இலக்கிய இன்பம் கம்ப ராமாயணம்
===================================
ராமாயணைத்தை
ஒரே வாக்கியத்தில்(சுட்டி) சாதாரணன் ராமாயணமாக
எழுதியஎனக்கு கம்பனில் இருந்து சில பாடல்க்சளைக் குறிப்பிடுவது அசாதாரணமாக
இருந்தது முயற்சி செய்ததில் குகனின் குணத்தை பிரதிபலிக்கும் சிலபாடல்ளை
குறிப்பிடலாம் என்று தோன்றியது குகன் சற்றுமுன் கோபியாக முத்லில் தோன்றினாலும் கோபமுள்ள இடத்தில்தான் குண்மும்
இருக்கும் என்பதைக் காட்டுகிறான்
பரதனின் சேனையை பார்த்ததும் குகன் கோபம்மேலிடுகிறன்
கட்டிய
கரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய
மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
கிட்டியதுஅமர்
எனக் கிள்ரும் தோளினான்
எலி எலாம்
இப்படை அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை
உவந்து கூவினான்
வலி உலாம்
உலகினில் வாழும் வள் உகிர்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே
அஞ்சன வண்ணன்
என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனயால் அரசு எய்திய மன்னரும்
வந்தாரே
செஞ்சரம் என்பனதீ உமிழ்கின்ன செல்லாவோ
உஞ்சு இவர்
போய் விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ
ஆழ
நெடுந்திரை ஆறு கடந்து
இவர் போவாரோ
வேழ
நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல்
ஒருசொல் அன்றோ
ஏழைமை வேடன்
இறந்திலன் என்று எனை ஏசாரோ
ஆடு
கொடிப்படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது பார் எனும்
இப்புகழ் மேவீரோ
நாடு
கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும்
காடு
கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ
இங்கு இவ்வாறு குகன்கோபம் மேலிடதன்
வீரரிடம் சொல்லிக் கொண்டிருக்கையில்
பரதன் குகனைக்காண வருகிறான் சுமந்திரன்
குக்ன் யாரென்று பரதனுக்கு சொல்கிறான்
கங்கை இரு
கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குல
தனி நாதற்கு உயிர் துணைவன் உயர் தோளான்
வெங்கரியின்
எறு அனையான் விற்பிடித்த வேலையினான்
கொங்கு அலரும்
நறுந் தண் தாற் குகனென்னும் குறி யுடையான்
பரதனின் நிலை கண்டுகுகன்
வற் கலையின்
உடையானை மாசடைந்தமெய்யானை
நற் கலையில்
மதி என்ன நகை இழந்த முகத்தானை
கல்கனிய கனிகின்ற் துயரானை கண்ணுற்றான்
வில்
கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்
நம்பியும் என்
நாயகனை ஒக்கின்றான் அயன் நின்றான்
தம்பியையும்
ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு
முடிவு இல்லை திசை நோக்கித் தொழுகின்றான்
எம் பெருமான்
பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு
என்றான்
குகனின் மன மாற்றம்
தெரிகிறது இல்லையா கம்ப ராமாயணத்தில் பல இடங்களில் தன்னை நாயுடன் ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்கிறார்கள்