I ALSO RUN
-----------------
நானும் பதிவிடுகிறேனே நண்பா
------------------------------------------
நான்
2010ம்ஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில்
பதிவுலகில் நுழைந்தேன்ஏழாவது வருடம்ஓடிக்கொண்டிருக்கிறது பதிவுலகம்எனக்கு ஏராளமான முகமறியா நட்புகளை (அறிமுகங்களை
) சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது என் எண்ணங்களை கடத்தவே எழுதத் தொடங்கினேன்பலவித கருத்துகளைக் கூறி இருக்கிறேன்அதன் மூலம் என்னை ஒரு திறந்த புத்தகமாகத்தான்காட்டிக்கொண்டிருக்கிறேன்என் எழுத்துகளை நேசிப்பவர்கள் இருக்கலாம்அதில் குறை காண்பவர்களும்இருக்கலாம்ஆனால் பதிவுலகில் இருப்பவர்களில் நான்வித்தியாசமானவன் என் கருத்துகளை காம்ப்ரமைஸ் செய்யாமல்பிறர் எண்ணங்களையும் கவனித்து வருகிறேன்ஆனால் இப்பதிவு அது பற்றி அல்ல,முகமறியா
நட்புகள் கூடவே முகமறிந்த நட்புகளும்நிறையவே உண்டுஅது நானாக முன்நின்று பலப்படுத்தியவை எனக்கு ஆரம்பகாலத்தில்
ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தியவர்களை நினைவு கூறல் அவசியம்
அப்படி
ஆரம்பகாலத்தில் ஊக்கப்படுத்தியவர்களில்முதலில் நான்சந்தித்தது மின்
மினிப் பூச்சிகள் என்னும் வலைத்தளத்தின்சொந்தக்காரர்திருமதி ஷக்தி
பிரபாவும்மன அலைகள் தள சொந்தக்காரர்
டாக்டர் கந்த சாமியும்முன்நிற்கிறார்கள் இவர்களில் டாக்டர் ஐயா என்
வீட்டுக்கேவிஜயம்செய்திருக்கிறார்கள்கோவையில் இருந்து வந்து என்னைப் பெருமைப்
படுத்தினார்கள் பெங்களூரில்ஒரு மினி
பதிவர்கள் சங்கமம் நடந்ததுஅதில் ஆறேழு
பதிவர்கள் அறிமுகமானார்கள் ஆனால் இப்போது பலரிடம்டச் விட்டுப் போயிற்று திருமதி ஷைலஜா ஷக்திபிரபா திருமதி ராமலக்ஷ்மி திரு
ஹரிகிருஷ்ணண் திரு ஐயப்பன் எனும்ஜீவ்ஸ்
போன்றோரெ நினைவில் நிற்கிறார்கள் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பதிவர்
சங்கமம் பற்றி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஏழெட்டு பேர்களே வந்திருந்த முதல்
பதிவர் சந்திப்பு எனக்கு அதுஅது மார்ச்
மாதம்பதினாறாம் நாள் 2013ல் நடந்தது அதை
ஒரு காணொளியாக்கி இருந்தார் ஹரி கிருஷ்ணன்அவர்கள் யூ ட்யூபில்ஆங்கிலத்தில்Bangalore
sangamamE group meetஎன்று பார்த்தால் கிடைக்கும் பார்க்க
மதுரை
சரவணன்அவர்கள் பெங்களூருக்கு ஏதோ
ஆங்கிலப் பயிற்சி பெற வரப்போவதாக அறிந்தேன்அவரை அவர் பயிற்சி பெற்று வந்தயுனிவர்சிடி வளாகத்துக்கே சென்று பார்த்தேன்
அது 2010ன் கடைசியில் என்று நினைவு. அவரை என்வீட்டுக்கு அழைத்து வந்தேன் அவரே என்இல்லத்துக்கு வந்த முதல் பதிவர் அப்போதெல்லாம் நான் தனித்தாளில் எழுதி
