சுயசரிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயசரிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஆகஸ்ட், 2022

Mu⁸நான் யார் 15

 இதன் பின்சற்று இடைவெளி இருக்கும்


பொன்மலைப்பட்டியில் இருந்தபோது பணப்பற்றாக்குறை அதிகமாய் இருந்தது. என் கையில் ஒரு அரைப் பவுன் மோதிரம் இருந்தது, ஒவ்வொரு மாதமும் அதை ரூ12/-க்கு அடகு வைப்பதும் மாத முதலில் மீட்பதும் ... அப்பப்பா அது ஒருகாலம் ஒரு ஏழெட்டு மாதகாலம் பொன்மலைப்பட்டியில் இருந்திருப்போம் அந்த நேரத்தில் கலைமகள் பத்திரிக்கைநாராயணசாமி ஐயர் நினைவு நாவல் போட்டி ஒன்று அறிவித்திருந்ததுஅப்போது என் கற்பனையில் உருவான நாவல்தான் “நினைவில் நீஅதை பத்திரிக்கைக்கு ரெஜிஸ்தர் தபாலில் அக்நாலெட்ஜ்மெண்ட் ட்யூ வுடன் அனுப்பினேன் அனுப்பிய மறு நாளே அக்நாலெட்ஜ்மெண்ட் யார் கை ஒப்பமில்லாமலும் திரும்பி வந்தது. தபால் ஆபீசில் விசாரித்தால். அந்த ரெஜிஸ்தர் தபால் போய்ச் சேர்ந்திருக்கும் என்று அலட்சியமாகப் பதில் சொன்னார்கள்.அந்த நாவல் பரிசீலனைக்கே போயிருக்காது என்றே எண்ணினேன் . அதை முழுவதும் வாசித்த என் நண்பன் மயூரநாதன் அதை வெகுவாகப் பாராட்டினான் அந்தக் கால கட்டத்தில் பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் (பிரபல எழுத்தாளர் ஜகன் நாதனின் மாணாக்கர் என்று நினைவு) சொற்பொழிவு ஒன்றினைக்கேட்க நேர்ந்தது. அவர் கூறிய பல கருத்துக்களை என் நாவலில் கையாண்டிருக்கிறேன் .அதே நாவலை நான் வலைப்பூ தொடங்கியபின் தொடராக வெளியிட்டிருக்கிறேன். புத்தக வடிவில் கொண்டுவர ஆசை உண்டு மனதில் பார்ப்போம்

நான் வேலைக்குப் பொய் விட்டால் சாந்தி குñìழந்தையுடன் தனியே இருக்க வேண்டும் குழந்தை மனோவும் ஒரு இடத்தில் இருக்கமாட்டான் எல்லா இடங்களுக்கும் தவழ்ந்து போய்விடுவான் குழந்தை அடுக்களைக்குள் வராமலிருக்க நிலைப்படியில் ஒரு தடுப்பு மரப்பலகையால் எழுப்பிவிடுவாள் குழந்தையின் அரணாக்கயிறில் ஒரு கயிறைக்கட்டி கட்டிலின் கால்களில் பிணத்து விடுவாள்.கயிறின் நீளத்துக்குள் குழந்தை வளைய வரலாம் குடியிருப்பு வீடு கிடைக்கத் தாமதமாகிக் கொண்டிருந்தது. மீண்டும்பெங்களூரு சென்று விட்டாள் நான் பொன்மலைப்பட்டி வீட்டைக் காலி செய்து விட்டேன் நண்பர்கள் என்.நடராஜன் அவன் அண்ணா தண்டபாணி ஆகியோருக்குக் குடியிருப்பில்வீடு கிடைத்திருந்தது. நாங்கள் நண்பன் சின்னிக் கிருஷ்ணாவுடன் நடராஜன் வீட்டில் தங்கினோம் செல்ஃப் சமையல் சின்னிக் கிருஷ்ணாவுடன் ஆன நட்பு இறுகத் தொடங்கி இருந்தது அந்த மாதிரி ஒருவருக்கு அலாட் செய்திருந்த வீட்டில் வேறு யாரும் தங்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. நானும் சின்னியும் திருச்சி மலைக் கோட்டை அருகே அல்லிமால் தெருவில் ஒரு அறை எடுத்துத் தங்கினோம் தினமும் சின்னியின் ஷெர்பா மோட்டார் சைக்கிளில் பணிக்குச் செல்வோம்  சில நாட்களுக்குப்பிறகு தில்லை நகரில் ஒரு வீடு பார்த்தேன். எவ்வளவு நாட்கள் திருமண்மாகியும் பிரம்மசாரியாய் இருப்பது தில்லை நகர் வீட்டுக்குப்போகும்போது சின்னியையும் எங்கள் கூடவே பேயிங் கெஸ்டாக இருக்கக் கேட்டுக் கொண்டேன் அவனுக்கு அது சௌகரியப்பட்டதோஇல்லையோ எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. தில்லை நகர் வீட்டுக்கு வரும்போது சாந்தியின் தம்பி பாஸ்கரனையும் எங்களுடன் தங்கிப் படிக்கக் கூட்டிக் கொண்டு வந்தோம் பாஸ்கரனை கிஅபெ பள்ளியில் சேர்த்தோம் அவன் எங்களுடனே யே இருந்து பள்ளிப்படிப்பு டிப்லொமா முடியும் வரையிலும் நாங்கள் விஜயவாடா போனபின்னும் கூடவே இருந்து பிஎச் இ எல் லிலேயே பணிக்கும் அமர்ந்தான் சில விசேஷ்ங்களை எழுதிக் கொண்டு போகும் போது இவையெல்லாம் பதிய வேண்டியது தானா என்று தோன்றும் ஒரு சாதாரணனின் வாழ்க்கையில் எது முக்கியம் எது இல்லை என்று கூறுவதே சிரமம் இருந்தாலும் எழுதும் போது வரும் எண்ண ஓட்டங்களை என்னைச் செதுக்கிய அனுபவங்களை பதிவிடுவதெ சரியே என்று தோன்றுகிறது சில நேரங்களில் நினைவுக்கு வராமல் பதிவது விட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு. அதுவே சில நிகழ்வுகள் முன் பின்னாக பாதிவாகக் காரணமாக இருக்கலாம். அனுபவங்களும் நினைவுகளும் அலுவலகம் சார்ந்ததும்  தனிப்ப்ட்ட வாழ்க்கையைச் சார்ந்ததுவுமாக இருக்கிறது மாறி மாறி வரலாம்

 

விஜயவாடா போய்ச் சேர்ந்தபோது பாஸ்கரனும் எங்கள் கூடவே வந்தான் நான் அங்கு பணிக்குச் சென்ற ஆரம்ப அதிகாரி எனக்கு சில அதிகாரங்கள் மறைமுகமாக வழங்கப் பட்டிருந்தது. பாஸ்கரன் டி எம் இ முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தான் விஜயவாடாவில் அப்போது என் மேலதிகாரி  கெ.பி. ராஜ்குமார் என்பவர். என்னிடம் ஒரு சமயம் என் குடும்ப விஷயங்களைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். டி எம் இ படித்த மைத்துனன் வீட்டில் இருக்கிறான் என்று சொன்னபோது அவனை ஏன் நான் வேலைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டார். அதை நான் செய்தால் தவறாகக் கருதப்படும் என்றேன் அவருக்கு அப்போது பர்லி பவர் ஸ்டேஷனுக்கு மாற்றலாகி இருந்தது. எனக்கு பாஸ்கரனை விஜயவாடாவில் பணிக்கு அமர்த்துவதில் ஆட்சேபணை இருந்தால் அவனைத் தன்னுடன் பர்லிக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறி அவனை வரவழைத்து காஷுவல் வேலையாகப் பர்லிக்கு அழைத்துப் போனார். இப்போது அதே பாஸ்கரன் பி எச் இ எல் லில் சீனியர் மானேஜர் வரை பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறான் இன்றும் அவனை என் மகனாகவே கருதுகிறேன் நினைவுகள் எங்கோ ஓடிவிட்டது சரி  மீண்டும் தில்லைநகர்வீட்டுக்குப்போனதிலிருந்து. .பெங்களூரில் பாஸ்கரன் யாருக்கும் அடங்காதவனாக, படிப்பில் நாட்டமில்லாதவனாகஎப்போதும் விளையாட்டாக இருக்கிறான் என்று அறிந்தேன். சாந்தி வேலைக்குச் சென்றிருந்தால் அவள் குடும்பத்துக்கு உதவியாய் இருந்திருக்கும். அது நடக்காமல் போனது என்னால்தான் என்பதால் அதை ஓரளவு ஈடு கட்ட பாஸ்கரனின் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன் என்னுடன் பாஸ்கரன் இருந்தவரைக்கும் மிகவும் நல்ல பையனாகவும் அடக்கமுள்ளவனாகவுமே இருந்தான் அது அவனுக்கு என் மேல் இருந்த மரியாதையால் வந்தது என்று கூறுவார்கள். எது எப்படியானாலும் அவனை எங்களுடன் கூட்டி வந்தது பலன் உடைத்தாய் இருந்தது.

