சனி, 17 டிசம்பர், 2016

பாட்டியும் முட்டைத் தலையும்


                                          பாட்டியும்  முட்டைத்தலையும்
                                        ---------------------------------------------
 (  படித்தவை எல்லாம்ன் நினைவில் இருக்கிறதா என்ன?என் சிந்தனையோடு ஒத்துப் போவதும் பலரும் படிக்காமல் விட்டதுமான சில பதிவுகளை மீள் பதிவாக்குவதில் தவறில்லை என்று தோன்றுகிறது )

.பாட்டி இவ்வளவு அருகில் பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடுஎன்று கூறி பாட்டியின் கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள் பாட்டி என்ன பாட்டி, படித்தது பிடிக்கலையா, இழுத்தது பிடிக்களையா “ என்று கேட்டேன்.
படித்ததுதான் “ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள் ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே
நடத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.என்றேன்.
சீருடையில் மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத காரியமாகும். “
“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன் காரணம் என்கிறார்கள். “


“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் என்று போட்டாளே பாட்டி..இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.பாட்டி சரியான ஃபார்மில் இருந்தாள்.
பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?


“ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி விட்டது.
 “எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன். “
“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன மருந்தப்பா...
“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....
அடப் பாவி மனுஷா.... ! எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?
“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத முட்டைத் தலை இல்லையே உனக்கு...!
(  “நான் பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை ஒட்டி எழுந்த கதை நீங்கள் மேலே படித்தது.) .
                
  

திங்கள், 12 டிசம்பர், 2016

புயல் அனுபவங்கள்


                                     புயல்  அனுபவங்கள்
                                     ------------------------------
புயல்





இந்தப் பதிவை எழுதும்போது சென்னையில் புயல் வீசிக் கொண்டிருப்பதாக தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் இது என்  நினைவுகளை நான்  விஜய வாடாவில் இருந்த காலத்தில்  வீசிய புயல் பற்றி நினைக்க வைக்கிறது அப்போது புயல்களுக்குப் பெயர் இடும்  வழக்கமில்லை என்று நினைக்கிறேன்  நவம்பர் மாதம் 1977 என்று நினைக்கிறேன்  அனல் மின் நிலையம்  கட்டுமானப் பணிகளில் இருந்தேன்  கொதிகலன் தொழிற்சாலையில் இருந்து  கட்டுமானப் பொருட்கள் வரும் திருச்சி தொழிற்சாலையில் யாருமே ஒரு முழு கொதிகலனைப் பார்க்க முடியாது ஏராளமான ராட்சச பாகங்கள் மின்  நிலையத்தில்தான்  ஒருங்கிணைக்கப்படும் கிட்டத்தட்ட மூவாயிரம் டன் எடையுள்ள பாகங்கள் பொருத்தப்பட  அவற்றைத் தாங்க காலம்கள்(columns) நிர்மாணிக்கப்படும்   அவற்றின் மேல்தான்  கொதிகலனின்  பாகங்கள் இணைக்கப் படும்
அன்று மாலை  ஒரு நாள் பணி முடிந்து வீடு வரும்போதே காற்றின் வேகம் அதிகமாயிருந்தது  மழை பெய்யத் துவங்கி இருந்தது. இப்போது போல் எந்த எச்சரிக்கையும்  இருக்கவில்லை.  இரவு நெருங்க நெருங்க காற்றின் வேகம் அதிகரிக்கத் துவங்கியது  சன்னல்கள் அடித்துக் கொள்ளத் துவங்கின காற்றின்  ஊளைச் சத்தம் அதிகரிக்கத் துவங்கியது கதவுகளுக்கும்  சன்னல்களுக்கும்   முட்டுக் கொடுத்து அவற்றின் ஆட்டத்தைக் குறைத்தோம் மழையும்  வலுக்கத் தொடங்கி இருந்தது  இரவெல்லாம் தூக்கமிருக்கவில்லை.   நாங்கள் ஒரு வீட்டின் முதல் தளத்தில் தங்கி இருந்தோம் ஒரு வழியாக விடிந்தது  வெளியில் வந்து பார்த்தால்  எங்கள் வீட்டு வெராந்தாவில் இடப்பட்டிருந்த ஒரு நீள மர பென்ச் காணாமல் போயிருந்தது காற்று அதைத் தூக்கி வீசி வெளியே போட்டிருந்தது. 
 அடுத்த நாள் பணி செய்யும்  இடத்துக்குப் போனால் நாங்கள்  கட்டியிருந்த காலம்கள் (columns) எல்லாம் சரிந்து விழுந்திருந்தன ஏறத்தாழ இரண்டு மாதப் பணியும் சேதமாய் இருந்தது அவற்றை மறுபடியும்  உபயோகிக்க முடியாத அளவுக்கு பெண்ட்(bend) ஆகியிருந்தன. காலையில் ரேடியோச் செய்தியில்  ஆந்திரக் கடற்கரையோரம்  சேதம் மிக அதிகம் என்றும்   நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனரென்றும் அறிந்தோம் அந்தப் புயலுக்கு எந்தப் பெயரும்  இடப்பட்டிருந்த நினைவில்லை பலத்த காற்றும் மழையும்  இந்த அளவுக்கு சேதம் விளைவிக்கும்  என்று எதிர்பார்க்கவில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு  புயல் வரும் எச்சரிக்கை துவங்கியது கூடிய அளவு சேதாரங்கள் குறைக்கப் பட்டது. கரையோரப் பகுதிகளில்  இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப் படுகின்றனர்  ஒரு விஷயம்  புரியத் துவங்கிற்றும்  புயல் வீசத்துவங்கிய சிறிது நேரத்துக்குப்பின்  அமைதி ஏற்படுவதுபோல் இருக்கும் இந்த அமைதி புயலின்  மையப்பகுதியில் இருக்கும்  மையப்பகுதி நம் இடத்தைக் கடக்கும் போது  வீசிய காற்று எதிர் திசைக்குத் திரும்பும்

