கட்டவிழ்த்தோடு ம் கற்பனைகள் (900)
-----------------------------------------------------
முன்பொரு பதிவில் நான் குப்புற வீழ்ந்தெழுந்தபோது
எமனென்னை நெருங்கிவிட்டான் என்னும் நினைப்பில் எழுந்தவுடன் அவனை நான் மிதித்து விட்டேன் என்று மனைவியிடம் கூறினேன் காலா என் காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் என்காலால் என்ற பாரதியின் வரிகளைக் நினைத்தோ என்னவோ
ஆனால் காலன் என்ன கட்டியங்கூறியா வருகிறான் மேலும் காலனைப் பற்றிய நம் உருவகங்கள் திசை மாறியவை ஏதோ எருமை மாட்டின் மீதேறி வந்து பாசக் கயிறு கொண்டு கட்டி இழுப்பான் என்றெல்லாம் பயமுறுத்தியே வளர்க்கப்பட்டிருக்கிறோம் சாவு என்ன பயம் தரக் கூடியதா ? சாவின் வலி அனுபவித்தவர்கள் கூறி இருக்கிறார்களா ? எல்லாமே கற்பனைகள் தானே
ஏதோ ஒரு நாள் நாம் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே இறப்பின் வேதனையோ மகிழ்வோ யாராவது சொல்ல முடியுமா நம் இறப்பால் நமக்கு எந்த தீங்கும் இல்லை நம்மை நாடி இருப்பவர்களுக்கே வலி பயம் எல்லாம் எனக்கு என்னவோ இதெல்லாமே அதீத கற்பனைகள் என்றே தோன்று கிறது இறப்பு தவிர்க்க இயலாதது வரும்போதுமகிழ்வுடன் ஏற்போமே ஒவ்வொரு நாளும் உறக்கம் நீங்கி எழும்போது வாழ்வில் ஒரு நாள் வரவு என்றும் போகுமிடத்துக்கு கொஞ்சமருகே வந்துவிட்டோம் என்றும் மட்டுமே நினைக்கிறேன் இதை எழுதிக் கொண்டே வரும்போது முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவன் எழுதிய வரிகளிலிருந்து
ஆனால் காலன் என்ன கட்டியங்கூறியா வருகிறான் மேலும் காலனைப் பற்றிய நம் உருவகங்கள் திசை மாறியவை ஏதோ எருமை மாட்டின் மீதேறி வந்து பாசக் கயிறு கொண்டு கட்டி இழுப்பான் என்றெல்லாம் பயமுறுத்தியே வளர்க்கப்பட்டிருக்கிறோம் சாவு என்ன பயம் தரக் கூடியதா ? சாவின் வலி அனுபவித்தவர்கள் கூறி இருக்கிறார்களா ? எல்லாமே கற்பனைகள் தானே
ஏதோ ஒரு நாள் நாம் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே இறப்பின் வேதனையோ மகிழ்வோ யாராவது சொல்ல முடியுமா நம் இறப்பால் நமக்கு எந்த தீங்கும் இல்லை நம்மை நாடி இருப்பவர்களுக்கே வலி பயம் எல்லாம் எனக்கு என்னவோ இதெல்லாமே அதீத கற்பனைகள் என்றே தோன்று கிறது இறப்பு தவிர்க்க இயலாதது வரும்போதுமகிழ்வுடன் ஏற்போமே ஒவ்வொரு நாளும் உறக்கம் நீங்கி எழும்போது வாழ்வில் ஒரு நாள் வரவு என்றும் போகுமிடத்துக்கு கொஞ்சமருகே வந்துவிட்டோம் என்றும் மட்டுமே நினைக்கிறேன் இதை எழுதிக் கொண்டே வரும்போது முண்டாசுக் கவிஞனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவன் எழுதிய வரிகளிலிருந்து
நோவாலே
மடிந்திட்டான் புத்தன்; கண்டீர் அந்தணனாம்
சங்கராச்சாரியன் மாண்டான்;அதற்கடுத்த இராமானுஜனும் போனான்;சிலுவையிலே
அடியுண்டு யேசு செத்தான்; தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;பலர் புகழும் ராமனுமே
ஆற்றில் வீழ்ந்தான்;பார்மீது நான் சாகாதிருப்பேன் , காண்பீர்.! மலிவு
கண்டீரிவ்வுண்மை, பொய் கூறேன் யான், மடிந்தாலும்
பொய் கூறேன் மானுடர்க்கே,நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர், நாணத்தைக்
கவலையினை சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே
அழிந்து போகும் “
சாவு என்று பாரதி கூறியது இந்த ஊன் உடம்பின்
அழிவையே நானொரு முறை எழுதி இருந்ததும்
நினைவுக்கு வருகிறது
வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று
நினைத்தாயோ என்று கேட்ட நீங்களும் வீழ்ந்து பட்டாலும் உங்கள் கவிதை வரிகளால்
சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்கள் உடலம் வீழ்ந்து பட்ட நாள்.