சில நாட்களில் குடியிருப்பில் வீடு கிடைத்தது  சின்னிக் கிருஷ்ணாவும் எங்கள் கூடவே வந்தான் வீட்டில் நாங்கள் அப்போது ஐந்து பேரானோம். இதற்கு நடுவில் சாந்தி மீண்டும் கர்ப்பம் தரித்தாளது ஒரு பெண்குழந்தையாக இருக்க வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன் சாந்திக்கு உதவியாக அவள் தங்கை ராதாவந்திருந்தாள் அவளுடைய இந்த இரண்டாம் பிரசவம் மறக்க முடியாதது.விடியற்காலையிலேயே மூன்று நான்கு மணீக்கே சாந்தி எழுந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். எப்போதும் போல நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. காலை சுமார் ஐந்தரை மணிக்குள் அவள் குளித்து ரெடியாய் இருந்தாள். மருத்துவ மனைக்குச் செல்ல. நான் ஒரு புறமும் நாச்சா ( சின்னிக் கிருஷ்ணாவை அப்படித்தான் அழைப்போம் ) ஒரு புறமும் இருக்க மருத்துவ மனைக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றோம் . அறியாமையின் உச்ச கட்டம் அதுதான் மருத்துவமனயில் சேர்த்த சுமார் ஒரு மணிநேரத்தில் சாந்தி மீண்டுமொரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள் லேபர் வார்டில் அவள் இருந்தபோது நான் ஒரு முறை அவளைப் பார்த்தேன் அந்தக் கஷ்டத்தைப் பார்த்த அந்த நிமிடமே இனியொரு குழந்தை வேண்டாம் என்னும் முடிவுக்கு வந்தேன் இன்றைக்கும் சாந்தி அவளை நாங்கள் அந்த நேரத்திலும் நடத்திச் சென்றதைக் குத்திக்காட்டுவாள். அதுதான் சொல்லி விட்டேனே அது அறியாமையின் உச்ச கட்டமென்று. இப்போது ஒவ்வொருவர் கர்ப்பமாயிருக்கையில் எடுத்துக் கொள்ளும் கவனிப்புகள் எதையுமே சாந்திக்குக் கொடுத்ததில்லை. வேண்டாம் என்றல்ல அறியாமையால்தான்

இரு குழந்தைகள் பிறந்தது பற்றி எழுதி இருக்கிறேனே தவிர அவர்கள் பிறந்த தினத்தைக் குறிப்பிடவே இல்லை போல் தெரிகிறது இருந்தால் என்ன. இப்போது எழுதி விட்டால் போயிற்று. மூத்தவன் பெங்களூரு பௌரிங் ஹாஸ்பிடலில் 1966-ம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி பிறந்தான் இரண்டாமவன் திருச்சி பி எச் இ எல் குடியிருப்பு மருத்துவமனையில்  1968-ம் வருடம் மே மாதம் ஏழாம் தேதி பிறந்தான் மூத்தவனுக்கு மஹாதேவன் மனோஹர் என்றும் இரண்டாமவனுக்கு பிரசாத் என்றும் பெயரிட்டோம் என் நண்பன் மனோஹர் பாபுல்கர் என்பவனது பன்முகத் திறமைகள் எனக்குப் பிடிக்கும் அதுபோல் என் மகனும் இருக்க அவன் பெயர் மனோஹர் என்றாயிற்று. சின்னவனுக்கு என் நண்பன் நாச்சா என்றழைக்கப்படும் சின்னிகிருஷ்ணா பிரசாத் என்னும் பெயர் சூட்டினான் நாச்சா ஏறக்குறைய பிரசாதின் காட் ஃபாதர். என் மக்கள் பிறந்ததில் இருந்தே நான் சிறிது பொசெசிவ் ஆக இருந்திருக்கிறேன் . என் மக்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வளர வேண்டும் என்று விரும்பினேன். இப்போது நினைத்துப்பார்க்கும்போது அது பொய்க்கவில்லை என்றே தோன்றுகிறது பிரசாத் பிறந்த சில நாட்களில் குழந்தையைப் பார்க்க அம்மா வந்திருந்தாள். கூடவே சந்துருவை என்னுடன் தங்கிப் படிக்க வைக்க விரும்பினார்கள் எனக்கு ஆட்சேபணை ஏதும் இருக்கவில்லை. அப்போதெல்லாம் நான் நினைத்ததைச் செய்து விடுவேன் அதனால் பிறருக்கு ஏற்படும் கஷ்டங்களை நான் எண்ணிப்பார்த்ததில்லை. நான் யாரையும் கஷ்டப்படுத்த எண்ணி எந்த முடிவும் எடுத்ததில்லை. ஆனால் என் முடிவுகள் சாந்திக்கு எத்தனைக் கஷ்டங்கள் கொடுத்திருக்கிறது என்று இப்போது தெரிகிறது. இருந்தாலும் என் முடிவுகள் பற்றி நோ ரிக்ரெட்ஸ்,!எல்லாம் நன்மைக்கு என்று இருக்கும் போது தவறுகளும் நேர்ந்து விடுகிறதுஅம்மாவின் நோக்கம் பற்றி இப்போது சந்தேகம் எழுகிறது. மனைவியின் தம்பியைப் படிக்கவைக்கும் போது தன் தம்பியைப் படிக்க வைக்க தடை ஏதும் இருக்கக் கூடாது என்று எண்ணி இருக்கவேண்டும் தடை ஏதும் இருக்கவும் இல்லை. ஆனால் பாஸ்கரன் முழுக்க முழுக்க என் பொறுப்பில் கண்ட்ரோலில் இருந்தான். ஆனால் சந்துரு அப்படி இருக்கவில்லை. அவனை பெங்களூரில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் செய்த்து வந்தார்கள். அவனுக்கு அதனால் என்னுடன் இருக்கும் போது இருக்க வேண்டிய பொறுப்பு இருக்கவில்லை. ஊரிலிருந்து பள்ளி முகவரிக்கு அவனுக்குக் கடிதம் அனுப்புவார்கள் பணமும் அனுப்பி இருக்கிறார்கள். அவனுக்கு ஒரு பயமோ மரியாதையோ எப்படி வரும்.?அவனுக்குக் காது கேட்கும் திறன் குறைவு. பள்ளிப்பாடங்கள் சொல்வது கேட்காததால் புரியாது. அவனை இ என் டி ஸ்பெஷலிஸ்டிடம் கூட்டிப்போனேன்  அவர் இவனைச் சோதனை செய்யும்போது ஒருகாதில் சப்தம் எழுப்பிக் கேட்கிறதா என்றால் மறுகாதில் கேட்பதாகக் கூறுவான் அவர் பலமுறை சோதித்து அவனை ஒரு சைக்ரியாடிஸ்டிடம் கூட்டிப் போகச் சொன்னார். பிற்காலத்திலவனது சில நடவடிக்கைகள் அன்று டாக்டர் சொன்னது சரியோ என்று எண்ண வைத்தது. பள்ளிக்குப் போக  பி எச் இ எல்  பஸ்பாஸ் வாங்கிக் கொடுத்திருந்தேன் இவன் அதைக் கிழித்து வைத்து கொண்டு பாஸ் செக் செய்ய வருபவர்களிடம் காண்பிப்பான். அவனை குறித்துப் புகார்கள்வரத் தொடங்கின. ஒரு முறை செக்யூருடி அதிகாரியிடம் மணி கேட்டு அவரது கடிகாரம் ஓட்டை என்று கேலி செய்திருக்கிறான் அவர் என் வீடு தேடி வந்து புகார் செய்தார். அன்று நான் அவனை அடித்தேன் நிறைய நேரம் படிப்பான் ஆனால் எதுவும் நினைவில் நிற்காது. எப்படியோ பத்தாம் வகுப்பு வரை படித்தான் ஃபெயில். அவன் படித்து பாசாகததற்கு நாங்கள்தான் காரணம் என்று அம்மா நினைத்தார்கள் பாஸ்கரன் எல்லா வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்று டிப்லொமாவும் பாசானான் சந்துரு அவன் அம்மாவின் இண்டெர்ஃபியரென்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாகச் செய்திருப்பான் என்றே எண்ணுகிறேன் அம்மாவின் நான்கு புதல்வர்களில் சந்துருவே மிகவும் பின் தங்கியவன் அல்லது அவன் விஷயத்தில் நான் தோற்றுவிட்டேன்

 இதன் நடுவில் அம்மாவின் மூத்த இரு பிள்ளைகளில் நடராஜனும் பாபுவும் ஒரே நேரத்தில்பள்ளியிறுதிப் படிப்பு முடித்திருந்தார்கள் நடராஜன் சுமாரான் மதிப்பெண்களும் பாபு அவனைவிட நல்ல மதிப்பெண்களும் எடுத்திருந்தனர் என் சக்திக்கு இருவரையும் கல்லூரியில் படிக்க வைக்க முடியாது என்றேன் நடராஜன் வேலைக்குப் போவதாகக் கூறினான் அப்போது எச் ஏ எல்  லில் பள்ளியிறுதி படித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமொன்று வந்தது அதன் படி மூன்றாண்டுகள் பயிற்சி பிறகு வேலை கிடைக்கும் என்று உறுதி இருக்கவில்லை. அவன் பயிற்சியில் சேர்ந்தால் ஒரு தொழிலாவது கற்றுக் கொண்டது போலாகும் என்று கருதி பயிற்சி மேலாளரை அணுகி அவனைத் தேர்வு செய்ய வேண்டினேன் ரெகமெண்டேஷன் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னாலும் அவனைப் பயிற்சிக்குத் தேர்வு செய்ர்தார். அவன் மூன்றாண்டு பயிற்சிக்குப்போனான் பாபுவாவது கல்லூரிப்படிப்புக்குப் போக அவனும் விரும்பினான் நானும் விரும்பினேன் முதலில் புனித் ஜோசப் காலேஜில் சேர்ந்தான் அதன் பிறகு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு கவர்ன்மெண்ட் பாலிடெக்னிக்கில் மூன்றாண்டு டிப்லொமாவில் சேர்ந்தான் இடைப்பட்ட காலத்தில் என் சொந்த வாழ்வைக் கருதியும் குடும்பநலன் கருதியும் நான் சென்னை லூகாசில் சேர்ந்தேன் பதிவிடும்போது நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கோர்வையாக எழுதமுடியவில்லை(.சற்று இடைவெளிக்கு பின் தொடர்வேன்)                .    .                       .              . .     

