முட்டம் முருகன்
-----------------------------
ஊரடங்குநேரத்தில் எந்த சானலிலும் சினிமாதான். ஜயா சானலில் கடலோரக்
கவிதைகள் என்னும் சினிமா இருந்தது பாரதி
ராஜாவின் படமாயிற்றே என்றுசிறிது நேரம் பார்த்தேன் முட்டம் என்னும் இடத்தில் படம் எடுக்கப்
பட்டதாம்முட்டமென்னும் பேரைப்படித்தபோதுநான்
அந்த இடத்துக்கு சென்றதுநினைவில் ஆடியது முன்பெல்லாம் ஜூலை முதல் வாரத்தில்
ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலில் இருப்பது வழக்கம் 2004ம் ஆண்டு என்நண்பரின் விருந்தினராக நாகர்
கோவிலுக்கு செனாறோம்அங்கிக்ருந்து கன்னியாகுமரி திருச்செந்தூர் நெல்லை
போன்ற இடங்களுக்கு போய் வந்தொம் அப்போது
நண்பர் நாகர் கோவிலைச் சுற்றி இருந்த இடங்களுக்கு
கூட்டிப்போயிருந்தார் அப்படி போன இடங்களுள்
ஒன்றுதான் மண்டக்காடு
அங்கிருக்கும் பகவதி கோவில்பிரசித்தம்அப்படிப் போகும் வ்ழியில் ஒரு முருகன்
கோவிலும் இருந்தது மிகவும் அழகான முருகன் சிலை இடம்பெயர் நினைவுக்கு வரவில்லை
புகைப்படமும் எடுக்கவில்லை எடுத்திருந்தால் நான் இப்படி தடு மாற நேர்ந்திருக்காது
போகும் இடமெல்லாம் கடலோரப்பகுதிகளே அப்போதுமுட்டம் கடற்கரையில்
சிறிதுநேரம் இருந்தோம் நாங்கள்படமெடுப்பதைப் பார்த்துஒருவர் மோர் விற்பவர்
அவரையும் ஒருபடம் எடுக்க வேண்டினார்
வெள்ளந்திமனிதர் படம் எடுத்தாலும் அவருக்கு கொடுக்க இயலாது என்றோம் பரவாயில்லை என்றார் அவர்
பெயரைக் கேட்டு தெரிந்து கொண்டோம்
முருகன் என்று கூறினார் முருகன்
சிலையை ப்டமெடுக்காவிட்டாலும் முருகன்
என்னும்மனிதனைப் ப;டமெடுத்தோம்
![]() |
| நாகராஜா கோவில் நாகர் கோவில் |
![]() |
| முட்டம் முருகன் |
![]() |
| பழமுதிர் சோலை முருகன் கோவில் |
![]() |
| மண்டைக் காடு பகவதி கோவில் |
திரு அருட்பா வரிகள்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
காணொளி நாம் இருவர் படத்திலிருந்து இதை விட நல்ல காணொளி கிடைக்க வில்லை
“