அந்த நிகழ்வை எதிர்கொண்டபின்   புயலின்  தாக்கம் எப்படியிருக்கும்  என்று தெரிந்து கொண்டோம்   சென்னைப் புயலைத் தொலைக்காட்சியில்  காண்பிக்கும்  அளவுக்கு நாம்  முன்னேறி இருக்கிறோம்  உயிர்ச் சேதங்கள் குறைக்கப்படுகின்றன. பாதுகாப்பு பற்றிய தெளிவும் இருக்கிறது இருந்தாலும் இயற்கையின் சீற்றத்தைக் குறைக்க முடியுமா?           



    




 .

வியாழன், 8 டிசம்பர், 2016

இனி நீயெல்லாம் உன் நினைவுதான் அம்மா


              இனி நீயெல்லாம் உன் நினைவுதான்  அம்மா
                                                     ---------------------------------------------------------------

அம்மா ஜெயலலிதா
  
         இன்று நீ இருந்த அரசுகட்டில்  அனாதையாகி விட்டது . எங்கு   பார்த்தாலும் உன் பேச்சுஎங்கு பார்த்தாலும் உன் சாதனைகள்எங்கு பார்த்தாலும் உன் நினைவுகள்பின் எப்படித்தான் இருக்க முடியும்.? அம்மா உணவகம், அம்மாகுடிநீர்.  அம்மா மருந்தகம்  அம்மா மிக்சி, அம்மா க்ரைண்டர்  அம்மாவின் கருவூலம் டாஸ்மாக்  ஆனால்  நீதான்  நீயாக இல்லாமல் உன் நினைவாக  மாறிவிட்டாயே.
        
அம்மா சிந்திக்க வேண்டும்ஆழ்ந்து  சிந்திக்க வேண்டும்  என்று அடிக்கடி  சொல்வாயேநீ சிந்திக்கவில்லையா.? இல்லை சிந்தித்ததைசாதிக்கவேண்டும்,   இதற்கு  மேல் சிந்தித்தால் சாதிக்க முடியாது என்று நினைத்துப்  போய்விட்டாயா.? நீ சிந்தித்து  சாதித்ததை தொடரவும்சாதிக்கமுடியாமல் விட்டதை  சாதித்துக்காட்டவும்   யார் இருக்கிறார்கள் எங்களுக்கு  இந்த  வாழ்க்கைப் போதுமா உனக்கு ?. உன் நினைவு  எங்களை  வாட்டுகிறதுஎண்ண எண்ண சித்தம் கலங்குகிறது.
      