 

 

      

 

 









 

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

நான் யார் 14

 

தொடருகிறேன் லூகாஸ் டிவிஎஸ் கம்பனியில் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்பது போல் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஏறத்தாழ அதேநேரத்தில் திருச்சி பிஎச் இஎல் நிறுவனத்திலிருந்து அசிஸ்டண்ட் எஞ்சினீயர் வேலைக்கு விளம்பரம் வந்திருந்தது. மனுப்போட்டேன் . நேர்காணலுக்கு அழைப்பு வந்தது சுமார் 25 பேர் வந்திருந்தனர். அப்போதைய பொது மேலாளர் ஆர் எஸ் கிருஷ்ணன் நேர்காண்ல் செய்தார். நான் தேர்வாகி இருப்பதாகக் கூறப்பட்டேன் ஒரு தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக இருப்பதைவிட ஒரு பப்ளிக் செக்டார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணி என்பது மேலானது. சம்பளம் 400-920 என்றிருந்தது. அது நான் வாங்கிய சம்பளத்தைவிடக் கூடுதலாக இருந்தது. எப்படியும் அது நல்லதற்குத்தான் என்று எண்ணினேன் சாந்தியும் பிரசவத்துக்குப் பெங்களூர் போயிருந்தாள். இனி திருச்சியில் குடித்தனம் என்று முடிவெடுத்தேன் பொறுப்பு அளிக்கும் நியமனக் கடிதம் எதிர்நோக்கி இருந்தேன் திருச்சியில் ஏற்கனவே என் நண்பர்கள் ஆர் வி. சந்திர சேகரும் கே ஜி. ஹரிஹரனும் அசிஸ்டண்ட் ஃபோர்மனாகப் பணியிலிருந்தனர். அவர்கள் இந்த வேலை மிகவும் நல்லது நான் அதிர்ஷ்டக்காரன் எனது போல் கூறினார்கள் நியமன ஆர்டர் வரவில்லையே என்றேன் தேர்வாகிகிடைக்கும் முன்பே கொடுத்துவிட்டேன் அது நான் செய்த தவறா என்பதை என்னால் இன்னும் தீர்மானிக்கமுடியவில்லை. ஏன் என்றால் எனக்கு ஆர்டர் வந்தபோது அதில் நான் சீனியர் இன்ஸ்பெக்டர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்று இருந்தது. சீனியர் இன்ஸ்பெக்டர் பணி அசிஸ்டன்ட் எஞ்சினீயர் பணியிலும் ஒரு க்ரேட் குறைவு. ஃபோர்மன் கிரேட். ஆனால சம்பளம் 400-750 கிரேட்..இருந்தாலும் பகல் இரவு மாறி மாறி வரும் ஷிஃப்ட், எப்போதும் ஒரு பயத்துடனேயே அணுக வேண்டிய பணி, என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. நியமன ஆர்டர் வரும்முன்பே நான் ராஜினாமா கடிதம் கொடுத்தது எல்லாம் நலனுக்கே என்று நினைத்தேன். பி எச் இ எல் லுக்கு கடிதம் எழுதீனேன். தேர்வு என்று கூறியது ஒரு க்ரேட் நியமன ஆர்டர் ஒரு க்ரேட்  விளக்கம் கேட்டு எழுதினேன். என் படிப்பு எல்லாவற்றையும் கண்டபின் நான் சீனியர் இன்ஸ்பெக்டர் பதவிக்கே தகுதி என்று எழுதி இருந்தனர் மனம் உடைந்து போயிற்று வேறு வழி ஏதும் இல்லாததாலும் துவங்கும் சம்பளத்தில் மாற்றம் இல்லாததாலும் பணியை ஏற்க முடிவு செய்தேன். வேறு மாற்று வழி ஏதும் புலப்படவில்லை

லூகாஸ் டிவிஎஸ்ஸிலும் ராஜினாமவை திரும்பிப்பெறக் கோரினார்கள். என் தன் மானம் இடம் கொடுக்கவில்லை.ஒரு அரசாங்கப் பொது நிறுவனத்தில் அதிகாரி வேலை என்று வேறு கூறி இருந்தேன் நான் திருச்சிக்குப் பயணமானேன் என் அப்போதைய நிலை மிகவும் மோசமாக இருந்தது நான் சென்றபோது ஒருஅஸீஸ்டண்ட்  என்ஜினீர் அறையையும்  அதன் முக்கியத்துவத்தையும்  பார்த்த நான் எவ்வளவு இழந்தேன் என்று தெரியவந்தது.பிற்காலத்தில் அவர் தொழிற்சாலையின் எம் டி ஆக உயர்ந்தார். ஆனால் நானோ............ .மறு நாள் எங்கள் மேலதிகாரியிடம் அசிஸ்டண்ட் சூப்பரிண்டெண்டண்ட் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர்அறிமுகப்படுத்தப் பட்டேன் . அவர் என்னைப்பற்றி விசாரித்தபோது என் ஏமாற்றம் முழுவதையும் கொட்டிவிட்டேன் அவர் என்னை ஒரு அசிஸ்டண்ட் எஞ்சினீயர் மாதிரியே ட்ரீட் செய்வதாக உறுதி அளித்தார். அதன் படியே நடந்தும் கொண்டார். இது வலிக்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது. என் இழப்பின் விலை தெரிய வேண்டுமானால் எனக்கு எந்த அசிஸ்டண்ட் எஞ்சினீயர் வேலைக்குத் தேர்வு ஆனேன் என்று கூறி அதற்கு அடுத்த நிலைக்கு தேர்வுசெய்யப்பட்டேனோ, அதே அசிஸ்டண்ட் எஞ்சினீயர் பதவியை நான் பெற ஆறே முக்கால் வருடம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒரே காரணம் என் குவாலிஃபிகேஷன் .மேல்படிப்பு படிக்கவில்லை என்றாலும் வேலையில் மிக நல்ல பெயரும் மதிப்பும் பெற்றிருந்தேன்பெற்றிருந்தேன்.

எழுதும்போது சில அனுபவங்களும் நிகழ்வுகளும் மாறி மாறி வருகின்றனநினைவுகளும் நிகழ்வுகளும் அலுவலகம் மட்டும் சார்ந்ததில்லையேதனிப்பட்ட சொந்த வாழ்வின் நிகழ்ச்சிகள் கோர்வையாக சொல்லாமல் விட்டுப் போகின்றன,நான் லூகாஸ் டிவிஎஸ்ஸில் பணியில் இருந்தபோது வில்லிவாக்கத்தில் வீடு எடுத்து வாழ்ந்திருந்தது குறித்து எழுதி இருந்தேன். சாந்தியின் கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டாலும் விசேஷ கவனிப்பு ஏதும் இருக்கவில்லை. ஒன்று அறியாமை காரணம் மற்றது கைக்கும் வாய்க்குமே போதாத நிலை. ஒன்பதாம் மாதம் சாந்தியை அவள் பெற்றோரிடம் பிரசவத்துக்கு அனுப்பினேன் ஒரு நாள் என் தம்பி விச்சுவும்( அவன் அப்போது என்னிடம் வந்திருந்தான் ) நானும் ஹடாரி என்னும் திரைப்படத்துக்குப் போய் வந்தோம் எனக்கு மகன் பிறந்திருந்த செய்தி வந்திருந்தது.அப்போது எனக்குள் ஏற்பட்ட மனநிலை நினைவுக்கு வரவில்லை. அதையும் ஒரு சாதாரண நிகழ்வாகவே எடுத்துக் கொண்டேன் போலிருக்கிறது சாந்தி பிரசவத்துக்குப்போயிருந்த காலகட்டத்தில் சோமாவின் திருமணம் நடந்திருந்தது சோமாவும் லக்ஷ்மியும் வில்லிவாக்கத்தில் இருந்தனர் என்னும் நினைவு.