இருப்பினும் உங்கள் பாடல் வரிகளால் நிறைந்து எங்கும் இருக்கிறீர்கள்.
Intuition என்னும் ஆங்கில வார்த்தையை உணர்வு என்று
தமிழ்ப்படுத்தலாமா
எனக்கு இந்த சாவு - அப்படிச் சொல்வதை விட இறப்பு என்று சொல்வது கொஞ்சம் வீச்சு
குறைவாய் இருக்கிறதோ ? என்னவாய் இருந்தாலு ம் புரிந்து கொள்பவரைப் பொறுத்தது அது எண்பதாவது
வயதில் இருக்கும் நான் எப்பவும் அதை எதிர் நோக்கி இருக்கிறேன் ஒருமுறை நான்
எனது பிறந்த நாள் வரை இருக்க மாட்டேன்
என்னும் உள்ளுணர்வு கூறியது எனக்கோ இதை யாரிடமாவது பகிர ஆசை ஆனால் உறவுகளில் என் மக்கள் அது பற்றி
நினைக்கவே விரும்பமாட்டார்கள் என் மனைவியோ
என்னோடு குடும்பம் நடத்தியவள் என்பதால்
இதுவும் என் பைத்தியக் காரத்தனம் என்றே கருதுவாள்
அவளுக்கும் ஏன் எல்லோருக்கும் தெரியும் யாரும் நிரந்தரம் இல்லை என்று இருந்தாலும் எண்ணப்பகிர்வுகளை யாரும் விரும்புவதில்லை ஆனால்
நானோ எல்லாவற்றிலும் ஒரு படி முன்னதாகவே
சிந்திப்பவன்
நான் நன் மாண்டபின் என்னை எரிக்கவா புதைக்கவா என்னும் கேள்வி வருமா வந்தாலும் அவர்களென்ன செய்தாலும் எனக்குத் தெரியவா போகிறது எங்கள் பக்க வழக்கப்படி எரிப்பார்கள் என்றே நினைக்கிறேன் எரித்த இடதில் ஏதாவது நினைவுச் சின்னம் வைப்பார்களா அடப் போடா உனக்கும் இம்மாதிரி எண்ணங்களா அதீதக் கற்பனைகளுக்கு எங்காவது முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் தானே நான் இங்கே இப்போது வைக்கிறேன்
(இந்த மதிரி கற்பனைகள் எனக்கு மட்டும்தானா என்னும் சந்தேகமிருக்கிறது)
இந்த பதிவுக்கும் காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது ஏன் என்றால் பதிவுகளில் வருபவற்றுக்கு சிலர் இல்லாத அர்த்தத்தை கற்பிப்பது என் அனுபவத்தில் கண்டது
நான் நன் மாண்டபின் என்னை எரிக்கவா புதைக்கவா என்னும் கேள்வி வருமா வந்தாலும் அவர்களென்ன செய்தாலும் எனக்குத் தெரியவா போகிறது எங்கள் பக்க வழக்கப்படி எரிப்பார்கள் என்றே நினைக்கிறேன் எரித்த இடதில் ஏதாவது நினைவுச் சின்னம் வைப்பார்களா அடப் போடா உனக்கும் இம்மாதிரி எண்ணங்களா அதீதக் கற்பனைகளுக்கு எங்காவது முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் தானே நான் இங்கே இப்போது வைக்கிறேன்
(இந்த மதிரி கற்பனைகள் எனக்கு மட்டும்தானா என்னும் சந்தேகமிருக்கிறது)
இந்த பதிவுக்கும் காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது ஏன் என்றால் பதிவுகளில் வருபவற்றுக்கு சிலர் இல்லாத அர்த்தத்தை கற்பிப்பது என் அனுபவத்தில் கண்டது
இறப்பின் வேதனையோ மகிழ்வோ, யாரும் சொல்லமுடியாதே தவிர, உணர்ந்துகொள்ளமுடியும்.
