Friday, October 7, 2016

நானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்

                          நானும் ஒரு மயில் கவிதை எழுதுகிறேன்
                          -----------------------------------------------------------------
( அதிகம் பறந்து பார்த்து  அறியாத  மயிலின் பறக்கும் படங்கள் பதிவிட்டிருந்தேன். அதையொட்டிக் கவிதை புனையவும்  வேண்டி இருந்தேன். என் துரதிர்ஷ்டம் வாசகர்களின் வலைத் தளங்களில் படங்கள் தெரிவதில்லை எனக் குறைபட்டு பின்னூட்டங்கள். இருந்தன ஆகவே அதையே சென்ற பதிவில் மீள் பதிவாக வெளியிட்டேன்  இந்த முறை பலரும்  கவிதைகள் எழுதி பின்னூட்டமிட்டது  மகிழ்ச்சி அளித்தது சென்ற முறை கவிதைகள் வராததால் நானே ஒரு கவிதை போல் ஒன்று எழுதி இருந்தேன்  அதையே இங்கு மீள் பதிவாக்குகிறேன்  நான்  சற்றே வித்தியாசமானவன்  என்  கற்பனையும்  ஒரு வித்தியாச  கோணத்தில்  ஆத்திக சிந்தனை உள்ளவர்கள் பொறுக்க வேண்டுகிறேன் )


தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.


முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்

காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம் ?? 

கடந்த முறை பதிவிட்டிருந்தபோது வந்த ஒரு பின்னூட்டமும்  என்னை ஈர்த்தது (எதிர்ப் பாட்டா) ஆகவேதான் ஆத்திக சிந்தனை உள்ளவர்கள் பொறுக்க வேண்டும்  என்று மேலே எழுதி இருக்கிறேன் இதோ அந்தப் பின்னூட்டம் 


பறந்தறியா மயில்தான்நீ யென்றாலும் சூரனே
பறந்துன்னைப் பிடித்திழுத்துப் பூவுலகம் கொணர்ந்ததுவும்
அதன்பின்னே மரமாகி நின்றவனை வேலாற்பிளந்து
பாதியுயிர் தன்னுள்ளே தனதாக்கிக் கொண்டுவிட்டப்
பறந்தறியா மயில்மீது பறந்துலகைச் சுற்றிவந்து
கனியதனை அண்ணனுக்குத் தரச்செய்த சூராதிசூரன்
கந்தனவன் செய்திட்ட மாயமன்றே நீயறிவாய்!

ஆருக்கும் கிட்டாத மாங்கனியை அண்ணற்கீந்து
பாருலகைக் காக்கவென்றோர் ஆண்டியாய்ப் பழநியிலே
சீராக நின்றிடவே செய்ததுவும் கந்தலீலை!
ஊரார் இதையறிவார்! நீயுந்தான் நன்கறிவாய்!
பறக்கவொணாப் பறவையும் பறந்திடுமே திருவருளால்!
அதைக்காட்ட வன்றோதான் வாகனமாய் நினைக்கொண்டான்
கந்தனவன் பேர்சொன்னால் நடவாதும் நடந்திடுமே
வானேறிப் பறப்பதென்ன விந்தையிங்கு சொல்மயிலே!

முருகனருள் முன்னிற்கும்!



          

37 comments:

  1. அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  2. கந்தனை வேண்டி நின்றால்
    கவிதையும் கிடைத்திடுமே!..

    ReplyDelete
  3. உங்கள் கவிதையையும் அதற்கான டாக்டர் சங்கர்குமாரின் கவிதையையும் ஏற்கெனவே படித்துள்ளேன். நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம். :)))))

    ReplyDelete

  4. @ ஸ்ரீராம்
    வந்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  5. @ ஜீவி
    முந்தைய பதிவில் உங்களைக் காணவில்லையே முருகனை எனக்குப் பிடிக்கும் என்றும் எழுதி இருக்கிறேனே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  6. @ டாக்டர் கந்தசாமி
    பதிவிடுவதான் தாமத மானாலும் குறைந்த பட்சம் என் போன்றோர் பதிவுகளுக்காவது வரலாமே/.வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  7. @ கீதா சாம்பசிவம்
    உங்கள் நினைவாற்றல் போற்றற்குரியது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  8. //பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே//

    அருமையான வரிகள் ஐயா மிகவும் இரசித்தேன் சிந்திக்க வைத்தது

    ReplyDelete
  9. #உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !#
    எனக்கும் இந்த சந்தேகம் உண்டு :)

    ReplyDelete
  10. அருமையான படைப்பு
    தொடருங்கள்

    ReplyDelete

  11. @ கில்லர் ஜி
    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஜி

    ReplyDelete

  12. @ பகவான் ஜி
    சந்தேகம் எல்லாம் வரக்கூடாது வாசிக்கவே வரமாட்டார்கள் உங்கள் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  13. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
    பாராட்டுக்கு நன்றி எதிர்ப் பாட்டையும் பார்த்தீர்களா

    ReplyDelete
  14. ஆஸ்திகர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே மயிலையும் முருகனையும் மனதில் போட்டுவைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது!

