Thursday, June 24, 2021

இதுவே என்கடைசி இடுகை

 

கேள்வியின்நாயகன்

 

1.) உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

எனக்கு இப்போது என் 83-வது வயது ஓடிக்கொண்டிருக்கிறது. என்  பிள்ளைகள் என் நூறாவது வயதின்பொது அவர்களது எழுபதுகளின் தொடக்கத்தில் இருப்பார்கள். என் பேரக்குழந்தைகளும்  திருமணமாகி பெற்றோர்களாகி இருப்பார்கள். ஆகவே பிற்ந்த நாள் கொண்டாட்டம் என்பது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படியே இருக்கும் என்னைப் பொறுத்தவரை எல்லோரும் கூடி இருக்கும் ஒரு மகிழ்வான நாளாக அது இருக்க வேண்டும் என்பதே விருப்பம்

இன்றுறங்கி நாளை விழிப்பதே நம் கையில் இல்லாத போது இம்மாதிரித் திட்டமிடுதல் .......... இதையே hypothetical கேள்வி என்கிறேன்

2.) என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்.?

என்னதான் கற்றாலும் கற்றது கைம்மண் அளவு என்று தெரியும் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து தெரிந்தது இது ,தெரியாதது இது என்று பிரித்து தெரியாததைக் கற்க முயல்வேன் ஆனால் சிலவிஷயங்களைத் தெரிந்து கொள்ள எனக்கு mental block இருப்பதும் தெரியும்

3.) கடைசியாகச் சிரித்தது எப்போது ? எதற்காக.?

இப்போது. இக்கணமே. இம்மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேனே என்பதை நினைத்து..

4.) 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன.?

இம்மாதிரி பவரே இல்லாமல் சிறுவயதில் வாழ்ந்திருக்கிறேன் நம் முன்னோர்களும் வாழ்ந்திருக்கின்றனர். அதை நினைத்து சமாதானப் படுத்திக் கொள்வேன் முன்பெல்லாம் இந்தப் பவர்கட் குறித்து பலரும் பதிவுகளில் எழுதி இருக்கின்றனர். அவர்களுக்கு பின்னூட்டமாக இயற்கையோடு இசைந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருக்கிறேன் என்ன... இப்படி வாழப் பழகிவிட்டதால் சில அசௌகரியங்கள் தெரியும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்

இந்தக் கேள்வியே clear ஆக இல்லையோ என்று தோன்றுகிறது. பவர்கட் என்பது மின் சக்தியைத்தான் குறிக்கிறதா. இல்லை நமக்கிருக்கும் சக்தியைக் குறிக்கிறதா.?ஒரு 24 மணி நேரமா இல்லை நாளும் 24 மணி நேரமா..

5.) உங்களின் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன. ?

என் இரு பிள்ளைகளுக்கும் திருமணமாகி விட்டது. அந்த நாளில் நான் அவர்களிடம் எதையும் சொன்னதாக நினைவில்லை. ஆணும் பெணும் இணைந்து வாழ்வதே திருமண வாழ்வு. வாழ்க்கை என்பது அவர்களே வாழ வேண்டியது. பிறர் உபதேசித்து பின் பற்றக் கூடியது அல்ல. திருமண வாழ்வில் மகிழ்வாக நாங்கள் வாழ்ந்து வருவதை என் குழந்தைகள் பார்த்து வந்திருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையே அவர்கள் பின் பற்ற முயல வேண்டியதில் ஒன்று என்று தெரிந்து கொண்டிருப்பார்கள்.

6.) உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்.?

நான் என் பதிவுகள் பலவற்றிலும் ஆதங்கத்துடன் எழுதி வருகிற பிரச்சனை நிலவும் ஏற்ற தாழ்வுகளே. அதற்கென்று எனக்குத் தெரிந்த தீர்வுகளையும் எழுதி வந்திருக்கிறேன் முடிந்தால் நானே ஒரு அவதார புருஷனாகவந்து இவற்றைத் தீர்க்க வேண்டும் ஆனால் நான் படித்துள்ளவரை அவதார புருஷர்கள் யாரையாவது தீர்த்துக்கட்டத்தான் அவதாரம் செய்திருப்பதாகத் தெரிகிறதே தவிர வேறெதுவும் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் ஆண்டவன் என்றைக்கோ அவதாரம் எடுத்திருக்க வேண்டுமே. ஒரு hypothetical ஆன கேள்விக்கு ஒரு சர்ச்சைக்குரிய பதில்

7.) நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்.?

