Monday, January 8, 2018

தர்க்கமா குதர்க்கமா



                                                     தர்க்கமா குதர்க்கமா
                                                     --------------------------------

கேள்வி:- இரண்டுபேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவருடைய முகம் அழுக்காக இருக்கிறது. இருவரில் யார் முகத்தை கழுவுவார்கள். ?

பதில்:- அழுக்கான முகத்தோடு இருப்பவரே கழுவுவார்,

தவறு,! தூய்மையான முகத்தை உடையவரே கழுவுவார். யோசித்துப்பார். அழுக்கான முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப்பார்த்து தன் முகமும் அதேபோல் இருப்பதாக நினைத்துக் கொள்வார். சுத்தமாக இருப்பவரோ அழுக்கானவரின் முகத்தைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக  நினைத்துக் கொள்வார்.எனவே சுத்தமான முகம் உடையவரே முகத்தைக் கழுவுவார்...!

மிகவும் சாமர்த்தியமான பதில்தான் இன்னொரு கேள்வி கேளுங்கள்...

கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவரது முகம் சுத்தமாக இருக்கிறதுமற்றவரது முகம் அழுக்காக இருக்கிறது யார் முகத்தைக் கழுவுவார்.?

பதில்:- மீண்டும் அதே கேள்வியா?இதற்கான பதில் தெரிந்ததுதானே. தூய்மையான முகத்துடன் இருப்பவர்தான் கழுவுவார்.

தவறு, .! இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள். ஒரு சின்ன லாஜிக்கை நினைத்துப் பார். அழுக்கு முகத்துடன் இருப்பவர் சுத்தமான முகத்துடன் இருப்பவரைப் பார்ப்பார். எனவே தனது முகமும் சுத்தமாக இருப்பதாக நினைப்பார். சுத்தமான முகத்தை உடையவர் ச்ழுக்கான முகமுடையவரைப் பார்த்து தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக்
    
    தன் முகத்தை கழுவுவார். அதைப் பார்த்து அழுக்கான முகமுடையவரும் தன் முகத்தைக் கழுவுவார்.எனவே இருவருமே தங்கள் முகத்தைக் கழுவுவார்கள்.

நான் இதை யோசித்துப்பார்க்கவில்லை. எனது தர்க்கத்தில் இப்படிஒரு தவறா.?
மீண்டும் கேள்வி கேளுங்கள்

கேள்வி:- இரண்டு பேர் சிம்னியில் இருந்து இறங்கி வருகிறார்கள்.ஒருவர்
முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவருடையது அழுக்காக இருக்கிறது. யார் முகத்தை கழுவுவார்.?

பதில்:- மீண்டும் அதே கேள்வி....! இருவருமே முகத்தைக் கழுவுவார்கள்.

தவறு. இருவருமே கழுவ மாட்டார்கள். அழுக்கான முகமுடையவர் சுத்தமான முகம் இருப்பவரைப்பார்த்துத் தன் முகமும் சுத்தமாக இருப்பதாகநினைத்துக் கொள்வார். சுத்தமான முகமுடையவர் மற்றவரைப் பார்த்துத் தன் முகமும் அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வார். ஆனால் அழுக்கான முகமுடையவர் தன் முகத்தைக் கழுவாதது பார்த்துத் தானும் கழுவமாட்டார். எனவே இருவருமே கழுவ மாட்டார்கள்.

தயவு செய்து இன்னொரு முறை தேர்வு வையுங்கள்
கேள்வி:- இரண்டுபேர் சிம்னியிலிருந்து இறங்கி வருகிறார்கள். ஒருவர் முகம் சுத்தமாக இருக்கிறது. மற்றவர் முகம் அழுக்காக இருக்கிறதுயார் முகத்தைக் கழுவுவார்கள்.?

பதில்:- இருவருமே கழுவ மாட்டார்கள்....!

தவறு.இரண்டுபேர் சிம்னியிலிருந்து கீழே வரும்போது ஒருவர் மட்டும் தூய்மையான முகத்துடனும் மற்றவர் அழுக்கான முகத்துடனும் எப்படி இருக்க முடியும் .எனவே கேள்வியே முட்டாள்தனமானது. முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயன்றால் விடைகளும் முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.

