கட்டவிழ்த்தோடு ம் கற்பனைகள் (900)
-----------------------------------------------------
முன்பொரு பதிவில் நான் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
எமனென்னை நெருங்கிவிட்டான் என்னும் நினைப்பில் எழுந்தவுடன் அவனை நான் மிதித்து விட்டேன் என்று மனைவியிடம் கூறினேன் காலா என் காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் என்காலால் என்ற பாரதியின் வரிகளைக் நினைத்தோ என்னவோ
ஆனால் காலன் என்ன கட்டியங்கூறியா வருகிறான் மேலும் காலனைப் பற்றிய நம் உருவகங்கள் திசை மாறியவை ஏதோ எருமை மாட்டின் மீதேறி வந்து பாசக் கயிறு கொண்டு கட்டி இழுப்பான் என்றெல்லாம் பயமுறுத்தியே வளர்க்கப்பட்டிருக்கிறோம் சாவு என்ன பயம் தரக் கூடியதா ? சாவின் வலி அனுபவித்தவர்கள் கூறி இருக்கிறார்களா ? எல்லாமே கற்பனைகள் தானே
ஏதோ ஒரு நாள் நாம் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே இறப்பின் வேதனையோ மகிழ்வோ யாராவது சொல்ல முடியுமா நம் இறப்பால் நமக்கு எந்த தீங்கும் இல்லை நம்மை நாடி இருப்பவர்களுக்கே வலி பயம் எல்லாம் எனக்கு என்னவோ இதெல்லாமே அதீத கற்பனைகள் என்றே தோன்று கிறது இறப்பு தவிர்க்க இயலாதது வரும்போதுமகிழ்வுடன் ஏற்போமே ஒவ்வொரு நாளும் உறக்கம் நீங்கி எழும்போது வாழ்வில் ஒரு நாள் வரவு என்றும் போகுமிடத்துக்கு கொஞ்சமருகே வந்துவிட்டோம் என்றும் மட்டுமே நினைக்கிறேன் இதை எழுதிக் கொண்டே வரும்போது முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவன் எழுதிய வரிகளிலிருந்து

நோவாலே
மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம்
சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே
அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே
ஆற்றில் வீழ்ந்தான்;பார்மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு
கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும்
பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக்
கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே
அழிந்து போகும் “
சாவு என்று பாரதி கூறியது இந்த ஊன் உடம்பின்
அழிவையே நானொரு முறை எழுதி இருந்ததும்
நினைவுக்கு வருகிறது
வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று
நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும் உங்கள் கவிதை வரிகளால்
சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம் வீழ்ந்து பட்ட நாள்.
இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும் இருக்கிறீர்கள்.
Intuition என்னும் ஆங்கில வார்த்தையை உணர்வு என்று
தமிழ்ப்படுத்தலாமா
எனக்கு இந்த சாவு - அப்படிச் சொல்வதை விட இறப்பு என்று சொல்வது கொஞ்சம் வீச்சு
குறைவாய் இருக்கிறதோ ? என்னவாய் இருந்தாலு ம் புரிந்து கொள்பவரைப் பொறுத்தது அது எண்பதாவது
வயதில் இருக்கும் நான் எப்பவும் அதை எதிர் நோக்கி இருக்கிறேன் ஒருமுறை நான்
எனது பிறந்த நாள் வரை இருக்க மாட்டேன்
என்னும் உள்ளுணர்வு கூறியது எனக்கோ இதை யாரிடமாவது பகிர ஆசை ஆனால் உறவுகளில் என் மக்கள் அது பற்றி
நினைக்கவே விரும்பமாட்டார்கள் என் மனைவியோ
என்னோடு குடும்பம் நடத்தியவள் என்பதால்
இதுவும் என் பைத்தியக் காரத்தனம் என்றே கருதுவாள்
அவளுக்கும் ஏன் எல்லோருக்கும் தெரியும் யாரும் நிரந்தரம் இல்லை என்று இருந்தாலும் எண்ணப்பகிர்வுகளை யாரும் விரும்புவதில்லை ஆனால்
நானோ எல்லாவற்றிலும் ஒரு படி முன்னதாகவே
சிந்திப்பவன்
நான் நன் மாண்டபின் என்னை எரிக்கவா புதைக்கவா என்னும் கேள்வி வருமா வந்தாலும் அவர்களென்ன செய்தாலும் எனக்குத் தெரியவா போகிறது எங்கள் பக்க வழக்கப்படி எரிப்பார்கள் என்றே நினைக்கிறேன் எரித்த இடதில் ஏதாவது நினைவுச் சின்னம் வைப்பார்களா அடப் போடா உனக்கும் இம்மாதிரி எண்ணங்களா அதீதக் கற்பனைகளுக்கு எங்காவது முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் தானே நான் இங்கே இப்போது வைக்கிறேன்
(இந்த மதிரி கற்பனைகள் எனக்கு மட்டும்தானா என்னும் சந்தேகமிருக்கிறது)
இந்த பதிவுக்கும் காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது ஏன் என்றால் பதிவுகளில் வருபவற்றுக்கு சிலர் இல்லாத அர்த்தத்தை கற்பிப்பது என் அனுபவத்தில் கண்டது