எனக்கு விடையை விற்கவும்
-------------------------------------------------
SELL ME THE ANSWER - A GAME SHOW
--------------------------------------------------------
பொதுவாக
தொலைக்காட்சிகளில் திரைப்படம்
தவிர்த்த சில நிகழ்ச்சிகளை அவ்வப்போது பார்ப்பதுண்டு. என்ன நிகழ்ச்சி
பார்க்கலாம் என்று ஒரு முறை தொலைக்காட்சி தளங்களில் மேயும்போது ஒரு
நிகழ்ச்சியை ஏஷியா நெட் தொலைக்காட்சியில் கண்டேன் சற்று வித்தியாசமாக இருந்ததால் தொடர ஆரம்பித்தேன் நிகழ்ச்சி பெயர் செல் மி த ஆன்ஸர்( விடையை
எனக்கு விற்கவும்) வார நாட்களில் மாலை நான்கரை மணிமுதல் ஒரு மணி நேரம்
நடக்கிறது. மலையாள நடிகர் முகேஷ் நடத்துகிறார் நான் கண்ட அன்று ஒரு சிறுமி விஸ்மயா என்று பெயர் வயது பத்து இருக்கலாம் ஒரு கூலித் தொழிலாளியின்
மகள் சம்ஸ்கிருதம் படிப்பதாகக்
கூறினாள்அவள் போட்டியாளராகப் பங்கு ஏற்றிருந்தாள். பார்வையாளர்களில்
பெரும்பாலோர் பள்ளி மாணவ மாணவிகளே.
போட்டி
துவங்கும் முன் போட்டியாளருக்கு ரூ. 1000/ -மனி பாக் என்று
வழங்கப் படுகிறது. முகேஷ் இரண்டாயிரம் ரூபாய்க்கான ஒரு கேள்வி கேட்கிறார் அதற்கு பங்கேற்பவர்
விடை அளிக்க வேண்டும் விடை
தெரியாவிட்டால் பார்வையாளரிடம் செல் மி த ஆன்ஸர் என்று கேட்கலாம் பார்வையாளர்களில் பலரும் முன் வர
போட்டியாளர் இருவரைத் தேர்ந்தெடுக்கிறார்
தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும்
தங்களைப் பற்றி அறிவித்து விட்டு தான் எவ்வாறு அப்போட்டியாளருக்கு உதவமுடியும் என்று கூறி தன்னைத் தேர்ந்தெடுக்க அப்பீல்
செய்கிறார் இருவருடைய அப்பீலையும் கேட்டு போட்டியாளர் ஒருவரைத்
தேர்ந்தெடுக்கிறார் பிறகு
தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன் பதிலை விற்பதற்கு விலை பேசுகிறார் போட்டியாளருக்கும் இவருக்கும் பேரம் நடக்கிறது விலை பேச என்று இவரிடம்
இருக்கும் தொகையில் எவ்வளவு அதிகத் தொகைக்கு
விற்பனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேரம்பேச
போட்டியாளர் எவ்வளவு குறைந்த விலைக்கு விடையை வாங்க முடியுமோ அந்த அளவு
பேரம் பேசுகிறார் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பேரம் படிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதிலை போட்டியாளர் ஏற்றுக் கொண்டு பதிலைப் பக்காவாக்குகிறார் விடை சரியாய் இருந்தால்
தேர்ந்தெடுத்தவருக்கு பேரம் பேசப்பட்ட தொகை கிடைக்கிறது போட்டியாளர்
அறிவிக்கப்பட்ட தொகையை வெல்கிறார்
இப்படியே போட்டித்தொகை கூடிக்கொண்டே போகிறது
நான்
அன்று பார்த்த போட்டியில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பையன் தனக்கு பதிலில் ஐம்பது சதவீதமே நம்பிக்கை
என்று கூறினான் பதில் சரி என்று
தெரிந்ததும் அழுதே விட்டான் ஏன் என்று கேட்டதற்கு ஒரு வேளை தன் பதிலால் அச்சிறுமி தோல்வி