எனக்கு யாரிடமும் அட்வைஸ் கேட்க தயக்கமில்லை. என்னைவிட நன்றாகத் தீர்வு சொல்வார் என்னும் நம்பிக்கை இருந்தால்தான் அட்வைஸ் கேட்பேன்.

8.) உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?

என்னைப் பற்றிய தவறான தகவல் பரப்பப் படுவதாகக் கூறுபவரை முதலில் தவிர்க்க முயல்வேன் . எப்போதுமே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் என்னும்கொள்கை உடையவன் இருந்தாலும் ஒரு உண்மையும் சொல்ல வேண்டும் தகவல் தவறானதாக இருந்தால் மனசின் ஒரு ஓரத்தில் வருத்தம் இருக்கும் “ சீசரின் மனைவி......” என்று ஏதோ எண்ணத்தோன்றுகிறது.

9.) உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்.?

கேள்வியே சரியில்லையோ.  இறந்தவரிடம் என்ன சொல்ல முடியும் ? நண்பரிடம் என்றால்... .வார்த்தைகளை விட பரிவும் புரிதலும் மேல் என்று நினைக்கிறேன்

10.) உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்.?

 ஒரு பதிவே எழுதி இருந்தேன்  என்ன செய்வீர்கள் என்பதை விட என்ன செய்தேன்  என்று எழுதி இருக்கிறேன் ப்தில் தெரிய இங்கே” சொடுக்கவும்

 

 

 

 

 

 

 

 


Monday, June 21, 2021

Saturday, June 19, 2021

Thursday, June 17, 2021

story time


 என் மச்சினனின் பேரக்குழந்தை  இரட்டையரில் ஒன்று கதையில் ஒன்றி விடும் ஆர்வம் தெரிகிறதாஇரண்டு வயது கூட ஆகவில்லை

Wednesday, June 16, 2021

படித்த தில் பிடித்தது

 

படித்ததில்    பிடித்தது         .    

  


வீசு தென்றல் காற்றிருக்க
  வேறெதுவும் வேண்டுவரோ
பேசும் பொற்சித்திரம் அருகிருக்க அருகினிலே
ஓடும் ஓடையின் தண்ணீரும் சுவை தருமோ 

தென்றல் காற்று , தண்புனல் சித்திரம்போல் பாவை
போதுமா இப்புவியில் வேறெதுவும் வேண்டாமா
பசிக்கும் வேளை புசிக்க உணவு அது ஒன்றே
போதும் என்று சொல்ல வைக்கும். பாரீரே அறிவீரே.
கொடுப்பதன் இன்பம் அதை எடுக்கவிட்டுக்
கொடுப்பதில் கூடும் இன்பம் உணர்வோமே.
கொடுத்துத்தான் பார்ப்போமே

 

ஈசன் அருளைப் பெற ஈதல் ஒன்றே நல்வழி-அதைவிட்டு  
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கூறி
பாலையும் பழத்தையும் தேனையும் தீஞ்சுவை இளநீரையும்
பூசனை என்ற பேரிலும் அபிஷேகம் எனும் பேரிலும்
கல் மீதும் மண் மீதும் பொழிந்தே வீணடித்தல் ஏனோமுறையோ.?
ஈசன் அருளைப் பெறவே இத்தனையும் தேவை என்றால்
அறிவீரே அன்பர்காள், அத்தனையும் அறியாமையின் வழிமுறை

பக்தி செய்யவே பாசாங்கு வேண்டியதில்லை. எங்கும்
நிறைந்த ஈசன் என்னிலும் உள்ளான் எவரிலும் உளான்
இதுவன்றோ உண்மை நிலை.?ன்பே சிவம் எனச்
சொல்வதோடு நில்லாமல் நேசி உன்னை நேசிஇவனை நேசி
அவனை நேசிஉவனை நேசி. அனைவரையும் நேசி

 

பாரினில் பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்.
போகும்போது என்ன கொண்டு போவோம்.
இருப்பதனைத்தும் எனக்கென்றால் அது
என்னுள் உறையும் இறைவனுக்கும்தானே
என்னுள் இருப்பவன் அவனிலும் உளான் ஆக
எனதெல்லாம் அவனுக்கும் உரிமைதானே
கிடைத்ததெல்லாம் அவன் கொடுத்தது- அது
அனைவருக்கும் உரியது. .இருப்பவன் என்று
என்னையோ உன்னையோ தேர்ந்தெடுத்தான் என்றால்
உன் மூலம் என் மூலம் இல்லாதோர் பெற
வேண்டும் என்பதே அவன் சித்தமாயிருக்கலா