வைத்துக் கொண்டு பிறகு பதிவாக்குவேன்அவர் நேரே தட்டச்சு செய்வதாகக் கூறினார் பிற்காலத்தில் நானும் அவ்வாறே
செய்ய ஆரம்பித்தேன்சமுத்ரா என்று வலை
யுலகில் எழுதி வரும் மது ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அவரை என் இல்லத்துக்கு வருமாறு
வேண்டினேன்பௌதிகத்தில் கரை கண்டவர் என்று
அனுமானித்திருந்த நான்ஒரு நடுத்தர வயது
சயண்டிஸ்டை எதிர் பார்த்தேன் எதிர்பார்த்தேன்ஆனால் வந்தவரோ இளைஞர் திருமண மாகாதவர் ஐடி நிறுவனம் ஒன்றில்பணியில் இருந்தார் கர்நாடக இசையும் தெரிந்தவர்எனக்காக ஓரிரு பாட்டுகளும் பாடினார்இப்போது அவர் சென்னைக்குப் போய்விட்டதாக
அறிகிறேன்ஃபேஸ்புக்கில் கலக்குகிறார்,
நான்கொஞ்சமும் எதிர்பாராமல் என்னைக் காண
வந்தவர்மிகவும்பிரபலமான அப்பாதுரை சிகாகோ வாசி ஒரு சில
பதிவுகளில் பின்னூட்டம்மூலமே
தெரிந்திருந்த அவர் பெங்களூர் வந்திருந்தபோது சற்றும் எதிர்பாராத நிலையில்
என்வீட்டுக்கு வந்திருந்தார் ஒரு பதிவில்
நான் கொடுத்திருந்த மிகக் கடினமான சுடோகு வுக்குசரியாக விடை கொடுத்த அவரை நானொரு ஜீனியஸ் என்பேன் இப்போதெல்லாம் பதிவுலகில்
அவரைக் காண்பதில்லை மின்அஞ்சல்
அனுப்பினாலும்பதில் இல்லை.
மது
ஸ்ரீதர் மூலம் என்னைப் பற்றிக் கேல்விப்பட்ட திருமதி ஷைலஜாவும்என்வீட்டுக்கு விஜயம் செய்திருக்கிறார். அவர் கூட வந்தவர் திரு ஐயப்பன்.
எப்போதாவது பதிவுகளில் பார்ப்பதுண்டு இவர்களுக்கும்கர்நாடக இசையில் ஆர்வம் உண்டு. எனக்காக சில பாட்டுகள் பாடினார் அவற்றை
ரெகார்ட் செய்தும் வைத்திருந்தேன்ஆனால்
அவை பழைய டேப்பில் இருக்கிறது அவற்றை முடிந்தால்கணினியில் ஏற்ற வேண்டும் திரு ஏகாந்தனும் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
நியூ சிலாந்திலிருந்து திருமதி துளசி கோபாலும் அவர் கணவர் திருகோபாலும் என்னை
என்வீட்டில் சந்தித்து கௌரவித்தவர்களே .
இன்னொரு நண்பர் என் பெங்களூர் வீட்டுக்கும்சென்னையில் என்மகன்வீட்டுக்கும் வந்து என்னை சந்தித்தவர் திரு இராய. செல்லப்பா யக்ஞசாமி.இந்தியாவிலும்அமெரிக்காவிலும்வசிப்பவர் திரு
துளசிதரனும்கீதாவும்ஒரு குறும்படத்தில் என்னை நடிக்க வைக்க என்
வீட்டுக்கே வந்திரூந்தார்கள்
இவர்கள்
எல்லாம்பெங்களூரில் என் வீட்டுக்கு
வந்தவர்கள் இது தவிர நான் சென்னைக்குப் போகும் போதும் மதுரைக்குப் போனபோதும்
திருச்சிக்குப் போனபோதும் . என்
இருப்பிடத்துக்கே வந்து சந்தித்தவர் பட்டியலும்உண்டு திரு பாலகணேஷ், திரு ஸ்ரீராம் கார்த்திக் சரவணன்திடங்கொண்டு போராடு ஸ்ரீநிவாசன் டிஎன்
முரளிதரன் கவியாழி கண்ணதாசன்மைத்துளிகள் மாதங்கி
அவரது தந்தையார் மாலிஎரிதழல் வாசன்.
