காலச்சக்கரத்தில் ஒருபயணம்
-------------------------------------------------
காலச்சக்கரத்தில்
ஒரு பயணம்
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று நாங்கள் திருப்பதிக்கு
முதலில் சென்று நினைவுகளை பசுமையாக்க
வழக்கம்போல் புகைப்படங்கள் உதவினஒவ்வொருபடமும் ஒவ்வொரு நிகழ்வை மனதில்
தோற்றுவிக்கின்றது பலமுறைகள் பிறகு சென்றிருந்தாலும் முதன் முறை சென்றதுவிசேஷம்தானே நானும்மொட்டை
அடித்ததும் புஷ்கரணியில் நீராடியதும் நடந்துசென்றதும் பசுமையாய் நினைவுக்கு
வருகின்றது மலை மேல் ஏறும் முன் கீழ்
திருப்பதியில் ஒரு அருவிபோல் இருந்ததில் குளித்ததும்நடந்து போனபாதையில் எல்லாம் நின்று நிதானமாக மலை ஏற்யதும் படங்கள் நினைவு படுத்துகின்றன இதையே காலச்சக்கரத்தில் பயணம் என்கிறேன் ஐம்பது வருஷத்திய நினைவுகள் புகைப்படங்களால்
மீட்டெடுக்கப்பட்ட்டன
|
போகும்பாதை காலி கோபுரம் etc |
|
படங்கள் ரிபீட் |
|
என்பெரிய மகன்( பேரனல்ல ) கோபித்து போய் அவனை தேடுவதே பெரிய பாடாகி விட்ட்து
திருப்பதியில் மொட்டைகள்அடிக்கும்போதும் அடித்தபின்னும் |
|
கீழ் திருப்பதியில்குளியல் புஷ்கரணியில் ஜலக்கிரீடை |
|
புஷ்கரணியில் கூட வந்தோர் |
|
படங்கள் ரிபீட் |
|
முதல்படம் திருப்பதி போகும் முன் இரண்டாம்படம் சென்று வந்தபின் சென்னையில் |
படங்களைப்பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறீர்கள் . எல்லாம் நன்றாக இருக்கின்றன. உங்கள் பெரிய பேரன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாய்க் கூறி இருக்கிறீர்கள். அவருக்கு இப்போது 50 வயது ஆகிவிட்டதா? ஆச்சரியம் தான்!
ReplyDeleteதவறு மன்னிக்க வேண்டும் அது மகன் என்று இருந்திருக்க வேண்டும் சிறிய பையனென்பதால் பேரன் என்று எழுதி விட்டேன் போலும்
Deleteதிருத்தி இருக்கி றேன்
Deleteபடங்கள் பொக்கிஷம்தான் ஐயா.
ReplyDeleteபெரும்பாலும் அப்பொழுது திறந்தவெளியை தேவையில்லாமல் படமெடுக்கமாட்டார்கள். காரணம் ஃபிலிம் ரோல் தீர்ந்துவிடும் என்ற கவலை.
(அதாவது ஆட்களின் முகத்தை மட்டுமே எடுப்பார்கள்)
நீங்கள் அப்பொழுதே இப்படி படங்கள் நிறைய எடுத்து இருக்கிறீர்கள்.
அப்போதைய ஒரு காஸ்ட்லி ஹாபி இப்போது நினைத்துப்பார்க்க உதவுகிறது
Deleteஅந்தக் காலத் திருப்பதியின் படங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. புஷ்கரணியில் குளித்தீர்களா? ஜில்லென்று இருந்திருக்குமே...!! படங்களைத் தனித்தனியாய் அலைபேசியில் எடுத்துப் போட்டிருக்கலாமோ...
ReplyDeleteஇப்போது புஷ்கரணியில் குளிக்க அனுமதி உண்டா
ReplyDeleteஅனுமதி உண்டு. நான் நிறைய தடவை குளித்திருக்கிறேன் (10 வயதிலிருந்து). ஐயப்பன் சீசனின்போது புஷ்கரணியில் மாலைகளைக் கழற்றி வீசிவிடுவதால் ரொம்ப சுத்தம் செய்யவேண்டியிருக்கு என்று கேள்விப்பட்டேன்.
Deleteநான் ஒரு தடவை, தண்ணீர் இல்லாத புஷ்கரணியை படம் எடுத்துவைத்திருக்கிறேன்.