அதெப்படி அம்மா உன்னால் மட்டும் அப்படி தீர்க்கமாக எண்ணமுடிந்தது.? நடக்கும் செயல்களுக்கு காரண காரியங்களைக் கண்டறிந்து, தவறுகள் திருத்தி சீராக்கி வழிகாட்டி வாழ்ந்தாயே.."சொல்வதை செய் செய்வதை சொல்என்ற  தாரக  மந்திரம்தானே உனக்கு வழி காட்டி.?
       
அனாதைகளாகஇருக்கவும்ஆதரவு அற்றவர்களாக  இருக்கவும் குழந்தைகள் என்ன பாவம் செய்தன.?பிறக்கும்போதே  ஏற்ற தாழ்வுகளுடனே ஏன் பிறக்க  வேண்டும் என்று கேட்டுக்கலங்குவாயே நினைவிருக்கிறதா  ஓரளவுக்காவது சீர் செய்ய மாற்ற முடியாதபடி 69% ஒதுக்கீடு என்பதை சட்டமாக்கி விட்டாயே  அதெப்படிஇருக்கும் .நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
       காரணங்கள் இல்லாத காரியங்களே கிடையாது.ஆனால் காரணம கண்டு பிடிக்க முயலுவது  சிக்கலுள்ள நூல் கண்டின் முனை கண்டு சிக்கல் நீக்குவது  போலாகும .சில சமயம் முடியலாம்.சில நேரங்களில் முடியாமல் போகலாம்  என்றெல்லாம்  சிந்திப்பாயே  சிக்கல் உள்ள நூல் கண்டு ஒன்றின் முனையாக நீ கண்டது  கல்வி  அறிவு  இல்லாமை என்று வாதாடுவாயேயார் கல்வி கற்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்  ? அறியாமையின் விளைவு என்று சொன்னால் அறியாமையின காரணம் தேட வேண்டும்   என்பாயேபலரும் அறியாமை இருளில் மூழ்கி கிடப்பதே சில சாராருக்கு நன்றாக  இருந்தது அறியாமையில் கிடந்தால தானே அடக்கியாள முடியும்.அடக்கி ஆளவும்  ஆதிக்கம் செலுத்தவும்   என்னவெல்லாம் வழிமுறைகள் இருக்கின்றனவோ அத்தனையும் கடை பிடித்தாயே ,மக்கள் மாக்களாக  இருப்பதே நன்று என்று  ீ நினைத்திருக்க வேண்டும்       அது  உன் நினைவுக்கு வராது நீதான் நீயாக இல்லாமல்  நினைவாக மாறிவிட்டாயே     
        வாழ்வியலில் சவுகரியத்துக்காகவும் பொறுப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டியும் வகுக்கப்பட்ட  அரசியல் நெளிவு சுளுவுகளை  உன் இஷ்டத்துக்கு வளைத்துப்போடும்  லாகவம் உனக்குத் தெரிந்திருந்ததே அரசியல் நியதிகள் எல்லாம் நமக்கு  நாமே ஏற்படுத்திக் கொண்டது அதை புரிந்து செயல் படுவதே சாணக்கியத்தனம் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தாய் நீ அரசியலில் நிரந்தரப் பகையும் இல்லை நிரந்தர நட்பும் இல்லை என்பதை நன்கு அறிந்து செயல் படுத்தினாயே ,அதையே ஆயுதமாக்கி ஆண்டை என்றும்  அடிமை என்றும் காலங் காலமாக அடக்கியாண்டு அதையே நீதி என்றும் நியாயம் என்றும் செயல் படுத்தினாயே , கேள்வி கேட்டால் முகம் திரிந்து நோக்குவதோடு கேட்பவரையே உண்ட இல்லாமல் செய்துவிடும் வித்தை உனக்குக் கைவந்த கலையாயிற்றே அம்மா  வாழ்வியல் முறையே அறியாமையின் அஸ்திவாரம் என்று நினைத்துக் கொள்வாயே அம்மா உனக்கு நினைவு வராது.ஏனென்றால் நீதான் நீயாக இல்லாமல் நினைவாக மாறிவிட்டாயே.
        இன்று கல்விக்கண் கொடுத்து அறியாமை இருள் அகல்விக்க எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதோடு நில்லாமல் நேற்றுவரை அடக்கப் பட்டவனை கொஞ்சம் தூக்கிவிட சில சலுகைகள் கொடுக்கப் படும்போது முகச்சுளிப்புகளும், மனக்கசப்புகளும் காணும்போது  நம் பாட்டனுக்குப் பாட்டன் ,அவனுக்கும் பாட்டன் முதல் நம் முன்னோர்கள்  செய்த பிழைகள் அவர்களது சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஒன்றும்  நீதிக்கு மாறானதில்லையே,ஆச்சரியமில்லையே என்று நியாயப் படுத்துவாய
      வசதிகள் பல பெற்று, வாழ்க்கையின் முன்படியில் இருப்பவன், வசதி அற்றவனுக்கு கை கொடுத்து படி ஏற்றுவதுதான் நியாயம் என்றெல்லாம் வாதாடுவாயே.அப்படி படியேறி வந்தவர்களில் சிலர் இப்போது முறையற்ற வழிகளில் முன்னேறி, கடந்து வந்த பாதைகள் மறந்து போய ,ஆடும் ஆட்டம் காணும்போது மனம் நோகுதே என்று விகசிப்பாய,  அம்மா.
     