ReplyDeleteஎப்படியும் யாரும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. இறப்பு ஒரு நாள் வந்தே தீரும். அதைப்பற்றிச் சிந்தித்து என்ன ஆகப்போகிறது?
உணர்ந்து கொண்டார்களா என்பதை கேட்டுத்தெரியவா முடியும் சிந்தனை கட்டவிழ்த்து ஓடுகிறதே
Deleteஉங்க பதிவுக்குள் நுழையவே முடியலை! :))) அப்புறமா கூகிள் + மூலம் முயன்று பார்த்து அதுவும் வராமல், முகநூலுக்குப் போய் அங்கிருந்து வந்தேன்! காணொளி பார்க்கவில்லை.
ReplyDeletekarrrrrrrrrrrrrrrrrrrrr:))
Deleteகீதா சாம்பசிவம் என் துரதிர்ஷ்டம்
Deleteஅதிரா அதுஎன்ன ஓசை எனக்கு முடிவதில்லையே
Deleteஅது கோபத்திலே பூனை கர்ஜிக்கும் ஓசை:) ஹா ஹா ஹா:))
Deleteபூனை கர்ஜனை எழுத்தில் இப்போது தெரிகிறது
Deleteமரணத்தைப்பற்றிய நினைவு அறுபது வயதைத்தாண்டியவர்கள் நிறைய பேருக்கு வருவது தான்! எரிப்பதா அல்லது புதைப்பதா என்று முடிவெடுப்பது அடுத்த கட்டம். சில பேர் எழுதி வைத்து விட்டு செல்வார்கள்.
ReplyDeleteகண்ணதாசனின் 'போனால் போகட்டும் போடா' பாடலில்
' வந்தது தெரியும், போவது எங்கே? வாசல் நமக்கே தெரியாது..
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம், அதில் ஜனனம் என்பது வரவாகும், அதில் மரணம் என்பது செலவாகும்.." என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
நான் 99 வயதில் இருக்கும் என் அம்மாவை அடிக்கடி நினைத்துக்கொள்வேன், அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்குமென்று!!
இந்த மரணத்தையும் வென்று இன்னும் பாரதியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
யார் யாரோ என்னவெல்லாமோ எழுதிப் போகிறார்கள் அதுபோல் இதுவுமொன்றுதானே
Deleteஜி எம் பி ஐயா உங்கள் மன தைரியம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. மரணம் என்பது தவிர்க்க முடியாது, ஆனா அதை நினைத்து வருந்தி அடங்கி ஒடுங்காமல் உற்சாகமாக இருக்கோணும் அதை உங்களில் பார்க்கிறேன்.. அது வரும்போது வரட்டும்...
ReplyDeleteநமக்கு மரணம் வரும்போது நாம் இருக்கப் போவதில்லை:) அப்போ மரண பயம் எதுக்கு..
ஆனா பலபேர் பலவிதமா மிரட்டுகிறார்கள் அதனாலதான் எனக்கு பயமே... நம் உயிர் அலையுமாம், நம் சொந்தங்களைத்தேடி ஓடுவோமாம், பாதை புரியாமல் கஸ்டப்படுவோமாம்.. இப்படி கேள்விப்படுகையில் எனக்கு ஆராவது கையைப் பிடிச்சபடி கூடவே வந்தா நல்லாயிருக்குமே என நினைப்பேன்:)..
அடப் பாவீ.. குதிரை கீழே தள்ளி குழி பறிச்ச கதையாவுல இருக்கு. போகற சமயம் வரும்போது பக்கத்துல நிற்கிற ஆளுக்கு பிராப்ளம் வரப்போகுதுன்னு சொல்லுங்க.
