Monday, May 18, 2020

முட்டம் முருகன்



                                            முட்டம்  முருகன்
                                            -----------------------------


  ஊரடங்குநேரத்தில்  எந்த சானலிலும் சினிமாதான். ஜயா சானலில் கடலோரக் கவிதைகள் என்னும் சினிமா இருந்தது  பாரதி ராஜாவின்  படமாயிற்றே  என்றுசிறிது நேரம் பார்த்தேன்   முட்டம் என்னும் இடத்தில் படம் எடுக்கப் பட்டதாம்முட்டமென்னும் பேரைப்படித்தபோதுநான்  அந்த இடத்துக்கு சென்றதுநினைவில் ஆடியது முன்பெல்லாம் ஜூலை முதல் வாரத்தில் ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலில் இருப்பது வழக்கம்   2004ம் ஆண்டு என்நண்பரின் விருந்தினராக நாகர் கோவிலுக்கு செனாறோம்அங்கிக்ருந்து கன்னியாகுமரி திருச்செந்தூர்   நெல்லை போன்ற இடங்களுக்கு போய் வந்தொம்   அப்போது நண்பர் நாகர் கோவிலைச் சுற்றி இருந்த இடங்களுக்கு  கூட்டிப்போயிருந்தார் அப்படி போன  இடங்களுள்  ஒன்றுதான்  மண்டக்காடு அங்கிருக்கும் பகவதி கோவில்பிரசித்தம்அப்படிப் போகும் வ்ழியில் ஒரு முருகன் கோவிலும் இருந்தது மிகவும் அழகான முருகன் சிலை இடம்பெயர் நினைவுக்கு வரவில்லை புகைப்படமும் எடுக்கவில்லை எடுத்திருந்தால் நான் இப்படி தடு மாற நேர்ந்திருக்காது                                
போகும் இடமெல்லாம்  கடலோரப்பகுதிகளே அப்போதுமுட்டம் கடற்கரையில் சிறிதுநேரம் இருந்தோம் நாங்கள்படமெடுப்பதைப் பார்த்துஒருவர்  மோர் விற்பவர்  அவரையும் ஒருபடம் எடுக்க வேண்டினார்  வெள்ளந்திமனிதர் படம் எடுத்தாலும் அவருக்கு  கொடுக்க இயலாது என்றோம் பரவாயில்லை என்றார் அவர் பெயரைக் கேட்டு தெரிந்து கொண்டோம்   முருகன்  என்று கூறினார் முருகன் சிலையை ப்டமெடுக்காவிட்டாலும்  முருகன் என்னும்மனிதனைப் ப;டமெடுத்தோம் 


நாகராஜா கோவில்  நாகர் கோவில் 
       
முட்டம்  முருகன்
பழமுதிர் சோலை  முருகன் கோவில் 
 
மண்டைக் காடு  பகவதி கோவில் 


  திரு அருட்பா வரிகள்


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. 

காணொளி நாம் இருவர் படத்திலிருந்து இதை விட நல்ல காணொளி கிடைக்க வில்லை 

--                                                         


28 comments:

  1. இந்த காலங்களில் கோயில் குளங்களில் இப்படி எல்லாம் தண்ணீர் நிறைய இருப்பதில்லைதானே

    ReplyDelete
    Replies
    1. இந்தப்படம் 2004 ல் எடுத்தது

      Delete
  2. இனிய நினைவுகள் ஐயா... எப்படியோ முருகன் படம் எடுத்து விட்டீர்கள்...

    காணொளி பாடல் அருமை...

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவன் முருகனே மோர்க்காரர் உருவில் வந்தாரோ

      Delete
  3. நினைவுகளை மீட்டெடுப்பதே ஓர் சுகம்தான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நினைவு இன்னொன்றுக்கு இட்டுச் செல்கிறது

      Delete
  4. அந்தக்காலத்து பிலிம் காமெராவில் கோடாக் பிலிம் போட்டு  எடுத்த படங்கள் என்று தோன்றுகிறது. அப்படியே முட்டம் கடற்கரை படம் ஒன்று நீங்கள் எடுத்தது வெளியிட்டிருக்கலாம். நாகர்கோயில் சென்ற நீங்கள் பத்மனாபபுரம், திருவட்டார் ஆகிய இடங்கள் செல்லவில்லையா?  

