீஷ்மரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம்' என்று கண்ணன் அவரைஅம்பு படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் அழைத்துச் செல்கிறார்.
யுதிஷ்திரர் பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்கிறார்
- இறைவனைப் பற்றி விளக்கும் எல்லா
நூல்களிலும் கூறப்பட்டுள்ள சிறந்த ஒரே தெய்வம் எது?
- அதை அடைவதற்குரிய மேலான நிலை எது?
- எந்த தெய்வத்தை அவரது
குணச்சிறப்புகளைப் புகழ்ந்து பாடி மானிடர்கள் நலம் எய்துவார்கள்?
- எந்த தெய்வத்தை புறத்தே அல்லது
மனத்தினாலேயோ வழிபட்டு நலமடைய வேண்டும்?
- எல்லா வழிபாட்டு நெறிகளிலும்
சிறந்த நெறியாகத் தங்கள் விருப்பிற்கும் கருத்திற்கும் ஏற்றது எது?
- எதனை ஜபித்து மனிதன் பிறப்புக்
கட்டிலிருந்து விடுபடுகிறான்?
திருமதி M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடியுள்ள விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் புகழ் பெற்றது
பகவத் கீதையைத் தமிழில் படிக்க வாய்ப்பு இல்லாததால்கீதையைப் பற்றிக் கேட்டிருந்தும் அதை முழுவதும் வாசித்திராதவர்களுக்காக கீதையின் 18 அத்தியாயங்களையும் தமிழில் பதிவிட்டேன். அதே போல் விஷ்ணு சஹஸ்ரநாமம் பரவலாகப் பாராயணம் செய்யப் பட்டாலும் அது சம்ஸ்கிருதத்தில் இருப்பதால் பலருக்கும் பொருள் தெரிவதில்லை. தமிழில் இருக்கும் பல இறைவணக்கங்களுக்குமே பொருள் தெரிவதில்லை என்று சொல்லத் தயங்குகிறோம் பின் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் இந்த துதிக்கு பொருள் தெரியாமலேயே பாராயணம் செய்யப் படுகிறது என்று நான் சொன்னால் பலர் நம்பலாம். சிலர் மறுக்கலாம் அன்று நான் அங்கு சென்று கேட்டபோது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. மேலும் தமிழ்மட்டுமே படித்தவர்களுக்கு அந்த சம்ஸ்கிருத உச்சரிப்பு வருவது மிகவும் சிரமம் எனக்கு நான் இதை ஏன் தமிழ் அர்த்தங்களை எழுதக் கூடாது என்று தோன்றியது. எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் அங்கும் இங்கும் தேடி பொருள் கண்டு எழுதலாம்தான் இருந்தாலும் தயக்கமாக இருக்கிறது. அது ஒரு பெரிய ப்ராஜெக்டாக இருக்கும். எனக்கு வேறு எதுவும் செய்ய முடியாது.தயக்கத்துக்கு இன்னோர் காரணம் கீதைக்கு கிடைத்த வரவேற்பும் இதற்குக் கிடைக்காது என்று உள்ளுணர்வு சொல்கிறது. சம்ஸ்கிருத மொழி கற்காததால் அந்த மொழியில் இருக்கும் பல விஷயங்கள் தமிழ் மூலமே கற்க வேண்டி உள்ளது முடிவெடுக்க முடியாமல் தயக்கத்தோடு இருக்கிறேன் . பார்ப்போம்.
முயற்சி செய்து பார்த்தேன் யுதிஷ்திரரின் கேள்விகளும் பீஷ்மப் பிதாமகரின் பதில்களுமாக எழுதிப் பார்த்தேன் எனக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய புரிதல் ஏதுமில்லாததாலும் அங்கு இங்கு என்று ப்ல இடங்களில் இருந்து தேடி எடுத்து பதிவாக்கினேன் . குறைகள் இருந்தால் அதன் முழுப் பொறுப்பும் எனதே. இருந்தாலும் இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது முழு ஈடுபாடும் வருவதில்லை.பெரும்பாலானவர் பாராயணம் செய்தால் போதும் பொருள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவோரே.இந்த ஸ்தோத்திரமே அவனது ஆயிரம் நாமங்கள் கொண்டது. நாமஜபம் செய்வதற்கு மொழி ஒரு தடைக்கல்லே அல்ல என்னும் அபிப்பிராயம் உடையவர்களே
Q.-1 Kim ekam daivatam loke?