சில நூல் கண்டுகளின் முனையறிந்து காரணம் கண்டாலும், அறியாத காரணங்கள் ஆயிரம் உண்டு.அதனை அறியும் முயற்சிதான் என் ஆட்சி முறை என்று நினைத்தாயோ நிரந்தர பொதுச் செயலாளர் என்று பிறர் கூறுவது கேட்டு நீ மகிழ்ந்திருக்கலாம்  ஆனால் உனக்குப் பின் யார் என்று கோடி காட்டி இருப்பாயா அரசாட்சி ஆண்டவன்  எனக்களித்த மானுடத் தொண்டு செய்யும்  வாய்ப்பு எனக் கூறி இருப்பதாக நினைவு பிறப்பின் காரணம் அறியவும் நான் செய்யும் முயற்சி என்று நீ  நினைத்திருக்கலாம்  இந்த தமிழகம் நீயின்றித் தவிக்கும்  என்பதை நினைத்துப் பார்க்கவில்லையா , கிளை பரப்பி நிழல் தரும்  ஆலைப் போல் ஆனால் தன்னில் எையும் வளரவிடாத  தருவாகி விட்டாயே. சிக்கல் உள்ள நூல் கண்டுகள் பல உண்டு, அவற்றில் இது ஒன்று, இன்னும் பலவற்றின் முனை கண்டு சிக்கல் அவிழ்க்க நாங்கள் முயலுவோம். இதுவே நீயாக இல்லாமல் உன் நினைவாக மாறிவிட்ட உனக்கு நாங்கள் செய்யும் இறுதிக்  கடனும் அஞ்சலியுமாகும்.

  .   



    


திங்கள், 5 டிசம்பர், 2016

மகளிர் சக்தி (பக்தி..?)


                                            மகளிர் சக்தி( பக்தி..?)
                                            -----------------