    ReplyDelete
    Replies
    1. அந்தமுறை நாங்கள் நண்பரி விருந்தினர்கள் ப்ரோக்ராம் அவருடையது நாங்கச்ள் 2016ல் நாகர் கோவில் சென்றபோது பத்மநாபபுரம் அரண்மனை சென்றிருந்தோம் திற்பரப்பு இன்னும் சில் இடங்கள் சென்றோம்

      Delete
  5. Replies
    1. இப்போதெல்லாம் வாழ்க்கையெ நினைவுகளால் ஆனது

      Delete
  6. நினைவலைகள் அருமை. நாகராஜா கோயிலுக்கு நாங்க போனப்போ இவ்வளவு தண்ணீர் குளத்தில் இல்லை. படங்களை அருமையாகப் பாதுகாத்து வருகிறீர்கள். எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மூன்று முராஇ நாகர் கோவில்சென்றதுண்டு

      Delete
  7. சுவையான நினைவலைகளை சுவாரஸ்யம் கூட்டுகின்றன புகைப்படங்கள்.

    ReplyDelete
  8. நினைவுகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு

    ReplyDelete
  9. மலரும் நினைவுகள் என்றைக்குமே இனியவைதான்...

    ReplyDelete
  10. அன்பின் ஐயா ..
    தாங்கள் எனது தளம் தேடிவந்து நலம் விசாரித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    இன்றைய பதிவில் உள்ள நிலையை ஓரளவுக்கு சொல்லியிருக்கின்றேன்..

    தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  11. ஆம் ஐயா என்று இருக்க வேண்டும்

    ReplyDelete
  12. நமக்குத் தெரிர்ந்தவர்களின் நலம் பற்றி எப்போதும் சிந்திப்பேன்

    ReplyDelete
  13. நல்ல நினைவுகள். புகைப்படங்கள் நமக்கு பழைய நினைவுகளை மிட்டெடுக்க உதவும். நாக்ர்கோவிலில் இருந்த போதும் கூட முட்டம் சென்றதில்லை.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. முட்டம் ஒரு கடலோரம் அவ்வளவுதான் எதையும் மிஸ் செய்யவில்லை

      Delete
  14. நீருள்ள கோவில் குளங்களைப் பார்ப்பதே புண்ணியம் தானே! நீங்கள் அந்தக் காலத்து 'உலகம் சுற்றும் வாலிபன்' என்பதை அடிக்கடி வெளிப்படுத்துகிறீர்கள்! வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. அப்போது பயணப்பட்டதை நினைவுக்கு கொண்டு வருவதே மகிழ்ச்சி பல இடங்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன் உங்கள்பதிவுகளை படிக்க வேண்டும்

    ReplyDelete
  16. சார் மலரும் நினைவுகள் உங்களுக்கும். முட்டம் என்றதும் எனக்கு நான் கல்லூரி படிக்கும் சமயம் ஒரு பராஜெக்ட் சர்வேக்காக அந்தக் கடற்க்கை கிராமங்களுக்குச் சென்ற நினைவுகள். முட்டம் மிக மிக அழகான கடற்ககை. நீங்கள் சொல்லும் முருகன் கோயில் கணபதிபுரம் அருகே இருக்கும் கோயிலா அல்லது வெள்ளிமலை முருகன் கோயிலா? இது க்டற்ககை அருகே.

    கீதா

    ReplyDelete
  17. ஆகா !! ... எங்கள் ஊரைப்பற்றி எழுதியுள்ளீர்கள் !!! .... நாகர்கோவில் ... நாகர்கோவிலுக்கு "நாகர்கோவில்" என்று பெயர் வந்ததே இந்த கோவிலை (நாகராஜா கோவில்) வைத்துதான் ... நாகர்களை வணங்கும் கோவில் என்பதால் நாகர்+கோவில் - நாகர்கோவில் ... நன்றி அய்யா....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊர் நாகர் கோவில் என்று அறியதந்தமைக்கு நன்றி

      Delete
  18. இனிய நினைவுகள் மீட்பதில் சுகமே.

    கன்னியாகுமரி ,இராமநாதபுரம் ,திருச்செந்தூர் சென்றிருக்கிறேன். நாகர் கோவில் செல்ல இருந்தது வாய்ப்பை இழந்துவிட்டேன்.

    ReplyDelete
  19. இந்தியா வரும் பொழுது முட்டம் போய்ப் பார்க்க நினைக்கிறேன்.
    கோடையிலே இளைப்பாறி.. இளைப்பாறின களைப்புல பாடுறாரா!

    ReplyDelete