பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும், சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில் ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை ”தலை முழுகுதல்” எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்”ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம்
எங்கள் வீட்டில் இந்த ஆண்டு என் பேத்தியின்தலை தீபாவளி டபிள் டமாகா
கொண்டாடுங்கள். உற்சாகம், மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி
Delete//டபிள் டமாகா // ஹா.. ஹா.. வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteரசனைக்கு நன்றி
Deleteவாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி
Deleteஉங்க்ள் பேத்தியின் தலை தீபாவளி!! வாழ்த்துகள்! என்ஜாய்!
ReplyDeleteகீதா
நனறீ
Deleteதங்கள் அன்புப் பெயர்த்திக்குத் தலை தீபாவளி வாழ்த்துகள். தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deleteகொண்டாடுவோம்...உங்கள் வீட்டில் இனிய தீபாவளிக் கொண்டாட்டம் நிகழட்டும்
ReplyDeleteஎதிர் பார்க்கிறேன்
ReplyDelete