 

 

 

 

 


Saturday, June 12, 2021

ரசிக்க சில காணொலிகள்


மிலிடரி சாகசம்

இரண்டாம் மொழி
 














Friday, June 11, 2021

மீண்டும் ஒரு மீள் பதிவு

 

இப்போது மீண்டும்  தொலைக்காட்சி சானலில் மஹா பாரதம் நான்  ஏன் மீண்டும் சாந்தனுவை பற்றி எழுத்தியதை மீள் பதிவாக்கக்கூடாது அந்த பதிவுக்கு வந்திருந்த சில பின்னூட்டங்கள் சுவை யானவைஎப்படியெல்லாம்   மஹாபாரதநிகழ்வுகளை சரி என்று சொல்லநினக்கிறார்கள்  எனிவே அதுஅவர்கள் உரிமை  நாம்  இப்போது சாந்தனுவின் சந்ததிகள் பற்றி பாப்போமா

 

  
திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படும் செய்தி. நமது சமூகத்தில் வம்சம் தழைப்பது என்று கூறும்போது தகப்பனின் வம்சாவளி என்றுதான் பொருள்படுகிறது. இன்னாரின் மகன் என்று சொல்வதும் தந்தையைக் குறித்தே இருக்கும். நான் இங்கு கூறுவது சட்டப்படி அனுமதிக்கப் பட்ட குடும்ப வாழ்க்கை முறையையும் அதன் மூலம் வளரும் தலை முறையையும் குறிப்பிடுவதாகும். எக்செப்ஷனல் கேஸ்களைக் காட்டி என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது.

தலைமுறை இடைவெளி என்பதே தலைமுறைகளைப் பற்றிய செய்திகள் தெரியாமல் இருப்பதைக் குறிக்கிறதோ.?நான் ,என் தந்தை ,என் தந்தையின் தந்தை- இதை மீறிய தலைமுறை பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள முடிகிறதா.? இதையெல்லாம் பற்றி சிந்தனை எழுவது நியாயம்தானே. சந்ததி தழைக்க வேண்டி மறுமணம் செய்யும் பலரையும் நாம் காணலாம். 


நம்முடைய மிகப் பெரிய இதிகாசமான மஹாபாரதத்தின்/ல் வம்சாவளி குறித்துப் படிக்கும்போது என்னவெல்லாமோ நினைக்கத் தோன்றுகிறது. சிலவற்றைக் குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.அவற்றைக்குறித்தஅபிப்பிராயங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்..மஹாபாரதக்கதையை அதன் ஆதி வடிவில் நான் படித்ததில்லை. பலரும் படித்திருக்க வாய்ப்புமில்லை

மஹாபாரதம் வியாசமுனிவர் கூற விநாயகரால் எழுதப் பட்டது என்று நம்பப் படுகிறது. வியாசர் பராசர மஹரிஷிக்கும் சத்தியவதி எனும் செம்படவப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அறியப்படுகிறார். இந்த வியாசமுனிவர் மஹாபாரதக் கதையின் ஒரு பாத்திரமாகவும் அறியப் படுகிறார். பராசர முனிவரிடம் கலந்ததில் இருந்து சத்தியவதியைச் சுற்றி ஒரு நறுமணம் திகழ்ந்திருந்ததாம். அந்த நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு சாந்தனு மஹாராஜா அவள் மேல் காதல் வசப்பட்டாராம். இந்த சாந்தனு மஹாராஜா ஏற்கனவே மணமானவர்.. கங்கையின் மேல் காதல் கொண்டு அவளை மணமுடிக்க விரும்பியபோது கங்கை ஒரு நிபந்தனை இட்டாள். அவளது எந்த செய்கையையும் சாந்தனு ராஜா கண்டு கொள்ளக் கூடாது என்பதே அது. சாந்தனு கங்கை திருமணத்தின் விளைவாய் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றையும் கங்காதேவி நீரில் எறிந்து விட . ஏதும் பேசாமல் இருந்த ராஜா எட்டாவது குழந்தையை நீரில் இடப் போகும்போது தடுத்துக் காரணம் கேட்கிறார். நிபந்தனையை மீறி கேள்வி கேட்ட சாந்தனு ராஜாவைவிட்டுப் பிரிந்து போகிறார் கங்காதேவி அந்த எட்டாவது குழந்தையை அரச குமாரனுக்கு வேண்டிய எல்லாத்தகுதிகளையும் கற்பித்து அவனை சாந்தனு ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவர்தான் மஹாபாரதத்தில் பிதாமகர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர்.


