விடுப்பும் அனுபவங்களும்
-----------------------------------------
நாங்கள் வீட்டைப் புதுப்பித்ததும் இன் இளைய மகன் குடும்பத்துடன் வந்து பார்த்து நன்றாக வந்திருக்கிற்து என்று சொன்னான். தரை சற்று வழுக்கலாக இருக்கிறது கவனம் தேவை என்றும் கூறினான். எங்களை அவன் வீட்டுக்கு வந்து சில நாட்கள் இருக்கும் படிக் கேட்டுக்கொண்டான். அவனும் ஒரு பத்து மாடிக் குடியிருப்பில் ஏழாவது த்ளத்தில் அண்மையில் ஒரு த்ரீ பெட் ரூம் வீடு வாங்கி இருந்தான்.
இளையவனின் குடியிருப்பு முன்னால் |
லிஃப்ட் இன்னும் வராத நிலையில் அங்கு போக யோசனையாய் இருந்தது. அங்கும் எல்லோரும் பணிக்கும் பள்ளிக்கும் சென்று விடுவார்களாதலால் நாங்கள் தனியேதான் இருக்க வேண்டும். ஏதாவது வாரக் கடைசியில் அங்கு போய் ஓரிரு நாட்கள் இருப்போம் இப்போது லிஃப்ட் வந்து விட்டது. ஒன்று சொல்லியாக வேண்டும். என் மக்களிடம் போனாலும் அங்கும் தனியே நானும் இவளுமிருக்க வேண்டும் என்பதாலும் எங்கள் mobility –க்கு அவர்களையே சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும் போகும் முன் மிகவும் யோசிப்போம். ஆனால் என் மூத்த மகன் (மகர் என்று சொல்ல வேண்டுமோ? மரியாதை...!) படத்தின் இடது ஓர மூலையைக் கவனிக்கவும்
எப்பொழுதும் பறந்து கொண்டிருப்பவன் இம்முறை நாங்கள் கட்டாயம் சில நாட்கள் சென்னையில் வந்து இருக்கவேண்டும் என்றும் அவனே வந்து கூட்டிப்போவதாகவும் சொன்னான்.15-ம் தேதி மூத்தமருமகள் மூத்த பேரன் சகிதம் வந்திருந்தான் வந்தவன் ஒரிரு நாட்கள் தம்பி குடும்பத்தாருடனும் இருக்க விரும்பி அன்றே எல்லோரும் இளைய மகன் இல்லம் சேர்ந்தோம். என் இரண்டாவது பேரன் was in clouds nine. என் மூத்த பேரன் தன் தம்பிக்கு hot wheel ஒன்று வாங்கி வந்திருந்தான் அதனை ஒருங்கிணைத்து காரை ஓட்டும் வரைஅவனுக்கு நிம்மதி யில்லை.
(காணொளி) சின்னவனும் பெரியவனும் மீன் தொட்டி வைத்திருக்கிறார்கள். அந்த மீன்களைப்பார்த்துக் கொண்டிருப்பதே அலாதி சுகம். ஆனால் எனக்கென்னவோ பெரியவன் வீட்டுத் தொட்டியில் இருக்கும் ஒரு ஷார்க்கைப் பார்க்கின்றபோது மச்சாவதார நினைவே வரும். இந்த மீன் சிறியதாக இருந்த போது வாங்கி வைத்தது. இப்போது வளர்ந்து இருப்பதைப் பார்த்தால் வளர்ந்து தொட்டி கொள்ளாமல் போய் மச்சாவதாரக் கதைபோல் ஆகிவிடுமோ என்னும் சந்தேகம் எழுகிறது.
சின்னவன் வீட்டு மீன் தொட்டி. |
16-ம் தேதியும் 17-ம் தேதியுமிளையவனுடன் கழித்தோம். பெரிய
பேரன் அவன் நண்பர்களுடன் 17-ம் தேதி காலையில் ஏற்காடுக்குச் சென்று விட்டான் .
மறுநாள்18-ம்தேதி சென்னை போகும் வழியில் காலை சுமார் பதினொரு மணிக்கு கிருஷ்ணகிரி
அருகே இருக்கும் A2Bயில் சந்திப்பதாக ஏற்பாடு.. இப்படியாக
சென்னையில் எங்களுக்கான விடுப்பு துவங்கியது.
கிருஷ்ணகிரி அருகே பேரனைப் பிக் அப் செய்யவேண்டி
இருந்ததால்காலை சுமார் பத்தரை மணிக்குக் கிளம்பினோம். நல்ல புது கார். நல்ல சாலை.
நாங்கள் A2Bயை
அடைந்தபோது சுமார் பனிரெண்டு மணி இருக்கும். பேரனுக்காகக் காத்திருப்பது என்று
முதலில் நினைத்து அவனிடம் தொடர்பு கொண்டபோது அப்போது அவன் சேலத்துக்கே வந்து
சேரவில்லை. அவர்கள் பயணப்பட்ட வண்டியில் ஏதோ பழுதாகி எப்போது வருவான் என்று சொல்ல
முடியாத நிலை.சில நேரக் காத்திருப்புக்குப் பின் மதிய உணவு எடுத்துக் கொண்டு பி
அவன் வரும்வரைக் காத்திருப்பது என்று முடிவாயிற்று. காத்திருந்த நேரத்தில்
அங்கிருந்த இனிப்புப் பெட்டியில் ஒரு கரப்பான் பூச்சி இருப்பதைப் பார்த்து
சிப்பந்தியிடம் கூறினோம். ஆனால் அந்தமாதிரிச் சூழலில் அதைச் சற்றும்
எதிர்பார்க்கவில்லை. உணவும் முடிந்தது. நேரம் இரண்டு மணியையும் தாண்டி இருந்தது.
பேரனுடன் தொடர்பு கொண்டால் இதோ இப்போது வந்து விடுவேன் என்று சொல்லியே அரைமணி
நேரத்துக்கும் அதிகமாகி விட்டது. A2Bக்கு அடுத்த டோலில் அவனை
இறங்கச் சொல்லி நாங்கள் அங்கே அவனைப் பிக் அப் செய்யப் புறப்பட்டோம். வெயிலின்
சூடு காருக்குள் இருந்தவரை தெரியவில்லை. பாவம் அவனும் பசியுடன் டோலில்
காத்திருந்தான் நேரம் மணி மூன்றாகி இருந்தது. அவன் உண்டிருக்கவில்லை. போகும்
வழியில் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னான். ஆம்பூரில் பிரியாணி
வாங்கி அதை அவன் காரிலேயே உண்டான். இவ்வளவு விலாவாரியாக நான் எழுதக் காரணம்
சென்னைக்கு நாங்கள் போய்ச் சேரும்போது இரவு மணி எட்டாகி விட்டது.சென்னைக்கு காரில் |
தொடரும்.