பெங்களூரு சென்று குழந்தையைப் பார்த்துவிட்டுவந்தேன் பௌரிங் ஹாஸ்பிடலில் பிரசவம் நடந்தது சென்னை திரும்பி வந்தபின் திருச்சியில் பணி பொறுப்பேற்கச் சென்றேன் எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் பொன்மலைப்பட்டியில் ஒரு வீடு பார்த்தேன் குடியிருப்பில் வீட்டுக்குக் காத்திருக்கவேண்டும் கேஜி.ஹரிஹரன் உதவியோடு வாடகை வீடு பார்த்திருந்தேன் ரூ40/- மாத வாடகை என்று நினைவு. அது ஒரு பழைய வீடு. சங்கர ராமன் என்பவர் சொந்தக்காரர்.இந்தப் பெயரை நினைவு கூர்வதே என் நினைவாற்றல் சுத்தமாக மழுங்கவில்லை என்று திருப்தி படுத்திக் கொள்ளவே. சில விஷயங்கள் நினைவில் இருக்கின்றன. சில நினைவில் இல்லைநானும் சாந்தியும் சேர்ந்தே இருந்திருக்கிறோம் என்றாலும் எனக்கு நினைவில் இருப்பது அவளுக்கில்லை. அவள் நினைவில் இருப்பது எனக்கு இல்லை. ஏன் என்று பலமுறை தோன்றியதுண்டு. விடைதான் கிடைப்பதில்லைஅந்த வீட்டுக்கருகே ஒரு டெண்ட் கொட்டகை இருந்தது. பல நேரங்களில் வசனங்களும் பாடல்களும் கேட்கும் எனக்கு நினைவில் அங்கு சென்று ஓரிரு படங்கள் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. என்ன படம் என்பது நினைவில் இல்லை. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு என் மாமியாருடன் சென்று அங்கிருந்து எங்கள் சொற்ப சாமான்களை எடுத்துக் கொண்டு திருச்சி பொன்மலைப்பட்டிக்கு சாந்தி கைக் குழந்தையுடன் வந்தாள் பொன்மலைப்பட்டி ஸ்டேஷ்னிலிருந்துகுதிரை வண்டியில் வீடு வந்தோம். இதைஇப்போது பதிவிடுவதே அந்தக் காலநிலையை ஓரளவு விளக்கத்தான் இப்படியாக எங்கள் திருச்சி வாழ்க்கை துவங்கியது
பொன்மலைப்பட்டி வாழ்க்கையில் மறக்க முடியாத ஓரிரு நிகழ்வுகள். என் நண்பன் மயூரநாதன் ஒரு முறை என் வீட்டுக்கு வந்தான் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு சாந்தி சாந்தி என்று அவன் கொஞ்சியது தமாஷாக இருந்தது. நான் சாந்தியைக் கூப்பிடுவது அவன் மனதில் பதிந்து குழந்தையையும் அவனறியாமலேயே சாந்தி என்று நினைத்திருக்கிறான் இன்னொரு முறை வீட்டில் ஒரு பாம்பு நுழைந்தது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் பழைய வீடு அது.பின்கட்டு வாசல் நிலைப்படியில் ஒரு பொந்து போல் இருந்த இடைவெளியில் அது போய்ப் பதுங்கிக் கொண்டு அவ்வப்போது தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் அதை .வெளியில் வரவழைக்கச் செய்த முயற்சிகள் எல்லாமே வீணாயின. இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.கைக்குழந்தை வேறு/ எப்படி உறக்கம் பிடிக்கும். ஒரு வேளை நாங்கள் தூங்கிப் போனால் அது அங்கேயே இருக்கிறதா போய் விட்டதா என்று எப்படித் தெரிந்து கொள்வது. சிறிது மண்ணை அந்த நிலைப்படியருகே பரப்பி வைத்தோம் அது வெளியே போனால் போன சுவடு பதிவாகும் அல்லவா. குழந்தையை அவர்கள் வீட்டுடனிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்கவைத்தோம். காகிதங்களை எரித்துஅந்தப் புகையை அந்த பொந்தருகே காட்டினோம் ஹூஹூம் அது வெளியே வரவே இல்லை.குழந்தைக்குக் காவலாகக் கட்டிலருகேயே இருந்தோம். ஒரு வழியாகப் பொழுது விடிந்தது. அது பொந்திலிருந்து போன அறி குறியே தென் படவில்லை. நாங்கள் இருவரும் நிலைப்படியருகே காவல் காத்தோம் இப்போதும் அவ்வப்போது தன் நாக்கை அது நீட்டியது. என் கையில் ஒரு இரும்புச் சட்டுவமும் ஒரு கழி சாந்தி கையிலுமாக்க் காத்திருந்தது வீண்போகவில்லை அது திடீரென்று வெளியே வந்தது. கையில் இருந்த சட்டுவத்தால் ஒரே போடு அது இரு துண்டாகியது. பார்த்தால் அது ஒரு அரணை.......!(தொடரும்)




 

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

நான் யார் 13

                                               

                                                           23 வயதில்
                                                     பதினாறு  வயதினிலே

      மெட்ராஸ் பாடியில் லூகாஸ் டீவீஎஸ் ஃபாக்டரி இருந்தது. நான் வில்லிவாக்கத்தில் ஒரு ஒண்டுக் குடித்தன வீடாக ரூ.40-/ மாத வாடகையில் எடுத்திருந்தேன். வீட்டிலிருந்து நடந்து சென்றால் இருபது நிமிடங்களில் வேலைக்குச் சென்று விடலாம். ஒரு சிறிய திறந்த வராந்தா, அதனுள்ளே ஒரு அறை, அடுத்து சமையல் அறை. பாத்ரூம் கக்கூஸ் நான்கைந்து வீடுகளுக்குப் பொது. கிணற்று நீர். .நானும் சாந்தியும் ஒருவருக்கொருவராக வாழ்க்கை துவங்கினோம்.எனக்கு சம்பளமாக ரூ.410-/.பிடித்தம் போக ரூ.360-/   370-/ வரை கிடைக்கும். அதில் ரூ200-/ பெங்களூரில் அம்மாவுக்கு அனுப்பி விடுவேன். மீதியில் எங்கள் செலவு நடக்க வேண்டும். இதில் ஜெட் எஞ்சின் கோவாப்பரேட்டிவ் சொசைட்டியிலிருந்து வாங்கிய கடனுக்குத் தவணை செலுத்த வேண்டும். நாங்கள் வாழ்க்கையைத் துவங்கிய காலத்தில் வீட்டில் எந்த விதமான சாமான்களும் கிடையாது. ஒரு ட்ரங்க் பெட்டி இருந்தது. ஒரு ஸ்டவ் இருந்தது. சில மண் பாண்டப் பாத்திரங்கள் இவைதான். சொல்லிக் கொள்ளும்படியாகப் படுக்கை கூட இருந்ததில்லை. ஃபர்னிசர் பற்றிப் பேச்சே இல்லை. இவை எல்லாம் இல்லையே என்ற எண்ணமும் இருக்கவில்லை. அவற்றையெல்லாம் இப்போது எண்ணிப் பார்க்கும்போதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு ஷிஃப்ட் பணி. காலை 7-45 முதல் மாலை 5- 30 வரைஒரு வாரம். திங்கள் முதல் வெள்ளி வரை. சனி ஞாயிறு விடுமுறை. அடுத்த திங்கள் ஷிஃப்ட் மாறும். மின் வெட்டு காரணமாக இரண்டாம் ஷிஃப்ட் இரவு 9-15-க்கு துவங்கி மறுநாள் காலை 7-30 வரை. உணவு உறக்கம் எல்லாப் பழக்கங்களும் உடல் பழகத் துவங்குமுன் மாறிவிடும். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அந்த மாதிரிப் பணியில் இருந்ததால், என் உடம்பு தேறவே சந்தர்ப்பம் இருக்கவில்லை..

 

               என் தம்பி சோமா, TAFE-ல் பணியில் இருந்தான். எனக்கு இரவு ஷிஃப்ட் ஆக இருக்கும்போது,அவனுக்குப் பகல் ஷிஃப்ட்.எங்களுடன் அவன் தங்கியதில் வீட்டில் யாராவது ஒருவர் சாந்திக்குத் துணை இருப்போம். வாழ்க்கைப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஒருவர் புரியத் துவங்கினோம்.இருந்த வசதிகளில் திருப்தி அடைந்து மகிழ்வாகவே வாழ்ந்தோம். எங்கள் மண வாழ்க்கைக்குப் பொருள் தரும் விதத்தில்சாந்தி கரு தரித்தாள். அவள் கருத் தரித்திருக்கிறாள் என்பதோ அவளை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்பதோ, எனக்குத் தெரிய வில்லை. மூன்று மாதங்கள் கழிந்த பிறகுதான்,அதுவும் சோமா சொல்லி வற்புறுத்திய பிறகுதான்,கருவை உர்ஜிதம் செய்ய, மருத்துவரிடம் சென்றோம்.கரு உறுதியாயிற்று. அவ்வளவுதான். எந்தவிதமான மருந்து மாத்திரைகளோ, விசேஷ கவனிப்புகளோ கொஞ்சமும் இல்லாமல் சாதாரணமாகவே வாழ்க்கை ஓடியது. ஒன்று மட்டும் இப்போது சொல்லியாக வேண்டும். எதையும் செய்யக் கூடாது என்ற எண்ணம் இருக்கவில்லை. அறியாமையின் காரணமாக எதையும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, இப்போது இருப்பவர்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போதுதான் நாங்கள் எவ்வளவு ஈஸியாக வாழ்க்கையை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று புரிகிறது.

 

      சனி ஞாயிறுகளில் பீச்சுக்குப் போவோம். எப்போதாவது சினிமாவுக்குப் போவோம். சாந்தியின் சித்தி கல்யாணி அவர்களின் வீட்டுக்குப் போவோம் அவர்களின் குழந்தைகள் விஜி, தங்கம் போன்றவர்களையும் பீச்சுக்கும் ஜூவுக்கும் கூட்டிச் சென்றிருக்கிறோம். ஒரு முறை பீச்சில் சுண்டல் விற்றுக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, அவன் என் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தியின் மகனோ என்று சந்தேகம் வந்து அவனைக் கேட்டு விசாரித்து, உண்மை என்று அறிந்ததும் மனம் சங்கடப் பட்டது. அவனை விலாசம் கேட்டு அறிந்து அவர்களை வீட்டில் சந்தித்தபோது வாழ்க்கைச் சக்கரம் சிலரை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்று அறிந்து கொள்ள வாய்ப்பாயிருந்தது. என் அக்கா ராஜியின் திருமணம் நடந்தது கண்டு, அவசர அவசரமாக என் சித்தப்பாபெண் பொன்னம்மாவுக்குக் கலியாணம் நடந்தது.அவர்கள் எங்களை விட வசதியானவர்கள் என்று நிரூபிக்கவே அது அப்படி ஏற்பாடு செய்யப் பட்டது என்று அம்மாவும் அப்பாவும் பேசிக் கொள்வார்கள். சித்தப்பாவின் ஃபார்மசி ஷாப் நஷ்டத்தி ஓடி அவர்கள் கஷ்டத்தில் இருந்தது மனசுக்கு சங்கட மளித்தது