தம்பட்டம்பானுமதி திரு வே நடன சபாபதி
ஆகியோர் சென்னையிலும்திரு ரமணி திரு சீனா
தமிழ்வாசி பிரகாஷ் சிவகுமாரன் மதுரைசரவணன்போன்றோர் மதுரையிலும்
திருச்சியில்
திரு வை கோபாலகிருஷ்ணன் தி தமிழ் இளங்கோ ஆரண்யவாஸ் ராமமூர்த்தி திரு ரிஷபன் ஊமைக்கனவுகள்
திரு ஜோசப் விஜு போன்றோரும் என்னைக் காணவந்தவர்கள்
இது
தவிர நானாகப் போய் சந்தித்தவர்கள் பட்டியலில் கரந்தை ஜெயக்குமார் திரு ஹரணிசுப்புத்தாத்தா என்று அறியப்படுபவரும் திருமதி
கீதா சாம்பசிவம் திருமதி கோமதி அரசு போன்றோரும் அடங்குவர்
இவர்கள்தவிர
மதுரை வலைப்பதிவர் சந்திப்பிலும் புதுக்கோட்டை சந்திப்பிலும்பலரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன்தருமி பகவான் ஜி கில்லர் ஜீ சேட்டைக்காரன்
திண்டுக்கல் தனபாலன் எஸ்பி செந்தில் குமார்தென்றல் சசிகலா என்று பட்டியல் நீளும்
இருந்தாலும்எனக்கு நான் பல பதிவர்களை சரியாகப் பரிச்சயப்படவில்லை என்னும்ஆதங்கமும்உண்டு வலை உலகு பல அறிமுகங்களை சம்பாத்தித்துக் கொடுத்திருக்கிறது நான்
சந்திக்க வேண்டியவர் பட்டியலும்உண்டு பூவனம்ஜீவியை இதுவரை சந்திக்க இயலவில்லை வானவில்
மோகன் ஜி என்னைச் சந்திக்க பெங்களூர் வரப்போவதாகக் கூறி இருந்தார் அந்நாளை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்திரு வெங்கட நாகராஜும்
பெங்களூர் வந்தால் சந்திப்பதாகக் கூறி இருக்கிறார்
இவ்வளவு எழுதும் எனக்குள் பதிவர் சந்திப்புகள்
கூடி மகிழ ப்ளான்செய்யப்பட்டுநடத்தப்படுவதில் ஏதோ குறைகள் இருப்பது
போல்தெரிகிறதுகுறைகள் என்று தோன்றியதைச் சொன்னால் நீயே
முன்நின்று நடத்து பார்ப்போம்என்னும் ரீதியில் பதில்கள். அதைச் செய்யவயதும்உடல் நிலையும்என்னிடம் இல்லையே
இருந்தால் செய்திருப்பேனோ என்னவோ
என்னைப்
பற்றி பதிவுலகில் பல அபிப்பிராயங்கள் இருக்கலாம் ஆனால் யாரிடமும் வன்மம்
பாராட்டாது எனக்குத் தோன்றுவதைப் பதிவிட்டுக் கொண்டும் பிறபதிவுகளில் பின்னூட்டம்
எழுதியும் வருகிறேன்என்னை விட அழகாக
எழுதுகிறவர்கள் பலரும்இருக்க நானும்இருக்கிறேன்என்னும்ரீதியில் I ALSO RUN……..!