    ReplyDelete

  15. @ ஏகாந்தன்
    முருகன் சீரீசில் இன்னும் இருக்கிறது. முருகனையும் மயிலையும் ஆஸ்திகர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்களா என்ன வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  16. //பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
    ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
    தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா பறந்து தூரம் கடக்க
    இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி அவனை ஏமாற்றிக்
    காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம் ?? //

    இதற்காக ஆத்திகவாதிகள் வருத்தப்படத் தேவையில்லை. மாறாக தங்களுடைய கற்பனை திறனை பாராட்டியிருக்க வேண்டும்.

    கவிதையை இரசித்தேன். அருமை!அருமை!! பாராட்டுகள்.

    ReplyDelete
  17. @ வே.நடனசபாபதி
    ஐயா வணக்கம் நான் யாரென்று ஆராய்ச்சியில் இறங்காமல் கவிதையை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றிகள்

    ReplyDelete
  18. மயில் கவிதையை ரசித்தேன். அழகான கவிதையைத் தந்தருளிய கந்தனையும் மயிலையும் போற்றுகிறேன்.

    ReplyDelete
  19. மயில் கவிதை ரசிக்க வைத்தது ஐயா...

    ReplyDelete
  20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    கவிதை யாத்தது அடியேன் கந்தனையும் மயிலையும் பற்றியது. எழுதியவனுக்கில்லாத பெருமை எழுது பொருளுக்கா வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  21. @ பரிவை சே குமார்
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  22. உங்களது மயில் பற்றிய கவிதையும் ரசித்தேன். அதற்கு வந்த எதிர்க் கவிதையும் தான்.

    ReplyDelete

  23. @ வெங்கட் நாகராஜ்
    ஒரே நிகழ்வு வித்தியாசமான கண்ணோட்டம் இருகவிதைகளும் வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  24. நன்றாக இருக்கிறது சார்....மிகவும் பிடித்த முருகன். உங்கள் வரிகளும். பின்னூட்டக் கவி வரிகளையும் ரசித்தோம்

    ReplyDelete
  25. நன்றாக இருக்கிறது சார்....மிகவும் பிடித்த முருகன். உங்கள் வரிகளும். பின்னூட்டக் கவி வரிகளையும் ரசித்தோம்

    ReplyDelete
  26. அருமை ஜி எம் பி ஸார்

    ReplyDelete

  27. @ துளசிதரன் தில்லையகத்து
    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்

    ReplyDelete

  28. @ஷைலஜா
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

    ReplyDelete
  29. மிகவும் இரசித்தேன் அருமை ஐயா. சிந்திக்க வைத்தது

    ReplyDelete
  30. வித்தியாசமான பதிவுகள் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்வீர்

    ReplyDelete

  31. @ ஆதிரா முல்லை
    வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  32. @ டி.என் முரளிதரன்
    வித்தியாசமாக சிந்தித்து எழுதியது. ரசிப்புக்கு நன்றி சார்

    ReplyDelete
  33. ரசிக்க வைத்தது உங்கள் கருத்து பொதிந்த கவிதை. எதிர்கவிதையுடன் ஒரு சுவாரஸ்ய பட்டிமன்றமே வாசித்த திருப்தி....


    அதிகம் பறக்காத மயிலே உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !
    --

    கந்தனவன் பேர்சொன்னால் நடவாதும் நடந்திடுமே
    வானேறிப் பறப்பதென்ன விந்தையிங்கு சொல்மயிலே!


    அழகு. நன்றி....

    ReplyDelete

  34. @சக்திபிரபா
    வருகைக்கும் கவிதைகளை ரசித்ததற்கும் நன்றி மேம்

    ReplyDelete
  35. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. பின்னூட்ட கவிதையும் நன்றாக இருக்கிறது.

    எழுதி எழுதி படிக்க வந்தேன், எழுத்துக் கூட்டி பாடவந்தேன்
    பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்

    என்ற பாடல் நினைவுக்கு வருது.
    உங்களை பாடவைத்ததும் முருகன், பாட்டுக்கும் அவன் தான் தலைவன்.

    ReplyDelete