மொழி இன்றைய நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி இன்றைய நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 செப்டம்பர், 2018

மொழியின் அழுகை


                                                             மொழியின் அழுகை
                                                              ---------------------------------


இது ஒரு மீள்  பதிவு
கைபேசிகள்( செல் ஃபோன்கள் )புழக்கத்தில் இருப்பதும் ,
அவற்றின் உபயோகங்களும் பாதிப்புகளும் ஆராய்ந்து
அவை சாபமா வரமா என்று கேள்வி கேட்கப்பட்டு ஒரு
பதிவில் எழுதப்பட்டு இருந்தது.கணினியின் சில சேவை
களை கற்றுக்கொண்டு உபயோகிக்க முயலும்போது இந்த
கேள்வி நினைவுக்கு வந்தது. கைபேசியில் குறுஞ் செய்தி
அனுப்ப இக்கால இளைஞர்கள் உபயோகிக்கும் ஆங்கிலம்
என் போன்றோருக்கு படித்து அறிய முடியாததாய் உள்ளது.
குறுஞ் செய்தி ஏதோ அவசரத்துக்கு அனுப்பப்படுகிறது
என்பது சரியல்ல. கணினியில் சாட்டிங் போல கைபேசியில்
குறுஞ் செய்தி உபயோகப்படுத்தப் படுகிறது. நவ இந்தியப்
பிரதிநிதிகளின் கைகள் எப்போதும் குறு குறு வென்று
இருக்கும்போல் தோன்றுகிறது.
யாரோ எதையோ எழுதட்டும் ,நமக்கென்ன என்று இருந்து
விடலாம்.ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு ஒரு மொழிக்கே
உண்டாகிறது காணும்போது திகைப்பாய் இருக்கிறது.

ஆங்கில வழிக் கல்வியிலும், கான்வெண்டிலும் படிக்கும்
சிறுவர் சிறுமிகள் ,எந்த மொழியிலும் குறைந்த பட்ச
தேர்ச்சியாவது பெறுவதில்லை. தாய் மொழியும் ,பிராந்திய
மொழியும் இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும்
போது, முன்னிலையில் பயிற்றுவிக்கப்படும் ஆங்கிலத்தில்
தேர்ச்சி பெற்று இருப்பது எதிர்பார்க்கப்படுவது. ஆனால்
நாம் இப்போது பார்ப்பது ஆங்கிலமே அல்ல. இவர்களாக
ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து, இவர்கள் உச்சரிப்
பிற்கு ஏற்றார்போல் ஏதேதோ எழுதுகிறார்கள். குறுஞ்
செய்தியாம்..!எதையாவது சொல்லப்போனால் தலைமுறை
இடைவெளி என்கிறார்கள்,நான் என் முந்தைய பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்ததுபோல, உண்மை நிலையை
முதலில் அறிந்து கொண்டு பிறகு அதை நம் இஷ்டப்படி
திரிக்கலாம்.மொழியை முதலில் சரியாகக் கற்றுக்கொண்டு
பிறகு அதை மெல்லக் கொல்லுங்கள்

" al of a sden u strt 2 lyk sm 1 dat  u wanna c dem evriday"

இது ஒரு சின்ன மாதிரிதான்.ஆங்கில மொழிக்கு அழ
முடிந்தால் கைபேசியிலும் கணினியிலும் குறுஞ் செய்தி
களாலும் மற்ற பிரயோகங்களாலும் அனுபவிக்கும்
சித்திர வதைகளினால் ரத்தக் கண்ணீரே சிந்தும்.
-
இது இன்றைய நிலை கண்டு  எழுந்த
மனநிலை 
எனக்கு வந்த ஒரு வாட்ஸாப்பில் வந்தசெய்தி
ஆசிரியர் கையெழுத்துப்போடக் கற்றுக் கொடுத்தார்  டெக்னாலஜி கைநாட்டிடச்சொல்கிறது