நேற்று ஒரு நண்பரின் மகன் வீட்டுக்குச் சென்றேன் சங்கீதத்தில் அலாதி ஆர்வம் இருக்கக் கண்டேன் வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் வைத்திருக்கிறான் எனக்குச் சில பாடல்களைப் போட்டுக் காண்பித்தான் இசையில் சிறிதேஆர்வம் உள்ள எனக்கு கர்நாடக சங்கீதத்தை மேலை இசையுடன் தருவது சற்று வித்ட்க்ஹியாசமாக இருந்தது அதன் காணொளியை இத்துடன் இணைக்கிறேன் கர்நாடக இசை வல்லுனர்கள் வாசகர்களில் பலரும் இருப்பதுதெரியும் இம்மாதிரி ஒரு இசைக் கலப்பு பற்றிய உங்கள் கருத்து அறிய ஆவலாய் இருக்கிறேன்
Thursday, July 28, 2016
music with a difference
நேற்று ஒரு நண்பரின் மகன் வீட்டுக்குச் சென்றேன் சங்கீதத்தில் அலாதி ஆர்வம் இருக்கக் கண்டேன் வீட்டில் ஒரு ஹோம் தியேட்டர் வைத்திருக்கிறான் எனக்குச் சில பாடல்களைப் போட்டுக் காண்பித்தான் இசையில் சிறிதேஆர்வம் உள்ள எனக்கு கர்நாடக சங்கீதத்தை மேலை இசையுடன் தருவது சற்று வித்ட்க்ஹியாசமாக இருந்தது அதன் காணொளியை இத்துடன் இணைக்கிறேன் கர்நாடக இசை வல்லுனர்கள் வாசகர்களில் பலரும் இருப்பதுதெரியும் இம்மாதிரி ஒரு இசைக் கலப்பு பற்றிய உங்கள் கருத்து அறிய ஆவலாய் இருக்கிறேன்
Monday, July 25, 2016
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.....அல்லது எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
----------------------------------------------------------------------------------
திட்டமிட்டுசெய்
திட்டமிடுவதைச் செய் என்பதைச் சொல்வதோடு
மட்டுமல்லாமல் கடை பிடிப்பதிலும் அக்கறை காட்டுபவன் நான் நான் திட்டமிடுவதில்
செயலாற்ற வேண்டியது பிறரும் என்பதால் எதிர்பார்ப்பைவிட ஏமாற்றம் சில நேரங்களில் வருகிறது
என் மூத்த
மகனின்வெள்ளிவிழா மண நாள் இம்மாதம் 15-ம் தேதி வந்ததுவாழ்க்கையின் ஒரு முக்கிய
நாள் அன்று அவனுடன் இருக்க விரும்பினோம் பொன் விழாகண்ட நாங்கள் அங்கிருப்பது சுவை
சேர்க்கும் என்றே நினைத்தோம் ஆனால்
வெள்ளிவிழாமணநாள் நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே அவனது நண்பர் குழுவால்
விமரிசையாகக் கொண்டாடப் பட்டு விட்டது ஆகவே அந்த நாளில் இருக்க வேண்டிய சுவை குறைந்திருந்தது ஒரு மாத
முன்பாகவே என் பேரன் நன்கு திட்டமிட்டு
நண்பர்களிடமிருந்து வாழ்த்து ஒளி நாடாவைச்
சேகரித்து ஒருங்கிணைத்து அவன்
பெற்றோரிடம் கொடுத்திருந்தான் அதை
நாங்கள் 15-ம் தேதி அன்றுதான் கண்டோம் . சும்மா சொல்லக் கூடாது அது ஒரு வித்தியாசமான முயற்சிதான் அதை ரகசியமாக வைத்திருந்தது நாங்கள்
எதிர்பார்க்காதது
எனக்கும் சென்னைக்கும்
ராசி இல்லை என்பேன் சென்றமுறை வந்தபோது மழைகாரணமாக பதிவுலக நண்பர்களை சந்திக்க
முடியாமல் போய் விட்டது இந்த முறையும் மழை
இருந்தது ஆனால் இயல்பு வாழ்க்கையை
பாதிக்காமல் இரவு நேரத்தில் மட்டும்
இரண்டு நாட்கள் பெய்தது
சென்னை செல்வது ஒரு வாரகாலத்துக்கும் முன்பாகவே உறுதியாகி விட்டது இந்தமுறை நட்புகள்
பலரையும் சந்திக்க விரும்பினேன்
எல்லோரையும் ஓரிடத்திற்கு வரவழைத்து சந்திப்பதே நல்லது என்று தோன்றியது.