Deleteஹையோ இதை இப்போதான் கவனிச்சேன் :) நான் வேற நாட்டுக்கு போயிடுறேன் :)
Deleteஅதிரா இப்படி மட்டுமா மிரட்டுகிறார்கள் நம்மை சிந்திக்க விடாமல் இண்டாக்ட்ரினேட் செய்துஇருக்கிறார்களேநாமும் பலவற்றைநம்பிக்கொண்டிருக்கிறோம்
Delete@நெல்லை அதிரா அருகே போகாமல் இருங்கள்
Deleteஏஞ்செல் வேற நாட்டுக்கு ஏன் போகவேண்டும் அதிரா அருகே இல்லாமல் இருந்தால் சரி
Deleteஹா ஹா ஹா எனக்கு அஞ்சுலதான் ஒரு கண்ணு:) அவதான் கையைப் பிடிச்சு பத்திரமாக் கூட்டிப் போவா:)...
Deleteஜி எம் பி ஐயா:) உடலை விட்டு உயிர் பிரிஞ்சபின்.. எங்கு வேணுமெண்டாலும் பறக்கலாமாமே:).. அப்போ 5 செக்கனில நான் அஞ்சு வீட்டில நின்றிடுவேன்:)) ஹா ஹா ஹா:)..
எங்கட அம்மா எனக்கு சொல்லி வச்சிருக்கிறா, நான் கண்ணை மூடி விட்டால் எங்கயும் போயிட மாட்டேன், உங்கள் வீட்டிலேயே தான் சுற்ரிச் சுற்றி வருவேன் என ஹா ஹா ஹா.. எங்களைத்தான் அதிகம் பிடிக்கும் அவவுக்கு:))..
ஒவ்வொரு முறையும் மூச்சு விடும்போது ஒவ்வொருவரும் இறந்து பிறக்கின்றனர் 5 செகண்ட் எல்லாம் மிக அதிகம்
Delete///அது எண்பதாவது வயதில் இருக்கும் நான் எப்பவும் அதை எதிர் நோக்கி இருக்கிறேன்//
ReplyDeleteநோஓஓஓஓ இது மிகவும் தப்பு... அந்தக் காலம் எல்லாம் மலையேறி விட்டது... இப்போ எந்த வயதில் ஆருக்கு எப்போ சா வருமெனத் தெரியாது... அதனால எப்பவும் மகிழ்ச்சியாக இருப்போம்.
எங்கள் அப்பாவும் அடிக்கடி சொல்லுவார்.. நான் இப்பவும் வாலிபன் தான் என.. நல்ல ஸ்டைலாத்தான் வெளிக்கிடுவார்:)..
அதிரா சில நினைவுக்சள் தவிர்க்க முடியாது வாலிபன் என்று நினைத்தால் போறாஉமா உடல் இல்லைஎன்று சொல்லுமே முதுமை பரிசு என்று நான் எழுதீருந்ததைப் படித்தீர்களா சுட்டி இதோ படியுங்கள்
Deletehttp://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_29.html
Intuition என்பதற்கு உள்ளுணர்வு அல்லது இயலுணர்வு என சொல்லலாம். நீங்களே உள்ளுணர்வு என்பதை படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஎதற்கு சாவைப்ற்றி எண்ணவேண்டும்? அது வரும்போது வரட்டும். அதுவரை சந்தோஷமாக இருக்கலாமே.
பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
Dead yesterday and unborn tomorrow
Why fret about them if today be sweet
எனவே வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்!
காணொளியைப் பார்க்கும்போது ‘ஆட்டுவிப்போர் ஆட்டுவித்தால் ஆடாதவர் உண்டோ’ என்ற சொல்லாடல் நினைவுக்கு வருகிறது.
இறப்பு பற்றி எண்ணாமல் இருக்க முடியுமா அதுவுமிந்தவயதில் ஆனால் கவலை ஏதுமில்லை ஐயா
Deleteவேண்டாம் ஐயா இந்த சிந்தனைகள் இன்றைய பொழுது சந்தோஷமாக செல்ல வழி எதுவோ அதை நாடிச் செல்லுங்கள் வாழ்க நலம்.
ReplyDeleteமரணத்தைக் குறித்து ஒரு பதிவு எழுதும் எண்ணத்தை எனக்கு தூண்டி விட்டீர்கள்.
எழுத முயற்சி செய்தீர்கள் போல இருக்கிறதே
Delete//..நான் குப்புற வீழ்ந்தெழுந்தபோது.. அவனை நான் மிதித்து விட்டேன் என்று மனைவியிடம் கூறினேன் //
ReplyDeleteசரி. அவரென்ன சொன்னார் பதிலாக? தெரிந்துகொள்ளலாமா?