  அன்றைக்கு கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா வீட்டுக்குப் போனபோது மனசு சங்கடப் பட்டது என்று எழுதி இருந்தேன். அன்றைக்கு அவர் என்னையும் சாந்தியையும் வழி அனுப்ப பஸ் ஸ்டாண்ட் வரை வந்திருந்தார். HAL வேலைக்கு இண்டெர்வியூவுக்குப் போனபோது அவர்களைப் பார்த்தது. அதன் பிறகு என் தந்தை இறந்தபோதும் அவர்கள் வரவில்லை. நான் HAL-ல் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் பயிற்சியிலும் அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணி புரிந்து, திருமணமாகி மதராஸ் வரும்வரை அவர்களோடு  கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தொடர்பே இருக்கவில்லை. Lot of water must have flowed under the bridge.அவரை மறுபடி நான் பார்க்க முடியவில்லை. சித்தியையும் அவரது பிள்ளைகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நான் வேலையில் பணி மாற்றம் காரணமாக விஜயவாடாவுக்குச் சென்றபோது, கிருஷ்ணமூர்த்தி சித்தப்பாவின் மகன் பாலகிருஷ்ணன் விஜயவாடாவில் ஏதோ ஒரு கடையில் பணியில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு அவனைத் தொடர்பு கொண்டேன். வீட்டு விலாசம் வாங்கி ஒரு நாள் என் மனைவியுடன் அவர்கள்வீட்டுக்குச் சென்றேன். அவயம் சித்தி எங்களைப் பார்த்ததும் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டாள்அவர் மகன் பாலன் என்னைவிட ஓரிரு வயது குறைவாக இருப்பவன் , மணமாகி இருந்தது. தங்கைகள் ஜெயமணி, மற்றவள் பெயர் நினைவுக்கு வரவில்லை. மணமாகி இருந்தனர். ஒரு தம்பி சுப்பாமணி என்றழைத்தனர், இன்னொருவன் வெங்கடேசன். ஒரு சைக்கிள் கடையில் வேலையிலிருந்தான். அவனுடைய முதலாளியின் பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு, என் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு வருவான். என் சித்திக்கு என் நிலையை அவர்களது நிலையுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. மிகவும் கஷ்டத்திலிருந்த மகாதேவன் மகன் காரில் ( அது கம்பனி கார் என்றாலும் )வந்திறங்குகிறான். அவன் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு அவளுடைய மகன் உணவு கொண்டு செல்கிறான் என்ற எண்ணங்களே மனசிலும் வாக்கிலும் பொறாமை இருப்பதைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். அதெல்லாம் முடிந்த பிறகு நாங்கள் திருச்சிக்கு திரும்பி வந்தபிறகு அந்த வெங்கடேசன் எங்கள் விலாசம் கிடைக்கப் பெற்று எங்களுக்கு அவனுடைய திருமணப் பத்திரிக்கை கொடுக்க திருச்சி வந்திருந்தான். அவன் மஸ்கட்டில் வேலையில் இருப்பதாகவும் , அவனை மணக்க இருக்கும் பெண் திருச்சியைச் சேர்ந்தவள் என்றும் தெரிந்தது. நாங்கள் அவனது திருமணத்துக்குச் சென்றிருந்தோம். இடைப்பட்ட காலத்தில் சித்தி இறந்தது அறிந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு அவர்கள் அண்ணன் தம்பி, தங்கைகளைக் கண்டோம். எல்லோரும் இருக்கும் ஒரு புகைப் படத்தை நினைவுக்காக வாங்கி வைத்துக் கொண்டேன். இந்த நிகழ்வுகள் நான் என் வலைப்பூவில் ஒரு சிறு கதை எழுத விஷயமாய் அமைந்தது.எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது உறவுகள் தொடர்பில் இல்லாதது சில சமயம் சங்கடப் படுத்தியதுண்டு.பொதுவாகவே எங்கள் குடும்பத்தில் உறவுகள் ஒட்டுவதில்லை. நான் என் தலை முறைக்குப் பிறகாவது நிலைமை சீர்திருந்தும் என்று எண்ண முடியவில்லை. அவரவர்கள் அவரவர் நியூக்கிளியஸ் குடும்பம் உண்டு அவர்கள் உண்டு என்னும் மனோபாவத்துடன் வாழ்கிறார்கள். யார் யார் உறவுகள் என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை. சித்தப்பாக்களில் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி. அவருக்குப்பின் வரதராஜன் என்ற ராசு சித்ட்தப்பா. தங்கம் என்பது சித்தியின் பெயர். அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்தார்கள்.. இப்போது இருவருமுயிரோடு இல்லை. அடுத்தவ்ர் ராமச்சந்திரன். இவரிப் பற்றி இந்த பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அவருக்கு பின் காலத்தில் பார்வை அறவே தெரியாமல் போய் விட்டது. காணும் சக்தி போனபிறகு லக்ஷ்மி கடாட்சம் கிடைத்ததாக அவர் சொல்வது  அவ்வப்போது நினைவுக்கு வரும். சமைத்து கொடுக்கும் உணவில் மனைவியே விஷம் வைத்துக் கொடுத்தாலும் தெரியாது. வாழ்க்கையே ஏதோ நம்பிக்கையில் ஓடுகிறது என்பார். திருச்சூரில் ஒரு ஃபார்மசுடிகல் ஏஜென்சி எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். இப்போது அவரும் இல்லை. அவருக்கு அடுத்தது விஸ்வநாதன் எனும் விச்சா சித்தப்பா. சென்னையில் இருந்தார். அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். பாட்டியின் அந்திம கால்த்தில் அவருக்கு மிகவும் உறு துணையாக இருந்தவர். கடைசியாக சதாசிவன் எனும் தொரைசாமி சித்தப்பா. குஜராத்தில் ஒரே மகளுடன் இருக்கிறார். ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்குப் பிறகு அவர்களை சந்தித்தேன். மகளின் எல்டிசி யில் பெங்களூர் வந்திருந்தனர். அவர்களால் என் வீட்டுக்கு வர முடியாமல் நானும் சாந்தியும் அவர்களை அவர்கள் தங்கி இருந்த ஓட்டலில் சந்தித்தோம். ஒரு புகைப் படமும் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு டச் இல்லை. ஆக அப்பாவுடன் பிறந்த ஐந்து சகோதரர்கள் பற்றிக் கூறிவிட்டேன். கூடப் பிறந்த மூன்று சகோதரிகளில் கடைசி தங்கை ராசம்மாவை என் மாமாவுக்கே மண முடித்து விட்டார். மற்ற இரு அத்தைகள் பற்றி எனக்கு முழு விவரம் இல்லை. ஒருவர்  அன்னம் அத்தை ஜாம்ஷெட்பூரில் இருந்ததாகவும் அவரது மகனை சந்திர சித்தப்பாவின் மகளுக்கு மணம் முடித்ததாகவும் தெரிகிறது. இன்னொருவர் லக்ஷ்மி அத்தை. அவரது மகளை தொரைசாமி சித்தப்பாவின் மனைவி என்றும் நினைக்கிறேன். அப்பாடா..! எனக்கு இந்த அளவாவது தெரிந்திருக்கிறதே.!OUT OF SIGHT ,OUT OF MIND என்பது முக்காலும் உண்மை.!

 

சென்னையில் சித்தப்பாவை சந்தித்தது பற்றி எழுத ஆரம்பித்து  கொஞ்சமாவது அப்பா வழி உறவுகளைப் பற்றிக் குறிப்பிட முடிந்தது. சென்னையில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் சூபர்வைசராகப் பணி. எச் ஏ எல் ல் பணியில் இருந்தபோது சில பாடங்கள் கற்றேன். . யாரும் திறந்த மனத்துடன் இருப்பதை விரும்புவதில்லை. நாம் உண்டு நம் பணி உண்டு என்றிருக்க வேண்டும். தவறுகள் ஏதாவது நடந்தால் கண்டும் காணாதது போல் இருக்க வேண்டும். முன் பல்லால் சிரித்துக் கடைவாய்ப் பற்களைக் கடிக்கும் மக்களே அதிகம். இதையெல்லாம் தெரிந்து கொண்டு புதிய இடத்தில் ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பிக்க முடிவு செய்தேன். ஆனால் அதுவும் சரியல்ல என்று கற்றுக் கொண்டேன். நன்றாக பிழிந்து எடுத்து நம்மை  ஒன்றுமே தெரியாத அப்பாவி என்று ட்ரீட் செய்ய ஆரம்பித்தனர். ஆங்கிலேய கூட்டுக் கம்பனி அது. பல வெள்ளையர்களும் பணியில் இருந்தனர். சில மெஷின்களை இயக்கும் முறைகளை நியமப் படுத்தி இருந்தார்கள். அவர்களது வழிமுறைகளைத்தான் பின் பற்ற வேண்டும். எனக்கு ஒரு சில உத்திகளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் அதை நடைமுறைப் படுத்த எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. நான் என் மேலாளருடன் கலந்து பேசி நான் இரவு ஷிஃப்ட்டில் வரும்போது வழி முறைகளை மாற்றி அமைத்து உற்பத்தி அதிகம் காண்பித்தேன். இது அவர்களது புருவங்களை உயர்த்தியது. கேள்விகள் எழவே நான்  எடுத்துக்கொண்ட புதிய நடைமுறைகளைத் தாளில் எழுதி சமர்ப்பித்தேன். ஒன்று சொல்ல வேண்டும். அவர்களது வெள்ளைக்காரத்தலைவன் என்னை பகல் ஷிஃப்டில் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கச் சொன்னார். அது முடிந்ததும் என்னை மிகவும் பாராட்டினார்கள். நான் எழுதிக் கொடுத்திருந்தாலும் எனக்கு பாராட்டு வாய் வழி மட்டுமே வந்தது. ஆக பணியில் திறமை உள்ளவன் என்று அங்கீகரிக்கப் பட்டே.ன். ஆனால் ஒரு முறை பெங்களூர் சென்றவன் எதிர்பாராத விதமாய் ஒரு திங்கட்கிழமை இரவு ஷிஃப்ட்டுக்கு வரமுடிய வில்லை   இப்படி இருக்குமானால் என் வேலைக்கு பங்கம் வரும் என்று பயமுறித்தினார்கள்.  பொறுப்புகளுடன் ஒரு குடும்பம் அல்லாமல் இரண்டு குடும்பத்தை பேண . இருந்தாலும் முன்பே செய்தி கிடைக்கச் செய்தேன். அவர்கள் இது வேண்டியவன் தலைக்கு மேல் எப்போதும் கத்தி இருப்பது போல் உணர்ந்தேன். அதுவே என்னை வேறு வேலை தேட வைத்தது.(தொடரும்)

