Thursday, September 6, 2018

மனச்சிதைவு


                                                    மனச்சிதைவு
                                                  ------------------------


என் கால்கள் என்னை என் கட்டுப்பாட்டில் இருக்க விடாமல் எங்கோ அழைத்துச் செல்கிறது.நான் போகுமிடம் இவ்வளவு நாட்கள் உழைத்து உருவாக்கிய என் தொழிற்சாலை அல்லவா. யாரோ என்னைக் கூப்பிடும் சப்தம் கேட்டுத் திரும்பினால் அது என் தொழிற்சாலையில் என்னுடன் தோள் கொடுத்து நின்ற குமரன் அல்லவா.’ நீயும் வா, என்னுடன் ‘ என்று அவனையும் அழைத்துக் கொண்டு விரைகிறேன்.’ ஏன் இவ்வளவு அவசரம் ‘என்று கேட்கிறான். அவனுக்குத் தெரியுமா என் மனம் என்னைப் படுத்தும் பாடு..இப்போதே நான் என் தொழிற்சாலைக்குள் இருக்கவேண்டும். இதோ வந்து விட்டோம். உள்ளே போக எத்தனிக்கும் என்னை ஒரு காவலன் தடுக்கிறான். குமரன் அவனிடம் ஏதோ கூற உள்ளே அனுமதிக்கப் படுகிறேன். என் தொழிற்சாலைக்குள் போக எனக்கு சிபாரிசு தேவைப் படுகிறது.

உள்ளே நுழைந்ததும் ஆ ! அந்த சூழ்நிலையே புத்துணர்ச்சி தருகிறது.நேராக என் இருப்பிடத்துக்குப் போகிறேன். அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறது. என் இடத்தில் இருந்து என் இருக்கையை எடுத்தது யார் என்று சத்தமிடுகிறேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திரு திருவென விழிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் என்னை யார் என்று கேட்கிறான். ‘ நான் தான் ஜீ.எம். பாலசுப்பிரமணியம் என்று கத்துகிறேன். குமரன் அவர்களிடம் ஏதோ பேசி சமாதானம் சொல்கிறான் வேலை செய்யாமல் நேரம் கடத்தும் அவர்களுக்கு அன்றைய சம்பளம் கட் என்று குமரனிடம் சொல்கிறேன். பாடுபட்டு முன்னுக்குக் கொண்டு வந்த
தொழிற்கூடத்தில் பணி செய்யாமல் காலம் கழிக்கிறார்கள் என்றால் தவறு எங்கே என்று என்னையே உரக்கக் கேட்கிறேன். என்னுள் இருந்து ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்கிறது. ‘ மடையா, நீவிட்டுச் சென்ற தொழிற்கூடமல்ல இது.தெரியவில்லையா என்கிறது. நான் இருந்த காலத்தைய அடையாளங்களை முற்றிலும் தொலைத்து நிற்கும் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன். குமரனும் என்னுடன் வருகிறான். ‘உன் பணியை விட்டு விட்டு என்னுடன் ஏன் வருகிறாய்.? நீ போ’ என்று அவனைக் கடிந்து கொள்கிறேன். விரட்டினாலும் விசுவாசமாகத் தொடரும் நாய்க் குட்டி போல் அவன் என்னைத் தொடருகிறான்.

மானியமாக பெருந்தொகை செலவு செய்து சலுகைக் கட்டணத்தில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருந்தேன். அது எப்படி செயல்படுகிறது என்று காண உணவுக் கூடத்துக்குப் போகிறேன். தலை வாழை இலையில் பல் வேறு வகையான உணவு பறிமாறப் பட்டது. சலுகை கட்டணம் கொடுக்கப் போனால் என்னை அடிக்கக் கை ஓங்குகிறான் ஒருவன். விளங்காது விழித்த என்னைக் காப்பாற்றிக் கூட்டிக் கொண்டு வருகிறான் குமரன்.

எனக்கு ஏதும் புரிவதில்லை. எத்தனையோ பாடு பட்டுக் கட்டிக் காப்பாற்றிய என் தொழிற்கூடம் என் கண் முன்னே சிதைந்து இருப்பது போல் தோன்றுகிறது. என்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுகிறேன். குமரன் என்னை என்னென்னவோ சொல்லித் தேற்றுகிறான். கார் வைக்கும் கராஜுக்குப் போய் என் காரைத் தேடுகிறேன். காரில் வரவில்லை. நடந்துதான் வந்தோம் என்று குமரன் கூறுகிறான். என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணி விட்டான் போலும். கார் கிடைக்காமல் போனால்தான் என்ன. எனக்கு நடக்க முடியுமே என்று கூறி சிரிக்கிறேன்.வேலை பார்த்தது போதும் வீட்டுக்குப் போகலாம் என்று என்னை அழைத்துச் செல்கிறான் குமரன். நான் வீடு வந்து சேரும்போது வீட்டு வாசலிலேயே என் மனைவியும் மற்றவர்களும் காத்திருக்கிறார்கள். என்னைக் கண்டதும் என் மனைவி ஓ வென அழுகிறாள். பைத்தியக்காரி!