யூத மதத்தைச் சார்ந்த  ராபி ஷ்வார்ட்ஸிடம் ஸீன் கோல்ட்ஸ்டீன் என்ற 20 வயது இளைஞன்  தான் தத்துவத்தில் பட்டம் பெற்றிருப்பதாகவும் சாக்ரடீஸின் தர்க்கத்திலும் டாக்டர் பட்டம் பெற்றிருப்பதாகவும் கூறி தால்மத் பற்றிப் படிக்கக் கருதுவதாகவும் தெரிவித்தான்
அதற்கு ராபி வைக்கும் பரிசோதனையில் வெற்றி பெற்றால் அதைச் சொல்லித் தருவதாகக் கூறி வைத்த பரீட்சையே மேலே படித்தது.
உண்மையைத் தேடுவதுதான் முக்கியமே தவிர  விடையைக்கண்டுபிடிப்பது முக்கியமல்ல. அண்மையில் இறையன்பு அவர்கள் எழுதி இருந்ததைப் படித்ததில் இருந்து

இன்னொரு பகுதி

காலை நேரத்தில் ஒருவர் புத்தரிடம் வந்து கடவுள் இருக்கிறார் அல்லவா “ என்று கேட்டார்.
புத்தர் இல்லைஎன்றார்
மதியம் ஒருவர் வந்து கேட்டார்கடவுள் இல்லைதானே
புத்தர் “ இருக்கிறார் “ என்று கூறினார்.
மாலையில் ஒருவர் வந்து “ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை “ என்றார்.
உடனே புத்தர் “ நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்என்றார்.
புத்தருக்கு அருகில் இருந்தவருக்கு குழப்பமாகி விட்டது. “ நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச்சொல்கிறீர்களே ஏன் “ என்று கேட்டார்.
கேள்வி கேட்டவர்களுக்கு ஏற்ற மாதிரி பதில் இருந்தது “என்றார் புத்தர்.
“காலையில் வந்தவர் கடவுள் இருக்கிறார் என்று ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வந்து என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். நான்இல்லைஎன்று சொன்னேன். அதனால் அவர் சுயமாகத் தேடத் துவங்குவார். மதியம் வந்தவர் ‘கடவுளில்லைஎன்று முடிவு செய்துவிட்டு என்னிடம்வந்து கேட்டார்..அவரிடம் இருக்கிறார் என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ ஏற்கனவே தேடிக்கொண்டிருக்கிறாரெனவே அவர் பார்வை சரியானது என்று விளக்கினேன். கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை.கேள்வி கேட்பவரைப் பொறுத்தே பதில் அளிக்கிறேன் “ என்றார்.

.

.



31 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றிசார்

      Delete
  2. கேள்வியும் பதிலும் குழப்பினாலும் ஆழ்ந்து சிந்தித்தால் தெளிவு கிடைக்கத்தான் செய்கிறது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எப்படி பதில் சொன்னாலும் குழப்ப முடிவதே வாதத்தின் சிறப்பு

      Delete
  3. நல்ல தர்க்கம் தான். முதலில் வந்தவை, சிம்னியிலிருந்து இறங்குவது ஏற்கெனவே எங்கேயோ படிச்சிருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நினைவைத் தூண்டியதில் மகிழ்ச்சி நானே இறையன்புவின் எழுத்தை எங்கோ படித்து பகிர்ந்தது

      Delete
  4. நல்ல தர்க்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. முன்பெல்லாம்வாதத்தில் வெல்வது இது போன்ற கேள்விகள் கேட்டதால் இருக்குமோ

      Delete
  5. நல்ல கிளவியும்:).. நல்ல நல்ல பதில்களும்:)

    ReplyDelete
  6. இரண்டுமே அருமையான பகிர்வு ..
    அதிலும் இரண்டாவது பலருக்கு பொருந்தும் அவர்களாக சில விஷயங்களை தங்களுக்குஏற்றவாறு டிசைட் அண்ட் டிசைன் செஞ்சிட்டு நம்மகிட்ட வருவாங்க :) . புத்தர் மூன்றாமவருக்கு சொன்ன பதிலும் விளக்கமும் சூப்பர்ப்

    ReplyDelete
    Replies
    1. பதிலைத் தேடவைக்கும் வழி

      Delete
  7. கேள்விகள் பல விதம் விடைகள் தான் தேடலாக இருக்கு ஐயா! அருமையான விளக்கப்பகிர்வு புத்தர் பற்றி.