நான் பெங்களூரில் இருந்து கொண்டு ஒருக்கிணைப்பது இயலாதது என்று தோன்றவே தில்லையகத்து
கீதாவிடமும் எங்கள் ப்ளாக் ஸ்ரீராமிடமும்
வேண்டினேன் ஸ்ரீராம் தான் அப்பணிக்கு
ஏற்றவர் அல்ல என்று கூறி மறுதளித்து விட்டார். கீதா இயன்ற அளவு முயற்சிப்பதாகக்
கூறினார் நானும் நண்பர்களுக்கு சுமார் 15 பேருக்கு மடல் அனுப்பி இருந்தேன் மடல் அனுப்பப்
பட்டவர்கள் எல்லோரும் வர முடியாவிட்டாலும்
பதில் எழுதி இருந்தால் மகிழ்ந்திருப்பேன்
வருகிறேன் என்று சொல்லி பின் வர இயலாது
என்று பதில் போட்டவரும் வர இயலாது என்று
பதில் போட்டவரும் குறிப்பிட்ட நேரத்தில் வருவது சிரமம் என்று பதில் போட்டவரும்
விருந்தினர் வருகையால் வருவது சிரமம் என்று பதில் போட்டவரும் தவிர அவசியம் வருவேன்
என்று கூறி வராதவரும் வந்தவரும் போக ஏனையோர் எந்த பதிலும் கூறாமல் இருந்து விட்டனர். நான்தான் வலையுலக நட்புகளைச்
சந்திப்பதில் ஆர்வம் காட்டினேன்ஆனால் வலை உலகத்தில் நட்புகள் என்பதை விட அறிமுகங்களே நிஜம்/, அதிகம் என்று தோன்றுகிறது கடைசியில் அன்று சந்திக்க முடிந்தது திரு
செல்லப்பா மூங்கில் காற்று முரளிதரன் தில்லை யகத்து கீதா மற்றும் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவரது
கணவருடனும் மட்டும்தான் திருமதி பானுமதி (இன்சிடெண்ட்லி என் தம்பி சித்தப்பா மகன்) வெங்கடேஸ்வரனின் மனைவியாவார்
என் மூத்தமகன் பெரும்பாக்கத்தில் ஒரு வீடு புக்
செய்திருக்கிறான் அநேகமாக நாங்கள் அடுத்த
முறை சென்னை வரும்போது அந்த வீட்டுக்குத்தான் இருக்கும்
வலை நண்பர்களுடன்
கூடிப்பேசி இனிவரப்போகும் பதிவர் சந்திப்புகள் பற்றிய அபிப்பிராயங்களைப் பெறலாம் என்றிருந்தேன்
சென்னைக்கு வந்தால்
தனியாக என்னால் எங்கும் போக முடிவதில்லை. என் மகனையே நம்ப வேண்டி இருக்கிறது
அவனும் வேலை முடிந்து வீட்டுக்கு வர இரவு எட்டுமணி ஆகிறது.பிறகு எங்கு செல்ல
யாரைப் பார்க்க….?
சென்னையில் எடுத்த சில
புகைப்படங்களைப் பதிவிடுகிறேன்
மகனும் மருமகளும் |
வெள்ளிவிழா மணநாள் |
காசா க்ராண்ட் அடுக்குமாடிக் குடியிருப்பு |
தில்லையகத்து கீதா என் மனைவியுடன் |
செவிக்கு உணவு.இல்லாதபோது சிறிது........ |
மதிய உணவு......? |
திரு முரளிதரன் , திரு செல்லப்பா |
Thursday, July 21, 2016
சில பகிர்வுகள்
சில பகிர்வுகள்
------------------------
I இந்தமுறை ஒரு
வித்தியாசமான பதிவு.
