காதல் நினைவுகள்
----------------------------------
எண்ணத் தறியில் எழில் நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட இழையோட
கன்னக்குழியில் வண்ணக்குமிழ் கொப்பளிக்க
பைந்தமிழ் மொழிபேசி மொழிபேசி
மின்னலிடையில் மனந்திளைத்த எனைப்
புன்னகை ஒளிவீசி ஒளிவீசி
இன்னலிடை யின்றவள் மீட்டாள்
காதல் பண்பாடி பண்பாடி |
கொஞ்சும் விழிகள் வேல்போல் தாக்க
எஞ்சிய உறுதியும் காற்றில் பறக்க
தஞ்சமேனப்புகு என மனமும் நினைக்க
மிஞ்சியதென்னில் அவள் திருஉருவம்
பிணைந்திழையோட இழையோட
கன்னக்குழியில் வண்ணக்குமிழ் கொப்பளிக்க
பைந்தமிழ் மொழிபேசி மொழிபேசி
மின்னலிடையில் மனந்திளைத்த எனைப்
புன்னகை ஒளிவீசி ஒளிவீசி
இன்னலிடை யின்றவள் மீட்டாள்
காதல் பண்பாடி பண்பாடி |
கொஞ்சும் விழிகள் வேல்போல் தாக்க
எஞ்சிய உறுதியும் காற்றில் பறக்க
தஞ்சமேனப்புகு என மனமும் நினைக்க
மிஞ்சியதென்னில் அவள் திருஉருவம்
|
அன்ன நடையழகி ஆடிஎன்முன் நிற்க
பின்னிய கருங்குழல் அவள் முன்னாட
என்ன நினைததனோ அறியேன் அறிவேன்
பின்னர் நிகழ்ந்தது அதனைக் கூறுவன் கேளீர் |
அன்ன நடையழகி ஆடிஎன்முன் நிற்க
பின்னிய கருங்குழல் அவள் முன்னாட
என்ன நினைததனோ அறியேன் அறிவேன்
பின்னர் நிகழ்ந்தது அதனைக் கூறுவன் கேளீர் |
ஈருடல் ஒன்றாய் இணைய _அதனால்
இறுகிப் பதித்த இதழ்கள் கரும்பினுமினிக்க
இன்சுவை உணர ஊறி கிடந்தேன்
இறுதியில் உணர்ந்தேன் கனவெனக் கண்டது
கண்ட கனவு நனவாக இன்று
காரிகையே அழைக்கின்றேன் ; அன்புக்
கயிற்றால் பிணைக்கின்றேன்; கண்ணே
கட்டும் பிணைப்பும் பிரியாது உறுதி |
ஆஹா ரசிக்க வைக்கும் ரத்தின வரிகள் அருமை ஐயா.
ReplyDeleteஅவ்வப்போது இளமைக்காலங்களை நினைவு கூரவும்.
அவ்வப்போது மட்டும் அல்ல ஜி எப்போதுமே இளமைக்கால நினைவுகள்தான்
Deleteநினைத்தாலே இனிக்கும்
ReplyDeleteநமக்கு இனிப்பது பிறருக்கு எப்படியோ தெரியவில்லை
Deleteஅருமை. ரசித்தேன்.
ReplyDeleteவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ
Deleteஅருமையான நினைவுகள். நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
ReplyDeleteவெளிப்படுத்துவது எல்லாம் சொற்பமே வருகைக்கு நன்றி மேம்
Deleteஅருமையான நினைவுகள்
ReplyDeleteதொடருவோம்
தொடர்ந்து வந்தால் மகிழ்ச்சியே நன்றி சார்
Deleteரசித்தேன்...
ReplyDeleteவருகையும் ரசிப்பும் மகிழ்ச்சி தருகிறதுடிடி
Deleteசினிமாப் பாடல் எழுதுவதிலும் தாங்கள் வல்லவர் என்பதைக் காட்டிவிட்டீர்கள் ஐயா!
ReplyDelete-இராய செல்லப்பா சென்னை
எந்த படத்திலிப் பாடலைக் கேட்டீர்கள்
ReplyDelete