துணுக்குத் தோரணம்
---------------------------------
இந்த முறை விலாவாரியாக எந்த தலைப்பு பற்றியும் எழுதப் போவஇல்லை. ஆகவே இந்த துணுக்குத் தோரணம்
சில
செய்திகள் பகிர்ந்துகொள்ளச் சொல்கின்றன. எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்திருக்குமா
தெரியவில்லை. அண்மையில் ஒரு விளம்பரமே செய்தியாக இருந்ததுஒரு தாயின் மணமகன் தேடும்
விளம்பரம் இதில் செய்தியாவதற்கு என்ன இருக்கிறது? அந்தத் தாய் தன் மகனுக்கு மணமகன்
கேட்டு விளம்பரம் செய்திருந்தார். ஓரினச் சேர்க்கை என்று தெரிந்தாலும் மகன் பக்கம்
எத்தனை தாய்மார்கள் இருப்பார்கள். ? ஒரு பக்கம் சட்டரீதியாக இதெல்லாம் அனுமதிக்கப்
படவேண்டுமென்று கூப்பாடு. வாழ்க்கையில் வால்யூஸ் என்று பேசுவதெல்லாம் புரளி.
தனிமனித சுதந்திரம் என்போர் நிறையப் பெருகி வருகிறார்கள்
=============================================
ஒரு 65
மூதாட்டி( அப்படிச் சொல்லலாமா) ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப்
பெற்றெடுத்திருக்கிறார் அவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் இருக்கிறதாம் அவர் ஏழு
குழந்தைகளுக்குப் பாட்டியுமாம் இதில்
விசேஷம் என்னவென்றால் 65-வது வயதில் செயற்கை முறையில் கரு தரித்துக் கொண்டாராம் ஒன்னுமே புரியலே இந்த
உலகத்திலே என்ன செய்வது.? ஆண்டவன் சித்தம் அது என்றால் தடுக்க முடியுமா.?
-----------------------------------
எங்கள்
ஊரில் திருவிழா இருந்தது. இங்கிருக்கும் மக்கள் ஊரப்பா என்கிறார்கள் abbaa என்றால்
கன்னடத்தில் திருவிழா என்று பொருள். எனக்கு கிராமங்களில் திருவிழா பார்த்த அனுபவம்
இல்லை. அருகில் இருக்கும் மகேஸ்வரம்மா கோவிலில் திருவிழா. திரு விழாவுக்கு மக்கள்
கூடும் இடம் ஒரு பெரிய மரத்தடி. கோவில் வேறிடத்தில் சில நாட்களாகவே திடீரென்று மேளச்
சத்தமும் பட்டாசு வெடிச்சத்தமும் நேரம் காலம் இல்லாமல் கேட்கும். வெளியே வந்து
பார்த்தால்தலைகளில் குடங்களுடன் பெண்கள் செல்ல வாத்தியமும் வெடியும் கூடவே. இதை
ஒட்டி வெளியூரிலிருந்தும் மக்கள் வருவதாகவும் படையல் எல்லாம் பிரமாதமாக இருக்கும்
என்றும் கூறுகிறார்கள்நான் சென்று பார்க்கவில்லை. ஆனால் எந்த திருவிழாவானாலும்
பண்டிகை ஆனாலும் எங்கள் வீட்டின் முன்பாக ஊர்வலம் இருக்கும் இரு சிறு காணொளிகளைப்
பகிர்கிறேன் என் கைபேசியில் எடுத்தது
---------------------------------------------
ஒவ்வோர் ஆண்டும்
மேமாதத்தில் பூக்கும் FOOT BALL LILLY எனப் படும் பூ பற்றிப்
பகிர்ந்திருக்கிறேன் இந்த ஆண்டு திடீரென ஏப்ரல் மாத இறுதியிலேயே ஒரு பூ
தலைகாட்டியது. கூடவே பக்கத்தில் அதற்கான செடிகள் பலவும் தலை தூக்கின. சென்ற ஆண்டு
டாக்டர் கந்தசாமி என் வீட்டுக்கு விஜயம் செய்தபோது மூன்று நான்கு பூக்கள் தலை
சாய்த்து வரவேற்பு அளித்தன. இந்த ஆண்டும் வலை நண்பர் ஒருவர்
என்னைப் பார்க்க வருவதாக எழுதி இருந்தார் ஆவலோடு காத்திருந்து ஏமாந்தேன்.