என்ன செய்வது.?சில விஷ்யங்களைப் பற்றிக் கூறும்போது, கதையையும் கொஞ்சம் கூறத்தான் வேண்டியுள்ளது. படிப்பவர்களுக்கும் மஹாபாரதக் கதையின் ஆரம்ப பகுதிகளை ரிவைஸ் செய்ததுபோலும் இருக்கும்.

 

வேட்டையாடச் சென்ற சாந்தனு ராஜா சத்தியவதியை மணக்க வேண்டுமென்றால் அவளது பிள்ளைகள்தான் அரசுக்கு வாரிசாக இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக சத்தியவதியின் தந்தை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டால் தேவவிரதன் என்று பெயர் கொண்ட பீஷ்மர் அரசுரிமையைத் துறக்க வேண்டும். அவர் துறந்தாலும் அவருக்குப் பிறக்கும் வாரிசுகள் உரிமை கோராமல் இருக்க வேண்டி தேவ விரதன் பிரம்ம சாரியாய் காலங்கழிக்க சபதம் பூண்டார்.

சத்தியவதிக்கும் சாந்தனு ராஜாவுக்கும் சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு மகன்கள் பிறந்துஅவர்களுக்கு மணமுடிக்க பீஷ்மர் அம்பிகை அம்பாலிகை எனும் ராஜகுமாரிகளை சுயம்வரத்திலிருந்து அபகரித்து வந்து மணமுடித்தது ஒரு பெரிய கதை. அதை விட்டு விட்டு நம் கதைக்கு வருவோம். சித்திராங்கதன் அல்பாயுசில் உயிர் துறக்க விசித்திர வீரியன் மூலமும் மக்கள் இல்லாமலிருக்க சந்ததி வேண்டி ( யாருடைய சந்ததி.?), தாயார் சத்தியவதி, தன் முதல் கணவர் பராசர மஹரிஷி மூலம் பிறந்த வியாசரிடம் அம்பிகை அம்பாலிகைக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டுகிறார். வியாச மஹரிஷியும் தன் சகோதரர் மனைவிகளைப் புணர்ந்து மக்கட் செல்வம் தருகிறார். அம்பிகையுடன் சேர்ந்தபோது ரிஷியின் கோலத்தைக் கண்டு பயந்து கலவியின் போது கண்களை மூடிக் கொண்டதால் அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாகப் பிறந்ததாம், அவர்தான் திருத ராஷ்டிரர் என்னும் பெயர் பெற்றவர் அம்பாலிகையோ பயந்து முகமெல்லாம் வெளிறிப் போயிற்றாம். அந்தக் கலவியின் விளைவாய்ப் பிறந்தவர் பாண்டு என்று அழைக்கப் பட்டார். இரு பேரப் புத்திரரும் குறையுடன் பிறக்க மறுபடியும் முயல வியாசரை சத்தியவதி வேண்ட அம்பிகை அம்பாலிகை இருவரும்
  விரும்பாமல் அவர்களது பணிப் பெண்ணை வியாசரிடம் அனுப்பி விடுகின்றனர். அந்த சேர்க்கை மூலம் பிறந்தவர் விதுரர்.

.திருதராஷ்டிரர், பாண்டு இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?



இது மட்டுமல்ல. மூத்தவன் பிறவிக் குருடன் என்பதால் இளையவன் பாண்டு வுக்கு முடி சூட்டுகிறார்கள். பாண்டுவுக்கு ஒரு சாபம். மனைவியுடன் கலந்தால் மரணம். அவரும் வெறுத்துப் போய் தன் இரண்டு மனைவிகளுடன் காட்டுக்குப் போய் விடுகிறார். அவரது சந்ததி தழைக்க என்ன செய்வது.? குந்தி தேவிக்குக் கிடைத்த வரம் அதற்கு வழி வகுக்கிறது. மந்திரம் உச்சாடனம் செய்ததும் யமதர்மன், வாயு, இந்திரன் மூலம் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறாள் குந்திதேவி. தான் பெற்ற பேறு பாண்டுவின் இளைய மனைவிக்கும் அருளி, அவளும் தேவர்கள் மூலம் இரண்டு புத்திரர்களை பெற்றுக்கொள்கிறாள். இவர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்கள் சாந்தனு ராஜாவின் சந்ததிகளா.?