அடைந்தால் தன்னால் ஒரு ஏழைச் சிறுமியின் வெற்றி வாய்ப்பு போயிருக்குமே என்று நினைத்ததால் அழுதேன் என்றான் அவனும்
ஒரு கூலித் தொழிலாளியின் ,மகன்
அங்கே
மனிதாபிமானம் வென்றது கண்டு மகிழ்ச்சியாய் இருந்தது அப்போட்டியில் அச்சிறுமி
ரூ 80,000/ -க்குமேல் வென்றாள். விடையை
விற்க வந்திருக்கும் பலரும் பள்ளிச் சிறுவர் சிறுமியரே எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாமலேயே
போட்டிக்கு வந்திருந்த பெண் ஒரு கணிசமான பரிசுத்தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது
இந்த கேம்
ஷோ எனக்குப் பிடித்திருந்தது . நீங்களும் பாருங்களேன் இரவு எட்டு
மணிக்கு ஒளிபரப்பாவது மறு நாள் மாலை நான்கரை மணிக்கு மறு ஒளிபரப்பாகிறதுஎனக்கு இந்த கேம் ஷோவில் பிடித்தது என்னவென்றால் பங்கு பெறுபவரும் அவருக்கு விடையை விற்பவரும் வெறுங்கையுடன் போவதில்லை சிறார்களின் பங்கேற்பு மகிழ்வு தருகிறது. நடிகர் முகேஷ் அதிக ஆரவாரமில்லாமல் நடத்துகிறார் .
|
|
இதுவரை பார்த்ததில்லை ஐயா...
ReplyDeleteநன்றி...
இதுவரை பார்த்ததில்லை
ReplyDeleteபடிக்கச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது
பார்த்துவிடுகிறேன்
அவசியம் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல நிகழ்ச்சி! ஆனால் இங்கே எனக்குப் பார்க்க சான்ஸே இல்லை.
ReplyDeleteநான் பார்த்ததில்லை. பார்ப்பேன். நன்றி.
ReplyDeleteஇது நல்ல நிகழ்ச்சிதான் சார். ஆனால் ரெகுலராகப் பார்க்க முடிவதில்லை..
ReplyDeleteகீதா: அவ்வப்போது மறு ஒளிபரப்பைப் பார்ப்பதுண்டு..
நல்ல நிகழ்ச்சிப் பற்றி நல்ல அறிமுகம் அய்யா!
ReplyDeleteஇது வரை இந்நிகழ்ச்சியைக் குறித்துத் தெரியாது. நாளையிலிருந்து பார்க்க முயல்கிறேன். பொதுவாகத் தமிழ்ச் சானல்களைத் தவிர்த்தால் மற்ற சானல்களில் அதிக ஆரவாரம் இருப்பதில்லை! :)
ReplyDelete
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
@ ரமணி
@ வே நடனசபாபதி
@ துளசி கோபால்
@டாக்டர் ஜம்புலிங்கம்
@ துளசிதரன்
@ எஸ்பி. செந்தில்குமார்
@ கீதா சாம்பசிவம்
மலையாளச் சேனல் என்பதால் பலரும் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு. அதுவே என்னை பதிவிடச் செய்தது கேள்விகள் முதலில் மலையாளத்தில் இருந்தாலும் அதையே ஆங்கிலத்திலும் கேட்பதால் புரிதலுக்குச் சிரமம் இல்லை. அண்மையில் பார்த்த நிகழ்ச்சியில் ஒரு ஆசிரியை பங்கேற்க அவருக்குத் தெரியாத விடையை மாணவ மாணவிகள் சொல்லிக் கொடுத்து வெல்ல வைத்தது வித்தியாசமாய் இருந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.
இதை நான் பார்க்கணும்னா டிஷ் வாங்கணுமே :)
ReplyDelete
ReplyDeleteதங்களது பதிவில் சுவாரஸ்ம் இருக்கின்றது பார்க்க முயல்கிறேன் ஐயா நன்றி
இதுவரை நான் பார்கவில்லை!