மகளிர் சக்தி

 சில மாதங்களுக்கு முன்  விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன் 
இந்த விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணத்தால் நான் பல முறை வீட்டில் தனியாக விடப்பட்டிருக்கிறேன்  மனைவி ஒவ்வொரு இடத்திலும்  நடக்கும் இந்த பாராயணத்துக்குச் சென்றுவிடுவாள் நான்  அவளை மிகவும் நேசிப்பதால் அவளது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்பதில்லை மேலும்  எங்கள் வீட்டில் ஒருமுறை பலரும்  கூட இந்தப் பாராயணம் செய்யும் விருப்பம்  அவளுக்கு இருந்தது மனைவியை நேசிப்பவன் அவள் சொல்லைத் தட்டலாமா   நடத்திக் கொள் என்று கூறி விட்டேன் என் மூத்த மகனின்  பிறந்த நட்சத்திரமான மூலம் வரும் நாளில்  வீட்டில் எல்லோரும் சேர்ந்து பாராயணம் செய்ய விரும்பினாள் இந்த டிசம்பர் மாதம் முதல் தேதி வாய்த்தது இம்மாதிரிப் பாராயணம் செய்பவர்கள் சிரத்தையுடன் செய்ய வேண்டுமென்று அவளுடைய குழு லீடர் விரும்பினாள் ஆகவே பாராயணம்  செய்யத் தெரிந்தவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது  மதியம்  இரண்டு மணியில் இருந்து  பதினோரு முறை பாராயணம் செய்யச் சொல்லப்பட்டது  இந்த சமயத்தில் நான்  விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு  தமிழில் பொருள் எழுத முனைந்தது நினைவுக்கு வந்தது நிலைமையில் ஏதும் மாற்றமில்லை. பலரும்  பொருள் தெரியாமலேயே பாராயணம் செய்கிறார்கள் இருந்தாலும்  ஏதோ நம்பிக்கையோடு செய்கிறார்கள் என்று நினைக்கும் போது பொருளாவது ஒன்றாவது என்று நினைக்கத் தோன்றுகிறது
 இந்த ஸ்தோத்திரமே அவனது ஆயிரம் நாமங்கள் கொண்டது. நாமஜபம் செய்வதற்கு மொழி ஒரு தடைக்கல்லே அல்ல என்னும் அபிப்பிராயம் உடையவர்களே   
 இருந்தாலும் பீஷ்மரிடம் ஆறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவர் கூறியதானவிடையில் ஐந்து ஆறாவது கேள்விகளுக்கான விடைகளை இப்போது எழுதுவது சரியாக இருக்கும்  என்றே தோன்றுகிறது
Q.5 , Ko dharmah sarva-dharmaanaam Bhavatah paramo matah?
கோதர்மசர்வ தர்மானாம் பவத பரமோ மதா
உங்கள் கருத்துப்படி சிறந்த தர்மம் அல்லது நெறி யாது
Q.6 Kim japan muchyate jantuh Janma-samsaara-bandhaaat?
கிம்ஜபன்முச்யதேஜந்துர் ஜன்ம சம்ஸாரபந்தனாத்
எதை தியானித்து உயிரிகள் சம்ஸாரத் தளையிலிருந்து விடுதலை அடையலாம்
Ans..5&6Anaadi-nidhanam vishnum Sarvaloka-maheshvaram
Lokaadhyaksham stuvan nityam Sarva-duhkha-atigo bhavet.
ஆதி அந்தம் இல்லாத விஷ்ணுவின் நாமத்தைப் பஜிப்பதாலும் நினைப்பதாலும் எல்லாத் தளைகளில் இருந்தும் விடுபடுவதே சிறந்த நெறியாகும்

 இருந்தாலும் இதைப் பாராயணம் செய்பவர்கள் தெரிந்துதான்  செய்கிறார்களா தெரியவில்லை
அன்று என்  வீட்டுக்கு சுமார் முப்பது பெண்மணிகள் வந்திருந்தார்கள் சுமார் மூன்று மணிநேரம் பாராயணம் செய்தார்கள் இந்த மகளிர் சக்தி முன்  என்போன்றோரின் வாதங்கள் எடுபடாது என்று தெரியும்  முதல் சுலோகத்தையும்  பொருளையும்   பதிவிடுகிறேன்

--------------------------------------
“விஸ்வம் விஷ்ணு வஷட்கார பூதபவ்ய பவத்ப்ரபு
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:

அண்டமெலாம் வியாபித்து இருப்பவர் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் அனைத்தையும் தான் நினைத்தப்டி நடத்தி தன் வசம் வைத்திருப்பவர்,முக்காலங்களிலும் இருப்போர்க்கெல்லாம் தலைவர்,தன் நினைவாலேயே அனைத்தையும் படைப்பவர், படைத்த அனைத்தையும் தாங்குபவர், பிரபஞ்சமே தன்னைச் சார்ந்திருப்பதாகக் கொண்டவரனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவர்,அனைத்துக்கும் அவரே உடல், அனைத்தையும் பேணி வளர்ப்பவர், தலைவர்.

 இம்மாதிரி 108 சுலோகங்களில் சஹஸ்ர நாமங்களும் வெளியாகிறது என்று நினைக்கிறேன்  இதையே பதினொரு முறைகள் சொன்னார்கள் சில காட்சிகளைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும்  பதிவிடுகிறேன்  
                 
பாராயணத்துத் தயார்
 
பாராயணம் நடக்கிறது
  .   

தொடரும்பாராயணம்


    

பாராயணத்தின் கடைசி கட்டம்
சஹஸ்ர நாம பாராயணம் முடிந்தவுடன் வந்திருந்தோருக்கு டிபன்  காப்பியுடன் வெற்றிலை பாக்கு  பழம்  தேங்காயுடன்  ரூ 51-/  கொடுக்கப்பட்டது மனைவிக்குச் சந்தோஷம் எனக்கு அதுவே திருப்தி