Friday, August 7, 2020

கடைசியில சில பக்கங்கள் மிஸ்ஸிங்

                       
கடைசியில  சில பக்கங்கள்  மிஸ்ஸிங்

நான் நாடகங்கள் எழுதி மேடை யேற்றி இருக்கிறேன் என்று என்னைபடிக்கும் பலரும் அறி வார்கள்பழைய மேடை யேற்றிய நாடகம் ஒன்றுகிடைத்தது அதில் கடைசியில் சிலபக்கங்கள் மிஸ்ஸிங் இல்லை இல்லை பென்சில்லில் எழுதி இருந்ததுபடிக்க முடியவீல்லை அட்வெர்சிடியையும் அட்வான்டேஜாக
மாற்ற எண்ணினேன்  இருக்கும் வரை பதிவிடுவது  கடைசி பக்கங்களை முடிக்கபதிவுலகநண்பர்களைநாடுவது யார் நன்றாக  முடிக்கிறார்களோ  அவர்களுக்கு ஒருபரிசு உண்டு என்மறதிக்கு நான்கொடுக்கும் விலையாகட்டும்வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விட்டு நாடகம் பதிவாகும்  கடைசியில் மீண்டும் போட்டி பற்றி நினைவூட்டுவேன் எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள்காற்று உள்ள போதே துற்றிக்கொள்ளட்டும்


காட்சி ----11
இடம்----அருணா வீடு
பாத்திரங்கள் ----அருணா  தாத்தா
(அருணா கட்டிலில் படுத்தபடி  விசித்து விசித்து அழுகிறாள் தாத்தா வருகிறார் )
அருணா ---நான் ரொம்ப பெரிய தப்பை சர்வ  சாதாரணமாச்செய்துட்டேனே தாத்தா
தாத்தா----ஒரு பெண் கல்யாணம்  செய்டுகிட்டது தப்புன்னு ஒரு முட்டாள் கூட சொல்லமாட்டான்மா
அருணா---- என்வாழ்க்கையை நானே கெடுத்துகிட்டேன் சொத்துக்காக கல்யாணம் செய்துக்க நெனச்சேன்  என்லட்சியத்துக்காக புருஷன்கூட வாழக்கூடாதுன்னுநெனச்சேன்   அதுக்காக மரண தண்டனைக்கு காத்திருந்தவனை மணந்தேன் 
தாத்தா----செய்துகிட்டா என்னம்மா அதான்
தப்பிப்பிழைத்து  வந்துட்டாரே
அருணா --- அவர் தப்பி வந்தது ஒரு வகையில் நல்லதா இருந்தாலும்  இன்னொரு வகையில தீமையாய் இருக்கே தாத்தா  அவரோட முப்பது நாள் குடித்தனம் நடத்தினாத்தான் சொத்து கிடைக்குமாம்  அதுக்காக  அவருக்கு அடிமையாய் இருக்கணுமா ஏன் தாத்தா
தாத்தா--- கொண்டவன் செய்யறது  அதிகாரமா  அதுதான் ஒரு பெண்ணுக்கு மரியாதை சன்மானம்  பாராட்டு எல்லாம் அருணா  கல்யாணத்துக்கு பின்   புருஷனுக்கு பொஞ்சாதி  செய்யறச் கடமையை செய்துதாம்மா  ஆகணும்

அருணா----- மனசு ஒப்புக்கொள்ளாதபோது அந்த புருஷனோட  எப்படி தாத்தா மனமொப்பி வாழ முடியும்  எனக்கு வாய்ச்ச புருஷன் ஏழை கூலி  வேலை செய்யு முரடன்
தாத்தா--- உன்னைக்கல்யாணம்  செய்தபின்னால அவர் எப்படிம்மா  ஏழையாய் இருக்க முடியும் ஆண்களில் நல்லவர்களும்  உண்டு கெட்டவர்களும்  உண்டு நீ விணா தப்பபிபிராயம் எடுத்துக்கிட்டு உன் வாழ்க்கையை கெடுத்த்துக்காதே போம்மா புருஷனை அழைச்சிக்கிட்டு வா நீங்க ரெண்டு பேரும்  சந்தோஷமா வாழறதப் பாத்து  நான்  நிம்மதியா சாகறேம்மா போ முகத்தைக்கழுவி  கார் எடுத்துக்கிட்டு போ
அருணா --- போகறேன்  தாத்தா  போகறேன்
தாத்தா --- அதுதான் நல்ல பொண்ணுக்கு அடையாளம்  (போகிறார் )
அருணா ----ஐயோபாவம்  தாத்தாவுக்குதான்   நான்புருஷனோட  வாழறதப் பார்க்க எவ்வளவு  ஆசை என் ஆசையெல்லாம்  அவரோட முப்பதுநாள் எண்ணி முப்பது நாள் அதுவும் கண்ணியமா வாழ்ந்திடணம்னுதான்னு தாத்தாவுக்கு  தெரிஞ்சா  ஹூஉம் 
                                 திரை                 
         






  

)




14 comments:

  1. தாத்தா சொல்லை தட்டாதே...!

    ReplyDelete
    Replies
    1. போட்டி முடிவில் தெரியும்

      Delete
  2. தாத்தாவின் ஆசை நீடித்து நிலைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அஹு பொட்ட்யை முடிப்பவர் கையில்

      Delete
  3. தாத்தா நினைப்பதுபடிதான் நடக்கப் போகிறது!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நினைபதெல்லாம் நடந்து விட்டால் ......

      Delete
  4. அருணா என்னதான் தாத்தாவை ஏமாற்றுவதாக நினைத்தாலும் நடக்கப் போவதென்னவோ தாத்தா சொல்லுவதே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முடிவு பற்றி முடிவுக்கு வந்துவிட்டீர்களா

      Delete
  5. மாடி வீட்டு மாப்பிள்ளை!  அருணாவுக்கு நல்லது நடக்கட்டும்!

    ReplyDelete
  6. மடி வீட்டு மாப்பிள்ளை இது அபுரி

    ReplyDelete
    Replies
    1. ஏழை, பணக்கார வீட்டுக்கு மாப்பிள்ளையாகப் போகிறார்.  எனவே மாடி வீட்டு மாப்பிள்ளை!

      Delete
  7. தெளிவு படுத்தியதற்குநன்றி

    ReplyDelete
  8. தாத்தாவின் ஆசை நிறைவேறட்டும்

    ReplyDelete
  9. கதையை நகர்த்திச் செல்ல தாத்தா உதவுகிறாரா

    ReplyDelete