எங்கள்வீட்டு வாசமில்லா பூக்களும் அவற்றின் வரவேற்பை ஏற்க நண்பர் வராததால்
ஏமாற்றமடைந்திருக்கும் பூக்களின் ஓரிரண்டு படங்களைக் காணலாம் பூ என்று சொல்லும்
போது எங்கள் வீட்டில் பூத்த பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்திப் பூவைப் பற்றியும்
சொல்லவேண்டும் இதுவும் எங்கள் வீட்டில் எதிர்பாராதருணத்தில் பூத்திருந்தது.
விடியற்காலையில் மட்டுமே மலரும் இப்பூவின் மலர்ச்சியைப் பார்க்கக் கொடுத்து
வைக்கவில்லை. அதனால் மலர்ந்த பூவின் படமும் இல்லை.
ஏப்ரலில் திடீரெனப் பூத்த பூ |
--------------------------------------------------------
எனக்கு இந்த வலைப்பூ தளத்தை நிறுவிக் கொடுத்தவன் என் பேரன். பாட்டெழுதுவது பெரிய பாடா பாட்டா என்று கேட்டு என்னை சிந்திக்கச் செய்தவன் தானே ஒரு வலைத்தளம் அமைத்து ஆங்கிலத்தில் எழுதுகிறானென்னப் பைக்கும் வாசகர்கள் அவனதுவலைத் தளத்துக்கும் போய் கருத்திட வேண்டி அழைக்கிறேன் He seems to be a budding writer.அவனது வலைத்தளம் காண இங்கே சொடுக்குங்கள் நன்றி.
-------------------------------
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலுக்குச் சில ஆண்டுகளுக்குமுன் சென்றிருந்தோம். பேரூந்தில் செல்ல வழி கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. யாரோ ஒருவர்முதலில் பேரளம் சென்று அங்கு கேட்டால் தகவல் கிடைக்கும் என்று சொல்ல நாங்கள் போய் வந்தது ஒரு அனுபவம் அந்தக் கோவில் பற்றி இன்று ஜயா டிவியில் காட்ட, என் மனைவி டிவியிலிருந்தே படம் எடுத்து ஒரு காணொளியும் எடுத்தாள். அந்தப் பயணத்தின் நினைவுகளூடே படமும் வீடியோவும் கீழே.
எனக்கு இந்த வலைப்பூ தளத்தை நிறுவிக் கொடுத்தவன் என் பேரன். பாட்டெழுதுவது பெரிய பாடா பாட்டா என்று கேட்டு என்னை சிந்திக்கச் செய்தவன் தானே ஒரு வலைத்தளம் அமைத்து ஆங்கிலத்தில் எழுதுகிறானென்னப் பைக்கும் வாசகர்கள் அவனதுவலைத் தளத்துக்கும் போய் கருத்திட வேண்டி அழைக்கிறேன் He seems to be a budding writer.அவனது வலைத்தளம் காண இங்கே சொடுக்குங்கள் நன்றி.
-------------------------------
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலுக்குச் சில ஆண்டுகளுக்குமுன் சென்றிருந்தோம். பேரூந்தில் செல்ல வழி கேட்டால் பலருக்கும் தெரியவில்லை. யாரோ ஒருவர்முதலில் பேரளம் சென்று அங்கு கேட்டால் தகவல் கிடைக்கும் என்று சொல்ல நாங்கள் போய் வந்தது ஒரு அனுபவம் அந்தக் கோவில் பற்றி இன்று ஜயா டிவியில் காட்ட, என் மனைவி டிவியிலிருந்தே படம் எடுத்து ஒரு காணொளியும் எடுத்தாள். அந்தப் பயணத்தின் நினைவுகளூடே படமும் வீடியோவும் கீழே.
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை டிவியில் இருந்து |
அன்பின் ஐயா..
ReplyDeleteதாங்கள் கட்டிய துணுக்குத் தோரணம் அருமை!..
FOOT BALL LILLY எனும் பூவை இப்போது தான் காண்கின்றேன்..
பிரம்ம கமலப் பூவை வீட்டில் வளர்க்க ஆசை..
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை தரிசனம் - பரவசம்!..
