பழையபாடல் வரிகள்
-------------------------------------
சில நாட்களாக வலைப் பக்கம் ஒழுங்காக வர
முடிவதில்லைநீண்ட நாட்களாக ஒத்திப் போட்டுக்
கொண்டிருந்த ஓவியம் வரைவதை மீண்டும் முயற்சிசெய்கிறேன் வலைப்பக்கம் வந்து பார்த்தால் நம்மைக் காண வருபவர் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது வலை நட்புகள் ஏனோ பாராமுகம் காட்டுகிறார்கள் தெரிய வில்லை/ போகட்டும் நான்
எழுதுவது தொடரும் வந்து படிக்காவிட்டால் அவர்கள் சில நல்ல கருத்துகளையும்
எழுத்துகளையும் ம்ஸ் செய்வார்கள்
அவ்வளவுதான்
விஷயத்துக்கு வருவோம் சிலநாட்களாகவே ஏதோ பாடல் வரிகள் மனதில் ஓடிக்
கொண்டிருக்கின்றன வரிகள் முழுவதும் நினைவுக்கு வரவில்லை மிகப் பழையபாடல்
வரிகள் கூகிளில் தேடினாலும் கிடைக்கவில்லை
சில வரிகள் ப்ரேமை எனதே பாரின் மீதே
பாக்கியம் வேறேதே
கட்டிக்கரும்பே தேனே
கனியே ஜானகி மானே கட்டி அணைத்திட கருதி வந்தேனே
கண்ணே எனையே காண்பாய் நீயே
காதல் கனிரசமே
தெருவில் வராண்டி வேலன் தேடிவராண்டி
ஆனைமுகன் வேலனுக்கு அண்ணனாமடி
அவனைக்காட்டி
வள்ளிப்பெண்ணை மணந்து கொண்டாண்டி
\
கடைசியாக உள்ளது யூ ட்யூபில்
கிடைத்தது பகிர்கிறேன் இம்மாதிரி பழைய பாடல்கள் எங்கு கிடைக்கும் வாசகர்கள் தெரியப்படுத்தினால் நன்றி உடையவனாய் வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியலாம்நீங்களும் கேட்டிருக்கலாம்
பல எக்சோடிக் பூக்கள்
வளர்கின்றன என் சிறிய தோட்டத்தில் ஃபுட்பால் லில்லி பிரம்ம கமலம்
எனப்படும் நிஷாகந்தி இவை தவிர
லாப்ஸ்டர் க்லாஸ் எனப்படும் பூ
போன்றவை இவற்றில் லில்லி ஆண்டு ஒன்றுக்கு
ஒரு முறை மட்டும் மலரும் அதுவும் மே மாதம்
மட்டுமே இது பற்றி எழுதி இருக்கிறேன் அதே போல் ஆண்டுக்கு ஒரு முறை மலரும்
நிஷாகந்தியும் ஒரே நேரத்தில் நான்கு பூக்கள் மலர்ந்திருந்தன ஆனால் அவை மலர்ந்த
நிலையில் விடியய்ற்காலை மட்டுமே காட்சி தரும்
பின் கூம்பி விடும் என்னால் அத்தனை
காலையில் படம் எடுக்க முடியவில்லை கூம்பிய மலர்கள் இங்கே
இரண்டு நாட்கள் மகனுடனிருந்தேன் காலை நடை தடைபட்டதால் மாலயில் அந்தக் குடியிருப்பின் பேஸ்மெண்டில் என் பேரனுடன் நடந்தேன் என் நடையை அவன் காணொளி யாக்கினான் அதைப் பகிர்கிறேன்