        

22 comments:

  1. மனச் சிதைவு குறித்து அருமையாய் கதை படைத்திருக்கிறீர்கள் ஐயா
    சுஜாதாவின் கதை ஒன்று இதைப்போலவே படித்த நினைவு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் புரியாத ஒன்று மிக ஒரிஜினலான கற்பனையையும் வேறு யாரோ ஒருவரது படைப்புபோல் இருப்பதாக எண்ணுவது அப்படியெ சொன்னாலும் எப்படி என்றவது சொல்ல வேண்டாமா ஒரு வேளை பிரபலங்களின் படைப்பு போல் இருக்கிறது என்பது ஒரு விதபாராட்டோ

      Delete
  2. எனது உறவினர் ஒருவர் இதைவிட மனச்சிதைவு ஏற்பட்டு தற்சமயம் சிறிது தேறி வருகிறார்... அவரின் ஞாபகம் தான் உடனே வந்தது... ஓய்வு பெறப்போகும் பலருக்கும் (செய்யும் வேலையை அதிகம் நேசிக்கும்) இந்த பாதிப்பு இருக்கத்தான் செய்யும்...

    ReplyDelete
    Replies
    1. நானென்வேலையை அதிகம்நேசித்ததுண்டு ஆனால் அதன் பாதிப்புஅல்ல இது

      Delete
    2. டிடி பணி ஓய்வு என்றில்லை, சிறிய வயதிலேயே அதாவது பருவ வயதிலேயே இந்த மனச் சிதைவு நோய் வரும் வாய்ப்புண்டு. காரணங்கள் இன்னதுதான் என்று குறிப்பிட்டுச் சொலல் முடியாது என்றாலும் மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள்தான் காரணம். இதிலும் பல வகைகள் உண்டு. அதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பல தொடர்கள் தேவைப்படும். ஆனால் மனச் சிதைவு நோய் வந்தவர்களுக்குத் தீர்வு என்பது இல்லை. மேனெஜ்மென்ட்தான் மருந்துகளின் உதவியுடன். குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே எளிது. மட்டுமல்ல அந்த நோயாளிக்குத் தனக்கு மனச் சிதைவு இருக்கிறது அதற்குத்தான் இந்த மருந்து என்று உணர்ந்து கொண்டு விட்டால் மருந்துகளால் மேனேஜ் செய்துவிடலாம்....அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் மிகவும் கடினம்....

      கீதா

      Delete
  3. செய்த வேலையை நேசிக்கும் மனதுடையவர்களுக்கு இப்படி எண்ண ஓட்டங்கள் சுழல்வது உண்மைதான் ஐயா.

    நான் கடைசி நொடிவரை எனது வேலையை நேசித்தேன்.

    இன்று எனது வேலை அலங்கோலமாக நடப்பதாய் செவிவழி, செல்வழிச் செய்திகள் எனது செவிக்கு வந்து மனது அல்லோலப்படுகிறது.

    ஒன்றும் செய்ய இயலாது.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நாம் இருக்கும்போது இருந்ததுபோல் இல்லை என்னும் எண்ணம்வரலாம்

      Delete
  4. படிக்கும் போதே மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.

    சுஜாதாவின் கதை ஒன்று இதைப்போலவே நாடகமாய் வந்தது.
    பாலசந்தர் படத்திலும் எஸ்.வி. சுப்பையா இது போல் அலுவலகத்திற்குள் போய் பேசுவார். அவர் மகள் வந்து அழைத்து போவார்.

    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக சுஜாதாவின் பாதிப்போ பாலசந்தரின் பாதிப்போஇல்லை என்று உறுதிஅளிக்கிறேன்

      Delete
  5. எனக்கு என் சக ஊழியன் சொன்னான், 'சார்... நீங்க கம்பெனிக்காக இவ்வளவு செய்யாதீங்க. வேலையை நேசிங்க. வேலை செய்யும் இடத்துக்கு இவ்வளவு உண்மையா உழைக்காதீங்க' என்றான். அதுதான் நினைவுக்கு வந்தது.

    நல்லா எழிதியிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. நாம்செய்யும்பணியை நேசிப்பதுதவறல்ல என்பதே என் எண்ணம்

      Delete
  6. நல்லா இருக்கு! அருமையாய் எடுத்துச் சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  7. எண்ண ஓட்டங்களுக்கு இணையாய் ஓடி இருக்கிறது எழுத்து ஓட்டம். அருமை.

    ReplyDelete
    Replies
    1. இதை மனமார்ந்து ஏற்றுக்கொள்ளுகிறேன் நன்றி ஸ்ரீ

      Delete
  8. பால சுப்பிரமணியன் சார் அருமையாக சொல்லி இருக்கிறீங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  9. இதைபடித்த போது உங்களக்கு வந்த கனவு என்றே நினைத்து இருந்தேன். வேலையவிட்டு வந்த பின் அந்த இடங்களில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு கனவுகளாக தொடரந்து வரும் அது போலத்தான் இதுவும் என்று நினைத்தேன்...

    ReplyDelete
  10. இவ்வாறான மனக்கலக்கங்களைப் பகிர்வது மிகவும் சிரமமே. உளவியல் ரீதியில் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சார் ஒரு ஃப்லொவில் எழுதியது பாராட்டுக்கு நன்றி

      Delete
  11. கதை மிக நன்றாக இருக்கிறது சார்.

    துளசிதரன்

    அருமை ஸார்.! நல்ல அழகான கதை. உங்கள் கற்பனைக் குதிரை நன்றாகவே ஒடியிருக்கிறது!!!

    கீதா

    ReplyDelete