கிம் ஏகம் தைவதம்
லோகே
உலகிலேயே ஒரே சிறந்தகடவுள் எனப்படுபவர் யார்
உலகிலேயே ஒரே சிறந்தகடவுள் எனப்படுபவர் யார்
Ans.-Pavitraanaam pavitram yo Mangalaanaam cha mangalam
Daivatam devataanam cha Bhootaanam yo avyayah pitaa.
சாந்நித்தியத்தையே சாந்நித்தியம் செய்பவர் மங்களமே
உருவானவர்.என்றும் நிலைத்திருக்கும் அனைத்துக்கும் பிதா தந்தை
ஒரேகடவுள் விஷ்ணு.
Q.2.- Kim vaapyekam paraayanam?
கிம் வாப்யேகம் பாராயணம்
அனைவருக்கும் போக்கிடம் கதி யார்
Paramam yo mahat-tejah Paramam yo mahat-tapah
Paramam yo mahat-brahma Paramam yah paraayanam.
Paramam yo mahat-brahma Paramam yah paraayanam.
மிகுந்த தேஜஸ் உடையவன் அனைத்தையும் கட்டுக்குள்
வைத்திருப்பவன் உண்மையின் ஒளிவீசும் பிரஹ்மம், அடைய வேண்டிய ஒரே இலக்கு-விஷ்ணு.
Q.3- . Stuvantam kam
praapnuyuh (Maanavah subham)?
ஸ்துவந்தம் கம் ப்ராப்னியுஹ்( மானவ சுபம்
யார் புகழ் பாடினால் மானிடர் நலம் பெறுவார்கள்
Ans.
Jagat-prabhum deva-devam Anantam purushottamam
Stuvan naama-sahasrena Purushah satatotthitah.
Jagat-prabhum deva-devam Anantam purushottamam
Stuvan naama-sahasrena Purushah satatotthitah.
எல்லோரது
நலனுக்கும் எல்லாம் செய்யும் இந்த பிரபஞ்சத்தின் தலைவன் ஸ்ரீமஹா விஷ்ணு
Q.4 -Kam
archantah) praapnuyuh Maanavaah subham?
கமர் சந்த ப்ராப்னியூ மானவ சுபம்
எந்த தெய்வத்தை அகத்திலோ
புறத்திலோ வைத்து வழிபட்டால் அமைதியும் நலனும் பயக்கும்
Tameva cha archayan nityam Bhaktyaa purusham avyayam
Stuvan naama-sahasrena Purushah satatthitah.
தியானத்தாலும் அர்ச்சனையாலும் அதே புருஷ்னை வணங்குதலால்
மனிதன் நலம் பெறுவான்
Q.5 ,
Ko
dharmah sarva-dharmaanaam Bhavatah paramo matah?
கோதர்மசர்வ தர்மானாம் பவத பரமோ மதா
உங்கள் கருத்துப்படி சிறந்த தர்மம் அல்லது நெறி யாது
Q.6 Kim japan muchyate jantuh
Janma-samsaara-bandhaaat?
கிம்ஜபன்முச்யதேஜந்துர்
ஜன்ம சம்ஸாரபந்தனாத்
எதை தியானித்து உயிரிகள் சம்ஸாரத் தளையிலிருந்து விடுதலை
அடையலாம்
Ans..5&6Anaadi-nidhanam vishnum Sarvaloka-maheshvaram
Lokaadhyaksham stuvan nityam Sarva-duhkha-atigo bhavet.
ஆதி அந்தம் இல்லாத விஷ்ணுவின்
நாமத்தைப் பஜிப்பதாலும் நினைப்பதாலும் எல்லாத் தளைகளில் இருந்தும் விடுபடுவதே
சிறந்த நெறியாகும்
விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
--------------------------------------
“விஸ்வம் விஷ்ணு வஷட்கார பூதபவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:
அண்டமெலாம்
வியாபித்து இருப்பவர் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அனைத்தையும் தான்
நினைத்தப்டி நடத்தி தன் வசம் வைத்திருப்பவர்,முக்காலங்களிலும் இருப்போர்க்கெல்லாம்
தலைவர்,தன் நினைவாலேயே அனைத்தையும் படைப்பவர், படைத்த அனைத்தையும் தாங்குபவர்,
பிரபஞ்சமே தன்னைச் சார்ந்திருப்பதாகக் கொண்டவரனைத்துக்கும் ஆதமாவாக
இருப்பவர்,அனைத்துக்கும் அவரே உடல், அனைத்தையும் பேணி வளர்ப்பவர், தலைவர்.
( இது
போல 108 இரண்டடி சுலோகங்கள்...... உனக்கு இது தேவையா என்னும் கேள்வி எழுகிறது)
.