எழுதுவதற்கு செய்திகள் இல்லாவிட்டால்தான் என்ன
?பகிர்ந்து கொள்ளச் செய்திகள் இருக்கிறதே எனக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உண்டு.
ஆனால் ஆர்வம் உள்ள அளவு திறமை இல்லை. இந்த
நிலையில் வெங்கட் நாகராஜ், ராமலக்ஷ்மி போன்றோர் வெளியிடும் படங்கள் என்னைப்
பொறாமைப்பட வைக்கிறது. இதைக் குறைக்க எனக்கு வந்த பல புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்
ஆயிரத்தில் ஒன்றா கோடியில் ஒன்றா |
மேகமா தேவதையா |
ஆயிரம் தாமரை மொட்டுக்களே |
பனிக்கட்டியில் ஐஸ் ரோஜா |
இத்தனை பெரிய பறவையா மேகங்களின் விளையாட்டு |
-------------------------------------------------------------
இந்தமாதம் பத்தாம் தேதி என் இளைய மகனின் மணநாள். அவன் வீட்டுக்குப் போகும் முன் திருமண பந்தத்தில் இணையப் போகும் ஒரு ஜோடியைக் காணச் சென்றிருந்தோம்
வருங்கால வரனும் வதுவும்
திருமண பந்தத்தில் இணையப் போகும் ஜோடி |
Protect your nature and then you can say "I LOVE MY NATURE |
Wednesday, July 13, 2016
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
-------------------------------------------------------
எழுபதுடன் எட்டிலும் நல்ல பையன் நான்
கண்முன்னே கார்குழல் விரித்த கன்னியர்(இப்போதெல்லாம் பின்னிய கூந்தல் காண்பதரிது)
பத்மினி,சித்தினி,சங்கினி, அத்தினிப் பெண்டிர்
பவிசாக வந்தாலும் பத்திர காளியாய் நின்றாலும்
பயமாய் இருக்கிறது.. தலை தூக்கிக் கண்டாலே
காவலரிடம் புகார் செய்வரோ, என்றே அச்சம்.
அவர்களுக்கென்ன ..பாரதியே கூறிவிட்டான்
நிமிர்ந்து நடக்கவும்
நேர்கொண்டு பார்க்கவும்.
எனக்கேன் இந்த பயம்..?
பேதையோ, பெதும்பையோ
மங்கையோ மடந்தையோ , அரிவையோ தெரிவையோ
இல்லை பேரிளம்பெண்ணோ , பார்வையால்
துகில் உரியப்பட்டு பருவ பேதமின்றி சிதைக்கப்படும்
அச்சத்தின் உச்சத்தில் வளைய வரும் தாய்க்குலம்
யாரைப் பார்த்தாலும் பாம்பா பழுதையா என்றறியாது
தற்காப்புக்காக எதுவும் செய்யலாம்தானே
பாரதிதாசன் கூறியதுபோல் “ கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கென குதித்ததைப் போல் கிளைதோறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதையெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன் வால் பார்க்கும்.”
பாவிகள் பலரது செயல்கள்
பூவையரிடையே அச்சத்தை விளைவிக்க நானிருக்கிறேன்
எழுபதுடன் எட்டிலும் நல்ல பையனாக.
--------------------------------
Saturday, July 9, 2016
வர்ணாசிரம தர்மம்
வர்ணாசிரம தர்மம்
------------------------------
தெய்வத்தின்
குரலிலிருந்து சில பகுதிகள் அடைப்பில் இருப்பவை என் கருத்துகள் மிகக் குறைந்த அளவில் குறுக்கிடுகிறேன் தெய்வத்தின் குரல் என் குரலாகி விடக்கூடாது அல்லவா?
காஞ்சி பெரியவர்( படம் இணையத்திலிருந்து ) |
மதம் என்பது என்ன? ஆத்மாவுக்கு வந்திருக்கிற வியாதி தீருவதற்கு வைத்தியம் சொல்வதுதான் மதம் (இந்தக் கருத்து சரியா.?ஆத்மா
என்பதேஇன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாத
நிலையில் அதற்கு வைத்தியமா?)
மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் விதித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென வைத்துக்கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாசம், சகல ஜீவராசிகளிடத்துலும்
சமமான அன்பு - இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட 'ஸாமான்ய தர்மங்கள்'(.எதுவுமே
பழக்கத்தில் இல்லாவிட்டால்
மதிப்பு குறையும் ) அது தவிர 'வர்ணம்' என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.இந்த விசேஷ தர்மங்களையும் சாமானியமாக்கியிருந்தால் அவற்றை எவருமே அநுஷ்டிக்காத நிலைதான் உண்டாகியிருக்கும்.(இப்போது மட்டும் அனுஷ்டிக்கிறார்களா) இதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: புத்த மதத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பதைப் பொது தர்மமாக வைத்தார்கள். ஆனால் இன்று பௌத்த தேசங்களில் என்ன பார்க்கிறோம்? எல்லோருமே மாமிசம் உண்பவர்களாக இருக்கிறார்கள். நம் ரிஷிகளும், தர்ம சாஸ்திரக்காரர்களும் மநுஷ்ய சுபாவம் நன்றாகத் தெரியும். அதனால் புலால் உண்ணாமையைச் சிலருக்கு மட்டுமே விசேஷ தர்மமாக வைத்தார்கள்(இதுவாவது அனுஷ்டிக்கப் படுகிறதா). இதைப் பார்த்து மற்றவர்களும் விரதங்கள், நோம்பு நாட்கள், மூதாதையர் திதி ஆகிய தினங்களில் மாமிச உணவை நீக்கி விடுகிறார்கள்.
இதை எல்லாம் எதற்குக் சொல்கிறேன் என்றால், தற்போதுள்ள மதங்கலெல்லாம் அந்தந்த தேசங்களில் தத்தளிக்கின்றன என்பது என் அபிப்ராயமும் இல்லை. இதில் எனக்கு சந்தோஷமும் இல்லை என்பதற்குத்தான் டோயீன்பீ, பால் பரன்டன், கோஸ்ட்லர் மாதிரி பிரபலமானவர்களுடைய அபிப்ராயத்தையே சொன்னேன். லோகம் பூராவிலும் மத நம்பிக்கையின்மை (disbelief) , நாஸ்திகம் (atheism) எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகி, இப்போது எல்லா மதங்களும் தத்தளிக்கும்படியான நிலைமை வந்திருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே திருப்பிச் சொன்னேன்.
யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது;(இந்த வேறுபாடுகள் பிடிப்புக் குறையாமல் தொடரவேண்டும் என்பது அர்த்தமா) இது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது; அதாவது ஒரு மதம் ஜனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால், அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமலேயிருக்கும் என்று நினைக்கிறோம்.(அதுதானே உண்மை)
நம் தேச சரித்திரத்தில் பார்க்கிறமாதிரி, அலெக்சான்டர் காலத்திலிருந்து பல அந்நிய மதஸ்தர்கள் வேறு அலைஅலையாகப் படை எடுத்து வந்தார்கள் என்றால், இப்படிப் பட்ட மதம் இருந்த இடம் தெரியாமல் புதைந்துதான் போயிருக்க வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால் இதற்கு நேர் மாறாக இருக்கிறது; எல்லாருக்கும் அநுஷ்டானம் ஒன்று என்று சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக் கொண்டுபோயிருக்கிறது. இன்றைக்கு உயிரோடிருக்கிற அப்படிப்பட்ட மதங்களுக்கும் பெரிய ஆபத்து இருப்பதாக அந்த மதத்து அறிவாளிகளே சொல்கிறார்கள். ஆனால் பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் 'என்னை யார் என்ன செய்துவிடமுடியும்?' என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்
ஆயிரம் பதினாயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொடுப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெரும்பான்மையாக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா? இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தார்களா? அதுவும் இல்லை. குறைந்த பட்சம் திரவிய பலமாவது அவர்களுக்கு இருந்ததா? அப்படிக்கூட இல்லை. பிராமணன் பணம் சேர்ப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணமும் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெருமாபான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்? மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள்? அப்படி அவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து, 'இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம், பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம்' என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தினால் அந்தப் புது மதங்களில் சேர்ந்திருக்கிறார்களேயொழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசீயில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன! பார்த்தால், பழைய வைதிக மதமே "செத்தேனோபார்" என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது.