உங்களது பதிவுகளை/சிந்தனைகளை துணைவியார் படிப்பதுண்டா?
பாரதியை நீங்கள் குறிப்பிடப்போய் கண்ணதாசனும் உமர் கய்யாமும் வந்து இறங்கியிருக்கிறார்கள். இப்படி நான் எழுதிக்கொண்டுபோனால் பதிவுபோல் ஆகிவிடுமே எனத் தயங்குகிறேன்..
கண்ணதானும் உமர் கய்யாமும் வந்து இறங்கி இருக்கிறார்கள் எங்கே நான் பார்க்கவில்லையே காலால் உதைத்துவிட்டேன் என்பதை அங்கிலத்தில் ihave kicked him என்றுசொன்னேன் அந்த நேரத்தில் அவளால் என்ன சொல்ல முடியும் என் பதிவுகள் சிலவற்றைப்படிப்பாள்/ பார்ப்பாள்
Deleteமூன்றுமுறை அந்த காணொளியை பார்த்து ரசித்தேன் சார் அந்த அணில் marionette பொம்மை கிட்ட போய் உணவை பயமில்லாமல் எடுத்து சாப்பிடுவது போல தான் நாமும் வாழ்வை கடந்து செல்லணும் :)
ReplyDeleteசிலராவது ரசிப்பார்கள் எட்ன்பது தெரியும் நன்றி ஏஞ்செல்
Deleteகாணொளி ஏற்கெனவே கண்டு ரசித்திருக்கிறேன். மரண பயத்துக்கு வயது உண்டா என்ன? ஆசாநூசா!
ReplyDeleteஆசாநுசா ... அபுரி
Delete"அபுரி"
Deleteஹா.... ஹா.... ஹா....
ஆறிலும் சாவு நூறிலும் சாவு - ஆசா'நூசா
Deleteஸ்ரீராம் உங்கள் வழியில் சொன்னேன்
Deleteநெத நன்றி சார் ஸ்ரீ சிரித்துவிட்டுப் போனார் நீங்கள் தெளிவித்தீர்கள்
Delete// ஆறிலும் சாவு நூறிலும் சாவு - ஆசா'நூசா //
Deleteநெல்லை... அஃதே... அஃதே...!
/ ஸ்ரீராம் உங்கள் வழியில் சொன்னேன் //
Deleteஜி எம் பி ஸார்... அதற்குத்தான் சந்தோஷமாய்ச் சிரித்தேன்.
// நெத நன்றி சார் ஸ்ரீ சிரித்துவிட்டுப் போனார் நீங்கள் தெளிவித்தீர்கள் //
ஜி எம் பி ஸார்... கீதா அக்கா சொல்வார் என்று நினைத்தேன். நெல்லை சொல்லி விட்டார். யாராவது சொல்வார்களே என்றுதான் நேரம் எடுத்துக் கொண்டேன். இல்லாவிட்டால் பின்னர் நானே சொல்லி இருப்பேன்!
நினைத்ததைச் சொன்னேன் கீதா சாம்பசிவம் அவர்களும் இம்மாதிரி விபுசி தவிபுசி என்றெல்லாம் சொல்வார் உங்கள் அபுரியைப்பல இடத்தில் படித்திருக்கிறேன் முதலில் உபயோகிக்கவும் செய்தேன் நெத சொன்னார் யாராவது சரியாகச் சொன்னால் சரி நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்
Deleteஸ்ரீராம் அதே அதே சபாபதே என்றல்ல்லவா சொல்வீர்கள் என்று நினைத்தேன்
Delete///ஆசா'நூசா///
Deleteஹா ஹா ஹா சூப்பர் சோட் கோட்:)) மீயும் கவ்விட்டேன்ன்:))
சோட் கோட் அபுரி எனக்கு கவ்வப் பழக்குகிறது இம்மாதிரி பதிவுகளும் பின்னூட்டங்களும்
Deleteஅதே அதே சபாபதே - இதுக்கு நான் எழுதிய பின்னூட்டம் காணாமல்போய்விட்டதே.