பின்னூட்டப் பெட்டியின் டெம்ப்ளேட்டை மாத்தி இருக்கீங்களா? வேறே மாதிரி வருது! துணுக்குத் தோரணம் அருமையாக இருந்தது. திருமியச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கு மாயவரத்திலிருந்து அல்லது கும்பகோணத்திலிருந்து செல்லலாம். பேரளம் பக்கத்தில் தான் வரும்.
ReplyDeleteதுணுக்குகள் நன்றாக இருக்கின்றன. இன்னும் உங்கள் பேரன் பதிவைப் பார்க்கவில்லை. உங்கள் வீட்டு தபால் விலாசம் மற்றும் வரும் வழி, பக்கத்தில் உள்ள முக்கிய லேண்ட் மார்க் ஆகியவை வேண்டுமே. அடுத்த மாதம் பெங்களூர் வரலாம் என்றிருக்கிறோம். என் பேரன் அங்கு BMC & RI ல் MD Pediatrics இந்த ஜூன் மாதத்திலிருந்து படிக்கப் போகிறான். அவனைப் பார்க்க வரப்போகிறோம். அப்படியே உங்களையும் பார்க்க ஆவல்.
ReplyDelete13 குழந்தைகள் உள்ளவர் எதற்காக ? ஐயா மீண்டும் செயற்கை முறையில் கருத்தரித்துக் கொண்டார் இதை அவர்களது மக்கள் எதிர்க்கவில்லையா ?
ReplyDeleteதிருவிழா காணொளி கண்டேன்
பூ அழகாக இருந்தது.
தங்களது பேரனுக்கு எமது வாழ்த்துகள்.
****ஒரு பக்கம் சட்டரீதியாக இதெல்லாம் அனுமதிக்கப் படவேண்டுமென்று கூப்பாடு. வாழ்க்கையில் வால்யூஸ் என்று பேசுவதெல்லாம் புரளி. தனிமனித சுதந்திரம் என்போர் நிறையப் பெருகி வருகிறார்கள்.***
ReplyDeleteஇன்னும் 50 வருடத்திற்குப் பிறகு இதெல்லாம் சாதாரண விசயமாகிவிடும்னு நினைக்கிறேன். இளையராஜா இசையையும், இணைய தளத்தையும்கூட நாம் கேலி செய்துவிட்டுப் பிறகுதான் ஏற்றுக்கொண்டோம். நாம் எல்லா விசயத்திலுமே கொஞ்சம் "நிதானம்"தான். அதனால்தான் நம் கலாச்சாரத்திற்கு வால்யு அதிகம்னு நாமே நினைத்துக் கொள்கிறோம். :)
துணுக்குத் தோரணம்
ReplyDeleteஆபரணத் தங்கத்தை காட்டிலும்
ஜோராய் ஜொலித்தது!
குழலின்னிசை நோக்கி வந்தமைக்கு நன்றி அய்யா!
தங்களது பேரன் "விபு மனோகர்" அவர்கட்கு நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
துணுக்குத் தோரணம் அருமை ஐயா
ReplyDeleteதங்களின் பெயரனுக்கு வாழ்த்துக்கள்
ஓரினச் சேர்க்கை ,நமக்கு தவறாய் தெரிவது ,சிலருக்கு சரியாய் தெரிகிறது ,என் தளத்திலும் இன்று இதைப் போன்றே :)
ReplyDeleteஹரீஷ் ஐயர் பற்றிய அந்தச் செய்தியை நானும் படித்தேன். நிறைய வரன்கள் வந்திருந்தன என்றும் படித்தேன்!
ReplyDelete65 வயது மூதாட்டிக்கு இனியும் குழந்தைகள் எதற்கோ! ஏற்கெனவே இருக்கும்போது!
காணொளி பார்த்தேன்.
லில்லியும் நிஷாகந்தியும் அழகு.