இது வரை எழுதியதைப் படித்து வரும்போது விஜயவாடாவில் சித்தப்பாவின் மகன் வெங்கடேசன் சைக்கிள் கடையில் வேலை பார்த்து வந்ததாக எழுதியது நினைவின் தவறு என்று தெரிகிறது.இந்த வெங்கடேசன்  திருமணத்துக்குப் பத்திரிக்கை கொடுக்க பெங்களூரு வந்திருந்தான். பேச்சின் நடுவே சைக்கிள் கடையில் அவன் வேலை பார்க்கவில்லை என்றும் ஒருவேளை அவனது தம்பியாக இருக்கலாம் என்றும் கூறினான் எனக்கு அவனது தம்பியின் நினைவே இல்லை. சம்பந்தப்பட்டவனே மறுக்கும் போது அதை நான் சரிசெய்ய வேண்டியது அவசியம் என்று தோன்றியது










                                                                                           

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

நான் யார் 12

 

      சாந்தியைக் காண்பதிலேயே மகிழ்ச்சி அடைந்த நான், அவளுக்கு என் மேல் விருப்பம் உள்ளதா என்று அறிவதில் குறியாயிருந்தேன்.என் எண்ணத்தை அவர்கள் குடும்ப நண்பனான சாமிநாதனிடம் கூறினேன்.அவனும் எனக்கு உதவுவதாக வாக்களித்தான்.சாந்தியின் அக்கா, ( அவள். பெயர் அம்மணி என்னும் சரோஜா ) அவள் திருமணம் முடிய வேண்டும். திருமந்த்துக்கு நான் அவசரப் படவில்லை. என் எண்ணம் முழுவதும் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில்தான் இருந்தது. நான் எப்படியும் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கைஇருந்தது. இரு வீட்டாருக்கும் பரஸ்பரம் போக்குவரத்து இருந்தது. என்னைப் பற்றிய அவர்கள் அபிப்பிராயம் நான் பொறுப்பாக இருக்கிறேன் என்பதாக உயர்ந்திருந்தது..ஒரு முறை குடும்பத்துடன் லால்பாக் சென்றிருந்தோம். எனக்கு ஒரு ப்ளாக் அண்ட் வைட் படம் பிடிக்கும் காமெரா கிடைத்தது. படம் பிடிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. லால்பாக் பயணத்தில் எல்லோரையும் படம் பிடிக்கும் சாக்கில் சாந்தியையும் என் அம்மாவையும் சேர்ந்து படம் பிடித்தேன்.அதில் இருவரது படங்களையும் தனித்தனியாக என்லார்ஜ் செய்து வைத்துக் கொண்டேன். அவளுடைய படத்தின் பின்னே ஒரு கவிதை எழுதி, அதை என் தம்பி விச்சுவின் மூலம் அவளிடம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்தேன். எங்களுக்கு நடுவே இவன் தூது. என் எண்ணங்களை தெரியப் படுத்த உதவியது. விச்சுவைக் கண்டாலே பயம் வரும் என்று பிற்காலத்தில் சாந்தி கூறுவாள்..அவளுடைய மாமாவின் நண்பன், மாமாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம்,அவளுக்கே ஒன்றும் சரியாகத் தெரியாத ஒரு வயசு, எல்லாமாக ஏதோ ஒரு கன்ஃப்யூஷனில்தான் இருந்திருக்க வேண்டும். பிடிக்கவில்லை என்று சொல்லாதவரை ,நான் சம்மதம் என்று எண்ணியே என் முயற்சிகளைக் கூட்டினேன்.இதன் நடுவே என் நண்பன் ரவி, சாந்தியின் அக்கா மீது அன்பு கொண்டிருந்தான். அவனுக்கு என்னைப்போல் அவர்கள் குடும்பத்தில் பழக வாய்ப்பிருக்கவில்லை. அவனுக்கு நான் யாரை விரும்புகிறேன் என்பதில் ஆவல் இருக்க, என்னைக் கேட்டே விட்டான். என் பதில் தெரிந்த பிறகே அவன் மனசஞ்சலம் அகன்றது. எனக்கு அவர்கள் திருமணம் நடைபெறுவதில் அக்கறை இருந்தது. ரவி என் நண்பன். சரோ சாந்தியின் அக்கா.இவர்கள் திருமணம் முடிந்தால் எனக்கு லைன் க்ளியர் ஆகும். ஆக அவர்கள் திருமணத்தில் நான் அக்கறை காட்ட ஆரம்பித்தேன்.

 

       இந்த நிலையில் ரவியின் அப்பாவுக்கும் அவனுக்கும் நிறைய மனஸ்தாபங்கள் இருந்தன. காரணங்கள் எனக்குத் தெரிய வில்லை. தெரிந்து கொள்ள நான் அக்கறையும் காட்டவில்லை..ஆனால் ஸ்ரீதரனுக்கு ரவி மேல் நல்ல எண்ணமே இருக்கவில்லை. தந்தைக்கு அடங்காதவனுக்கு எப்படி நம் வீட்டுப் பெண்ணைத் திருமணம்செய்வது என்று கலியாணப் பேச்சுக்கே இடமில்லை என்பதுபோல் இருந்தான்.இந்நிலையில் ரவியின் அப்பாவே திருமணப்பேச்சை எடுத்தால் ஸ்ரீதரனின் ரப்பை எதிர்கொள்வது எளிதாக இருக்குமென்று தோன்றியதால் ரவியின் அப்பாவிடம் நான் நிறையவேப் பேசினேன் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பால் கட்டுண்டிருந்தனர். எப்படியொ அவர் திருமணம் குறித்துப் பேசினார்.சாமிநாதனும் கூடவே இருந்து கிரியா ஊக்கியாய்ப் பணி புரிந்தான்.ஸ்ரீதரனுக்கும் பெரிதாகக் கூற எதுவுமிருக்கவில்லை.திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கே.ஜீ/எஃப்- ல் நடந்தது. நான் ஒரு நாள் முன்னதாகவே அங்கே சென்றேன். அந்தக் கலியாணத்துக்கு முதல் நாள் என் மூக்குக் கண்ணாடியின் ஃப்ரேம் உடைந்து அன்றிரவே அதை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.இல்லையென்றால் கண்பார்வைக் குறைவால் மிகவும் தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப் பட்டு எல்லா மகிழ்ச்சியையும் இழந்திருப்பேன்.

 

      திருமணம் இனிதே நடந்து முடிந்தது.இந்தத் திருமணத்தில் நடந்த இன்னொரு விஷயம் சுவாரசியமானது.ரவியின் குறைகளையே கூறிவந்த ஸ்ரீதரனுக்கு ரவியின் தங்கையைப் பிடித்துப் போய் ,ரவியின் தந்தைக்கு ஸ்ரீதரனைப் பிடித்துப் போயது 

இன்னொரு திருமணத்துக்கு அடிகோலியது. விளைவு ஸ்ரீதரன்-லீலா திருமணம்.ஆக இரண்டு திருமணக்களுக்குப் பிறகு எனக்கு வழி திறந்தது.

 

       இடைப்பட்ட காலங்களில் என் மனதில் எப்போதுமே சாந்தியின் நினைவே இருந்து வந்தது. அவளைக் கண்டால் மகிழ்ச்சி. அவளைக் காண்பதற்கென்றே 

இடைப்பட்ட காலங்களில் என் மனதில் எப்போதுமே சாந்தியின் நினைவே இருந்து வந்தது. அவளைக் கண்டால் மகிழ்ச்சி. அவளைக் காண்பதற்கென்றே சிவாஜிநகர் வருவேன்..காணாவிட்டால் ஏக்கமாக இருக்கும். அவள் இருந்த சூழ்நிலை, வளர்க்கப்பட்ட விதம், எல்லாம் சேர்ந்து, அவளுக்குப் புற உலக எண்ணங்களே ஏதுமில்லாமல் இருந்தது. BLESSED ARE THOSE THAT ARE IGNORANT என்பதற்கேற்ப இருந்தாள்.. இருந்தாலும் அவள் என்னுள் ஏகப்பட்ட சலனங்களைத் தோற்றுவித்தாள். ஒரு சமயம்,நண்பர்களிடையே ஏற்பட்ட சில சம்பாஷணைகளில் பெண்களைப் பற்றிய என் எண்ணங்கள் கேட்கப்பட்டது. நான் அப்போது கூறினேன்.என் மனம் அல்லது உள்ளம் ஒரு நெகடிவ் ஃபில்ம் போன்றது ஒரு முறை அதை எக்ஸ்போஸ் செய்து விட்டேன். இன்னொரு பிம்பம் அதில் பதியாது. காதல் என்பது இரண்டு மனங்கள் ஒருமித்து உள்ளத்தில் சங்கமமாவதில் உணரப் பட வேண்டும். என் மனசை நான் திறந்து விட்டேன். அவள் மனசு என்னிட மிருந்தது., எனக்குத் தெரிந்தது. ஆனால் அவற்றைக் காண்பிக்கும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. என் கடிதங்களுக்கு அவள் பதில் மிகவும் பயத்துடனே இருக்கும். அதுவும் நான் கோபப் பட்டுவிட்டேன் என்று தெரிந்தால் மட்டுமே ஓரிரு வரிகள் வரும். அதிலும் காதல் தெரியாது. பயமே தெரிந்திருக்கும். அவளுடைய இந்த சுபாவம் ஒரு பக்கம் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் என்னை நிராகரிக்கவில்லை என்ற எண்ணம் தெம்பைக் கொடுத்தது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.? எண்ணித் துணிந்து விட்டேன். எப்படியும் அவளை மணப்பதென்று. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நான் அம்மியை நகர்த்தவில்லை. என் அன்பை நகர்த்தினேன். ஒரு முறை அவள் வாட்ச் ஃபாக்டரியில் இருந்து வரும்போது, ஓல்ட் புவர் ஹௌஸ் ரோடில் அவள் முன் சைக்கிளை நிறுத்தி நேராகவே ஒரு கடிதம் சேர்ப்பித்தேன். நான் சைக்கிளில் போவது பார்க்கப் பிடிக்கும் என்று பிறிதொரு நாளில் ( மணமான பிறகு )சாந்தி கூறினாள்.ஒரு முறை அவள் என்னை HMT-க்கு மதிய உணவு இடைவேளையில் வந்து சந்திக்கக் கூறினாள். அதன்படி நான் சென்று பார்த்துப்பேசினேன்.என்ன பேசினோம் என்பது எதுவும் இப்போது நினைவுக்கு வரவில்லை.நிச்சயமாகக் காதல் வார்த்தைகள் கிடையாது