 

மஹாபாரதக் கதையில் தர்மம் உபதேசிக்கப் படுவதாகக் கூறப் படுகிறது. குருடன் என்னும் காரணத்தால் அரசைத் துறக்க வேண்டி வந்த திருதராஷ்டிரன் தம்பி பாண்டு இறந்தபோது தன் மக்கள் அரசுரிமை பெற விரும்பியது தவறா? துரியோதனனைவிட  யுதிஷ்டிரர் மூத்தவர் என்பதால் அவருக்கு அரசுரிமை என்பது சரியா.? இந்த மாதிரியான பின்னணியில் பங்காளிச் சண்டையை முன் வைத்து எழுதப் பட்ட மஹாபாரதம் , தன்னுள்ளே நூற்றுக் கணக்கான கிளைக்கதைகளை அடக்கி மிகப் பெரும் இதிகாசமாய் திகழ்கிறது.

 

சுவையான கதை என்பதை ஒப்புக்கொள்ளும்போது, பல நெருடலான விஷயங்கள் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

 

ஒருவரை சுய அறிமுகம் செய்து கொள்ளும்போது அபிவாதயே சொல்லச் சொல்கிறார்கள் ( ஒரு சமூகத்தில் ) அப்படி அறிமுகம் செய்து கொள்ளும்போது  தன்னுடைய குலம் கோத்திரம் போன்றவற்றைக் கூறி இன்னாரின் பேரன் இன்னாரின் புதல்வன்  இன்ன பெயர் கொண்டவன் என்று கூறி வணங்க வேண்டுமாம். அதைப்பற்றிப் படிக்கும்போது சாந்தனுவின் சந்ததிகள் சொல்வது எப்படி இருக்கும் , சரியாக இருக்குமா என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு.

மேலும் இந்தப் பதிவில் நான் குறிப்பிடும் சம்பவங்கள் படித்துப் பெற்றதும் கேட்டுப் பெற்றதுமாகும். சரியெது தவறெது என்று கூறமுடியாது. மூலக் கதையை மூல வடிவில் படித்துணர்ந்தவர் உள்ளாரோ?

--------------------------------------------------------------------------         .    

  

 

 --------------------------------------------------------------------------         .    

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Sunday, June 6, 2021

ஒரு இனிமையான இசையுடன் பாட்டு

 



tதூக்கமுன்   கண்களை  தழுவட்டு மே







Friday, June 4, 2021

அனாக்ராம் விளையாட்டு

 அனாக்ராம்  விளையாட்டு

 DILIP  VENGSARKAR. . எழுத்துக்களை இடம் மாற்றினால்  A SPARKLING DRIVE

 

PRINCESS DIANA------------- END IN A CAR SPIN

 

MONICA LEWINSKY-------- NICE SILKY WOMAN

 

DORMITORY-------------------DIRTY ROOM

 

ASTRONOMER-----------------MOON STARER

 

DESPERATION-----------------A ROPE ENDS IT

 

THE EYES---------------------THEY SEE

 

A DECIMAL POINT---------I’M A DOT IN PLACE

 

AND FINALLY

 

MOTHER IN LAW-----------WOMAN HITLER

 


Wednesday, June 2, 2021

சில நல்ல வார்த்தைகள்


 

நல்ல  வார்த்தைகள் சில

பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்? தலைப்பின் மூலம் வாசகர்களைக் கவர முடியுமா? வாசகர்களைக் கவர்வதா நோக்கம்? உனக்குத் தெரிந்ததை உன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள். அனுபவங்களைப் படிக்கும் போது சிறு கதை படிப்பது போல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பாதகமில்லை. பத்து கட்டளைகள் என்று தலைப்பிட்டால் இவன் யார் நமக்குக் கட்டளையிட என்று பதிவைச் சீந்தாமலே போகலாம் பத்து அறிவுரைகள் என்று தலைப்பிட்டாலும் எழுதுபவன் உயர்ந்த நிலையில் இருக்கும் தோற்றமளிக்கும்  இருந்தாலும் ஒரு தலைப்பு வேண்டுமே. நான் கற்றவற்றையும் என் மக்களுக்குக் கற்பிக்க முயன்றதையும் கூறும் இப்பதிவு சுபாஷிதம் அல்லது நன்மொழிகள் என்று இருந்தால் தவறாய் இருக்காது என்று நம்புகிறேன்

 

நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன, சிலவற்றை அடியோடு மாற்ற வேண்டும் போல் இருக்கும் . மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் ஆனால் மாற்றக் கூடியவற்றை மாற்றும் உறுதி வேண்டும். மாற்ற முடியாதது எது மாற்றக் கூடியது எது என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்                                                                 

நாம் பேசும் வார்த்தைகளில் நமக்குக் கட்டுப்பாடு வேண்டும்.பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான் . பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை. பேசப்பட்ட வார்த்தைகளை மீட்டு எடுக்க முடியாது ஆனால் நடப்பது என்னவென்றால் அதிகமாகத் தவறுதலாகத் திறக்கப் படுவது வாயே..