தோரண அழகை இரசித்தேன்
ReplyDeleteகாணொளியில் அந்த வேடம் புதுமையாகவும்
இரசிக்கும்படியாகவும் இருந்தது
இசையுடன் கேட்கச் சுகமாகவும் இருந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete@ துரை செல்வராஜு
இரண்டு வகைப் பூக்களுமே வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்கும் ஃபுட்பால் லில்லியின் செடிகள் மே மாத இறுதியில் காணாமல் போகும் பின் அடுத்த ஆண்டு மேமாதம் பூவும் செடியும் வரும் பிரம்ம கமலம் இலையைக் கிள்ளி வைத்தாலே வரும் என்கிறார்கள் வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ கீதா சாம்பசிவம்
பின்னூட்டப் பெட்டி கூகிளாருக்கே வெளிச்சம். திரு மீயச்சூருக்கு போகும் முன் கேட்டதில் பலருக்கும் தெரியவில்லை. கும்பகோணத்திலிருந்துதான் போனோம் வருகைக்கு நன்றி மேம் தோரணத் துணுக்குகளுக்கு இன்னும் அதிக கருத்துரைகள் எதிர்பார்த்தேன்
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
பேரனின் பதிவுகள் பற்றி அவன் தளத்தில் கருத்திடுங்கள்வருகைக்கு நன்றி ஐயா.
ReplyDelete@ கில்லர்ஜி
வித்தியாசமாக இருந்ததாலேயே பகிர்ந்தேன் பேரனின் பதிவுகளைப் படித்துக் கருத்திடுங்கள் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வருண்
ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு புறம்பானது அது 50 வருடத்தில் சாதாரணமாகலாம் இருந்தாலும் எனக்கு உடன் பாடு இல்லை. உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி
ReplyDelete@ யாதவன் நம்பி
உங்கள் தளத்துக்கு நான் வருவது உண்டே. விபுமனொகரின் தளம் சென்று கருத்திட்டு அவனை உற்சாகப் படுத்த வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ கரந்தை ஜெயக்குமார்
பேரனுக்கு வாழ்த்துக்களுடன் கருத்திட்டால் உற்சாகம் அடைவான். வருகைக்கு நன்றி ஐயா
ReplyDelete@ பகவான் ஜி
உங்கள் தளத்தில் ஏதும் தென்படலையே. ஓரினச் சேர்க்கை இயற்கைக்குப் புறம்பானது எனக்கு உடன் பாடு இல்லை.
ReplyDelete@ ஸ்ரீராம்
வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீ
ReplyDelete@ ரமணி
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்.
துணுக்குத் தோரணம் அருமை ஐயா...
ReplyDeleteபிரம்ம கமலம் பிரமாதம்...
ReplyDeleteதுணுக்குத் தோரணம் சுவையாய் இருந்தது. ஆப்பிரிக்க Football Lillyயை Blood Lilly என்றும் சொல்வார்கள். இதனுடைய தாவரப்பெயர் Scadoxus multiflorus. பிரம்ம கமலம் பூவின் தாவரப்பெயர் Epiphyllum oxypetalum. இரண்டுமே பார்க்க அழகாக இருக்கும்.
திரு விபூ மனோஹரின் தளத்திற்கு சென்று படித்து எனது கருத்தையும் பதிவு செய்திருக்கிறேன்.
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
பாராட்டுக்கு நன்றி. பிரம்ம கமலம் பூ வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்குமாம். என் வீட்டுச் செடியில் எதிர்பாராமல் பூவைக் கண்டேன் மலர்ந்த பூவைப்படமெடுக்க அதிகாலை பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்வார்களேஅப்போதுதான் முடியும் . ஒரே பூ பூத்தது அடுத்துஎப்போது காத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி டிடி.
ReplyDelete@ வே.நடன சபாபதி
வாசமில்லா மலரிது என்று ஒரு பதிவு எழுதி இம்மலர்களின் பெயர்கள்தெரிய வில்லை என்று எழுதி இருந்தேன் திருமதி கீதா மதிவாணன் எல்லா மலர்களின் எல்லாப் பெயர்களையும் கண்டு பிடித்துப் பின்னூட்டம் இட்டார்கள் இந்த வகையில் லாப்ஸ்டர் க்ளா என்னும் மலரும் உண்டு. பதிவிடவில்லை. வருகைக்கு நன்றி சார் பேரன் தளத்துக்குச் சென்று கருத்திட்டதற்கும் நன்றி சார். .
இங்கே நமது ஊரிலேயே ஒரு வயதுத் தாய் என்று நினைக்கிறேன் தன் மகளின் கருவுக்கு தனது கருப்பையை ஈந்து கருவைச் சுமந்து பெற்றெடுத்தார்கள் என படித்ததாக நினைவு.
