Sunday, June 4, 2017

இவரைத் தெரியுமா 2 3

                  இவரைத் தெரியுமா 2.....3
இவரைத் தெரியுமா ---2


 ” பதிவெல்லாம் எழுதுகிறாயாமே

 “வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது

செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.

 “ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?


 “ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்

துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்

 “ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?


 “ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.


 “எந்த மொழியில் எழுதுகிறாய்.?


  “ஏன், தமிழில்தான்.


 “அதுதானே பார்த்தேன். ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்

திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்
கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து
கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது
கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்
என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவந்தான்

இவரைத் தெரியுமா ---3


 ” நேற்று உன்னைக் கிளப்பில் பார்த்தேன்.


 ” ஆமாம், அவ்வப்போது கிளப்புக்குப் போவ்துண்டு.


 “ உன் மனைவியுடன் வந்திருந்தாயே.


 “ஆம் எங்கு போவதானாலும் மனைவியுடந்தான் போவேன்.


 “உன் மனைவியுடன் நீ போவ்தைப்பார்த்து என் மனைவி

   என்னிடம் சண்டை பிடிக்கிறாள்.


 “ என் மனைவியுடன் நான் போவதால் உங்கள் மனைவி ஏன்

    சண்டை போடவேண்டும்?


 “ என்னையும் உன்னை மாதிரி, எங்கு போவதானாலும் கூடவே

    இழுத்துக் கொண்டு போக்ச் சொல்கிறாள்.


 “ மன்னிக்க வேண்டும். நான் என் மனைவியை அழைத்துக்

   கொண்டு போகிறேன். இழுத்துக் கொண்டு போவதில்லை.


 “உன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்./


 ‘ படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


 “ அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டாமா.?நீ அவர்களுக்கு

    ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா.?இப்படி

    மனைவியுடன் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.?


 “ என் பிள்ளைகளை நான் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.

    அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும்


 “ என்னால் அப்படி விட முடியாது. எனக்கிருப்பது பெண்

   குழந்தைகள். மிகவும் கண்டிப்புடன் வளர்க்கிறேன்.


இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்.




              .






         




31 comments:

  1. இப்படி பேசுபவர்களின் நிலை கடைசியில் இப்படித்தான் முடியும் ஐயா
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. யாரும் தெரிந்து பேசுவதில்லை அவர்கள் குணாதிசயங்களே பேச்சிலும் செய்கையிலும் வெளியாகிறது வருகைக்கு நன்றி ஜி

      Delete
  2. நல்ல மூடுக்கு வந்துவிட்டீர்கள்! சபாஷ்!

    ReplyDelete
    Replies
    1. எழுத விஷயம் தேட வந்தது இது பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  3. நல்ல மூடுக்கு வந்துவிட்டீர்கள்! சபாஷ்!

    ReplyDelete
  4. இப்படியும் சிலர் இருக்கிறார்கள் தான்...அவர்கள் சொல்லுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து சென்றுவிடலாமோ??!!

    --துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்த நேரத்தில் மனதை காயப்படுத்திவிடுகிறார்களே பொறாமை விரக்தி போன்ற குணங்களின் வெளிப்பாடு வருகைக்கு நன்றி சார் /மேம்

      Delete
  5. ஆம் ஓவர் சுதாரிப்பு
    இப்படி எதையாவது செய்துவிடும்
    இந்தத் தொடர் சுருக்கமாக எனினும்
    சிறப்பாக இருக்கிறது
    தொடர வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. காணும் மனிதர்கள் பதிவு எழுத உதவுகிறார்கள் வருகைக்கு நன்றி சார்

      Delete
  6. அடுத்தவர்களைக் காய்வதும், குற்றம் கண்டுபிடிப்பதும் சிலருக்கு இயல்பு. விட்டுத் தள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு பகிர்வுதானேஸ்ரீ வருகைக்கு நன்றி

      Delete
  7. எங்களுக்கு பாடம் ஐயா. எங்கு கண்டிப்பு அதிகமாக இருக்கிறதோ அங்கு சிக்கல்கள் உண்டு என்பதை அறிவோம். நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பு இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியதுதானே சார் வருகைக்கு நன்றி

      Delete
  8. இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் இடுகை மூலம் பகிர்ந்தேன் சார்

      Delete
  9. சிலர் இப்படித்தான் பேசுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நமக்குத் தெரிந்து இருந்தால் நல்லதுதானே மேம்