    ReplyDelete
    Replies
    1. விடைகளைத்தேடுவதே சிறப்பு

      Delete
  8. புத்தரின் ஔள் வாக்கினை ஏற்கனவே படித்திருக்கிறேன்..

    தர்க்கமோ குதர்க்கமோ - அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்தது..

    ReplyDelete
    Replies
    1. வாதங்களில் வெல்வது போன்ற தோற்ற மளிக்கும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  9. புத்தரின் அருள் வாக்கினை ஏற்கனவே படித்திருக்கிறேன்..

    தர்க்கமோ குதர்க்கமோ - அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்தது.

    ReplyDelete
  10. நான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்தேன். எனக்கு பெரிய பேர் கிடைத்தும் 10 மாதத்தில் அந்த கம்பெனியிலிருந்து ரிசைன் பண்ணிவிட்டேன் (எல்லாம் இளமை முறுக்குதான்). பிறகு 2 1/2 வருடம் கழித்து அந்தக் கம்பெனி நேர்முகத்திற்குச் சென்றேன். (அந்த கம்பெனி வரலாறிலேயே, இருவர்தான் இரண்டாவது முறை வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள். ஒன்று, அந்த கம்பெனி தலைவருடன் படித்த அவருடைய நண்பர், இரண்டாவது 26 வயதாகிய நான்) அப்போ, கணிணித் துறைத் தலைவர் என்னிடம் ஒன்று கேட்டார்.

    நீங்கள் இந்தக் கம்பெனியில் இந்தத் தடவை 5 வருடங்களாவது இருப்பீர்களா? நான் உங்களை நம்பினால் இந்தக் கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை. நான் உங்களை நம்பவில்லை என்றால், இந்தக் கேள்வி கேட்டுப் பயனில்லை என்றார்.

    அதனை உங்கள் இடுகை ஞாபகப்படுத்திவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கொன்று முடிச்சு போட்டு விட்டீர்கள் போல வருகைக்கு நன்றி சார்

      Delete
  11. நிலைப்பாடு என்பது இடத்திற்குத் தகுந்தாற்போல வாய்ப்புண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாதங்களில் வெல்வஹு எப்படி என்று சொல்கிறதோ

      Delete
  12. இரண்டுமே நல்ல விஷயம். என்ன கேள்வியோ அதற்குத் தகுந்தாற் போல பதில்... ஒரே கேள்விக்கு பல பதில்கள் கொடுப்பதும் ஒரு திறமை தான்.

    ReplyDelete
  13. இம்மாதிரி கேள்விகள் கேட்டால் வாதில் வெல்வது அரிதாகும்

    ReplyDelete
  14. புத்தரின் பதில் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மேம்

      Delete
  15. ரசித்தோம் சார்...ஆனால் எந்தப் பதில் சரி என்று சரியாகச் சொல்வதுகடினம்தான்

    ReplyDelete
    Replies
    1. அதுதானே தர்க்கம் குதர்க்கம் என்பது

      Delete
  16. தர்க்கத்துக்கு எதிர்ப்பதம்தான் குதர்க்கம்னு இப்போத்தான் எனக்கு விளங்குது சார்.

    ஸ்பெக்குலேசன் என்று வந்துவிட்டால். ஒவ்வொரு பர்ம்யுட்டேஷன் கம்பினேசனும் சரி என்றும் வாதிடலாம். பொதுவாக விஞ்ஞானத்தில் எல்லாப் பாஸிபிலிட்டிகளையும் எடுத்து, எது சரியாக இருக்க வாய்ப்பிருக்கு என்று விவாதிப்பார்கள்.

    கடவுள் இல்லைனு வாதிட்டால், நாத்திகனுக்கு அது தர்க்கம். அதே வாதம், ஆத்திகர்களுக்கு குதர்க்கம்.

    யாரு சொல்கிறார்? யாரிடம் சொல்கிறார் என்பதைப் பொறுத்து அது தர்க்கம் அல்லது குதர்க்கம் என்பது மாறுபடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. கற்றுக் கொள்ள வந்தவரை ராபி மடக்கிய விதம் தான் பதிவே சார்

      Delete