VALUE ENGINEERING மற்றும் தரம்
----------------------------------------------------
வலைப்பூ தொடங்கிய புதிதில் ’தரம் எனப் படுவது யாதெனில்’என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அந்தப் பதிவு நான் எழுதிய பதிவுகளில் மிகவும் அதிகமாகப் படிக்கப்பட்ட பதிவுகளில் ஒன்று. ஆனால் நம்புவதே சிறிது கஷ்டமாக இருக்கிறது. அத்தனை பேர் படித்திருந்தாலும் ஒருவராவது கருத்து சொல்லவில்லை. இருந்தாலும் என்ன.? நான் எழுதுவேன், செய்தி போய்ச் சேர்ந்தால் சரி. இப்போது இது எதற்கு என்று தோன்றலாம். Fitness for use என்பதே தரத்தின் முதல் படி என்றிருந்தாலும் வாடிக்கையாளரின் திருப்தி மிகவும் முக்கியம் என்று எழுதி இருந்தேன். For reference….. gmbat1649.blogspot.in/2010/11/blog-post.html இன்னொரு பதிவு ”இலவசமாக வருவதே தரம்“ வாடிக்கையாளரின் திருப்தியை கணக்கில் எடுக்கும் உற்பத்தியாளர்கள் செலவினங்களைக் குறைக்க முயற்சிகள் பல எடுக்கிறார்கள். அந்தவகையில் ஒன்றுதான் வால்யூ எஞ்சினீரிங் அல்லது (value analysis.)உதாரணத்துக்கு தீப்பெட்டியை எடுத்துக் கொள்வோம். தீப்பெட்டியின் அளவு, அதில் இருக்கும் குச்சிகளின் எண்ணிக்கை, அவற்றின் தடிமன் நீளம், தலையில் இருக்கும் மருந்து, பெட்டியின் இரு
பக்கமும் உராய்க்கும்போது எரிய மருந்து இன்ன பிற விவரங்கள் தீப்பெட்டியில் கவனிக்கப் படுகின்றன. ஏனெனில் இவை உற்பத்திச் செலவை அடிப்படையில் நிர்ணயிக்கும். சரி...... ஒரு தீப்பெட்டியை உபயோகிப்பவர், பெட்டியில் இருந்து குச்சியை எடுத்து பெட்டியின் பக்கவாட்டில் மருந்து தடவிய பக்கத்தில் உரசுகிறார். அது உரசிய முதல் முறையே தீப்பற்றினால் மகிழ்ச்சி. அது அதன் வேலையைச் செய்கிறது. இரண்டோ மூன்றோமுறை உரசவேண்டும் என்றால் அலுப்பும் சலிப்பும் ஏற்படுகிறது. தீப்பெட்டி வேலை செய்தாலும் வாடிக்கையாளர் திருப்தி அடைவது இல்லை. காரணங்களை அலசினால், மருந்தின் தரம்,பூசிய விதம் முதல் குச்சி உடைவதுவரை , கைச் சூடாவது வரை, குச்சிகளின் எண்ணிக்கைவரை பலவற்றினால் திருப்தி பாதிப்படைகிறது. இந்தக் குறைகள் எல்லாம் நீக்கப்படவேண்டும் உபயோகிப்பவர் திருப்தியடைய வேண்டும் கூடவே உற்பத்தி செலவையும் குறைக்க வேண்டும் என்பதும் முக்கியம்
பெட்டியின் ஒரு பக்கம் மருந்து தடவி இருக்கும். அதிலும் விட்டுவிட்டு புள்ளிகளாக இருக்கும். குச்சியின் நீளம் குறைக்கப் பட்டிருக்கும். பெட்டியின் அளவும் குறைந்திருக்கும். மரக்குச்சிகளுக்குப் பதில் வாக்ஸ் தடவிய பேப்பர் குச்சிகள் இருக்கும். இவையெல்லாம் வால்யூ அனாலைசிஸின் விளைவுகளே.
இன்னொரு கேஸ் எடுத்துக் கொள்ளலாம்.நன்றாக உடை அணிந்து டை கட்டிக் கொள்வது வழக்கத்தில் இருப்பதே. ஷர்ட்டுடன் டையைச் சேர்க்க டை பின் உபயோகிப்பதும் நாம் அறிவோம்
அந்த டையை ஷர்ட்டுடன் பிணைக்க ஒரு ஜெம் க்லிப் போதுமானதாய் இருக்கும். செலவே இல்லாதது. ஆனால் அதே பணியைச் செய்ய பல ரகங்களில் டை பின்கள்,பல விலைகளில் கடைகளில் விற்பனை ஆகின்றன. இப்போது நான் சொல்ல வருவது ஓரளவு விளங்க ஆரம்பிக்கும். குவாலிடி அல்லது தரம் என்பது ஃபிட்னெஸ் ஃபர்ர் யூஸ் என்று சொல்லப் பட்டாலும் வாடிக்கையாளரின் திருப்தியும் இருந்தால்தான் பொருள் விலை போகும். உபயோகிப்பவரின் திருப்தியைக் கணக்கில் எடுக்கும் உற்பத்தியாளர் அதன் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும். அவரவர் திருப்திக்காக நிறைய விலை கொடுக்கத் தயாராய் இருப்பவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பொருள்களோ சேவைகளோ சந்தைக்கு வருகின்றன.VALUE ANALYSIS மூலம் செலவைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் விலையைக் கட்டுப்படுத்தி உபயோகிப்பவர் திருப்தியடைகிறார்கள் என்றால் ஒரு பொருள் அல்லது சேவை சந்தையில் பெயர் பெறும். ஆனால் பெரிய கேள்விக்குறி என்னவென்றால் வாடிக்கையாளரின் திருப்தி என்பதற்கு சரியான அளவுகோல் இருக்கிறதா என்பதுதான்.THAT IS AN EVER CHANGING FEELING......! THE YARDSTICK VARIES....!
.