ReplyDeleteஇதுவரை பார்த்ததில்லை. புதுசு புதுசாக யோசிக்கிறார்கள்!
ReplyDeleteபொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது அரிது..
ReplyDeleteதாங்கள் சிறப்பித்துக் குறிப்பிட்டதிலிருந்து அதன் சிறப்பு புரிகின்றது..
ReplyDelete@ பகவான் ஜி
@ கில்லர் ஜி
@ புலவர் இராமாநுசம்
@ ஸ்ரீராம்
@ துரைசெல்வராஜு
அனைவரது வருகைக்கும் நன்றி. எந்த ஒரு விஷயத்தையும் பகிர்வது என் சுபாவம் எத்தனையோ நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் அநேகமாக திரைப்படம் சம்பந்தப் பட்டது இந்த நிகழ்ச்சி நம் பொது அறிவை நாமே சோதித்துக் கொள்ள உதவும்
வணக்கம் ஐயா!
ReplyDeleteநலம்தானே?
இது கட்டண சேவையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
வீட்டு இணைப்பில் வரவில்லை.
காண விழைவுண்டு.
பார்க்கலாம்.
நன்றி
ReplyDelete@ ஊமைக் கனவுகள். வணக்கம் ஐயா. நீண்ட நாட்களுக்குப் பின் என் தளத்தில் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது இங்கே எங்களுக்கு மாதம் ரூ 250க்கு ஏறத்தாழ எல்லா சானல்களும் வருகிறது. முடிந்தால் பாருங்கள் ரசிப்பீர்கள் வருகைக்கு நன்றி
இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை ஐயா...
ReplyDeleteதங்கள் மூலமாகத்தா அறிந்து கொண்டேன்...
பார்க்க வேண்டும்...
ReplyDelete@ பரிவை சே குமார்
பாருங்கள் ஐயா ரசிப்பீர்கள். வருகைக்கு நன்றி
விற்பதும் வாங்குவதுமே வாழ்க்கையாகப் போய்விட்டது நாட்டில்!
ReplyDeleteஏஷியா நெட் எனக்கு வருவதில்லை. சுவாரஸ்யமான நிகழ்ச்சி என்று தோன்றுகிறது. அதுவும் ஏழைக்குப் பணம் போய்ச்சேர்ந்தால் நலமே. குழந்தைகளிடம் வெளிப்படும் மனிதாபிமானம் பெரியவர்கள் கவனிக்கவேண்டியது.பாராட்டுவதற்காக அல்ல - பெரிசுகளிடம் அதிகம் தென்படாத குணம் இது!
நன்றாகப் பதிந்துவிட்டீர்கள்.
very interesting.
ReplyDelete
ReplyDelete@ ஏகாந்தன்
வருகைக்கு நன்றி ஐயா. நல்ல நிகழ்ச்சி என்று தோன்றியது அதுதான் பகிர்ந்துகொண்டேன்
ReplyDelete@ அப்பாதுரை
ஏன் இந்த அஞ்ஞாதவாசம் . வந்தது மகிழ்ச்சியே
புதிதாக இருக்கிறது. அதன் வெற்றியைப் பொறுத்து கூடியவிரைவில் தமிழிலும் வரக்கூடும்
ReplyDelete
ReplyDelete@ டிஎன் முரளிதரன்
இந்த கேம் ஷோ ஆரம்பித்தே சில நாட்கள்தான் ஆகிறது என்று தெரிகிறது வருகைக்கு நன்றி ஐயா
பார்த்ததில்லை. ஏசியாநெட் இங்கே வருகிறதா எனப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteநல்லதோர் நிகழ்ச்சி பற்றிய தகவலுக்கு நன்றி.
ReplyDelete@ வெங்கட் நாகராஜ்
மலையாளச் சானல்களில் பிராதானமான ஒன்றாயிற்றே. வருகைக்கு நன்றி சார்