சில நினைவுகள் நவராத்திரி
புரட்டாசி
அமாவாசைக்கு அடுத்த பத்து நாட்கள்
விசேஷன் தான் நவராத்திரி அல்லவா
நவராத்திரி
எனும்போது நெஞ்சில் மோதும் நினைவுகள் ஏராளம் ஒன்பது நாட்களும் புதுப்புடவை
சரசரக்கச் பெண்டிர் விதிஉலாவரும்காட்சியும்
சிறுமியர் தங்கள் பாடல் திறமையை வெளிப்படுத்தத் துடித்தாலும் பல
தயக்கத்துக்குப்பின் போதும் என்றுசொல்லும் அளவுக்கு பாடி மகிழ்வதை காண்பது
இக்காலத்திலும் இருக்கிறதா தெரியவில்லை 1968 என்று நினைவு திருச்சியிலிருந்தபோது நவராத்திரி கொலுவுக்கு பொம்மைகள் இருக்கவில்லை
ஆனால் என்மனைவிக்கு ஆசை மட்டுமிருந்தது சென் னை குறளகம் சென்று பொம்மைகள் வாங்கி
வந்ததும் அதன்பின் ஆண்டு தோறும்கொலு வைப்பதும்
வழக்கமாகி இருந்தது நாங்கள் வேலை மாற்றலாகி விஜயவாடாசென்றதும் பின் மீண்டும் திருச்சிவந்ததும் அதன்பின் விருப்ப
ஓய்வு பெற்று பெங்களூரில் செட்டில் ஆனபோதும் இந்தபொம்மைகளையும்
விடாதுஎடுத்துவந்தோம் 2012 வரை பொம்மைகள் வைத்து வழிபடுவது தொடர்ந்தது அதன் பின்
என்மனைவிக்கு கொலு வைத்தது போதும் என்றாகி
இருந்த பொம்மைகளை வேண்டிய சிலருக்கு
கொடுத்ததும்மறக்க முடியாது
நவராத்திரி கொண்டாட்டம் பல இடங்களில் பல விதமாகக்
கொண்டாடப்படுகிறது எது எப்படி ஆனாலும் கொண்டாட்டத்துக்கு பின்னணியாக பல கதைகளுண்டு
வங்காளிகள் துர்கா பூஜையாகக் கொண்டாடுகிறார்கள்
வங்காளிகளின் ஒரு பிரதான வழிபாடு
துர்கா பூஜை துர்கா பூஜை சமயம் பெங்காளிகள் கூடிச் சேர்ந்துவழிபாடு செய்வார்கள்அவர்களது வழிபாடுகளை திருச்சியிலும் பெங்களூரிலும் பார்த்திருக்கிறேன்
பெங்களூரில் RBANM SCHOOL மைதானத்தில்பெங்களூர்
வாழ் வங்காளிகள் சிறப்பாகக் கூட்டு
வழிபாடு நடத்துகிறார்கள் துர்கை பதுமையை வழிபட்டு விஜயதசமிக்குப் பின் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்கிறார்கள் வடக்கே
ராவணனைக்கொன்றதினமாக அனுஷ்டிக்கப்படுகிறது
தமிழ் நாட்டில் நவராத்திரிபெரும்பாலும் பெண்கள்
பண்டிகையாகவே அனுஷ்டிக்கப்படுகிறது
திருச்சியில் கொதிகலன் தொழிற்சாலைக்கு
அன்றுஎல்லோரும் வந்துபோகலாம் 1960 களில்
நான் பெங்களூர் எச் ஏ எல்லில் இருந்தபோது
தொழிலாளர்கள் தங்கள் கைவினையைக் காட்டஆயு பூஜையைக் கொண்டாடினார்கள் என் சில அனுபவங்களை
முன்பே பகிர்ந்திருக்கிறேன் எனக்கு அண்மையில் ஒரு செய்திப்படம்வந்திருந்ததுஅதில்
கண்ட செய்திகள்புன்னகைக்க வைத்தாலும்
பண்டிகைகள் வழிபாட்டையும் மீறி
சந்தோஷம் தர உபயோகமாகின்றன என்பதே தெரிகிறது
இந்தக்காணொளி நான் எழுதிய பாட்டு ஒன்றுக்கு திரு சுப்பு தாத்தா மெட்டமைத்து பாடியது
இந்தப்படமே self explanatory
நவராத்திரி விழாவுக்கு பெண்களுக்குப் பிடித்தமான புடவைகளும் உணவு வகைகளுமே பரிந்துரைக்கப்படுகின்றன
2012ல் நான் எழுதிய பாடல்
அணு அண்டம் பேரண்டம் அனைத்தையும்
இயக்கும் சக்தியே உருவமும் பெயரும் ஏதுமில்லா
உன்னை என்ன சொல்லிப் போற்றுவேன்
.மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வென்பேனா-
புவி மடந்தை- நாமருவிய கலை மடந்தை-
ஜெய மடந்தை என்பேனா- சர்வசக்தி பொருந்திய
சர்வாங்க சுந்தரி என்பேனா--நான் அவலத்தில்
அழுந்தும்போது என் நாவினில் வந்தமரும்
முருகனும் நீயே,- கண்ணனும் நீயே- என்னுள்
இருப்போனும் ஏனையோர் துதிக்கும் எல்லா
நாமங்களும் கொண்டவளு(னு)ம் நீயல்லவா- நீ என்
அப்பனல்லவா, அம்மையல்லவா, கண் துஞ்சாது எனைக்
காக்கும் தாரமல்லவா.- யாதுமாகி நிற்கும் எல்லாமே
கலை மகளே, அலை மகளே, மலைமகளே
உயிருள்ள,உயிரற்ற, அனைத்திலும் இருப்பவளே,
எனை ஈன்ற தாயின் தாயே- எல்லாம் நீயே
உன்னை வணங்குகிறேன்