Deleteகோபு சார்தான் இதுமாதிரி 'அதே அதே சபாபதே' என்ற பதத்தை உபயோகப்படுத்துவார். அதிராவுக்கு அவர் எழுதும் பின்னூட்டங்களில், 'அதே அதே அதிராபதே' என்றும் அவர் உபயோகப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.
சில வார்த்தைகள், சிலரை ஞாபகப்படுத்தும். வலையுலகில் காணாமல் போயிருக்கும் VGK வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார்த்தை ஞாபகப்படுத்திவிட்டது.
வலை உலகில் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் கோபு சார் அண்மையில் கூட புஸ்தகா நிறுவனம் அவருக்கு அனுப்பி இருந்த கிஃப்ட் கைக் கடிகாரம்பற்றி எழுதி இருந்தாரே எனக்கும் அனுப்பி இருந்தார்கள் ஆனால் அதைப் பற்றிநான் எழுதவில்லை
Deleteஇதற்கெல்லாம் என்ன சொல்வது..
ReplyDeleteஒன்றும் தெரியவில்லை..
எண்ணங்களின் பகிர்வுதானே என்ன சொல்ல
Deleteமரணம் குறித்தான பயம் மனிதர்கள் எல்லாருக்குமே உண்டு ஐயா...
ReplyDeleteஎனக்குப் பயமில்லை என்று வெளியில் வேண்டுமானால் சொல்லலாம்...
என்ன பயமிருந்தாலும் ஒருநாள் அதை அடைந்துதானே ஆகவேண்டும்.
இச் சிந்தனைகள் துறந்து மற்றவற்றில் கவனம் செலுத்துங்கள் ஐயா..
உண்மை நிலைப்பட்டினை பைர்ந்திருக்கிறேன் தலைப்பைக் கவனித்தீர்களா
Deleteவருவதை எதிர்கொள்வது தானே மனித இயல்பு ஐயா .மரணம் வரும் போது வரட்டும் அதுவரை இன்முறுவலுடன் இருப்போம்!)))
ReplyDelete'பின்' என்ன ஆகும் , எப்படிச் செய்வார்கள், நாம் நினைத்தபடி நடக்குமா இப்படியெல்லாம் நானும் யோசித்துதான்.... என்னென்ன செய்ய வேணும் , என்ன ஆடை உடுத்தி விட வேண்டும், என்ன பாட்டு ஃப்யூனரல் பார்லரில் போட வேணும் என்றெல்லாம் எழுதி வைத்துருக்கேன். எங்கே அந்த உடை, மற்றவைகள் எல்லாம் இருக்குன்ற குறிப்பும் உண்டு. கோபாலுக்கும் சொல்லி வச்சாச்.
ReplyDeleteகூப்பிட்டால் மறுக்காமல் போகணும், இல்லையா?
காணொளி.... ஆட்டுவிக்கிறான் ஒருவன். நாம் ஆடுகிறோம் :-)
பின் என்னாகும் என்பதெல்லாம் கற்பனைகள்தானே யாரோ வந்து கூப்பிடுவார்களென்பதெல்லாம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை
Deleteதனிமரம் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும் வேறு வழி ?
Deleteஇன்றைய நாளை இனிமையாய் கடந்து செல்ல முயல்வோம் ஐயா
ReplyDeleteபிறப்புண்டேன் இறப்புண்டு
எனவே இறப்பைப் பற்றி இப்போதே ஏன் நினைக்க வேண்டும்
வரும்போது சந்திப்போம்
அதுவரை மகிழ்வாக இருப்போம்
மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம்
எண்ணங்களுக்கு கடிவாளம் இட முடியுமா மருந்துசாப்பிடும்போது குரங்கு பற்றி நினைக்கக் கூடாது என்பதுபோல் இருக்கிறது
Deleteகற்பனை என்றாலே கட்டவிழ்த்துதான் ஐயா. கட்டவிழ்த்த கற்பனை இன்னும் வேகமாக இருக்குமோ?
ReplyDeleteகடிவாளமிட இயலாத அளவு கட்டவிழ்த்தோடுகிறது அதைத்தான் பகிர்ந்திருக்கிறேன்
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteகட்டவிழ்த்தோடும் கற்பனைகள்!… உங்களின் உள்ளத்து உணர்வுகளை அப்படியே ஓடவிட்டிருக்கின்றீர்கள்..:)
கீதோபதேசம்தான் இங்கு சொல்ல எனக்குத் தோணுகிறது.
