?
அப்போது நான் பி எச் இ எல்லில் இருந்தேன்
அசிஸ்டண்ட் எஞ்சினெயர் பெங்களூர் வர
பஸ் ஸ்டாண்ட் டுக்கு வந்தேன் அங்கு ஒரு முகம்
பார்த்ததுபோல் இருந்தது அம்பர்நாத்தில் எனக்கு
ஜூனியர் அவருக்க்கு என்னை அடையாளம் தெரிந்தது
ஆனாலும் பார்வையிலும் தோர்ணையிலும் ஒரு அலட்சியம் நான் நீங்கள் இன்னார்தானே என்று விசாரித்தேன் ஆம் என்றார் நான் பிஎச் இ எல் லில் வால்வ் டிவிஷனில் தரக்கட்டுப் பாடுதுறையில் இருப்பதாகக் கூறினேன்
பிறகு அவர் என்னைக் கேட்டதுதான் என்னை திடுக்கிடச்
செய்தது அவர் மைகோவில் வேலையில் இருப்பதாகவும் நான் வால்வ்
ஏதாவது விற்க விரும்பினால் அவர் உதவி செய்வார்
என்றும் கூறினார்எனக்கு சே என்றாகி விட்டது அவர் ஏதோ உச்சாணிக்கொம்பில் இருப்பதுபோலவும் நான் அவர் உதவிக்கு ஏங்குவது போலவும் அதன் பின் நான் பேசவில்லை
இதே போஒல் இன்னொரு முறை
நான்படித்த பள்ளி மாணவன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது நான் பி எச் எல் லில்
எஞ்சிநீராகப் பணியில் இருக்கிறேன் என்று சொன்னதும் அவன்சிரிப்பை அடக்க முடியாமல் பத்தாங்கிளாஸ் படித்துஎஞ்சிநீராஎன்று சொல்லிச் சொல்லி
சிரித்தான் ஒரு முறை நான் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது ஒருவர் என்னை நிறுத்தி விசாரித்தார்
அவரைப்பற்றிய ஞாபகம் எனக்கு வரவில்லை
பொத்தாம்பொதுவாக பதில் சொல்லி வந்தேன் அவர் விடைபெற்றுப்போகும்போது தாங்க முடியாமல் அவர் யார் என்று நினைவுக்கு வரவில்லை
என்றேன் மனிதனுக்கு வந்ததே ஒரு கோபம் நீங்களெல்லாம் இப்படித்தான் வேலையானால் போதும் வேறு ஒன்றுமே
தெரியாது என்று புலம்பினார் நான்மன்னிக்கக்
கோரி அவரிடம் அவர் யார் என்று கேட்டேன் நான் எச் ஏ எல்லில் பயிற்சியின்போது பல துறைகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது பலரிடம் அதிக பட்சமாகஒரு வார காலம் பயிற்சியிலிருந்திருப்பேன் அது நடந்து முடிந்து ஆண்டுகள் ஓடிவிட்டனஅப்படி நான்
பயிற்சியில் இவரிடமும் இருந்திருப்பேன் சுத்தமாக
நினைவில் இருக்கவில்லைஅவர் போனபின் என் ஞாபக
மறதியை வைது கொண்டு வருந்தினேன் இதனால் தானோ என்னவோ
பயிற்சியின் போதுபலரு எதையும் சொல்லித்தருவதில்லைபின்
ஒரு நாள் நாம் அவர்களுக்கே அதிகாரியாய் வரலாம்
என்னும் பயம்தான்
இனி எழுதுவது தொடர்பற்றதாக
இல்லை எப்படி இருந்தநான் இப்படியாகி விட்டேனே
என்று நினைக்கும் போது எப்படீருந்தேன் என்னும் நினைவும் வருகிறதுசிறு வயதுகளில் நன்
தடகளப் போட்டிகளில் ஓரளவு வல்லுனன் அம்பர்நாதில்
பயிற்சியின் போது நடந்த தடகளப் போட்டிகளில்பங்கு பெற்று உயரம் தாண்டுதலில் முத்ல் பரிசு பெற்றேன் என் அளவு உயரம்தாண்டினேன் அதாவது ஐந்தடி நான்கு
அங்குலம் நினைவு அதல்ல பங்கு பெற்றவர்களில்
போட்டி அதிகம் இருந்து இருந்து இருவர் சாம்பியன்ஷிப்
பரிசு பெற இருந்தனர் அவர்களில் ஒருவர் உயரம் தாண்டுதலில் வெற்றி பெற்றால் சாம்பியன் என அறியப்படுவார் ஆனல் எதிர்பாராத வகையில்நான் வெற்றி பெற்றேன் தனக்கு ஒருகண்போனாலும் பரவாயில்லை என்பது போல் அவர்களில் ஒரு கூட்டத்தினர்
என்னைத் தோள் மீது அமர்த்தி மைதானத்தை சுற்றிவந்தனர்அப்படி இருந்தநான் இப்போது சரியாக
நடக்கவே முடியாதுகஷ்டப்படும்போது அந்தநாள் நினைவு வந்ததுஒரு தந்தை மகனுடன் ஓடி
தோற்றதை அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்
வாய்ப்பாக நினைத்து இருந்ததை ஒரு பதிவாக்கி இருந்தது நினைவுக்கு
வந்தது மேலும்நாம்குழந்தைகளிடம்
பாடம்கற்பதையும் சித்தரிக்கும் விதத்தில் ஒரு காணொளியையு ம் பகிர்கிறேன்
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு
ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும்
கவனம் கவனம் என்றே பதறினாள்
ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த தாய்.
இன்று நான் பள்ளியில் பந்தயத்தில்
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன்
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன்
பந்தயத்தில் என்னோடு ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்
ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன்
உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன்
என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு
என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு
என்றே அப்பனும் மழுப்பிட
ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.
மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.
ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை.
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்.
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில்
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை.
என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது,
நானே முதல்வன், நானே முதல்வன் என்றே
முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை
தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்.
இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில்
விரிகிறது ஒரு முறுவல்,