             

இன்றென்பது நேற்றைய திட்டமிடப்படாத நாளை .நாளை என்ற ஒன்றே நிச்சயமில்லை என்றும் இன்றையப் பொழுதை நலமாகச் செலவிட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டாலும் திட்டமிடப்படாத வாழ்க்கை சுவைக்காது. நல்லதே நடக்கும் என்ற எண்ணமே திட்டமிடுதலின் ஆதாரம் என் தந்தை எனக்குக் கூறிய அறிவுரை நல்லது நடக்கும் என்று நம்பு. அல்லது நடந்தாலும் ஏற்கத் தயாராய் இரு Hope for the best and be prepared for the worst ஆகவே எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் .திட்டமிட்டதைச் செய்ய வேண்டும்

 

வாழ்வில் குறிக்கோள் என்று ஒன்று இருக்கவேண்டும் அந்தக் குறிக்கோளும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும் என் மக்களிடம் நான் கூறுவது உன் குறிக்கோள் நட்சத்திரத்தை எட்டுவதாக இருக்கட்டும் முயற்சி செய்யும்போது குறைந்த பட்சம் மர உச்சியையாவது அடையலாம் உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ருந்தாகுமா என்றுஒரு சொல் வழக்கில் உண்டு, அது நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளத்தான் வழிவகுக்கும்  பருந்துகள் மிக உயரத்தில் பறக்கின்றன ஏன் என்றால் அவை தம்மால் முடியும் என்று நம்புகின்றன.

 

என்னதான் திட்டமிட்டாலும் தன் திறமையில் நம்பிக்கை வைத்தாலும் கடின உழைப்பின்றி அவை சாத்தியமாகாது கடின உழைப்புக்கு மாற்று இல்லை மனிதன் ஒரு தனித்தீவாக இயங்க முடியாது அடுத்தவன் என்று ஒருவன் எப்போதும் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளரை தன் முதலாளி போன்று நினைக்க வேண்டும் என்பார்கள். நம்மை அடுத்தவன் எவ்வாறு நடத்தவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதேபோல் அடுதவரையும் நாம் நடத்த் வேண்டும் தன்னை தனக்கு மேலிருப்பவன் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ அதேபோல் நமக்குக் கீழ் இருப்பவரையும் நாம் பாவிக்க வேண்டும்

எதுவும் செய்யாது இருப்பவர்கள் செய்யும் பணியில் அவர்களை அர்ப்பணித்துக் கொண்டால் சும்மா இருப்பது என்ற ஒன்றே இருக்காது. செய்யும்பணியின் மேல் காதல் கொள்ள வேண்டும் செய்யும் பணி எதுவாயிருந்தாலும் அதில் முதன்மையாக இருக்க விரும்பவேண்டும் தோட்டி வேலை செய்தாலும் தோட்டிகளில் சிறந்தவனாய் இருக்க வேண்டும்

இருந்த நாட்களை விட வர இருக்கும் நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளலாம் என்னுடைய மேற்கூறிய நன்மொழிகளின்படி நடந்தால் என்று கூறிக் கொள்கிறேன்

என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய வாசகங்களை உங்களுடன் பகிர்கிறேன்

 


1)
 Give us the serenity, to accept what can not be changed, courage to change that which should be changed, and wisdom to know one from the other

.

2.) Nothing is opened more often by mistake than the mouth

3.) Today is the tomorrow you didn’t plan for yesterday.

 

4.) Plan your work and work your plan

 

5.) Aim at the stars then atleast you can reach the tree top

 

6.) They fly high because they think they can

 

7.) There is no substitute for hard work

 

8.) What a man dislikes in his superiors, let him not display in his treatment to his inferiors  

      

9.)   Work is the refuge of people who have nothing better to do

 

10.)  In those days , he was wiser than he is now;;he used to frequently take my advice