(மதம் என்பதே சில அனுஷ்டானங்கள் என்றாகி விட்டதுஅனுஷ்டானங்கள் மனிதனை மேல் நிலைக்குக் கொண்டு போகுமா? இவை எல்லாம் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் ஆண்டை அடிமை நிலையைத்தான் உருவாக்கி இருக்கிறது)
நவத்வாரம் உள்ள உடம்பில் உயிர் தங்கியிருப்பதுதான் ஆச்சரியம். வெளியே போவது ஆச்சரியமே இல்லை' என்று ஒரு பெரியவர் பாடினார். அம்மாதிரி உள்ளே பிரிந்து வெளியிலிருந்தும் ஓயாமல் தாக்கப்பட்ட ஹிந்து மதம் செத்திருந்தால் ஆச்சரியமே இல்லை; சாகாததுதான் ஆச்சரியம்!
நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்து பார்த்தால் என்ன தெரிகிறது? மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால்,
அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரீகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது(இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல அதனால்தான் நம் சமூகம் சீர்குலைந்து வருகிறது). நவீன யுகத்தில் 'சமத்துவம்' (equality) என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது? அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது( தன் கருத்துக்கு பல மேனாட்டு அறிஞர்களைத்
துணைக்கழைக்கும் பெரியவர் அந்த மேனாட்டு
அறிஞர்களின் கருத்து வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கிறதா என்று சொல்லவில்லை)
வேற்றுமையில் ஒற்றுமை வர்ண தர்மத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. முதலில் ஆகாயக் கப்பலில் காற்றுப் பையை (gas bag) ஒன்றாக அமைத்தார்கள். பிறகு அதில் ஓர் ஓட்டை விழுந்தால்கூடக் கப்பலே கெட்டு விழுந்து விடுகிறது என்று கண்டார்கள். அதனால் சிறிது சிறிதாகப் பல காற்றுப் பையை வைக்கலானார்கள். தனித்தனியாக இருந்தாலும் எல்லாம் ஒரே இடத்தில் நெருங்கியிருந்து ஒன்றையே தாங்கிக் கொண்டிருந்தன. கப்பல் பழுதடையாமல் இருந்தது. இதுவேதான் நம் மதத்தில் தனித்தனி தர்மம் என்று பிரித்து வைத்திருக்கிற ஏற்பாடு. வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்பது இதுதான்.
ஏகப்பட்ட சுல்லிக் கட்டைகளை சேர்த்துப் பிடித்து ஒரு கட்டாகக் கட்டுவது என்றால் அது சிரம சாத்தியமான காரியம். அப்படியே சிரமப்பட்டு ஒரு கட்டாகக் கட்டினாலும்கூட அது சுலபத்தில நெகிழ்ந்து கொடுத்துத் தளர்ந்து விடும். முதலில் ஒரு சுள்ளியை ஆட்டி எடுக்கிற மாதிரி நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டாலே போதும். அந்த ஒன்றை எடுத்ததால் தளர்ச்சி ஜாஸ்தியாகி இன்னொரு சுல்லியைச் சுலபமாக உருவி விடலாம். இப்படி இரண்டு மூன்று என்று எடுத்து விட்டால் அப்புறம் கட்டு ஒரேயடியாக தொள தொளவென்று தளர்ந்துபோய் அத்தனை சுள்ளிகளும் தனியாக விழுந்துவிடும்.