 

              இதனிடையே கலியாணப் பேச்சை எடுத்தாலே அம்மாவுக்குப் பிடிக்காமல் போனது. என் கடிதத்தைக் கொண்டுபோகும் விச்சுவை ஒரு முறை கடிந்து கொண்டு, அவர்கள் எதிர்ப்பைக்காட்டினார்கள். நான் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் அவர்கள் நிர்க்கதியாக விடப் படுவார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.எனக்கும் தொழிற்சாலையில் பிரச்சினைகள் அதிகமாக இருந்தது..நண்பர்கள் பலர் பதவி உயர்வு பெற, எனக்குக் கிடைக்குமா என்றே தெரியாமல் இருந்தது. சாந்தியின் வீட்டிலும் திருமணத்துக்குக் காலம் தாழ்த்துவதையே விரும்பினார்கள். கலியாணம் செய்ய வேண்டுமென்றால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் ஸ்ரீதரன் ஆர்வம் காட்டவில்லை.

 

       எனக்கு இதையெல்லாம் எழுதும்போதுஎன்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகிறது. அந்தக் கால நிகழ்வுகள் நினைவில் கோர்வையாக வருவதில்லை. நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற ஒரு திரைப் படம். முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார் நடித்தது. அப்போது வெளியான சமயம் குமுதம் பத்திரிகையில் ஒரு போட்டி, பெண்களுக்கு அறிவித்திருந்தனர். கதாபாத்திரங்களை விமரிசனம் செய்யக் கேட்டிருந்தார்கள்.நானும் போட்டிக்கு எழுதினேன். அது பெண்களுக்கானது என்பதால் சாந்தியின் பெயரில் எழுதி அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்ட இரண்டு கட்டுரைகளில் ஒன்று நான் எழுதியது. அதற்குப் பரிசாக ரூ.25-/ கிடைத்தது. சாந்தியின் பெயரில் அனுப்பும் முன்பே அவர்களிடம் கூறி இருந்தேன். பரிசுத் தொகை என் அன்பளிப்பாக அவளுக்கு இருக்கட்டும் என்று நான் கூறிக் கொடுத்தது,அவர்கள் எல்லோருக்கும் என் ஆசையையும் காதலையும் உணர்த்தி இருக்க வேண்டும்..

 

       இடைப்பட்ட காலங்களில் நான் சாந்திக்கு விடாது கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன்.அவளும் அவ்வப்போது சுருக்கமாக பயத்துடன் ஏதாவது பதில் எழுதுவாள். இந்தக் கடிதங்களை எல்லாம் நான் எடுத்து வைத்திருந்தேன்.அவளும் வைத்திருந்தாள்.திருமணமாகிப் பல நாட்களுக்குப் பிறகு,நாங்கள் திருச்சியில் இருந்தபோது, அவை எல்லாவற்றையும் படித்துப் பார்த்து பைத்தியக் காரத்தனமாக தோன்றியதால் கிழித்துப் போட்டு விட்டோம். இப்போது அந்த செயலுக்கு மனசு மிகவும் வருந்துகிறது. என்னுடைய பழைய டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அவளுக்கு நான் எழுதிய கடிதம் ஒன்றின் நகல் இருந்தது. அதை இப்போது படித்துப் பார்த்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கும் அவளுக்கு தமிழில் மோகமோ, பாண்டித்தியமோ கிடையாது. எழுதப் படிக்கத் தெரியும் அவ்வளவுதான்.அப்படிப் பட்டவளுக்கு, அந்தக் காலத்தில் ஒரு காவிய நாயகனின் பாணியில் நான் எழுதி இருந்த கடிதம் பொருளிலும் நடையிலும் நான் என் எண்ணங்களைத் தெரிவித்திருந்த விதம், அப்போதைய அவளுக்கு சத்தியமாகப் புரிந்திருக்காது.நான் ஏதோகாதலில்பிதற்றி இருக்கிறேன் என்று எண்ணாதிருந்தால் சரி.

 

       இப்போது எண்ணிப் பார்த்தாலும் ஒன்று நிச்சய மாகத் தெரிகிறது. நான் சாந்தியிடம் காதல் வயப் பட்டிருந்தது என்னவோ உண்மை. காதல் என்றால் ஏனோதானோ காதல் அல்ல.பித்துப் பிடித்தலைந்த காதல். இருந்தாலும் நான் என் காதலைத் தெரிவிதிருந்த போதெல்லாம் அதிலொரு கண்டிப்பு இருக்கும். அவள் என்னை மறுக்க முடியாது என்ற தோரணை இருக்கும். அப்படியே மறுத்தாலும் நான் ஒன்றும் தவறாக எண்ணிக் கொள்ளப் போவதில்லை, என்பது போல் இருக்கும். ஒரு முறை கூட அவள் என்னிடத்தில் காதல் இல்லை என்ற விதத்தில் நடந்து கொண்டது இல்லை.எது நடந்தாலும் வீட்டில் சொல்லி விடுவாள் என்றே தோன்றியது.அவள் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கவில்லை. ஆனால் நாட்கள் கடத்த விரும்பினார்கள். இந்த நிலை எனக்குச் சரியாகப் படவில்லை. வீட்டில் அம்மா அக்கறை காட்டவில்லை. அவர்கள் பயம் அவர்களுக்கு.என்னைப் புரிந்து கொண்ட அளவு அவ்வளவுதான் ..அவர்களும் காலம் கடத்தவே விரும்பினார்கள். அவர்களுடைய பிள்ளைகள்  அவர்கள் கால்களில் நிற்கத் தொடங்கும் வரை காலம் தாழ்த்த விரும்பினார்கள். சாந்தியின் வீட்டில் அவளுக்குக் கிடைக்கும் ஸ்டைபெண்ட் பணம் மணம்  முடித்துக் கொடுத்து விட்டால் போய்விடும் என்றும் கூடவே அம்மணியின் கலியாணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும் என்ற நிலை.இதையெல்லாம் யோசித்தபோது எனக்கு என் திருமணம் நடந்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணம், இந்தக் காரணங்களெல்லாம் அதை நடக்க விடாதபடி தடுக்க கூறப்படுவதாகவே தோன்றியது. ஒரு நாள் சாந்தி வேலை முடித்து வரும்போது என்னை டபுள் ரோடில் சந்திக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தோம். எப்படி அவளிடம் தெரிவித்தேன் எப்படி அவள் அதற்கு உடன்பட்டாள் என்று எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. ஆனால் முன்னேற்பாடுகள் படி நாங்கள் டபுள் ரோடில் சந்தித்தோம். அவள் அவளுடைய ஃப்ரெண்ட் ஒருத்தியுடன் வந்தாள். என்னிடமவளை ஒப்படைத்துவிட்டு அந்த ஃப்ரெண்ட் சென்று விட்டாள். சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம்வரை பேசிக்கொண்டிருந்தோம். காதல் வார்த்தைகளோ அன்பு மொழிகளோ அல்ல. அவளைக் கண்டதும் அருகில் இருந்த ஒரு கடைக்குச் சென்று சில லாஸெஞ்செஸ் மிட்டாய்கள் வாங்கிக் கொடுத்தேன். திருமணத்துக்கு எதிர்ப்போ, காலங்கடத்தலோ, ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று தீர்மானமாகக் கூறினேன். அப்படி இருக்கும் பட்சத்தில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், காலங்கனிந்து வரும்போது வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்றும் கூறினேன். அதற்கு அவள் அவளுடைய தாயிடம் என் அம்மாவைப் பேசச் சொல்லிநிச்சயதார்த்தம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறினாள். அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்துஎனக்கு முடிவைத் தெரிவிக்க வேண்டினேன்.