பொக்கிசங்கள் ஐயா...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபடங்கள் உண்மையில் பாதுகாக்கப்படவேண்டிய ஆவணங்கள் தான். தங்களை தங்களின் புன்னகையை வைத்துத்தான் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
ReplyDeleteபலரும் வலையில் தங்கள் முகத்தைக் காண்பிக்க விரும்பாய்த போதுஎன் எல்லா கல படங்களும் இருப்பது வித்தியாஅமில்லையா
ReplyDeleteஇளைய இனிய நினைவுகளை மீட்டு இரசிக்கத் தரும் இந்த கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் நிச்சயம் பொக்கிசங்களே...இத்தனை காலம் பாதுகாத்ததுப் பகிர்ந்தது ஆச்சரியமூட்டுகிறது...
ReplyDeleteஎன்னிடம்இருக்கும் படங்களைப்பர்க்க ப்ல்மணி ந்நேரமாகும் பல படங்கள் வருஷ வாரியாய் வைத்து இருக்கிறென் ஆனால் அவை எலாம் என் காலத்துக்குப் பிறௌ இருக்குமா தெரிய வில்லை
Deleteஅரிய பொக்கிஷங்கள் ஐயா. அந்நாளைய மகிழ்ச்சியான நினைவுகள் என்றும் மனதில் நிற்கும்.
ReplyDeleteஉண்மைதான்சார்
Deleteநானும் நிறைய தடவை நடந்து சென்றிருக்கிறேன்.
ReplyDeleteஃபேமிலியும் ஆசைப்பட்டதால் ஒரு தடவை நடந்து சென்று, ஹா ஹா.. பெண்ணுக்கு ஏற முடியாமல் இடையில் அழுகையே வந்துவிட்டது. பையன் காண்பித்துக்கொள்ளவில்லை.
தனித்தனி படங்களாக டிஜிட்டலில் சேமித்துவைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் படங்களுக்கு ஆயுள் குறைவே
இது முடல் தடவை ஆதலால் முக்கியட்டுவம் தனித்னியாக டிஜிடலைஸ் செய்யவில்லை என் ஆலட்துக்குப் பின் அவற்றின் ஆயுள் குறையத்தான் போகிறது
ReplyDeleteபொக்கிஷ பகிர்வு அருமை.
ReplyDeleteபழைய திருப்பதி படங்கள் நன்றாக் இருக்கிறது.
மலரும் நினைவுகள் பகிர்வு அருமை.
இம்மாதிரி நிறைய பொக்கிஷங்கள் உண்டு வருகைக்கு நன்றி
Deleteஅன்புள்ள ஐயா
ReplyDeleteவணக்கம். இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது ஒரு மனிதன் எத்தனை காரியம்தான் ஆற்றுவார் என்று உங்களை வியக்காமல் இருக்கமுடியவில்லை. இவை கடந்து வாழ்வின் கலையாத சித்திரங்கள். மனப்புதையல்கள். உங்களிடம் தொடர்ந்து கற்கவேண்டும். உங்களின் ஒவ்வொரு பதிவும் கற்றது கையளவு இல்லை கடுகளவு என்று உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. ஒரு காலத்தில் நான் இப்படித்தான் நிறைய சேமித்தேன். என்னால் அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கமுடியாமல் போய்விட்டது. என்றாலும் இதுபோன்ற பதிவுகள் வாழ்வின் பொருளைச் சத்தியப்படுத்துகின்றன.
அன்பின் ஐயா என்பதிவில் உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி தருகிறது என்பதை நான் சொல்லத்தேவை இல்லைநான் சேமித்து வைப்பதை என் வாரிசுகள் தொடர்வார்களா என்பது சந்தேகமே
ReplyDeleteபுகைப்படங்கள்தான் எப்படி நினைவுகளை மீட்டுக் கொண்டு வருகிறது !!!!
ReplyDeleteஎல்லாம் பொக்கிஷங்கள் !
"புகைப்படங்களை சேமித்து வைப்பதை என் வாரிசுகள் தொடர்வார்களா என்பது சந்தேகமே" என்கிற கேள்வியிலிருந்து உங்கள் ஆதங்கம் புரிகிறது ... கவலையே படாதீர்கள் ... அதுதான் google ல் பகிர்ந்துவிட்டீர்களே பலநூறு வருடங்களுக்கு அது சேமித்து வைத்துக்கொள்ளும்.
ReplyDeleteஅங்கு இருப்பதும் தெரிய வேண்டுமே
ReplyDelete