மாறாக முதலிலேயே அத்தனை சுள்ளிகளையும் ஒரே கட்டாகக் கட்டாமல் கைக்கு அடக்கமாகப் பத்துப் பதினைந்து என்று சேர்த்து சின்னக் சின்னக் கட்டுகளாகப் போடுவதாக வைத்துக் கொள்ளுங்கள்; இது ஒவ்வொன்றும் கையடக்கமாக இருப்பதால் தளராதபடி நல்ல பிகுவாகக் கட்டிவிட முடியும். அப்புறம் இந்தச் சின்ன சின்னக் கட்டுகளையெல்லாம் சுலபத்தில் ஒன்றாக அடுக்கி எல்லாவற்றையும் சேர்த்து பெரிய கட்டாகப் போடலாம். ஒட்டு மொத்தமாக அத்தனை சுள்ளிகளையும் வைத்துப் போடுகிற கட்டைவிட இப்போது நாம் போடுகிற பெரிய கட்டு இன்னும் விறைப்பாக, உறுதியாக இருக்கும். அது மட்டுமில்லை. இந்தப் பெரிய கட்டு கொஞ்சம் தளர்ந்தால்கூட ஒரு தனிச் சுள்ளி விழுகிற மாதிரிச் சின்னச் சுள்ளிக்கட்டு விழாது. அதாவது பெரிய கட்டு பந்தோபஸ்தாகவே இருக்கும். என்றைக்கும் அது கட்டு விட்டுப்போகாது. ( உதாரணம் என்னவோ நன்றாய்த்தான் இருக்கிறதுஆனால்…விளைவுகள் எதிர்பாராதது கட்டுகளாய் நெகிழ்ந்து போவது கண்கூடு
இனிவரும் பகுதிக்கு வாசகர்களின் நேர்மையான கருத்தை வரவேற்கிறேன்
சின்னக் கட்டுகளில் எதுவோ ஒன்று தளர்ந்து கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுகூட அதிலுள்ள சுள்ளிகள் மட்டும் விலகுமே தவிர, மற்ற கட்டுகள் எல்லாம் அப்படி அப்படியே பத்திரமாக இருக்கும். அவற்றிலுள்ள சுள்ளிகள் கொஞ்சங்கூடக் கலகலத்துப்போய் விடாது.
ஒரு பெரிய ஜனசமூகத்தை ஒரே அமைப்பிலே போட்டு கட்டுகிறேன் என்றால் அது முடியாத காரியம். ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார், எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பது? இதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள். இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக - ஜாதிகளாக - பிரிந்தார்கள். அவரவருக்கும் "ஜாதி நாட்டாண்மை" என்று ஒன்று இருந்தது. அந்தந்த நாட்டாண்மைக்காரக்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள். இப்போது சர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறது. ஆனால் இது ஒன்றும் குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லை. அதனால் குற்றங்கள் பாட்டுக்கு வளர்ந்துகொண்டேத்தான் இருக்கின்றன. நாட்டாண்மையில் கொடுத்த தண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில் இறங்காமல், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும் யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். அதுவரை போலீசுக்கும், மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.
இப்போது கலகம் செய்கிறவர்களிடம் போலீஸ் வந்தால் போலீசாரிடமே கலகக்காரர்கள் அடிதடியில் இறங்குகிறார்கள்! ஆனால் முன்னமே ஜாதி நாட்டாண்மையில் எதிர்த்து இப்படி யாரும் சண்டை போட்டதில்லை. காரணம் இப்போதிருக்கிற போலீஸ் வெளியிலிருந்து செய்கிற கட்டுப்பாடாயிருக்கிறது. ஜாதி நாட்டாண்மையிலோ, 'நம்மவர்கள்' என்ற பாந்தவ்யம், அபிமானம் இருந்தது. இதனால் ஆயுத பலமும் படை பலமும் இல்லாமலே அன்றைய நாட்டாண்மை இன்றைவிட வெகு சிறப்பாகக் குற்றங்களைக் குறைத்து வந்தது. எல்லாரும் ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆச்சாரங்கள் என்று பிரிந்திருந்தும் ஒற்றுமையாக இருந்தார்கள்.
இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள்நடைமுறையில் எதிர்க்கப்பட்டு வரும் எண்ணங்களுக்கு மாறானது. இம்மாதிரி ஜாதிகள் உருவாக்கப்பட்டது எப்போது, யாரால் என்பவை மறைக்கப் படுகின்றனஇதெல்லாமே ஒரு afterthought என்றே தோன்றுகிறது ஒரு மடாதிபதியின் சப்பக்கட்டு justification என்றே எண்ணத் தோன்றுகிறது எல்லாமே சரியென்றால் அவை ஏன் பின்பற்றப் படுவதில்லை
-
Top of Form
Bottom of Form
'
Subscribe to:
Posts (Atom)