 

       காதலைப் பற்றித் திரைப் படங்களிலும் ஊடகங்களிலும் காட்டப் படும் எந்த ஒரு நிகழ்வும் எங்கள் நிஜ வாழ்வில் நடக்கவில்லை. ஏன். திருமணத்துக்கு முன் சாந்தியை நான் தொட்டது கூட இல்லை.ஆனால் அவளை நான் உருகி உருகிக் காதலித்தது மட்டும் உண்மை. சில நாட்கள் கழித்து சாந்தியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவள் ,அவளது தாயிடம் எல்லாவற்றையும் கூறியதாக எழுதி இருந்தாள். அதாவது பதிவுத் திருமண எண்ணம் தவிர்த்து எல்லாவற்றையும் என்று எழுதி இருந்தாள். அவளுடைய தாயிடம் என்னை வந்து பேசுமாறு கேட்டிருந்தாள். என் தாயார் இருக்கையில் அவர் இல்லாமல் நான் திருமணம் பற்றிப் பேசுவது எனக்குச் சரியாகப் படவில்லை..என் தாயை அவமதிப்பதுபோல் ஆகும். என்னவெல்லாமோ நடந்து கடைசியில் என் அம்மா, பெரிய அண்ணா, மன்னி, சின்ன அண்ணா, மன்னி, என் தம்பிகள் என்று எல்லோரும் ஒரு நாள் சாந்தியின் வீட்டுக்குச் சென்று, முறையாகப் பெண் பார்த்து நிச்சய தார்த்தமும் ஒப்புக் கொள்ளப் பட்டது. நான் எப்படியும் 1964-ம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தேன். நவம்பர் 8-ம் தேதி கல்யாணம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப் பட்டது. ஆனால் அதற்குத் தேவையான பணம் புரட்டுவதில் அவர்கள் மிகவும் கஷ்டப் பட்டார்கள். ஸ்ரீதரன் எந்த உதவியும் செய்வதாகத் தோன்றவில்லை.அதனால் திருமணம் தள்ளிப் போகும் நிலை வந்தவுடன், நான் சாந்தியின் தாயாரிடம் திருமணத்துக்கு வேண்டிய பணத்தை நான் கடன் வாங்கித் தருகிறேன், நிதானமாகத் திருப்பலாம் என்று ஒரு கூக்லி போட்டேன். அது ஸ்ரீதரனுக்குத் தெரிந்தவுடன் திருமணப் பொறுப்பேற்க ஒப்புக் கொண்டான். திருமணம் நடந்தாலும் சாந்தியின் சம்பளப் பணத்திலிருந்து அவர்களுக்கு உதவுவாள் என்றும் வாக்குக் கொடுத்தேன். திருமணத்துக்கு என் பக்கச் செலவுக்காக, ரூ.600-/ வரை கடன் வாங்கினேன். திருமணத்தேதி நவம்பர் 11- ம் நாளுக்கு மாற்றப் பட்டது. மஞ்சள் சரடு தாலியாகவா, பொன்னால் செய்த தாலியா எந்த முறைப்படி திருமணம் என்றெல்லாம் வேண்டாத விவாதங்கள் நடந்தன. சாதி மாறிய திருமணத்தில் அதுவும் காதல் வயப்பட்டு செய்யும் திருமணத்தில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு உடன்பாடில்லை. சுருங்கச் சொன்னால் சொன்னபடி 11-ம் தேதி நவம்பர் மாதம் 1964-ம் வருஷம் என்னுடைய 26-ம் பிறந்த நாளில் எங்கள் திருமணம் நிகழ்ந்தது. திரை படங்களிலும் கதைகளிலும் சுபம் போட்டு திருமணத்தோடு எல்லாம் முடிந்து விடும். ஆனால் நிஜ வாழ்க்கையில் திருமணத்தன்றுதான் ஒரு புது வாழ்வும் புது சவால்களும் எதிர் கொள்ளப் படுகின்றன. சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் உறுதியும் உண்மையும் இல்லாவிட்டால் திருமணங்கள் சிறப்பதில்லை. இதோ ஆயிற்று ,எங்கள் திருமணம் முடிந்து 56-வது வருடம் ஓடிக் கொண்டிருக்கிறது.. என்னுடைய வலைப் பூவில் “ஆசி கொடு இறைவா, “ என்றும் “ பாவைக்கு ஒரு பாமாலை.என்றும் கவிதைகள் எழுதி உள்ளேன்.அவை உண்மையில் உணர்ந்து எழுதியவை. அது கமலா என்றும் பேபி என்றும் அழைக்கப் பட்டு வந்த என் மனைவிக்கு எங்கள் திருமண நாள் முதல் இரவில் சாந்தி என்று பெயர் சூட்டினேன். அவள் வரவு எங்கள் வாழ்வில் சாந்தி நிலவ உதவ வேண்டும் என்றேன். அந்த நாளிலேயே வாழ்க்கையில் நிறைய அடிபட்டு விட்ட நான் கவன்; வாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாத பெண்ணாக என் மனைவி, வாழ்க்கை வண்டியை இழுக்கத் தயாரானோம்.

 

              நான் எதிர்பார்த்தபடியே எங்கள் திருமணம் நடந்ததே தவிர,அதனால் பிரச்சனைகள் தீரவில்லை. என் தாயாருக்கு இந்தத் திருமணம் தவிர்க்க முடியாமல் நடத்தப் பட்ட ஒன்றாகவே இருந்தது. எங்கே நான் என் மனைவியுடன் சேர்ந்து அவர்களைத் தவிக்க விட்டு விடுவேனோ என்ற பயத்தில் இருந்தார்.இருந்தாலும் வீட்டில் அவர்கள் வைத்ததே சட்டம் என்ற நிலைப்பாட்டை உறுதிப் படுத்துமாறு செயல்கள் புரிந்தார். புதுமணத் தம்பதிகள் எங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. எங்களுக்குத் தனிமையில் ஏதாவது பேசவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாத நிலை. அம்மாவோடு நான்கு தம்பிகளும் கூட ; சின்ன வீடு. சந்தர்ப்பங்களுக்கு ஏங்க வேண்டும். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நிறையப் பேச வேண்டும்.ஆனால் அது மட்டும் ஒன்று நடக்காததாக இருந்தது. அவளுக்கு எச்.எம்.டி.யில் ட்ரெயினிங்.ஸ்டைபெண்ட் ஆக வரும் பணத்தில் பஸ் சார்ஜ், இத்தியாதி வகைகள் போக வரும் பணத்தை அம்மாவிடம் கொடுக்க வேண்டும்.என்ற எதிர்பார்ப்பு. அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க அவள் சம்பளத்தை நான் கூறியிருந்தபடி எதிர் பார்க்க ஆரம்பிதார்கள். ஒரு கோல்ட் வார் நடந்து கொண்டுதான் இருந்தது. சாந்திக்கு எதுவுமே புரியாத ஒரு வயது. எந்த அனுபவமும் கிடையாது. ஏதாவது பேசினால் அழுகைதான் வரும். காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பினால் வேலைகள் எதிர்பார்த்து நிற்கும். சுருங்கச் சொன்னால் நான் திருமணத்துக்கு அவசரப் பட்டு விட்டேனோ என்று தோன்றும். இருந்தாலும் என் செயல்களிலும் கணிப்பிலும் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. நிகழ்ச்சிகள் கட்டுக்கடங்காமல் போகு முன்பே நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அத்தியாவசியம் ஆயிற்று. எனக்குத் தோன்றிய ஒரு வழி பெங்களூர் விட்டு வேறு வேலைக்குச் சேறுவதுதான் என்று தோனற, வேலைக்கு முயற்சி செய்தேன். அந்த முயற்சிகளைப் பட்டியலிடுவதைவிட எனக்கு இரண்டு இடங்களில் வேலைக்கு வாய்ப்பு வந்தது என்பதையும், நான் மெட்ராசில் லூகாஸ்  டீவிஎஸ் கம்பனியில் சூப்ரவைசராகச் சேர்ந்தேன் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். ஆவடி டாங்க் ஃபாக்டரியில் வந்த வேலை வாய்ப்பு திருப்தி தராததால் லூகாஸில் சேர்ந்தேன். 1965-/ம் வருடம் ஏப்ரல் மே  மாத வாக்கில் ( தேதிகள் தேடினால் கிடைக்கும்.) வேலையில் சேர்ந்தேன். எச் ஏ எல்- லில் நான் இருந்தவரை, எனக்கு மனசில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் செய்யும் துணிவு கொண்டவனாக இருந்தேன். அந்த சுபாவம் நிறைய பேருக்குப் பிடிக்காமல், எனக்குப் பிரமோஷன் கிடைப்பதும் தள்ளிப் போடப் பட்டது.கிடைத்த பதவி உயர்வு, டிபார்ட்மெண்ட் மாற்றத்தோடு நடந்தது,ப்ரொடக்‌ஷனிலிருந்து தரக் கட்டுப்பாடு துறைக்கு மாற்றப் பட்டேன். லூகாஸ் டீவீஎஸ் சென்றபோது என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், நான் உண்டு என் வேலை உண்டு என்ற நிலையில் தொடர வேண்டும் என்றும் முடிவு செய்தேன்.

       எச் ஏ எல்- லிலும் , லூகாஸ் டீவீஎஸ்  ஸிலும் பணியில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பார்ப்பது உண்டு. அதில் கிடைத்த அனுபவங்களே என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியது. நம்முடைய செயல்கள் மற்றவர்களுக்கு ரசனையாக இருக்கலாம் உதவியாக இருக்கலாம். ஆனால் நேர்மை நியாயம் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, மேலதிகாரிகளுக்கு ஒத்து ஊதும் குணம் படைத்தவர்களே, முன்னேறுகிறார்கள் என்ற படிப்பினை கிடைத்தது. முன்னேற வேண்டும் என்பதற்காக என் அடிப்படை குணங்களை, நான் என்னையே மெச்சிக் கொள்ளும் நல்ல குணங்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. நம்மைப் போல் பணியிலிருப்பவர்களுக்காக நாம் செயல்படுவது அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், நமக்குத் தோள் கொடுக்க முன் வர மாட்டார்கள் என்ற பாடம் கற்ற வேளை அது. எடுத்துக்காட்டாக நிகழ்ச்சிகள் ஏராளம் கூறலாம். ஆனால் கற்ற பாடம் மட்டும் சொன்னால் போதும் என்று அவற்றை விவரிக்க வில்லை.(தொடரும்)