இவனும் அவளும் சேர்ந்தகதை
--------------------------------------------------
இவன்
மனசில் நினைத்துவிட்டால்
செய்து முடிப்பவன் இவன் அசாத்திய தன்னம்பிக்கை
இல்லாமலா முதன்முதலில் நேர்காணலுக்குச் சென்றபோது தமிழ் வழிப்
படிப்பாயிருந்தாலும்தமிழில் படித்த பிதாகோரஸ் தேற்றத்தை ஆங்கிலத்தில் கூறி
பாராட்டப்பட்டு தேர்வும் பெற்றான் திட்டமிட்டுச் செய் திட்டமிட்டதைச்செய் என்பதில்
மிகவும் நம்பிக்கை உடையவன்அதுபோல் காதலிலும்திட்டமிட்டு ஜெயித்தான்
உலகமே தெரியாத பெண் எல்லாவற்றிலும் தாயின் உதவி
நாடுவாள் சின்ன வயதில் படித்து முடித்ததும் ஆடுகொடியில் (மைகோ தொழிற்சாலை இருக்குமிடம்)
வேலைக்குப்போக வேண்டுமென்னும் கனவு மட்டுமே இருந்தது ஆடுகொடி என்பது என்ன
எங்கிருக்கிறது என்பதே தெரியாதவள் அவள்
மேல் இவனுக்கு காதல் பிறந்தது இவனுக்கு. காதல் என்பதே தெரியாமல் இருந்தாள் அவள். இவனைப்
பார்க்கும்போது ஏதொ இனம்தெரியாதபயம்வருவதுண்டு படித்து முடித்த பின் வேலைக்குப்
போக வேண்டும்திரைப்படங்கள்பார்க்க வேண்டும் வாழ்வே ஒரு கனவுதான்
இவன்
திட்ட மிட்டுசெயல் படுபவன் அல்லவா
முதலில் காதலைத் தெரிவிக்க
வேண்டுமே பின் தன்னைப் பற்றியஒரு நல்ல அபிப்பிராயத்தை
வளர்க்க வேண்டும் நேராகச் சென்று காதலிக்கிறேனென்று சொன்னால் அதையும அவள் தாயிடம்
சொல்வாள் எல்லாமே தவறாகப் போகலாம்எனவெ
தாயிடம்நல்ல பெயர் வாங்கவேண்டும் இவன்பற்றிய அவர்களது அபிபிராயம் உயர்ந்ததாயிருக்க
வேண்டும்
இவனது வீட்டினரைமுதலில்
அறிமுகப்படுத்தினான் அவளுக்காக ஒரு வேலைக்கு இவனும்பிரயத்தனப் பட்டான்
ஆசிரியைப்பயிற்சி தேர்வுக்குக் கூட்டிப்போனான் ஒரு தூது கவிதை எழுதி அவளிடம்
சேர்ப்பித்தான் அதில் இருந்துஇவனைக் கண்டாலே அவளுக்கு பயம்தான்
அவள்
திடீரென்று ஒரு கடிதம்
வந்ததும் மிகவும்பயந்துவிட்டாள்மனசின் ஓரத்தில் என்னவோ ஒரு மாதிரி ஈர்ப்பு
ஏற்படுறதோ என்று தோன்றும் என்ன இருந்தாலும்வேலைக்குப் போக வேண்டும் பெற்றோருக்கு உதவியாய் இருக்க வேண்டும்ஒரு
ஆணாய் பிறந்திருந்தால் அதுதானே செய்வோம்ஒரு வழியாய் தெரிந்த நண்பர் மூலம் எச் எம் டி வாட்ச் ஃபாக்டரியில் பயிற்சியில்
சேர முடிந்தது மாதம்ரூ 90 / ஸ்டைபெண்ட் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடிந்ததும் வேலை கனவுகள் தொடர்ந்தன வீட்டிலிருந்து சுமார்
15 கி மீ தூர்ம் பஸ்ஸில் பயணமென்பதே
பிடிக்காதது தலை சுற்றல் வரும் கம்பனி பஸ்
வரும் போக வர தொந்தரவு இல்லை சுமார்
முக்கால் கிமீ தூரமிருக்கும் இடத்துக்கு
பஸ் வரும் ஏறி உட்கார்ந்தால் கண்களை
மூடிக் கொள்வாள் இறங்கும் இடத்தில்தான் விழிப்பு திரும்பி வரும்போது
இவன் நினைப்பு வரும் எங்கிருந்தாவது
தன்னைத் தொடர்வான் என்பது தெர்யும் ஆனால் அதுவே அச்சம்தந்தது
இவன்
ஒரு வழியாய் அவளுக்கு வேலை கிடைத்தது மகிழ்ச்சி
தனியே சந்தித்து காதலைச் சொல்ல வேண்டும்ஒரு முறை அவள் வேலை செய்யும்
இடத்துக்கே போய் அவள் பற்றி விசாரித்தான்
இவனை யாரென்று கேட்ட போது கசின் என்றான் முதன் முதலாக தனியே சந்திக்கிறான்
நிதானமாகப் பேச ஒருஇடம்வெண்டும் என்கிறான்
ஒரு இடத்தையும் நேரத்தையும் அவளே கூற நம்பமுடியாத ஆநந்தத்தில்
மிதக்கிறான் ஒரு வழியாய் சந்திப்பும் நிகழ்ந்தது
இப்படி தனியே சந்திப்பது தவறு என்று அவள் கூறினாலும் அவளே வந்ததால் சீரியசாக
எடுத்துக்கொள்ள வில்லை கொஞ்சம்தைரியம்வந்தது திருமண்ம் பற்றி பேசினால் அம்மா என்றாள்
அம்மாவிடம்பேசட்டுமா என்றால் வேண்டாமென்றாள் இவனுக்கு தன் காதலை கவிதையாகசொல்ல