இனி நான் சந்தித்தவர்களில் சிலர்
சமுத்ராவுடன்
மதுரை சரவணனுடன்
திருமதி ஷைலஜா ,ஐயப்பன்
இராய செல்லப்பா
அப்பாதுரையுடன்
டக்டர் கந்தசாமி ஐயாவுடன்
கோமதி அரசும் கணவர் அரடும் என்னுடன்
துளசிதரனுடன்
திரு முரளிதரனும் செல்லப்பாவும்
கீதா(தில்லையகத்து க்ரோனிலிள்ஸ்) என் மனைவியுடன்
திரு ஏகாந்தனுடன்
திரு ஜெயக்குமார் ஹறணியுடன்
திரு ஹரணியுடன் அவர் வீட்டில்
இன்னும் பல புகைப்படங்கள் இருக்கின்றன. சிலவற்றை பிரசுரிக்க இயலவில்லை சந்தித்தவர்களில் சிஒல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம் உ-ம் முனைவர் ஜம்புலிங்கம் கர்னல் கணேசன் புலவர் இராமாநுசன் போன்றோர் என் மறதியே காரணம் .
என் வலைப்பூவுக்கு
வரும்வாசகர்களுக்குப் புலப்படுகிறதா
தெரியவில்லை.என்தளமே மாறி விட்டிருப்பதை கவனித்தீர்களாஎன்பதிவு ஒன்றில் சில புரியாத விஷயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்நண்பர் தனபாலன்என்தளத்தில்இருந்த வலையக இணைப்பை எடுக்கச்
சொன்னார்எனக்குத்தான் ஏதும் தெரியாதே.
அவரையே உதவக் கேட்டேன்என்தளத்துச் செல்ல அனுமதி அளிக்கும்முகவரி மற்றும்கடவுச் சொல் போன்றவை தேவை என்றார்.கடவுச் சொல்லைக் கொடுக்க எனக்குத் தயக்கமாக
இருந்ததுஎன்ப்ரைவசியில் பிறரை அனுமதிப்பது என்றாகி விடுமே.
இருந்தாலும்நம்நண்பர்தானேஎன்று கொடுத்தேன் (இதற்குப் பின்என்கடவுச் சொல்லை மாற்றி விட்டேன்.....!
)ஒரே நாளில் ஏதேதோ மாற்றங்கள்
செய்துஎன்தளத்தையே மாற்றிவிட்டார்மின் அஞ்சலில் என் பதிவுகளைப்
பெற இப்போது இணைய முடியும்மறுமொழி
எழுதுவதில் மாற்றம்கொண்டு வந்து
விட்டார்வேறு சில விஷயங்களும்சேர்ந்திருக்கின்றன. சொல்ல மறந்து விட்டேனே
டாட் இன் னை டாட் காமாக மாற்றி இருக்கிறார் தமிழ்மண வாக்குப்பட்டையும்இருக்கிறதுஇனி பார்க்க வேண்டும்தமிழ் மண
ராங்க் இப்போது இருக்கும்24
ல்லிருந்துமேல் நோக்கிப் போகிறதா என்று எனது சென்றபதிவை திரு தனபாலனே தமிழ்மணத்தில் இணைத்து தமிழ்மண வாக்கும் கொடுத்து விட்டார் ஆனல் என் வலைப்பூ பதிவில் தமிழ்மண வாக்குப் பட்டை காணோம் தமிழ் மணத்தில் என் பதிவில் இருந்தது நான் வாக்குப்போட முயன்றபோது எனக்குஅது சாத்திியப்படவில்ல என்ன பிரச்சனையோ தெரியவில்லைஎனக்கு தெரிய வேண்டியது இன்னும் நிறையவே இருக்கிறது ஒரு பிரச்சனை என்றபோது உடன் வந்து உதவியதனபாலன் இதிலும் உதவுவார் என்று நினைக்கிறேன்
இத்தனையும்செய்து கொடுத்த நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி கூறிக்
கொள்கிறேன்