ReplyDeleteஒரு செய்தி கவனித்தீர்களா.. எல்லாச் செய்திகளிலும் தனி மனித சுதந்திரம் காக்கப்பட்டிருக்கிறது.
வாழட்டும். வாழ்க்கை அதற்குத்தானே..
வாழ்த்துக்கள்.
God Bless you.
உங்கள் comment boxல் word verification ஆப்ஷன் உள்ளது போல் உள்ளது.
ReplyDeleteஅதை எடுத்துவிட்டீர்களானால் கருத்திட வசதியாக இருக்கும். ஏற்கனவே வந்து கருத்திட்டு வராமல் சென்றுவிட்டேன்.
இப்போது சிரமப்பட்டுதான் கருத்திட்டிருக்கிறேன்.
ReplyDelete@ வெட்டிப் பேச்சு
செய்திகளைப் பதிவாக்கி இருக்கிறேன் என் எண்ணங்களை நான் சொல்லவில்லை. சில பின்னூட்ட மறு மொழிகளில் என்னையும் மீறிக் கூறி விடுகிறேன் வருகைக்கு நன்றி.
ReplyDelete@ வெட்டிப் பேச்சு
கமெண்ட் பாக்சில் வெரிஃபிகேஷன் ஆப்ஷன் நான் வைத்தது அல்ல.கூகிளாரின் கைங்கர்யம் . அதைப் பொருட்படுத்தாமல் கருத்திடலாம் உங்கள் தளத்தில் ஒரு கதை படித்தேன் என் முந்தைய பதிவு ஒரு சிறுகதை. படித்துப் பாருங்களேன் நன்றி.
பூ, புகைப்படங்கள், காணொளி, அம்மையின் தரிசனம் உள்ளிட்ட அனைத்தும் அருமை. ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு செய்தியைத் தருகின்றது. நன்றி.
ReplyDelete
ReplyDelete@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகை புரிந்து கருத்திட்டுப் பாராட்டியதற்கு நன்றி சார்
'பிரம்ம கமலம்' என்கிற Gardenia பூ எங்கள் குடியிருப்பில் ஏராளமாக உள்ளது. விட்டு விட்டு பூக்கும். வருடத்தில் பலமுறை பூக்கும்! அமெரிக்காவில் என் மகள் வீட்டிலும் உண்டு. அங்கு குளிர் காலத்தில் செடி வாங்கி வைப்போம். பல மாதங்கள் பூக்கும். வருடத்திற்கு ஒருமுறை தானா என்பது கேட்டால்தான் தெரியும்.
ReplyDeleteமற்றபடி, எனக்கு வயதாகிவிட்ட படியால், திருமணச் செய்திகளை நான் படிப்பதில்லை. உங்களையும் பகவான்ஜி போன்ற இளைஞர்களையும் பார்க்கும்போது இனி அத்தகைய செய்திகளைப் படிக்கலாமே என்ற துணிவு ஏற்படுகிறது! - இராய செல்லப்பா சென்னை.
ReplyDelete@ செல்லப்பா யக்ஞசாமி
பிரம்ம கமலம் எங்கள் வீட்டில் முதல் முறையாகப் பூத்திருந்தது. வருடத்துக்கு ஒரு முறைதான் பூக்கும் என்று கேள்விப்பட்டது. இன்னும் சில செடிகள் இருக்கின்றன. எப்படிப் பூக்கிறது என்று பார்ப்போம் பலரும் சில சுவையான செய்திகளைப் படித்திருக்க மாட்டார்கள் என்று தோன்றவே செய்திகள் பகிரப்பட்டன. வருகைக்கு நன்றி சார்.
துணுக்குத் தோரணம் ரசித்தேன். பேரனுடைய வலைத்தளத்தைப் பார்வையிட்டேன். அதிலிருக்கும் சாரங்கள் வேறுதளம் என்பதால் உள்வாங்கிக் கருத்திடுவது எனக்கு இலகுவாயில்லை. மன்னிக்கவும். எனினும் எழுத்துலகில் அவர் தொடர்ந்து பிரகாசிக்க இனிய வாழ்த்துகள்.
ReplyDelete
ReplyDelete@ கீதமஞ்சரி
வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி மேம்