விருப்பம்
அவள்
தன் காதலைச் சொல்லிவிட்டார் அம்மா என்ன
சொல்வாளோஇருந்தாலும் அம்மாவிடம் சொல்லாமல் இருக்கமுடியாது இதன் நடுவில் அவளுக்கு
ஒருபத்திரிகை அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதமும்
பரிசும் வந்தது இது இவன்
வேலையாய்த் தானிருக்க வேண்டும்அம்மாவிடம் சொன்னபோது தெரியும் என்றுகூறி விட்டாள்கொஞ்சம்
தைரியம் வந்தது இதன் நடுவே கடிதப் போக்குவரத்துமிருந்தது பதில்
எழுதத் தெரியவில்லை எழுதாமலும் இருக்க முடியவில்லை பதில் எழுதாவிட்டால் கோபமாகக்
கடிதம்வரும் ஒரு நாள் திருமணம் பேச இவன்வீட்டிலிருந்து வந்தார்கள் ஒரெ கண்டிஷன்
அவளுக்கிருந்தது திருமணம்முடிந்தாலும் தன்
ஸ்டைபென்ட் தன்வீட்டுக்குத்தான் என்றாள்
இவன்
திருமணத்துக்கு ஒரு
வழியாய் சம்மதிக்க வைத்தாயிற்றுஇத்தனை நாள் அவள்
ஸ்டைபெண்டிருந்ததா அது இல்லாவிட்டால் என்ன என்றே நினைத்தான்ஆனால் அது தவறு
என்று திருமணத்துக்குப் பின் தான் தெரிந்தது இவன் தாய்க்கு அதில் உடன்படில்லை திருமண்ம் ஆனால் பெண் தன் குடும்பத்துக்கு ஏதும்கொடுப்பது ஒப்புக் கொள்ளக் கூடியதாய்
இருக்கவில்லை இதனால் மனஸ் தாபங்களைத்தவிர்க்க வேண்டும் திட்டமிட்டுச் செயல்படுபவன்
அல்லவா வேலை மாற்றினால் தொல்லை குறையும் என்று நினைத்தான்
ஆனாலும் வேறு ரூபத்தில்தொல்லை வந்தது
அவள்
வேலை மாற்றி
வந்தாயிற்று ஆனால் கம்பனியில் இருந்து
பயிற்சி காலம்முன்பே வந்ததால் அதற்கான
ஈட்டுத்தொகை கேட்டு எழுதினார்கள்
இல்லாதபட்சம் ஈட்டுத் தொகைக்கு
கையெழுத்து இட்டிருந்த உறவினர் கட்ட வேண்டி இருக்கும்என்று பயமுறுத்தினார்கள்
இவன்
அவளை சமாதானப்படுத்துவதே
பெரும்பாடாயிற்று எந்தபதிலும்போடாமல் பேசாமல் இருக்கும்படி சொன்னான்
மிஞ்சிப்போனால் கேஸ்போடுவார்கள் கட்டுவோம் ஆனால் ஒரேயடியாய் அல்ல சிறுகச் சிறுக கட்டலாம் என்றாலும் அவள் சமாதானமடைய வில்லை நாளாவிட்டத்தில் கம்பனியில் இருந்து நோட்டீசும்வருவது
நின்று போயிற்று
அவள்
இருந்தாலும் இவ்னுக்கு
நெஞ்சழுத்தம் கூடத்தான்
இவ்ன்
இல்லாவிட்டால் வாழ்வில்
குப்பை கொட்ட முடியாது
வாழ்வின் சிலநிகழ்வுகளை அசைபோடும்போதுஇருவருக்கும் வரும் நினைப்புகள்
இனிக்கும் நினைவுகள்.
ReplyDeleteகசப்பான நினைவுகளை ஒதுக்கி விடுவது உண்டு
Deleteபடிக்க ரசனையாக இருந்தது ஐயா தங்களது கடந்த காலம்.
ReplyDeleteரசனையாக எழுதப்ப்ட்டிருந்தது என்றால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
Deleteஇவன் யாரென்று தெரிகிறது..
ReplyDeleteநிகழ்வுகளைக் கோர்த்து கோர்த்து எழுதிய முறை நன்று.
இவன் யாரென்று என்னைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்பாராட்டு ஒரு சிறந்த பதிவரிட்மிருந்து வருவது மகிழ்ச்சி தருகிறது
Deleteஎன்றும் இனிய நினைவுகளே.
ReplyDeleteவருகைக்கு நன்றி பல பதிவுகளுக்கு ஒரே நேரத்தில் வருகையா
ReplyDeleteபடிக்கறதுக்கு சுவாரசியமாக இருந்தது உங்களுடைய நிஜக் கதை.
ReplyDeleteநரத்திடாத காதல் சுவாரசியம்தானே நன்றிசார்
Deleteரசனையான நினைவுகள் எப்போதும் இனிமையே
ReplyDeleteஅருமை ஐயா.
பாராட்டுக்கு நன்றி குமார்
Deleteமுதலில் படிக்க ஆரம்பித்தபோதே தெரிந்துவிட்டது இது தங்களின் கதை என்று. சுயசரிதையை புதிய பாணியில் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்! நினைவுகளை அசைபோடுவதே ஒரு சுகம் தான்!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி
Deleteநினைவுகள்.... சொல்லிய விதம் சிறப்பு.
ReplyDeleteஇந்த உத்தி பிடித்ததா
Delete