துணுக்குத் தோரணம்
---------------------------------
இந்த முறை விலாவாரியாக எந்த தலைப்பு பற்றியும் எழுதப் போவஇல்லை. ஆகவே இந்த துணுக்குத் தோரணம்
சில
செய்திகள் பகிர்ந்துகொள்ளச் சொல்கின்றன. எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்திருக்குமா
தெரியவில்லை. அண்மையில் ஒரு விளம்பரமே செய்தியாக இருந்ததுஒரு தாயின் மணமகன் தேடும்
விளம்பரம் இதில் செய்தியாவதற்கு என்ன இருக்கிறது? அந்தத் தாய் தன் மகனுக்கு மணமகன்
கேட்டு விளம்பரம் செய்திருந்தார். ஓரினச் சேர்க்கை என்று தெரிந்தாலும் மகன் பக்கம்
எத்தனை தாய்மார்கள் இருப்பார்கள். ? ஒரு பக்கம் சட்டரீதியாக இதெல்லாம் அனுமதிக்கப்
படவேண்டுமென்று கூப்பாடு. வாழ்க்கையில் வால்யூஸ் என்று பேசுவதெல்லாம் புரளி.
தனிமனித சுதந்திரம் என்போர் நிறையப் பெருகி வருகிறார்கள்
=============================================
ஒரு 65
மூதாட்டி( அப்படிச் சொல்லலாமா) ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப்
பெற்றெடுத்திருக்கிறார் அவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் இருக்கிறதாம் அவர் ஏழு
குழந்தைகளுக்குப் பாட்டியுமாம் இதில்
விசேஷம் என்னவென்றால் 65-வது வயதில் செயற்கை முறையில் கரு தரித்துக் கொண்டாராம் ஒன்னுமே புரியலே இந்த
உலகத்திலே என்ன செய்வது.? ஆண்டவன் சித்தம் அது என்றால் தடுக்க முடியுமா.?
-----------------------------------
எங்கள்
ஊரில் திருவிழா இருந்தது. இங்கிருக்கும் மக்கள் ஊரப்பா என்கிறார்கள் abbaa என்றால்
கன்னடத்தில் திருவிழா என்று பொருள். எனக்கு கிராமங்களில் திருவிழா பார்த்த அனுபவம்
இல்லை. அருகில் இருக்கும் மகேஸ்வரம்மா கோவிலில் திருவிழா. திரு விழாவுக்கு மக்கள்
கூடும் இடம் ஒரு பெரிய மரத்தடி. கோவில் வேறிடத்தில் சில நாட்களாகவே திடீரென்று மேளச்
சத்தமும் பட்டாசு வெடிச்சத்தமும் நேரம் காலம் இல்லாமல் கேட்கும். வெளியே வந்து
பார்த்தால்தலைகளில் குடங்களுடன் பெண்கள் செல்ல வாத்தியமும் வெடியும் கூடவே. இதை
ஒட்டி வெளியூரிலிருந்தும் மக்கள் வருவதாகவும் படையல் எல்லாம் பிரமாதமாக இருக்கும்
என்றும் கூறுகிறார்கள்நான் சென்று பார்க்கவில்லை. ஆனால் எந்த திருவிழாவானாலும்
பண்டிகை ஆனாலும் எங்கள் வீட்டின் முன்பாக ஊர்வலம் இருக்கும் இரு சிறு காணொளிகளைப்
பகிர்கிறேன் என் கைபேசியில் எடுத்தது
---------------------------------------------
ஒவ்வோர் ஆண்டும்
மேமாதத்தில் பூக்கும் FOOT BALL LILLY எனப் படும் பூ பற்றிப்
பகிர்ந்திருக்கிறேன் இந்த ஆண்டு திடீரென ஏப்ரல் மாத இறுதியிலேயே ஒரு பூ
தலைகாட்டியது. கூடவே பக்கத்தில் அதற்கான செடிகள் பலவும் தலை தூக்கின. சென்ற ஆண்டு
டாக்டர் கந்தசாமி என் வீட்டுக்கு விஜயம் செய்தபோது மூன்று நான்கு பூக்கள் தலை
சாய்த்து வரவேற்பு அளித்தன. இந்த ஆண்டும் வலை நண்பர் ஒருவர்
என்னைப் பார்க்க வருவதாக எழுதி இருந்தார் ஆவலோடு காத்திருந்து ஏமாந்தேன்.
எங்கள்வீட்டு வாசமில்லா பூக்களும் அவற்றின் வரவேற்பை ஏற்க நண்பர் வராததால்
ஏமாற்றமடைந்திருக்கும் பூக்களின் ஓரிரண்டு படங்களைக் காணலாம் பூ என்று சொல்லும்
போது எங்கள் வீட்டில் பூத்த பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்திப் பூவைப் பற்றியும்
சொல்லவேண்டும் இதுவும் எங்கள் வீட்டில் எதிர்பாராதருணத்தில் பூத்திருந்தது.
விடியற்காலையில் மட்டுமே மலரும் இப்பூவின் மலர்ச்சியைப் பார்க்கக் கொடுத்து
வைக்கவில்லை. அதனால் மலர்ந்த பூவின் படமும் இல்லை.
![]() |
| ஏப்ரலில் திடீரெனப் பூத்த பூ |
--------------------------------------------------------
எனக்கு இந்த வலைப்பூ தளத்தை நிறுவிக் கொடுத்தவன் என் பேரன். பாட்டெழுதுவது பெரிய பாடா பாட்டா என்று கேட்டு என்னை சிந்திக்கச் செய்தவன் தானே ஒரு வலைத்தளம் அமைத்து ஆங்கிலத்தில் எழுதுகிறானென்னப் பைக்கும் வாசகர்கள் அவனதுவலைத் தளத்துக்கும் போய் கருத்திட வேண்டி அழைக்கிறேன் He seems to be a budding writer.அவனது வலைத்தளம் காண இங்கே சொடுக்குங்கள் நன்றி.
-------------------------------
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலுக்குச் சில ஆண்டுகளுக்குமுன் சென்றிருந்தோம். பேரூந்தில் செல்ல வழி கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. யாரோ ஒருவர்முதலில் பேரளம் சென்று அங்கு கேட்டால் தகவல் கிடைக்கும் என்று சொல்ல நாங்கள் போய் வந்தது ஒரு அனுபவம் அந்தக் கோவில் பற்றி இன்று ஜயா டிவியில் காட்ட, என் மனைவி டிவியிலிருந்தே படம் எடுத்து ஒரு காணொளியும் எடுத்தாள். அந்தப் பயணத்தின் நினைவுகளூடே படமும் வீடியோவும் கீழே.

![]() | ||
| திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை டிவியில் இருந்து |