இன்று எமது நாளை வேறொருவருடையது!
கொண்டுவந்தது ஒன்றுமில்லை கொண்டுபோவதற்கும் ஒன்றுமில்லை!
ஐயா!.. போனபின்பு எல்லாம் ஒரே நிலைதான்.
இருக்கும்போது நாலுபேருக்காயினும் நல்லதைச் செய்வோமே!
என்னைப் பொறுத்தவரை அதுவே ஆத்ம திருப்தி!
எனது தந்தை 2 தினம் முன்னர்தான் 89 வயதை முடித்துத் 90 க்குள் அடிவைத்துள்ளார்.
அவர் காலத்தில் பெரீய உத்தியோகத்தில் இருந்தவர். இன்று என்ன தினம் என்பதைக் கூட மனதில் பதிக்கமுடியாத அளவு மறதி. அவருக்கும் மரண பயம் அதிகம். அந்தப் பயமே அவரை நிம்மதியாக இருக்கவிடாமல் செய்கிறது.
மரணம் என்றோ வரத்தான் போகிறது. அதையே எண்ணிக்கொண்டிராமல் சுய அறிவோடு இருக்கும்போதே எம்மால் இயன்றவரை மனதிற்குப் பிடித்தமாதிரி வாழ்ந்து, இயன்றதைச் செய்து மகிழ்வை நிலைக்கச் செய்திட வேண்டுமெனத் தோன்றுகிறது.
உங்களுக்கு வயதொன்றும் தடையில்லை. மனதை லேசாக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஐயா!
எதில் உங்களுக்கு நாட்டமோ அதனை முடிந்தவரை செய்யுங்கள்!
நலமே பெருகும்! நகரும் நாட்களும் இனிதாகும்!
நலமோடு வாழ என் பிரார்த்தனைகள்!
கீதையை தமிழில் பகிர்ந்திருக்கிறேன் /கீதோபதேசம்தான் இங்கு சொல்ல எனக்குத் தோணுகிறது.
Deleteஇன்று எமது நாளை வேறொருவருடையது!
கொண்டுவந்தது ஒன்றுமில்லை கொண்டுபோவதற்கும் ஒன்றுமில்லை!/ இந்த வாசகங்களைப் படித்ததுபோல் இல்லையே
பிறப்பு எப்படி நமக்கு தெரியாதோ அது போல் இறப்பும் நமக்கு தெரியாது.
ReplyDeleteபிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் போய்தான் ஆக வேண்டும்.
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் இடமேது என்ற பாடல் நினைவுக்கு வருது.
என் அத்தை அவர்களுக்கு 95 வயது ஒரு நாளும் இறப்பை பற்றி சிந்திக்கவே இல்லை. மாமா அவர்கள் போனபின் போக வேண்டும் என்று மட்டும் சொல்வார்கள் மாமாவை குழந்தையை கவனித்துக் கொள்வது போல் பார்த்து கொண்டார்கள். அது போலவே மரணம் அடைந்தார்.
இருக்கும்வரை எல்லோருக்கும் தன்னம்பிக்கையை , வாழ்வில் பிடிப்பை முதுமையை அனுபவித்து வாழ்வதையும் போதித்தார்.
இறப்பை பற்றி நினைக்காமல் இருக்கும் வரை மனது பிடித்த விஷயங்களை செய்து கொண்டு இருங்கள்.
உங்கள் காணொளி அருமை.
பதிவுக்கு சம்மந்தம் இல்லை என்று சொன்னாலும் பதிவுக்கு பொருத்தமாய் உள்ளது.
இறைவன் நடத்தும் நாடகமேடையில் ஆட்டிவைக்கும் பொம்மைகள் நாம். அவர்கொடுத்த காதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறோம்.நூலை சொடக்கி அவர் இழுத்து விட்டால் முடிந்தது. அதுவரை ஆடிகொண்டு இருப்போம்.
ஏதொகற்பனையில் உதித்ததை எழுதினால் ஒரே அட்வைஸ் மயம் பின்னூட்டங்களில் எல்லாம் காணொளிக்கு இப்படியெல்லாம் வியாக்கியானம் வரும் என்று நினைக்கவில்லை உங்கள் கற்பனைக்கு பாராட்டுகள்
Delete