      Delete
  10. 2 ,இயலாமையால் குற்றம் காண்பதிலேயே காலத்தைக்கழிப்பவர்
    3, கொஞ்சம் இயலாமை கொஞ்சம் பொறாமை யின் வெளிப்பாடு ..
    பத்து விரல்களும் ஒரே போலில்லை அப்படி இருந்தால் எந்த பொருளையும் பிடித்து எடுக்க தூக்க கஷ்டமா இருக்கும் .#நான் பேர் சொல்லி கணவரை அழைப்பேன் ஒரு பெண்மணி கடிந்து கொண்டார் என் உறவுக்காரர் ..பிறகொரு தருணம் கண்டுபிடித்ததில் அவர் கணவர் இவரை அப்படி அழைக்க அனுமதிக்கவில்லை அந்த கோபத்தை என்னிடம் காட்டியுள்ளார் :)
    ஆகமொத்தம் .2,3 போன்றோர் பரிதாபத்துக்குரியோரே ..

    ReplyDelete
    Replies
    1. எல்லா தரப்பு மனிதர்களையும் அடையாளம் தெரிய வேண்டாமா ஏஞ்செல்
      மா

      Delete
  11. என்னத்தைச் சொல்றது?..

    ஏஞ்சல் அவர்கள் - பரிதாபத்துக்குரியவர்கள்!.. என்கின்றார்கள்..

    அவ்வளவு தான்!..

    ReplyDelete
    Replies
    1. பரிதாபம் நம்மைக் கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும் வருகைக்கு நன்றி சார்

      Delete
  12. அடுத்தவர்கள் பற்றிய விடுப்ஸ் அறிவதில்தான் அதிகப்பேரின் பொழுது கழிகிறது.

    //இப்படி அறிவுரை கூறியவரின் பெண்களில் ஒருத்தி யாரையோ
    காதலித்து அவனுடன் ஓடி விட்டாள்.//

    அப்படி எப்பவும் சொல்லாதீர்கள் ஐயா.. , யாரையும் எதுக்காகவும் சிம்பிளாக குற்றம் சொல்லிடக்கூடாது... உங்களுக்கும் பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. நான் எப்பவும் நம் எதிர் காலத்தை நினைத்துப் பார்ப்பேன்ன்.. அடுத்தவரை குற்றம் சொல்வது இலகு, ஆனால் அதுக்காக அக்குடும்பம் என்ன வேதனைப் பட்டதோ.. படுகிறதோ??

    நாளைக்கு நம் குடும்பங்களில் என்ன நடக்குமோ? எதுவும் நம் கையில் இல்லை.. அதனால அடுத்தவரின் வேதனையை மதிக்க வேண்டும் நாம்.

    ReplyDelete
    Replies
    1. /அப்படி எப்பவும் சொல்லாதீர்கள் ஐயா.. , யாரையும் எதுக்காகவும் சிம்பிளாக குற்றம் சொல்லிடக்கூடாது... உங்களுக்கும் பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. நான் எப்பவும் நம் எதிர் காலத்தை நினைத்துப் பார்ப்பேன்ன்.. அடுத்தவரை குற்றம் சொல்வது இலகு, ஆனால் அதுக்காக அக்குடும்பம் என்ன வேதனைப் பட்டதோ.. படுகிறதோ??/ குற்றம் சொல்லவில்லை அதிரா நடந்ததைச் சொன்னேன்நம் வேதனையை மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்று நினைபது இயல்புதானே பதிவின் செய்திகள்/ உங்கள் பின்னூட்டம் உங்கள் மனநிலையைக் காட்டுகிறது விட்டுத்தள்ளுங்கள்

      Delete
  13. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். எல்லோரிடத்தும் கற்றுக் கொள்ள ஏதேனும் ஒன்று இருக்கிறது.
    அருமையான அலசல் அய்யா நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சிவகுமாரா

      Delete
  14. (சில விசயங்களில்) அதிக கட்டுப்பாடு = அதிக ஆபத்து

    ReplyDelete
    Replies
    1. சில மனிதர்களையும் நடப்புகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டி இருக்கிறேன் வருகைக்கு நன்றி டிடி

      Delete

  15. தன்னால் செய்யமுடியாததை பிற செய்கிறார்களே என்ற வயிற்றெரிச்சலில் பேசுபவர்களையும், நாம் கேட்காமலேயே கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) நமக்கு தருபவர்களையும் கொண்டது தானே இந்த உலகம்?

    ReplyDelete
    Replies
    1. அவர்களில் சிலரை முன்னிலைப் படுத்தி எழுதுகிறேன் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா

      Delete
  16. சில நேரங்களில் சில மனிதர்கள்!

    ReplyDelete
    Replies
    1. இவர்களில் பலரும் எப்போதும் இப்படித்தான் வருகைக்கு நன்றி மேம்

      Delete